Run World Media: February 2020

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, February 26, 2020

சோத்துப்பாக்கத்தில் சிறப்பாக நடைபெற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி செண்டிவாக்கம் ஆர்.சி. பள்ளி மாணவர்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு | Sendivakkam School Conducted Helmet Awareness


செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சோத்துப்பாக்கத்தில் இன்று காலை 10 மணியளவில் அல்ப்ரிடோ கூமோ குழுமம் மற்றும் செண்டிவாக்கம் ஆர்.சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் சார்பாக பிரம்மாண்ட ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


சோத்துப்பாக்கம் லூர்து நகர் தேவாலயத்தில் துவங்கிய இந்த பேரணியினை அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் மேல்மருவத்தூர் காவல் துணை ஆய்வாளர் தேவதாஸ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
 
வந்தவாசி சாலை, சோத்துப்பாக்கம் பஜார் பகுதி என அனைத்து பகுதிகளிலும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டு ஹெல்மெட் அணிவதன் கட்டாயத்த்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தினர்.
பேரணி துவங்குவதற்கு முன்னர் நடத்திய நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மறைமாவட்ட ஆர்.சி. பள்ளிகளின் கண்காணிப்பாளர் ரோச் இனேஷியஸ், கூமோ திட்ட மேலாளர் சார்லஸ் குழந்தை, பள்ளியின் தாளாளர் ஆராக்கிய ரேமண்ட் ஆகியோருடன் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் மேல்மருவத்தூர் காவல் துணை ஆய்வாளர் தேவதாஸ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவங்கினர். இந்த பேரணியில் பள்ளி தலையாசிரியை மற்றும் சக ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
பள்ளி மாணவர்களின் இந்த தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பேரணியை அனைத்து பொதுமக்களும் வரவேற்றனர்.    

திருக்கழுகுன்றத்தில் நடைபெறவிருந்த குழந்தைத் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு செங்கல்பட்டு – இலத்தூர் மணமக்களின் திருமணம் நிறுத்தம் Stoping Child Marriage in Thirukazhukundram

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருக்கழுகுன்றத்தில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை (26.02.2020) நடைபெறவிருந்த குழந்தைத் திருமணத்தை நேற்று இரவு வரவேற்ப்பிற்கு முன்னரே குழந்தை பாதுகாப்புத் துறை (Childline) அதிகாரிகளும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்தியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.


செங்கல்பட்டு, திருப்போரூர் கூட்ரோடு பகுதியில் வசித்து வரும் சம்பத் – பத்மாவதி தம்பதியர்களின் மகனுக்கும், செய்யூர் வட்டம், இலத்தூர் பகுதியைச் சார்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகளுக்கும் நேற்று திருக்கழுகுன்றத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு மற்றும் இன்று திருமணம் நடக்கவிருந்த தருணத்தில், தகவலறிந்து விரைந்து வந்த மாவட்ட சைல்டுலைன் குழு உறுப்பினர் வினோலியா, யுனிஷா மற்றும் திருக்கழுகுன்றம் இ2 காவல்நிலைய ஆய்வாளர், இலத்தூர் சமூக நலத்துறை GS ஆகியோர்கள் இந்த குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். 

பின்னர், மணமகனிடம் முறையான கடிதம் பெற்று, பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்வேன் என்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர், மணமக்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

மணமகளுக்கும் மாவட்ட சைல்டுலைன் குழு உறுப்பினர் வினோலயா முறையான விழிப்புணர்வையும், அறிவுரைகளையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Thursday, February 20, 2020

பெண் பயணிகளுடன் ‛கடலைபோட' பஸ் டிரைவர்களுக்கு தடை | Bus Drivers are getting warning to talk with Ladies Passengers

பேருந்தில் முன் பக்கம் அமரும் பெண் பயணிகளிடம் பேசிக்கொண்டே ஓட்டுவதற்கு டிரைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயணம் என்றாலே பஸ், ரயில் தான் பாதுகாப்பானது என்ற நிலையில், அப்படியான பஸ் பயணத்தையும் சில டிரைவர்களும், அவருடன் முன் பக்கம் அமர்ந்து பேச்சு கொடுத்து வருபவர்களும் பரலோகத்திற்கு செல்லும் பயணமாக மாற்றுகின்றனர்.


தொலைதூர பயணத்தில் டிரைவர் அசதியாக இருந்து தூங்கி விடக்கூடாது என்பதற்காக அவருடன் அவ்வப்போது பேச்சு கொடுத்து வரலாம். ஆனால், அதையே வசதியாக வைத்துக்கொண்டு பெண்களிடம் டிரைவர்கள் கடலை போட்டுக் கொண்டே வருவதால் வண்டியில் இருக்கும் மற்றவர்களின் நிலை அதோகதியாகி விடுகிறது.
 

பேச்சில் கவனம் செலுத்தும் டிரைவர்கள், ரோட்டில் கவனம் செலுத்தாமல் வண்டியை எங்கேயோ கவிழ்த்து விடுகின்றனர். பெண்களுடன் பேசிக்கொண்டே பஸ் ஓட்டும் டிரைவர்கள், பெண்கள் முன்னே தனது ஹீரோயிசத்தை வெளிக்காட்ட, மொத்த பயணிகளின் உயிரையும் பணயம் வைப்பது ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது. இதனால், பஸ்சின் உள்ளே இருக்கும் சில பயணிகள் தொடர்ந்து புகாரளித்து வந்தனர்.


இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள கோவை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம், நேற்று (பிப்.,19) சுற்றறிக்கை அனுப்பியது. அதில், பஸ்சின் முன் பக்கம் அமரும் பெண்களிடம், பஸ்சை ஓட்டும் டிரைவர்கள் பேசக்கூடாது.


அவ்வாறு விதியை மீறி நடக்கும் டிரைவர்கள் மீது நடவடிக்கை பாயும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கண் இமைக்கும் நேரத்தில் கூட விபத்து நிகழும் என்பதால், டிரைவர்கள் கவனத்தை திசை திருப்பும் தேவையற்ற விஷயங்களை ஒதுக்கிவிடுவது நல்லது எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, February 19, 2020

இனி டோல்கேட்டுகளில் நோ பிஸினஸ் | Small Buisness are not allowed here after at any toll plazza | Run World Media

சுங்கச் சாவடிகள் என்றாலே நினைவுக்கு வருவது நேர விரயம் மற்றும் பண விரயம் தான். ஆனால் தற்போது Fastag செயல்முறைக்கு வந்தபின்னர் நேர விரயம் என்பது ஓரளவிற்கு கட்டுக்குள் உள்ளது.ஆனால், இதற்கும் அப்பாற்பட்டு நமக்கு நினைவில் வருவது என்னவெனில் டோல்கேட் அருகிலே உள்ள சிறு கடைகளும், கையேந்தி வியாபாரிகளும் தான்.


ஓடும் வாகனங்களில் ஏறி, இறங்கி இவர்கள் தங்களுடைய வயிற்றுப்பிழைப்பிற்காகவே சில அபாயகரமான வேலைகளைச் செய்கின்றனர்.

சில சமயங்களில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவதன் காரணமாக அருகே வரும் வாகனங்களை கவனிக்காமல் இவர்களுக்கு விபத்து ஏற்பட்டு பலத்த காயமோ அல்லது சில சமயங்களில் உயிர்போகும் நிலையோ கூட ஏற்படுகிறது. மேலும் சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் இதே நிலையே.


இதனால் சுங்கச்சாவடி அருகே உள்ள வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வியாபாரம் செய்வதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் விதமாக சுங்கச்சாவடி அருகே வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அப்படி இந்த தடையை மீறுவோர் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையினையடுத்து செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் அவர்கள் அச்சிறுப்பாக்கத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச் சாவடியருகே உள்ள சிறு வியாபாரிகளுக்கு துண்டுபிரச்சுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
என்னதான் இதுபோன்ற சிறுவியாபாரிகளின் பிழைப்பு கெட்டாலும், இந்த வியாபாரிகளின் உயிர், இவர்களின் குடும்பத்தின் நிலை மற்றும் வாகன ஓட்டிகளின் குடும்பம் நிலையை யோசிக்கும் பட்சத்தில் இதுபோன்ற சில எச்சரிக்கைகள் வரவேற்கத்தக்கதே என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

Tuesday, February 18, 2020

சோத்துப்பாக்கத்தில் வேப்ப மரத்தில் திடீரென வடியும் பால் | கூட்டம் அலைமோதுகிறது | Neem Tree Milk in Sothupakkam Temple

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சோத்துப்பாக்கத்தில் (மேல்மருவத்தூர்)உள்ள ஶ்ரீதுர்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலின் வேப்ப மரத்தில் சுமார் 4.30 மணியளவில் திடீரென பால் வடிவதை பொதுமக்கள் கண்டுள்ளனர்.சோத்துப்பாக்கம் - வந்தவாசி சாலையில் NVM திருமண மண்டபம் அருகே இந்த கோயில் அமைந்துள்ளது. ஏரிக்கரையின் மீது அமைந்துள்ள இந்த கோயிலில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிவதைக் காண தற்போது அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடியுள்ளனர்.

 


பொண்டாட்டிக்கு 4 பேரோட தொடர்பு.. சந்தேகப்பட்ட கணவர்.. "கம்" போட்டு ஒட்டி.. ஷாக்கடிக்கும் சம்பவம்! Wife Husband Crime News

இப்படி ஒரு கொடுமை எந்த ஊரிலும் நடந்திருக்குமான்னு தெரியலை. மனைவிக்கு ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக சந்தேகப்பட்ட கணவர், ஒரு சூப்பர் க்ளூ கம்மை வாங்கி மனைவியின் பிறப்புறுப்பில் ஒட்டி விட்டார். இதனால் வலியில் துடித்து அலறிய அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்துள்ளனர். 
 

அந்த கிறுக்குப் பிடிச்ச கணவரின் பெயர் டென்னிஸ் முமோ. 36 வயதாகிறது. இவருக்கு எப்பப் பார்த்தாலும் தன்னோட மனைவி மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்பட்டார். குறிப்பாக நான்கு ஆண்களுடன் உறவு இருப்பதாக அவரே நினைத்துக் கொண்டார்.


இதனால் கோபமடைந்த அவர் என்ன செய்யலாம் என்று யோசித்தார். இந்த நிலையில்தான் ருவாண்டா நாட்டுக்கு ஒரு வேலையாக செல்ல வேண்டியிருந்தது. தான் போய் விட்டால் மனைவி என்னவெல்லாம் செய்வாளோ என்று பயந்த அவரது குறுக்குப் புத்தி வேறு விதமாக யோசித்தது. விலை உயர்ந்த சூப்பர் க்ளூ கம்மை வாங்கினார். 

பின்னர் தனது மனைவியை கட்டாயப்படுத்தி கம்மை அவரது பிறப்புறுப்பில் தடவி ஒட்டி விட்டார். பின்னர் ருவாண்டா கிளம்பிப் போய் விட்டார். கம் ஒட்டப்பட்டதால் பெரும் அவதிக்குள்ளானார் முமோ மனைவி. சிறு நீர் கழிக்கக் கூட முடியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டார். வலியில் அலறித் துடித்த அவர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். 

டாக்டர்கள் அவருக்கு அவசரமாக சிகிச்சை அளித்து கம்மை அகற்றி நிவாரணம் அளித்தனர். அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முட்டாள் முமோவைக் கைது செய்தனர். தற்போது முமோ வேறு மார்க்கமாக தனது மனைவியை பழி வாங்கக் கிளம்பியுள்ளாராம். 

அதாவது அந்த நாட்டுச் சட்டப்படி கணவருக்கு தெரியாமல் மனைவியோ அல்லது மனைவிக்குத் தெரியாமல் கணவரோ தகாத உறவு வைத்திருந்தால் 100 சவுக்கடி தண்டனையாக தரப்படும். அந்த தண்டனையை தனது மனைவிக்குத் தர வேண்டும் என்று இப்போது அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் முமோ. இதுதொடர்பாக அவர் போலீஸிலும் புகார் கொடுத்துள்ளாராம். 
இதுதொடர்பாக முமோ கூறுகையில், அவளது செல்போன் மெசேஜ் எல்லாம் ஆண்களுக்கே போயுள்ளது. பல ஆண்களுக்கு தனது நிர்வாணப் படத்தையும் அனுப்பியுள்ளார். எனவே அவர் என்னை ஏமாற்றி விட்டார். துரோகம் செய்து விட்டார். அதனால்தான் நான் கம் ஒட்டினேன். நான் ருவாண்டோ செல்லவிருந்த சமயத்தில் சில ஆண்களை சந்தித்து ஜாலியாக இருக்க திட்டமிட்டிருந்தார். 

இதனால்தான் வேறு வழி தெரியாமல் கம்மை ஒட்டினேன் என்று கூறியுள்ளார் முமோ. அதுக்காக இப்படியாப்பா பண்ணுவ.. என்னவோ போங்கடா!!

கவலைய விடுங்க.. சொந்த ஊரில் இல்லாவிட்டாலும் இனி வாக்களிக்கலாம்! Voter at anywhere... Indian Elections


இனி நீங்கள் சொந்த ஊரில் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்!
 தேர்தலின் போது நீங்கள் சொந்த ஊரில் இல்லாமல் வெளியூரில் இருப்பதால் வாக்களிக்க வீட்டிற்கு வர முடியவில்லையா? இதற்கு தீர்வு வந்துவிட்டது.


சென்னை ஐஐடி மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் சேர்ந்து  புதிய தொழில்நுட்பத்துடன் இந்த பிரச்சினைக்குத் தீர்வு கண்டுள்ளது. இந்த தொழில்நுட்பப்படி நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் இனி உங்கள் தொகுதிக்கு வாக்களிக்க முடியாது.  
பிளாக் செயின் சிஸ்டம் மூலம் புதிய தொழில்நுட்பத்தை இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உங்களுடைய வாக்குச்சாவடிக்கு  செல்லாமலே, வாக்கு செலுத்தலாம்.

கடந்த பொதுத் தேர்தலில் 30 கோடிக்கும் அதிகமான குடிமக்கள் வாக்களிக்க முடியவில்லை. இதில் பலர் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு வரமுடியவில்லை. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண, இந்திய தேர்தல் ஆணையம் சென்னை ..டி.யுடன் இணைந்து வாக்காளர்களுக்கு நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் பிளாக்செயின் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பை வழங்கவுள்ளது.  
இந்த திட்டம் தற்போது ஆராய்ச்சி வடிவில் இருப்பதால் இந்த தொழில்நுட்பம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பதைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இதற்கான ஒப்புதல் கிடைத்த பின்னர் இந்த தொழில்நுட்பம் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து தலைமைத் தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறியிருப்பதாவது, "வெவ்வேறு பகுதிகளில் நிரந்தரமாக வசிக்கும் மக்கள் தங்கள் வாக்குரிமையை மாற்றுவர், ஆனால் இது தற்காலிகமாகக் குடியிருக்கும் மக்களுக்கு வாக்களிக்கக் கடினமாக இருக்கும், விரைவில் வாக்காளர் .டியுடன் ஆதார் இணைப்பதற்கான திட்டம் சட்ட அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும்  இனிவரும் நாட்களில், தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் மாதிரி நடத்தை நெறிமுறை தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
 
தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால், வாக்காளர் எந்தவொரு பகுதியில் இருந்தும் தனது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளலாம், இதன் மூலம் இந்த நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்