Run World Media: 01/01/20

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 1, 2020

1 லட்சம் ரூபாயுடன் 2020 புத்தாண்டில் அசத்திய மதுராந்தகம் விநாயகர் | Madurantakam Vinayagar Statue decreated with 1 lakh rupees notes

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் 2020 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்கதர்கள் அன்பளிப்போடு மதுராந்தகம் நகரில் உள்ள ஶ்ரீசக்திபுஷ்ப விநாயகர் திருக்கோயிலில் 1 லட்சம் ரூபாயில் கோர்க்கப்பட்ட மாலையினால் ஜொலிப்புடன் அருள்பாளித்தார் விநாயகர். இதனைக் காண மதுராந்தகத்தினை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பக்கதர்கள் குவிந்தனர். 

 

தென்திருப்பதி திருமலைவையாவூரில் ஆங்கில புத்தாண்டையொட்டி படி உற்சவம் | Malaimaiyavur Temple New year celebration news 2020


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேடந்தாங்கல் செல்லும் வழியில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருமலைவையாவூர் மலை மீது  ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. 
இத்திருத்தலத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு படி உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருக்கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மலை மற்றும் திருக்கோயில் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் ஜொலித்தது.  
மூலவர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் வஜ்ராங்கி சேவையிலும், உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் முத்தங்கி சேவையிலும், மற்றொரு உற்சவரான ஸ்ரீதேவி பூதேவி சமேத கள்ளபிரான் சுவாமி பரமபதநாதன் திருக்கோலத்திலும் அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து வரிசையில் சென்று பெருமாளை வழிபட்டனர்.  
உற்சவ ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை வேலூர் இணை ஆணையர் செ.மாரிமுத்து,  உதவி ஆணையர்  கே.ரேணுகாதேவி, கோயில் ஆய்வாளர் ஜீவா, கோயில் நிர்வாக அதிகாரி  சோ. செந்தில்குமார் ஆகியோர் வெகுசிறப்பாக செய்திருந்தனர்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ரூ.75 இலட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஆன்மீககுரு பங்காரு அடிகளார் | Melmaruvathur New Year Celebration


2020 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு சிறப்பு மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவினை முன்னிட்டு சித்தர் பீடம் முழுவதும் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 
மேலும், தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல் உலகமெங்கும் அதிக பக்தர்களை கொண்ட பெருமைக்குரியதும் ஆன்மீக நம்பிகைக்கும் உரிய ஸ்தலமாக விளங்குகிறது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம். இரவு 11 மணிக்கு ஆங்கில புத்தாண்டை வரவேற்க வழிபாடுகளை மேற்கொண்டு காலை சுமார் 05.00 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூசைகள் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத் தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார் அவர்கள் துவக்கத்துடன் நடைபெற்றது. 
மேலும், ஆன்மீக இயக்கத் துணைத்தலைவர்  கோ.ப செந்தில்குமார் தலைமையில் காலை 06.30 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. விழாவின் தொடர்ச்சியாக காலை 09.30 மணியளவில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அவர்களுக்கு பக்தர்கர் பாத பூசைகளை நடத்தி வரவேற்றனர். பின்னர் இயக்கத் துணைத்தலைர் ஶ்ரீதேவி இரமேஷ் அன்னதானத்தை துவக்கி வைத்தார். 
காலை 11.30 மணியளவில் கர்நாடக மாநில கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்ராஜ், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சக்தி கே.எஸ்.ஈஸ்வரப்பா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் மடிக்கணினி, தையல் இயந்திரம், மருத்துவ நெபுலைஸர் கருவிகள், எலக்ட்ரிக்கல் பழுதுபார்க்கும் கருவிகள், செயற்கை கால்கள், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவை பரிசோதனை கருவிகள் என 113 பயனாளர்களுக்கு சிறப்பு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. 
மேலும் 3 பேருக்கு பயணிகள் ஆட்டோ வழங்கப்பட்டன. மேலும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பள்ளி போன்ற பல்வேறு அமைப்புகளுக்கு 26 இலட்சம் நன்கொடையாகவும் மேல்மருவத்தூரில் உள்ள கலை அறிவியல் கல்லூரிக்கு 1 பேருந்தும் என 75 இலட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
இதனைத் தொடர்ந்து ஆன்மீக இயக்கத்தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார்  விழாப் பேருரை ஆற்றினார். ஆன்மீக இயக்கத் தலைவர் உமாதேவி, மோனலட்சுமி ஆகியோர் விழாவினை சிறப்பித்தனர். விழா ஏர்பாடுகளை கர்நாடக மாநில மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க பொறுப்பாளர்கள் இராஜகோபால், உதயகுமார் ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

[முக்கிய அறிவிப்பு] சலூன் கடைகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு

அனைத்து பொருட்களின் விலைகளும் தற்போதைய காலக்கட்டங்களில் உயர்ந்து வரும் நிலையில் அழகு சாதன பொருட்கள், மின்சார கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக, சலுான் கடைகளில், முடி வெட்டுதல் உள்ளிட்டவற்றுக்கு, இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய கட்டணத்தைவிட, 10 ரூபாய் அதிகரித்துள்ளது.



திருப்போரூர் அடுத்த கொளத்துாரில், தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

உயர்த்தப்பட்ட கட்டணம் விபரம்:
சாதாரண சலுான்
  1. முடி வெட்ட மற்றும் முக சவரம் -180
  2. முடி வெட்ட மட்டும்- 120
  3. முகச்சவரம் மட்டும் - 70
  4. சிறுவருக்கு முடி வெட்ட - 110
  5. முடி வெட்ட, முகச்சவரம், சாயம் பூசல் - 350

ஏசி சலுான்
  1. முடி வெட்ட மற்றும் முக சவரம் -200
  2. முடி வெட்ட மட்டும்- 140
  3. முகச்சவரம் மட்டும் - 80
  4. சிறுவருக்கு முடி வெட்ட - 120
  5. முடி வெட்ட, முகச்சவரம், சாயம் பூசல் - 450

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்