Run World Media: 2020

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 19, 2020

கீழாமூரில் கிளியாற்றில் வெள்ளம் | தற்காலிக பாதையை நேரில் ஆய்வு செய்த மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி | Keezhamur Kiliyar River Breaking Roads | MLA Pugazhenthi Visit | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழாமூர் ஊராட்சியில் கிளியாற்றின் குறுக்கே 6 கோடியே 64 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைப்பதற்கான பணி கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு தற்காலிக சாலையினை அமைத்து பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையின் காரணமாக கிளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக சாலையில் உடைப்பு ஏற்பட்டு இராமாபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையானது முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. 

இதனையடுத்து மண் மூட்டைகளைக் கொண்டு தற்காலிக தடுப்புகள் அமைத்து சாலை சரிசெய்யப்பட்டது. இந்த வெள்ளத்தினால் கிளியாற்றின் அருகே உள்ள சுமார் 30 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டது.

கடந்த 18.11.2020 மாலை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி தற்காலிக சாலையினை நேரில் ஆய்வு செய்து பாலம் சம்மந்தமான தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  

மேலும், இந்த தற்காலிக பாலம் எத்தனை மண் மூட்டைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது..? எதனால் பாலம் கட்டுமானப் பணிகள் தொய்வடைந்துள்ளது என்பதனை கேட்டறிந்து பாலத்தினை விரைந்து கட்டி முடிக்க வேண்டுமென அதிகாரிகளிடம் முறையிட்டார்.

இந்த நிகழ்வின்போது, அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி.தம்பு, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Wednesday, November 18, 2020

பா.ஜ.க செங்கை மாவட்ட ஊடக பிரிவு செயலாளராக நியமித்தமைக்கு நன்றி...! மக்களின் நலனிற்காக அயராது பாடுபடுவேன்....! | BJP Chengalpattu Media wing Secretary Mogalvadi Manikandan | Vil Ambu News

பா.ஜ.க செங்கை மாவட்ட ஊடக பிரிவு செயலாளராக நியமித்தமைக்கு மோகல்வாடி என்.மணிகண்டன் நன்றி தெரிவித்தார். 

பா.ஜ.க.வில் சாதாரண தொண்டனாக இருந்த நான் மக்கள் நலனுக்காக பாடுபட்டதினால் தற்போது இந்த பொறுப்பில் உள்ளதாகவும், மேன்மேலும் மக்களின் நலனுக்காக அயராது பாடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்தார். 

ஊழலற்ற இந்தியாவை அமைக்க எனது பங்களிப்பினால் கடுகளவு முன்னேற்றம் என்னால் ஏற்பட்டாலும் அது நான் ஜனநாயகத்திற்கு செய்யும் முதல் மரியாதை எனவும், அதுதான் எனது கனவு இலட்சியம் எனவும், பா.ஜ.க. தேசிய தலைமையின் ஆசியுடன் செங்கை மாவட்ட ஊடக பிரிவு செயலாளராக என்னை நியமித்தமைக்கு தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர்.எல்.முருகன், மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ.விநாயகம், மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் மற்றும் செங்கை மாவட்ட தலைவர் வி.பலராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.


குஷ்பு கார் மதுராந்தகம் அருகே விபத்து | Kusboo Car Accident near Madurantakam | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே நடிகை குஷ்புவின் கார் சிறிய விபத்தில் சிக்கியது.  நடிகை குஷ்பு பா.ஜ.க. நடத்தும் வேல் யாத்திரைக்காக கடலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். 


அப்போது, பக்கவாட்டில் வந்த கன்டெய்னர் லாரி குஷ்பு சென்ற கார் மீது மோதியதில் பின்புற பக்கவாட்டு கதவு பலமாக சேதமடைந்தது.  நடிகை குஷ்புவிற்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. பின்னர் மாற்று கார் ஏற்பாடு செய்யப்பட்டு கடலூர் புறப்பட்டார். 


சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மதுராந்தகம் போலீசார் கன்டெய்னர் லாரியினை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பிச் சென்ற ஓட்டுநரை  தேடி வருகின்றனர்.


Monday, November 16, 2020

எலப்பாக்கத்தில் சிறப்பாக நடைபெற்ற குருபெயர்ச்சி அபிஷேகம் 2020 | Elapakkam Temple Guru Peyarchi 2020 | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம் அருள்மிகு சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் நேற்று இரவு குருபெயர்ச்சி அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

நேற்று (15.11.2020) இரவு 9.48 மணிக்கு தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார். இதற்காக திருக்கோயில் வளாகத்தில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு தோஷ நிவர்த்திகளை பற்றி விளக்கப்பட்டது.

மேலும், திரளான பக்தர்கள் விதிமுறைகளை பின்பற்றி இந்த பூஜையில் கலந்து கொண்டனர். குரு பெயர்ச்சியினால் எந்தெந்த இராசிகளுக்கு என்னென்ன பலன் என்பதை காண்போம். ரிஷபம், கடகம், கன்னி ஆகிய இராசிகள் குருபகவானின் சுப பார்வையினை பெறுகிறது. 

மேஷ இராசியில் குரு பகவானின் தன ஸ்தானம் பதிகிறது. விருச்சிக இராசியில் குரு பகவானின் இலாப ஸ்தானம் பதிகிறது. தனுசு இராசியில் தொழில் ஸ்தானத்தில் குரு பகவானின் பார்வை பதிகிறது.


மேலும், மகர இராசிக்கு ஜென்ம குருவாகவும், மிதுன இராசிக்கு அஷ்டமத்து குருவாகவும், துலாம் இராசிக்கு அர்த்தாஷ்டம குருவாகவும், கும்ப இராசிக்கு விரய குருவாகவும், சிம்ம இராசிக்கு ரோக ஸ்தான குருவாகவும் இந்த குரு பெயர்ச்சி அமைகிறது. மேஷம் (60%), ரிஷபம் (70%), மிதுனம் (40%), கடகம் (70%), சிம்மம் (75%), கன்னி (65%), துலாம் (45%), விருச்சிகம் (75%), தனுசு (80%), மகரம் (45%), கும்பம் (50%), மீனம் (80%) என 12 இராசிகளுக்கும் இந்த குரு பெயர்ச்சி பலன் அளிக்கிறது. 

அவரவர் தங்களின் சுய ஜாதகத்தினை ஆராய்ந்து அதன்படி தோஷ பரிகாரங்களை செய்து பலன்களை முழுவதாக பெற்று அனைத்து வளங்களையும் பெறுவதற்கு பூஜையில் ஆராதனை செய்யப்பட்டது.

Thursday, November 12, 2020

தினந்தோறும் தொகுதி மக்களின் கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளும் மதுராந்தகம் எம்.எல்.ஏ | Madurantakam MLA Latest News | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் தினந்தோறும் தங்கள் பிரச்சனைகள் குறித்து மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களாக அளித்துவருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பொதுமக்களின் பகுதிகளுக்கே சென்று குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்று அந்தந்த மனுக்களை துறைசார்ந்த அதிகாரிகளை நேரில் சந்தித்து, உரிய நடவடிக்கைகளை மதுராந்தகம் எம்.எல்.ஏ மேற்கொண்டுவருகிறார்.

அதன்படி, கடந்த 09.11.2020 அன்று தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குநரை நேரில் சந்தித்து தொகுதியின் தேவைகள் தொடர்பான மனுவினை அளித்தார்.

மேலும், தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற பட்டதாரி பெண்ணிற்கு திருமண உதவித் தொகை வழங்க சான்றிதழ் வழங்கினார். பின்னர், எலப்பாக்கம் ஊராட்சி ஈச்சங்காடு பகுதி மக்களின் நிலம் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக கடந்த 10.11.2020 அன்று கோரிக்கை மனுவை பெற்று துறைசார்ந்த அதிகாரிகள் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

Friday, October 23, 2020

மாத்தூர் ஊராட்சியில் சிறுபாலம் அமைக்க ஆய்வு மேற்கொண்ட மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி | Mathur PWD Drain Bridge Inspection | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட மாத்தூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கால்வாயினை தூர்வாரி சிறுபாலம் அமைப்பதற்காக நேற்று (22.10.2020)-ல் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி நேரில் ஆய்வு செய்தார்.  

மேலும், மதுராந்தகம் தொகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய அரசுத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு மேற்கொண்டு அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக களையப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Thursday, October 15, 2020

அச்சிறுபாக்கத்தில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாத நியாயவிலைகடை கட்டிடம்..! அதிகாரிகளின் மெத்தனமா…? தி.மு.க. எம்.எல்.ஏ மனு…! | Acharapakkam Malai Nagar Fair Price Shop Issue | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட மலை நகர் பகுதியில் கடந்த 2016-17-ம் நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து நியாயவிலைக் கடை கட்டப்பட்டது. 

இந்த கடையில் இதுநாள் வரை குடிமைப் பொருட்கள் ஏதும் வழங்கப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். மேலும், இந்த கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பொதுமக்கள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, நேற்று (14.10.2020)-ல் அப்பகுதியில் நடமாடும் ரேஷன் கடையை துவக்கி வைத்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தியிடம் மலைநகர் பகுதி மக்கள் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது என்னவெனில், எங்கள் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகாலமாக எங்கள் பகுதியில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையில் பொருட்கள் வழங்காமல் பயன்பாட்டில் இல்லாததால் நாங்கள் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அச்சிறுபாக்கம் காந்தி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்குவதாகவும், தேசிய நெடுஞ்சாலையினை கடந்து சென்று பொருட்கள் வாங்குவதால் சாலை விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், முதியோர்கள் சாலைகளை கடப்பதை தவிர்ப்பதற்காகவே பல சமயங்களில் பொருட்களை வாங்க இயலாத சூழ்நிலையில் உள்ளதாகவும், அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவினை ஏற்றுக் கொண்ட மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி, அதனை பொது விநியோக திட்ட துணைப் பதிவாளரிடம் அளித்து இப்பகுதியில் உள்ள நியாயவிலை கடையினை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 


Wednesday, October 14, 2020

நில ஆக்கிரமிப்பை மீட்டெடுத்த மதுராந்தகம் எம்.எல்.ஏ புகழேந்தி | Land Issue in Janakipuram at Madurantakam Taluk | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஜானகிபுரம் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே 98 செண்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த இருவர் இது எங்கள் முன்னோர்களின் சொத்துதான் எனக்கூறி பல இலட்சத்திற்கு பேரம் பேசி பணம் பெற்று நிலத்தை விற்பனை முயற்சி செய்துள்ளனர். 

இதனை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இந்த சட்டத்திற்கு புறம்பான செயலை தட்டிக் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எதையும் கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் ஆக்கிரமிப்பு பணிகளில் கவனம் செலுத்தியதால் இளைஞர்கள் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளனர்.


பின்னர், “இந்த இடம் அரசுக்கு சொந்தமான நிலம், இதனை யாரும் உரிமை கோர முடியாது” என்ற பதாகைகளை வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இருமுறை வைத்தும் அந்த பதாகைகளை ஆக்கிரமிப்பாளர்கள் பிடிங்கி எறிந்துள்ளனர்.

எனவே, அப்பகுதி இளைஞர்கள் இந்த விவகாரம் குறித்து கடந்த 02.10.2020 அன்று மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து கிராம இளைஞர்களிடம் தெளிவாக கேட்டறிந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ, கிராம இளைஞர்களை 06.10.2020 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸிடம் புகார் மனுவை அளித்தார். பின்னர், மதுராந்தகம் எம்.எல்.ஏ. சு.புகழேந்தி முயற்சியில் செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவின்பேரில் அந்த இடம் மீட்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த இடம் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்காமல் இருப்பதுற்கு சமுதாய நலக்கூடம் கட்டித்தரக் கோரி 13.10.2020 அன்று மாலை மதுராந்தகம் எம்.எல்.ஏ-வின் வீட்டிற்கே சென்று ஜானகிபுரம் கிராம இளைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட எம்.எல்.ஏ இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைப்பதாக உறுதியளித்தார்.

இந்த செயல்களுக்காக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர். நெல்லிக்குப்பம் சு.புகழேந்திக்கு ஜானகிபுரம் கிராம இளைஞர்கள் தங்களின் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.


Sunday, October 4, 2020

₹ 31 ஆயிரம் ஊதியம்... SBI வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நீங்க ரெடியா? | SBI Requirement 2020 | Vil Ambu News

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 92 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் தகுதியானவர் எனில் விண்ணப்பிக்கலாம்.
எஸ்.பி. வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விபரங்களை கீழே பார்க்கலாம்...

பணி: Special Cadre Officer

காலியிடங்கள் : 92

தகுதி : ஒவ்வொரு பணி வாய்ப்புக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

CA, CFA,MBA, PGDM, புள்ளியியல் துறையில் எம்.எஸ்.சி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், பேங்கிங், நிதியியல், ஐடிஐ, பொருளாதாரம் போன்ற பிரிவிகளில் முனைவர் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: ரூ.31,705 - 51,490தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி -மெயில் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.750 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.10.2020


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்