Run World Media: 08/22/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, August 22, 2019

ஆவேசத்தின் உச்சம்.. கணவனை 11 முறை வெட்டி..கழுத்தையும் அறுத்து கொன்ற மனைவி!

கட்டின கணவரை 11 முறை வெட்டி, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் மனைவி.. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்படுத்தி உள்ளது. நல்லசோப்ரா பகுதியில் வசித்து வரும் தம்பதி சுனில் கதம் - ப்ரனாலி. ஒருத்தருக்கொருத்தர் உயிருக்குயிராக காதலித்தவர்கள்.. கடந்த 2011ம் வருஷம் கல்யாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். ப்ரனாலிக்கு 33 வயதாகிறது.


ஆனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டையும் தகராறும் நடந்து கொண்டே இருந்தது. நேற்று விடிகாலை 5 மணிக்கு கூட இவர்கள் இருவருக்கும் பயங்கரமான சண்டை வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தண்ணீர் கொண்டு வருகிறேன் என்று சொல்லி, விருட்டென கிச்சனுக்குள் நுழைந்தார்.
 அங்கே காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து கணவரை சரமாரியாக வெட்டினார். தொடர்ச்சியாக கத்தியால் 11 முறை கணவரை வெட்டினார். அப்பவும் ஆவேசம் அடங்கவில்லை.. அதனால் இறுக்க பிடித்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார்.

 பிறகு, மாமனார், மாமியாரிடம் கணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் அவர்கள் மருமகள் பேச்சை நம்பவே இல்லை. அதனால் மகனின் கொலையில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் சொன்னார்கள்.

இதையடுத்து, சுனிலின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதுதான் மனைவியின் குட்டு வெளிப்பட்டது. இதையடுத்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் கணவனை ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.!விண்வெளி ஆராய்ச்சி உலகை இந்தியா மீது திரும்ப வைத்ததற்கு இவரும் ஒரு முக்கியமான காரணம். எனினும், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும் சிவன், படித்ததெல்லாம் அரசுப்பள்ளியில் தான்.

அதிலும் தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர் தான் இஸ்ரோ தலைவர் சிவன். இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.! இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார், சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக அறிவியில் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக அப்துல்கலாம விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சரிடம் இருந்து விருதை பெற்று கொண்டார்

சுதந்திர தினம் அன்று சிவனால் வரமுடியாத சூழ்நிலையில் தற்போது தலைமை செயலகத்தில் நேரடியாக வந்து முதலமைச்சரிடம் இருந்து விருதை பெற்று கொண்டார். மேலும் சிவனை பொறுத்தவரை பல்வேறு சிறப்பு விருதுகளை பெற்றுள்ளார்.


விக்ரம் சாராபாய் விருது 
அதன்படி 1999-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விருது, 2017-ம் ஆண்டு இஸ்ரோ விருது, 2012-ம் ஆண்டில் டாக்டர் பிரயன் ராய் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


குடும்பத்தில் முதல் பட்டதாரி 
 சிவன் அவருடைய குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆவார். சிவன் அவர்களின் இரண்டு சகோதரிகளும், சகோதரர் ஒருவரும் வறுமையின் காரணமாக உயர்கல்வியை கூட படிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பின்பு கல்லூரியில் படித்த போது அவரது தந்தைக்கு விவசாயம் செய்ய உதவியதாகவும், அதன் காரணமாகவே அவரது தந்தை அருகில் உள்ள கல்லூரியில் சேர்த்துவிட்டதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்.

37 ஆண்டுகாலம்

சிவன் இளங்களை அறிவியல் கணிதவியல் படிப்பில் 100சதவிகிதம் மதிப்பெண் பெற்றதால் மனம் மாறிய அவரது தந்தை மேற்படிப்பு படிக்க அனுமதித்துள்ளார். 1982-ம் ஆண்டு இஸ்ரோவின் சிவனுக்கு வேலை கிடைத்தது, அதுமுதல் கிட்டத்தட்ட 37 ஆண்டுகாலம் இஸ்ரோவில் பணியாற்றிய சிவன் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, க்ரையோஜெனிக் எஞ்சின் உருவாக்கம், மீண்டும் பயன்படுத்தும் வகையிலான செயற்கைகோள் ஏவும் வாகனம் ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்.

"ராக்கெட் மேன்" 

மேலும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக கடந்த ஜனவரி 2018-ம் நியமனம் செய்யப்பட்ட சிவன் இஸ்ரோவின் அனைத்துவிதமான ராக்கெட் ஏவும் நிகழ்ச்சிகளிலும் பங்குவகித்தவர் என்பதால் "ராக்கெட் மேன்" என்று அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 நான் பள்ளியில் படிக்கும்போது அணிந்துகொள்ள செருப்பு கூட இல்லை என்றும், தான் முதலில் பேண்ட் அணிந்தது தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்த பின்புதான் என்று ஒருமுறை சிவன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நைட் நேரம்.. காய் வாங்க கடைக்கு போன 50 வயது பெண்ணை.. கடத்தி சீரழித்த 20 வயது இளைஞர்கள்!

காய் வாங்க போன 50 வயது பெண்மணியை 4 பேர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது சம்பந்தமாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள 2 பேரை தேடும் படலம் நடந்து வருகிறது. காரைக்காலை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி அவர். கணவனை இழந்தவர். ஒரு மகன், ஒருமகள் உள்ளனர். மகளை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, மகனுடன் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். காய்கறி வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.


இவர், பரவை மார்க்கெட்டில்தான் காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம். அதன்படி, சம்பவத்தன்று, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பரவை காய்கறி மார்க்கெட்டுக்கு செல்ல பஸ்ஸுக்காக காத்திருந்தார். அப்போது திடீரென பொலிரோ காரில் 4 இளைஞர்கள் வந்தனர். அவர்கள் அனைவருமே 20 வயது மதிக்கத்தக்கவர்களாக இருந்தனர். அந்த பெண்மணியை, 4 பேரும் இழுத்து சென்று காருக்குள் தள்ளி, கடத்திச் சென்றனர்.


பைபாஸ் சாலை அருகே இருட்டு பகுதிக்கு பெண்ணை தரதரவென இழுத்து போன அவர்கள், அங்கு கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிறகு காய்கள் வாங்க வைத்திருந்த 6,000 ரூபாய் பணம், செல்போன், நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

 வீட்டுக்கு சென்ற பெண், மகனிடம் நகை,பணம் திருடு போனது பற்றி மட்டும் சொல்லி உள்ளார். நடந்த அக்கிரமத்தை சொன்னால், அசிங்கமாயிடும் என்று நினைத்து சொல்லாமல் இருந்திருக்கிறார். பணம், நகை திருடு போனதால், ஆத்திரமடைந்த மகன், தாயை கூப்பிட்டு கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றார். அங்கு போலீசாரிடம் பெண்மணி இதைதான் சொன்னார்.


ஆனால் போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவும்தான், துருவி துருவி கேட்டனர். அதன்பிறகுதான் கூட்டு பாலியல் பற்றி விஷயத்தை சொன்னார் பெண்மணி. இதையடுத்து, போலீசார், உடனடியாகக் அந்தப் பெண்ணை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 காரின் தடயங்கள், சென்ற வழி, இளைஞர்களின் அடையாளங்களை வைத்து நகரில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதன்மூலம் கடத்தப்பட்ட பொலிரோ காரையும், சம்பந்தப்பட்ட சின்னையா, விஜய் ஆகிய 2 இளைஞர்களையும் கைது செய்து, நகை, பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள ராமு, வெங்கடேஷ் ஆகிய மற்ற இருவரை தேடி வருகிறார்கள்.


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்