Run World Media: 04/09/20

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 9, 2020

இனி அச்சிறுபாக்கம், ஒரத்தி காவல் எல்லைகளுக்குள் தேவையற்று சுற்றுபவர்களின் உரிமம் ரத்து மற்றும் வாகனம் பறிக்கப்படும் | Acharapakkam Inspector Warning their Police Limit People


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் மற்றும் ஒரத்தி காவல் எல்லைகளுக்குள் தேவையற்று இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வலம் வருபவர்களின் வாகனம் பறிக்கப்படும் எனவும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் திட்டவட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிரை பாதுகாத்து வைரஸ் பரவாமல் இருக்க வரும் ஏப்ரல் 14-ம் தேதிவரை இந்திய அரசாங்கம் 144 தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது. 
இந்நிலையில் பொதுமக்கள் சிலர் அத்தியாவசிய பொருட்களை வாங்கச் செல்வதாகக் கூறி தேவையில்லாமல் ஊற்சுற்றி வருகின்றனர். எனவே, இப்படி சுற்றுபவர்களின் வாகனம் பறிக்கப்படுவது மட்டுமின்றி அப்படி சுற்றுபவரின் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்படும் என எச்சரிகை விடுத்துள்ளார்.
அப்படி தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டால் அந்த நபர் எதிர்காலத்தில் பாஸ்போர்ட் மற்றும் விசா பெறுவதற்கு தடைவிதிக்கப்பட்ட நபராக கருதப்படுவார். மேலும் எதிர்காலத்தில் அரசு பணியில் சேர தகுதியில்லாத நபராக கருதப்படுவார். எனவே, அப்படி ஒரு சூழலை பொதுமக்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டாம் என ஆட்டோ மூலமும் பிரச்சராம் மேற்கொண்டு வருகிறார் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன். 
மேலும், இதுநாள் வரை அச்சிறுபாக்கம் மற்றும் ஒரத்தி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 90 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

அச்சிறுபாக்கம் மழைமலை மாதா அருள்தளம் மற்றும் செங்கை மறைமாவட்டம் சார்பாக வழங்கப்பட்ட ரூ.12 லட்சம் கொரோனா நிவாரண நிதி | 12 Lakh Corona Relief Fund Given by APM Malaimadha Temple and Chengai Maraimavattam


செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் சார்பாகவும், அச்சிறுபாக்கம் மழை மலை மாதா அருள்தளம் மூலமாகவும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.12 லட்சம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
ஆயர் டாக்டர்.ஏ.நீதிநாதன் தலைமையில் பேரருள் தந்தை பாக்கிய ரோஜிஸ், மறைமாவட்ட நிதி நிர்வாகி ஜார்ஜ் ஸ்டீபன் மற்றும் அச்சிறுபாக்கம் மழை மலை மாதா அருள்தல அதிபர் ஆர்.லியோ எட்வின்  ஆகியோர் இணைந்து 09.04.2020 அன்று காலை 11 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.12 லட்சம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினர்.
செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் சார்பாக ரூ.10 லட்சம் மற்றும் அச்சிறுபாக்கம் மழை மலை மாதா அருள்தளம் சார்பாக ரூ.2 லட்சம் காசோலையாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ஆதரவற்றவர்களுக்கு வழங்கப்படும் கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் | Corona Relief given to MKM Circle Peoples from TN Govt


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை ஊரடங்கு காரணமாக வெளியே வரமுடியாமலும் போதிய உணவு வசதி இல்லாமலும் இருக்கும் முதியோர்கள், ஊனமுற்றோர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் தமிழக அரசின் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிவாரண பொருட்கள் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா மேற்பார்வையுடன் ஆதவரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, அச்சிறுபாக்கம் பேரூராட்சியின் சுற்றுவாட்டாரப் பகுதிகளில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வீடற்ற ஏழைகள் மற்றும் தெருவோர வியாபாரிகள் ஆகியோருக்கு 09.04.2020-ல் மதிய உணவு வழங்கப்பட்டது. 
இதேபோன்று எலப்பாக்கம், வையாவூர் கிராமங்களில் முதியவர்கள், ஊனமுற்றோர்களுக்கு அரசின் மூலமாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. மதுராந்தகம் வட்டம், சிதன்டி கிராமத்தில் இருளர் இன மக்களுக்கு தனியார் பங்களிப்புடன் 15 இருளர் குடும்பங்களுக்கும் 2 முதியவருக்கும் தலா 10 கிலோ அரிசி, 1 கிலோ எண்ணெய், 1 கிலோ பருப்பு, 1 கிலோ சர்க்கரை, உப்பு, சோப்புகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
 
மேலும், செய்யூர் வட்டம், சூணாம்பேடு கிராமத்தில் வசிக்கும் 15 நரிக்குரவர் இன மக்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. 
இதே போன்று மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டங்களில் உள்ள வயதானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வங்கி வணிகத் தொடர்பாளர்கள் மூலமாக வீடுதோறும் வழங்கப்படுவதையும் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர்  லட்சுமிபிரியா உறுதி செய்தார்.

 
 


 

 

இருளர்களுக்கு உதவிபொருட்களை வழங்கிய மதுராந்தகம் எம்.எல்.ஏ.புகழேந்தி | Madurantakam MLA giving Corona Relief to Narikkuravar People


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பிலாப்பூர் கிராமத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கு மதுராந்தகம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி 08.04.2020 அன்று 5 கிலோ அரிசி மற்றும் உதவி பொருட்களை வழங்கினார்.
கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் பிழைப்பாதாரத்தை இழந்து நிற்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு  மதுராந்தகம் எம்.எல்.ஏ அரிசி மற்றும் உதவிப் பொருட்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்