Run World Media: 08/20/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, August 20, 2019

புதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை.. முதல்வர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள் .

புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். எனவே முதியோர் உதவித்தொகை வாங்குவது என்பது யாருக்கெக்கலாம் சாத்தியம்.? எப்படி மற்றும் யாரை அணுகுவது என்பதை பார்ப்போம். 

 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று சேலத்தில் முதல்வர் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் கூட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த குறைதீர் முகாம் தமிழகம் முழுவதும் அதிகாரிகளால் அவ்வப்போது நடத்தப்பட உள்ளது. இதுவரை நடந்த சிறப்பு கூட்ட குறைதீர் கூட்டத்தில் முதியோர் ஓய்பூதியத்திற்கான மனுக்கள் தான் அதிகம் வந்துள்ளதாக முதல்வல் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மேலும் புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். எனவே எனவே முதியோர் உதவித்தொகை வாங்குவது என்பது யாருக்கெக்கலாம் சாத்தியம்.? எப்படி மற்றும் யாரை அணுகுவது என்பதை பார்ப்போம்.
தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம் என்ற ஒரு திட்டத்தினை 22.1.1962ம் ஆண்டில் தமிழக அரசு கொண்டுவந்தது. இந்த திட்டத்தில் ஆரம்பத்தில் 20 ரூபாய் நிதியுதவினை அரசு வழங்கியது.படிப்படியாக உயர்த்தி தற்போது மாதம் ரூ.1000 அரசால் வழங்கப்படுகிறது. தற்போது இத்திட்டம் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவி தொகை திட்டம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 15லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறதுவிண்ணப்பிக்க யாருக்கு தகுதிகள் 
 60வயதை கடந்த ஆதரவற்ற ஆண் / பெண் ஆகிய இருவரும் தகுதியுடையவர்கள். இவர்கள் ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் மகன் / 18 வயதுக்கு மேற்பட்ட மகன் வழி பேரன் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் (விவாகரத்து நடந்த 5 ஆண்டுகள்) விதவை பெண்கள் (40வயது கடந்தவர்கள்) மாற்று திறனாளிகள் (60சதவீதம் ஊனம்) கண்பார்வை அற்றவர்கள். ஆதரவற்ற கண்பார்வையற்றவர்களுக்கு மற்றும் ஆதரவற்ற உடல் ஊனமுற்றோருக்கு வயது வரம்பில்லாமல் முதியோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது.


எப்படி விண்ணப்பிப்பது 
முதியோர் உதவித்தொகை படிவத்தின் படி விண்ணப்பிக்க வட்டாட்சியரிடம் வேண்டும். விண்ணப்பத்தில் முத்திரை கட்டண வில்லை எதுவும் ஒட்ட தேவையில்லை. மனுதாரரின் வயதுக்கு ஆதாரமாக வாக்காளர் பட்டியலை எடுத்துக்கொள்ளலாம்(அல்லது) அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய அல்லது அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் வயது குறித்தான சான்று பெறலாம்.வட்டாட்சியர் விசாரிப்பார் 
 உரிய விசாராணைக்குப் பின்னர் வட்டாட்சியர் முதியோர் உதவித்தொகை வழங்கிட உத்தரவிட்ட அதே மாதத்தில் முதல் தேதி முதல் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் விண்ணப்பதாரருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கப்படும் இது குறித்து விண்ணப்பதாரர் மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்யலாம். மாவட்ட ஆட்சியரின் முடிவே இறுதி முடிவு.
 போட்டோ நகல்கள் 
 வட்டாட்சியர் உத்தரவிட்டவுடன் மனுதாரர் மூன்று புகைப்பட நகல்கள் எடுத்து வட்டாட்சியரிடம் கொடுக்க வேண்டும். உத்தரவில் புகைப்படம் ஒட்டப்பெற்று வட்டாட்சியரால் அத்தாட்சி செய்யப்பட்டு ஒரு நகல் மனுதாரருக்கும் ஒரு நகல் கிராம நிர்வாக அலுவலருக்கும் அனுப்பப்படும். ஒரு போட்டோ நகல் வட்டாட்சியர் அலுவலக பதிவேட்டில் ஒட்டப்பெற்று மனுதாரரின் கைரேகை அல்லது கையொப்பம் பெற்று வைக்கப்படும். அதன்பிறகு மாதம் மாதம் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஒரு வருஷத்துல 2.5 லட்சம் வேலைங்க தான் உருவாக்கி இருக்காய்ங்களா..? அப்ப மத்தவங்களுக்கு.. ?

இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் மீண்டும் தலை விரித்து ஆடத் தொடங்கி இருப்பது போலத் தான் தெரிகிறது. இந்த வேலை இழப்புப் பிரச்னை ஆட்டோமொபைல் துறையில் தொடங்கியதை கண் கூடாகப் பார்த்தோம். மற்ற துறைகளில்..? வங்கி, 

 

இன்சூரன்ஸ், ஆட்டோமொபைல், லாஜிஸ்டிக்ஸ், உள் கட்டமைப்புத் துறை என பல துறை சார் நிறுவனங்கள் வழக்கத்தை விட குறைவாகவே ஆட்களை வேலைக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என கேர் ரேட்டிங் நிறுவனம் சொல்லி இருக்கிறது.
 இந்த விவரங்களை சுமாராக 1,000 நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகளில் இருந்து திரட்டி இருக்கிறார்களாம். இந்தியாவின் சேவைத் துறை தான் கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விதமாக கூடுதலாக வேலைக்கு ஆட்களை எடுத்து இருக்கிறார்களாம்


 இமேஜ் பிரச்னை
 இப்படி வழக்கத்தை விட குறைவாக ஆட்களை வேலைக்கு எடுப்பதும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச் 2019 காலாண்டில் வளர்ச்சி சரிந்திருப்பதற்கும், நுகர்வோர் தேவை குறைந்திருப்பதற்கும் ஒரு காரணமாக அமைந்து இருக்கிறதாம். பிரதமர் நரேந்திர மோடிக்கோ, இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்புப் பிரச்னையால், சர்வதேச அளவில் முதலீடு செய்யத் தக்க நாடாக இருக்கும் இந்தியாவின் இமேஜ் பெரிய அளவில் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது.

 2017 - 18-ல்.

 இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பு கடந்த மார்ச் 2017-ல் 54.4 லட்சமாக இருந்தது. ஆனால் கடந்த மார்ச் 2018 முடிவில் இந்த எண்ணிக்கை வெறும் 57.8 லட்சமாகத் தான் அதிகரித்து இருக்கிறது. ஆக சுமாராக 6.2 சதவிகிதம் தான் வேலை வாய்ப்புகள் கடந்த 2017 முதல் 2018 வரையான ஒரு வருடத்தில் அதிகரித்து இருக்கின்றன என திடுக்கிடும் தகவலைச் சொல்லி இருக்கிறது கேர் ரேட்டிங் அமைப்பு

 தற்போதைய நிலை 

 அதை விட கொடுமையான விஷயம் என்ன தெரியுமா..? மார்ச் 2019-ல் நிலவரப்படி இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பு வெறும் 60.3 லட்சமாகத் தான் அதிகரித்து இருக்கிறதாம். அதாவது மார்ச் 2018 முதல் மார்ச் 2019 வரையான ஒரு வருடத்தில் சுமாராக 4.3 சதவிகிதம் தான் வேலை வாய்ப்புகள் அதிகரித்து இருக்கின்றன. ஆக கண் முன்னே வேலை வாய்ப்புகள் சுருங்கிக் கொண்டு இருப்பதை பகிரங்கமாகப் பார்க்க முடிகிறது. உற்பத்திப் பிரச்னை

 உற்பத்திப் பிரச்னை

 இரும்பு, ஸ்டீல் மற்றும் சுரங்கம் சார் வேலைகளில் உற்பத்தி குறைந்து இருப்பதாலும், வங்கி சார் கடன் பிரச்னைகளாலும், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறதாம். உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற விருந்தோம்பல் துறைகளில் பணியாளர்களை வேலைக்கு எடுத்து சம்பளம் என்கிற பெயரில் செலவை அதிகரித்துக் கொள்ள விரும்பாமல், அவுட் சோர்ஸிங் செய்வது அதிகரித்து இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறதாம்.
 வங்கிகள்

 இந்த வேலை இழப்பு பிரச்னைகளில் வங்கிகளும் தப்பவில்லை. வங்கிகளில் கூட தங்கள் வேலைகளைச் செய்து கொடுக்க, வேறு ஒரு நிறுவனத்திடம் அவுட் சோர்ஸ் செய்வது, இருக்கும் ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு அல்லது செயல்பாடுகள் அடிப்படையில் வேலையில் இருந்து நீக்குவது என பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டே தன இருக்கிறார்களாம். அதையும் தாண்டி பல பலவீனமான அரசு வங்கிகளில் புதிதாக ஆட்களை எடுப்பதற்கும் தடை விதித்து இருக்கிறார்களாம்.

.

ATM-களுக்கு செக் வைக்கும் எஸ்பிஐ..! இனி எப்புடிங்க பணம் எடுக்குறது..?.


நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி நம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தான். இப்போது இந்தியாவில் ஏடிஎம் கார்ட்களைப் பயன்படுத்தும் அனைவருக்கு ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொல்லி இருக்கிறது. டிஜிட்டல் பேமென்டுகளை ஊக்குவிக்கும் விதமாக டெபிட் கார்டு உள்ளிட்ட பிளாஸ்டிக் கார்டு சேவைகளை யை அகற்ற திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளது. டிஜிட்டல் பேமென்ட் முறையை ஊக்குவிக்கும் விதமாக, இந்த பிளாஸ்டிக் கார்டு திட்டத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள எஸ்.பி.ஐ, இதன் வாடிக்கையாளர்கள் பெரிதும் நம்பி இருக்கிறார்கள்.ஐந்தில் ஒரு பங்கு
  டெபிட் கார்டுகளையே என்றும், இது நாட்டின் மக்கள் தொகை அளவில் ஐந்தில் ஒரு பங்கினை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றி கூறியுள்ள எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னேஷ் குமார், டெபிட் கார்டுகளை அகற்றுவது எங்கள் விருப்பம், அவற்றை எங்களால் அகற்ற முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்றும் கடந்த திங்கட்கிழமையன்று annual Fibacல் கூறியுள்ளார். மேலும் நாட்டில் 3 கோடி கிரெடிட் கார்டுகளும், 90 கோடி டெபிட் கார்டுகளும் உள்ளன என்றும் கூறி உள்ளார்.


பிளாஸ்டிக் பயன்பாடு
  இந்த பிளாஸ்டிக் அட்டைகளை குறைப்பதன் மூலம், நாட்டை டெபிட் கார்டு குறைவாக உள்ள நாடாக மாற்றுவதற்கு, எஸ்.பி.ஐ திறவுகோலாக இருக்கும். மேலும் இதற்காக தனது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுப்பதற்கு வசதியாக, மொபைல் மூலம் பணம் பெறும் யோனோ கேஷ் ஆப்பை பற்றியும் கூறியுள்ளார். மேலும் இந்த யோனோ கேஸ் ஆப்பை ஒருவர் பயன்படுத்தும் போது, அவர்களுக்கு ஏடிஎம்கள் தேவை இருக்காது. .
நோ கார்ட் 
 அவை இல்லாமலேயே அவரால் பணத்தை எடுக்க முடியும். அதோடு கார்டு இல்லாமலேயே, கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு, அதன் வணிக நிறுவனத்திற்கு பணங்கள் செலுத்திக் கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் தற்போது 68,000 யோனோ கேஸ் பாயிண்டுகள் அமைத்துள்ளதாகவும், இது இன்னும் 18 மாதங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமாக நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விரிவாக்கம் மேலும் டெபிட் கார்டு உபயோகத்தை குறைக்கலாம் என்றும் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார்.


யோனோ 
 இது தவிர இந்த யோனோ தளம் கிரெடிட் கார்டு தளமாகவும், சில பொருட்களை வாங்குவதற்கு கடனையும் கொடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் டெபிட் கார்டுகள், உங்களது பாக்கெட்களின் இருக்கும் தேவை குறைவாகவே இருக்கும் என்றும் குமார் கூறியுள்ளார். ஒருவேளை இந்த திட்டத்தைக் கொண்டு வந்தால், இனி டெபிட் கார்ட்கள் எனப்படுகின்ற ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் இந்தியாவில் ஏழை எளிய மக்கள் எப்படி வங்கிச் சேவையைப் பயன்படுத்தப் போகிறார்களோ தெரியவில்லை. .
விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..!

மத்திய அமைச்சகம் மற்றும் மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1,351 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


இது குறித்து சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பிராந்திய இயக்குநர் கே.நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-


 மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளில் உள்ள 230 பிரிவுகளில் சுமார் 1,351 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


 இதற்கான தேர்வு கணினி வழி முறையில் நடைபெற உள்ளது. இதில் 17 பிரிவுகளைச் சார்ந்த 67 பணியிடங்கள் தென்மண்டல மத்திய பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்தது. இந்தப் பணியிடங்கள் குறித்த விரிவான விளம்பரம், தேவையான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறைகள் போன்ற தகவல்களை ssc.nic.in அல்லது sscsr.gov.in என்னும் இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம். 


 இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்