வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? பிளஸ் 2 ரிசல்ட் எப்போது?தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் | TN 12th Result 2020 | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, July 02, 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? பிளஸ் 2 ரிசல்ட் எப்போது?தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் | TN 12th Result 2020 | Vil Ambu News

தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.




ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து கோபிச்செட்டிப்பாளையம் அருகே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,  12-ம் வகுப்பு தேர்வு முடிவை திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. முதல்வர் பழனிசாமியிடம் ஆலோசனை நடத்திய பிறகே 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் முதல் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுடன் மாணவர்களுக்கு தேர்ச்சியும் அளிக்கப்பட்டுள்ளது. 


இதனைபோல், தமிழகத்திலும், முதலில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் அனவைரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு நடத்த தீவிரமாக ஈடுபட்ட நிலையில், கொரோனா தாக்கம் அதிகரித்தால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 11-ம் வகுப்பு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜூன் மாதத்தில் திறக்க வேண்டிய பள்ளிகள் ஜூலை மாதம் பிறந்தப் பின்னும் திறக்கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இருப்பினும், பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.  12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தற்போது வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதிய பிறகே முடிவுகளை வெளியிட முடியும். மீண்டும் பேருந்து இயக்கினால் மட்டுமே மாணவர்களை தேர்வு எழுத வைக்க முடியும் என்றார். 

ஜூலை முதல் வாரத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் என ஏற்கனவே கூறியிருந்தார். முதல்வரிடம் ஆலோசித்த பிறகே 12-ம் வகுப்பு தேர்வு முடிவு பற்றி அறிவிக்கப்படும் என்று தற்போது கூறியுள்ளார்.

மேலும், அனைத்துத் துறை ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார். மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பெற்றோர்களிடம் கருத்துக் கேட்ட பின்பே பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலைமை சரியான பின்பே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்; பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். தற்போதைக்கு பள்ளிகளை திறப்பதற்கான சூழல் இல்லை என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment