வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கத்தில் காவல் ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் | Acharapakkam | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, July 04, 2020

அச்சிறுபாக்கத்தில் காவல் ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் | Acharapakkam | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம்  பேரூராட்சி சமுதாய கூடத்தில் 03.07.2020 அன்று மாலை 5 மணிக்கு பேரூராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர்  மற்றும்  குடியிருப்போர் சங்கத்தினர்களோடு ஆலோசனை கூட்டமானது அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் தலைமையில்  நடைபெற்றது.
இதில், அச்சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுரேஷ் முன்னிலை வகித்து கொரோனா வைரஸிலிருந்து தம்மையும், சமுதாயத்தையும் பாதுகாப்பது குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இதில் காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், அச்சிறுபாக்கம் ஆரம்ப சுகாதார ஆய்வாளர் கன்னியப்பன், பேரூராட்சி  பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த தருணத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும், எக்காரணத்தைக் கொண்டும் கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் அரசாங்கத்தின் அறிவுரைகளை மீறக்கூடாது எனவும் காவல் ஆய்வாளர் சரவணன் கேட்டுக் கொண்டார்.


இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கையுறைகள், முகக்கவசம்  மற்றும்  கிருமிநாசினி ஆகியவை வழங்கப்பட்டது.
 
இதில் அனைத்து வியாபாரிகளும் கடைமுன்பு கோடு போடுவது, கடைதிறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரத்தை நிர்ணயம் செய்வது, முகக்கவசம் அணியவில்லையென்றால் பொருட்கள் கிடையாது என்று பொதுமக்களுக்கு கூறவேண்டும் எனவும் சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்க வைத்து வியாபாரம் செய்யவேண்டும் போன்ற உறுதிமொழிகள் ஆலோசனை கூட்டத்தில் மூலமாக எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 


 


No comments:

Post a Comment