வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடைகள் மூலம் குழந்தைகளுக்கு பால் வழங்க முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு | CM Pettition
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, May 15, 2020

அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடைகள் மூலம் குழந்தைகளுக்கு பால் வழங்க முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு | CM Pettition


செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேளம்பாக்கத்தில் தலைமை அலுவலகம் கொண்டு செயல்பட்டு வரும் குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பினர், கொரோனா பாதுகாப்பு பணிகளில் விரைவாகவும், பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரின் தேவைகளை பூர்த்திசெய்யும் விதமாகவும் செயல்பட்டுவரும் தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வருக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
மேலும், தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவின் காரணமாக உணவு தேவைகளின் அடிப்படையில் கடும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது குழந்தைகள்தான் எனவும், குழந்தைகளின் முக்கிய உணவு தேவையான பால்கூட வாங்க இயலாத நிலையில் மக்கள் உள்ளதால், ஆவின் பால் நிறுவனம் மூலம் கிராமங்களில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலமாகவோ அல்லது ரேஷன் கடைகள் மூலமாகவோ பால் வழங்க ஆணையினை பிறப்பிக்குமாறு கடந்த 04.05.2020 அன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பின் தலைவர் டி.தேவன்பு, அச்சிறுபாக்கம் ஒன்றிய ஒருங்கினைப்பாளர் அ.டோமினிக் ஆகியோர் இந்த மனுவினை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment