Run World Media: 04/01/20

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 1, 2020

மதுராந்தகம் எம்.எல்.ஏ-வின் கொரோனா வைரஸ் தொடர்பான தொகுதி ஆய்வு | Madurantakam MLA Corona Inspection in Madurantakam Circle Govt Offices | | Vil Ambu | வில் அம்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி 31.03.2020 மற்றும் 01.04.2020 தொகுதியில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளிடமும் கொரோனா முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டத்தினை நடத்தினார்.
அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகம், கருங்குழி பேரூராட்சி அலுவலகம், மதுராந்தகம் அரசு மருத்துவமனை, அச்சிறுபாக்கம், மோச்சேரி எண்டத்தூர் மருத்துவமனை, மதுராந்தகம் காவல் நிலையம், அச்சிறுபாக்கம் காவல் நிலையம் என அனைத்து இடங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து நேரில் கேட்டறிந்தார்.
இன்று காலை (01.04.2020) மதுராந்தகத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள காய்கறி, பழக்கடைகளை மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியாவுடன் இணைந்து துவக்கி வைத்து சமூக விலகல் மற்றும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வுகளை பற்றி வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கினார். 
ஊர்காவல்படை காவலர்களுக்கு கிருமிநாசினி மற்றும் முகக் கவசங்களை வழங்கியதுடன் அவர்களுடன் கலந்துரையாடி பாதுகாப்பு பணிகளைப் பற்றியும் கேட்டறிந்தார்.
மதுராந்தகம் எம்.எல்.ஏ-வின் கொரோனா வைரஸ் தொடர்பான தொகுதி ஆய்வுகளின் தொகுப்பு:


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சுகாதாரப் பணியாளர்களுக்கு சுயப்பாதுகாப்பு உபகரனங்களை வழங்கிய மதுராந்தகம் நகராட்சி ஆணையர் | Personal Protective Eqtuipment given by Madurantakam Muncipality Commissioner Narayanan | வில் அம்பு | Vil Ambu

மதுராந்தகம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு "கொரோனா வைரஸ் (COVID-19) தடுப்பு நடவடிக்கைகள்" என அச்சிடப்பட்ட சிறப்பு அடையாள அட்டைகளை மதுராந்தகம் நகராட்சி ஆணையர் வ.நாராயணன் நேற்று (31.03.2020) வழங்கினார்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுவரும் பணியாளர்களுக்கு கையுறை, பாதுகாப்பு உடை போன்ற சுயபாதுகாப்பு உபகரனங்களையும் வழங்கினார். சுகாதார அலுவலர் மணிகண்டன், துப்புரவு ஆய்வாளர் லட்சுமி பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.






மதுராந்தகம் நகரின் காய்கறி பழக்கடைகள் இடமாற்றம் | Madurantakam Vegitable market shifting due to corona issue | Vil Ambu | வில் அம்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் செயல்பட்டு வந்த காய்கறி, பழக்கடைகள் மதுராந்தகம் போக்குவரத்துக் கழக பணிமனை எதிரில் உள்ள சி.எஸ்.ஐ பள்ளி வளாகத்தில் இன்று முதல் (01.04.2020) தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.




இந்த இடமாற்ற ஏற்பாடுகளை மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா, மதுராந்தகம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மற்றும் மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளர்ஆகியோர் மேற்கொண்டனர்.



இந்த வளாகத்தில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் கோடுகள் மற்றும் வட்டங்கள் வரையப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 


 

 

 



 

 

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்