Run World Media: 04/14/20

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, April 14, 2020

1700 கி. மீ... 4 மாநிலம்... ஒற்றை மிதிவண்டி - வீடு வந்த சேர்ந்த இளைஞர்! Odisa Labour came to native by bicycle 1700 Km

கரோனா தொற்று உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் சூழ்நிலையில், உலகின் பல்வேறு நாடுகள் செய்வதறியாது தவித்து வருகின்றது. 


இந்தியாவிலும் இதன் பாதிப்பு, வேகமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் ஒரு நீட்சியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கூலி தொழிலாளி ஒருவர் 1700 கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்து தனது சொந்த ஊர் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்தவர் மகேஷ் ஜீனா. இவர் மராட்டியத்தில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் புணிபுரிந்து வந்தார். 

ஊரடங்கு காரணமாக தான் வேலை பார்த்து வந்த தொழிற்சாலை மூடப்பட்ட காரணத்தாலும், கையில் பணம் இல்லாத காரணத்தாலும் தனது சொந்த ஊருக்கு செல்ல அவர் முடிவெடுத்துள்ளார். 

ஆனால், ஒடிசாவுக்கு செல்ல வாகன வசதி இல்லாத காரணத்தால் என்ன செய்வது என்று யோசித்துள்ளார். போய் சேர வேண்டிய கட்டாயம் உள்ளதால் தன்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டே போகலாம் என்ற முடிவுக்கு வந்த அவர் ஒரு வார காலம் பயணித்து தனது சொந்த ஊர் வந்து சேர்ந்தார். ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்கள் வழியாக அவர் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். 

வெளியம்பாக்கத்தில் [அச்சிறுபாக்கம்] தொண்டு நிறுவனம் மூலம் இருளர்களுக்கு வழங்கப்பட்ட காய்கறிகள் | Veliyambakkam Village | Corona Relief Programe | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வெளியம்பாக்கம் கிராமத்தில் “ஹெல்ப் பாஃர் ஆல்” என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சுமார் 20 இருளர் இன குடும்பங்களுக்கு காய்கறிகள் 13.04.2020 அன்று வழங்கப்பட்டது.
காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டுவரும் இருளர் இன மக்களுக்கு “ஹெல்ப் பாஃர் ஆல்” என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் குமரேசன் தலைமையில் காய்கறி பைகள் வழங்கப்பட்டது. 
முன்னதாக அனைத்து இருளர் இன மக்களுக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அச்சிறுபாக்கம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இருளர் இன மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எப்படி தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) எ.சிவக்குமார் (கி.ஊ பொறுப்பு) மூலமாக அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள துப்புரவு பணியாளர்கள், ஓ.எச்.டி. ஆப்பரேட்டர்களுகு முகக்கவசம், கையுறை மற்றும் ஊராட்சிகளுக்கு தேவையான சுகாதாரப் பணி உபகரணங்கள் அந்தந்த ஊராட்சி செயலர்கள் மூலமாக வழங்கப்பட்டது.
இதனையடுத்து வெளியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் முகக்கவசம் மற்றும் கையுறைகளை வழங்கினார்.

அச்சிறுபாக்கம் ஊர்காவல்படை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கிய காவல் துணை கண்காணிப்பாளர் | Madurantakam DSP Giving Corona Relief to Home guard and FOP

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் காவல்நிலையத்தின் சார்பாக அச்சிறுபாக்கம் மற்றும் ஒரத்தி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு தேசிய ஊரடங்கு பணியில் ஈடுபட்டுள்ள “தன்னார்வலர்கள், போலீஸ் நண்பர்கள் குழு, ஊர் காவல்படையினர் “ என சுமார் 30 நபர்களுக்கு அரிசி  மற்றும் மளிகை பொருட்களை மதுராந்தகம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேந்திரன் வழங்கினார்.  


கடும் வெயில் மற்றும் கொசுக்களுக்கிடையே இரவும் பகலுமாக மக்களின் உயிர்காக்க பாடுபடும் தன்னார்வலர்கள்போலீஸ் நண்பர்கள் குழுஊர் காவல்படையினர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கும்போது 
அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ் சரவணன், லயன் சங்க நிர்வாகிகள் கண்ணன், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
 


 


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்