Run World Media: 10/30/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 30, 2019

அரை நிர்வாண போட்டோ (சுஜித் குழியில் இருக்கும்போது), இப்போ கண்ணீரா?: நல்ல நடிப்பு மீரா மிதுன் Actress Meera Mithun Talking about Surjith

பிக் பாஸ் 3 பிரபலம் மீரா மிதுன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கக் கோரி ட்விட்டரில் வீடியோக்கள் வெளியிட்டார். தமிழக அரசின் மெத்தனத்தை அவர் விமர்சித்தார். சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போனது குறித்து அறிந்த மீரா அழுதபடியே வீடியோக்கள் வெளியிட்டார். 

உயிருக்கு போராடிய சுஜித் தற்போது சொர்க்கத்தில் இருப்பார் என்று தெரிவித்தார். அவரின் வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சுஜித் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது உள்ளாடை அணியாமல் கொசு வலை போன்று உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டவர் தானே நீங்கள் என்று சமூக வலைதளவாசிகள் விளாசியுள்ளனர்.  

மீரா பற்றி நெட்டிசன்கள் மேலும் கூறியிருப்பதாவது,
சுஜித் மீது உண்மையாகவே அக்கறை இருப்பது போன்று நடித்து நீலிக் கண்ணீர் விட வேண்டாம். நீங்கள் முதலில் ஒழுங்காக உடை அணியவும். மும்பைக்கு போன உடன் பேண்ட், உள்ளாடை போட மறந்துவிட்டதா?. தயவு செய்து இனியும் நான் ஒரு தமிழ் பெண் என்று மட்டும் கூற வேண்டாம். 

நீங்கள் செய்யும் செயல்களை பார்த்து ஓ, தமிழ் பெண்கள் இப்படித் தானா என்று இந்திக்காரர்கள் தவறாக நினைத்துக் கொள்ளப் போகிறார்கள். இதுவே முதல்வர் வீட்டு குழந்தையாக இருந்தால் இந்நேரம் மீட்டிருப்பார்கள்: -மீரா மிதுன் .

தமிழக அரசின் மெத்தனத்தை விமர்சிப்பது இருக்கட்டும் முதலில் நீங்கள் அடக்க, ஒடுக்கமாக நடந்து கொள்ளுங்கள். தமிழ்நாடே வேண்டாம் என்று தானே மும்பைக்கு சென்றீர்கள். தற்போது என்ன திடீர் அக்கறை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.  


சுஜித் பெரியப்பாவும் கிணற்றில் விழுந்து இறந்தாரா....? Sujith Great Father also Died due to well

சுஜித் குடும்பத்தில் நான்கு மாதத்திற்கு முன்புதான் ஒரு துயரம் நடந்துள்ளது. அது சுஜித்தின் பெரியப்பா கிணற்றில் விழுந்து பலியான பெரும் சோகம். நான்கு மாதம் கழித்து சுஜித் போர்வெல் கிணற்றில் விழுந்து இறந்ததால் குடும்பமே பெரும் சோகமாக உள்ளது. 

 விடாமல் துரத்தும் சோகம் என்று சொல்வார்கள். அது சுஜித் குடும்பத்தில் நிஜமாகியுள்ளது. இந்தக் குடும்பத்தில் ஏற்கனவே ஒரு துயரச் சம்பவம் நடந்து நான்கு மாதங்கள் தான் ஆகிறது. இந்த நிலையில் சுஜித்தையும் அவர்கள் இழந்துள்ளனர்.நான்கு மாதங்களுக்கு முன்புதான் சுஜித்தின் பெரியப்பா கிணற்றில் விழுந்து இறந்தார். அதாவது சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜின் பெரியப்பா மகன் ஜான் பீட்டர். இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். விடுமுறையில் கடந்த மே மாதம் ஊருக்கு வந்திருந்தார்.
 
கோழி
இவரும் நடுக்காட்டுப்பட்டிதான். பிரிட்டோ வீட்டுக்கு அருகில்தான் இவரது வீடும் உள்ளது. வந்த இடத்தில் வீட்டிலிருந்த கோழி ஒன்று வேகமாக வெளியே ஓடியது. வேகமாக ஓடிய அந்தக் கோழி அருகில் இருந்த திறந்தவெளி கிணற்றில் விழுந்து விட்டது.உயிரிழந்தார் 
இதையடுத்து கயிறு கட்டி ஜான் பீட்டர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். கோழியை மீட்டுக் கொண்டு மேலே வந்தபோது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து விட்டது. இதனால் மேலே இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த கிணற்றை மூடி விட்டனர்.பச்சைக் குழந்தை 
இந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள் சுஜித்தை பறி கொடுத்துள்ளது பீட்டர் குடும்பம். அடுத்தடுத்து இரு துயரங்கள், அதுவும் ஒரு பச்சைக் குழந்தையின் மரணம், அதுவும் இருவருமே கிணற்றில் விழுந்து பலியாகியிருப்பது பீட்டர் குடும்பத்தினரை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.பிஞ்சு உயிர் 
ஜான் பீட்டர் இறந்ததும் அந்தக் கிணற்றை மூடியவர்கள், பீட்டர் ஆரோக்கியராஜின் வீட்டுக்கு முன்பு திறந்த நிலையில் கிடந்த போர்வெல்லையும் கவனித்து மூடியிருந்தால் சுஜித் தப்பியிருப்பான். அதில் கவனக்குறைவு ஏற்பட்டதால் இன்று ஒரு பிஞ்சின் உயிர் பறி போயுள்ளது.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்