Run World Media: 05/08/20

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, May 8, 2020

பெருக்கரணை, மழுவங்கரணை பகுதி இருளர்களுக்கு மதுராந்தகம் கோட்டாட்சியர் முன்னிலையில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் | Corona Relief Given by Madurantakam RDO


செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டத்திற்குட்பட்ட மழுவங்கரணை மற்றும் பெருக்கரணை பகுதிகளில் வசிக்கும் இருளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் குடும்பங்கள் என சுமார் 30 குடும்பங்களுக்கு மதுராந்தகம் ராஜா டெக்ஸ்டைல்ஸ் சார்பாக மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா முன்னிலையில் அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பின்றி அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கும் கடும் சிரமப்பட்டுவரும் மழுவங்கரணைப் பகுதியைச் சேர்ந்த 12 குடும்பங்கள் மற்றும் பெருக்கரணை பகுதியைச் சேர்ந்த 18 குடும்பங்கள் என 30 இருளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

 

 

 

 

[சற்றுமுன்] நாளை முதல் டாஸ்மாக் இயங்காது | TASMAC Closed tommorow onwards | Vil Ambu News

நாளை முதல் டாஸ்மாக் இயங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடையில் கூட்டத்தை கட்டுப்படுத்த 100 டோக்கன்கள் வழங்கிய தமிழக அரசு, டாஸ்மாக் மது விற்பனைக்கு கட்டுக்குள்ள இல்லாத அளவிற்கு டோக்கன்களை காவல் துறையினரின் கைகளாலேயே வழங்கி கொரோனா பரவலை அதிகரிக்கும் போக்கில் இன்றைய நிலமை உள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.


உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட விதிமுறைகளை மீறி மது விற்கப்பட்டதால்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊரடங்கு முடியும்வரை ஆன்லைனில் மட்டுமே இனி மது விற்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

செண்டிவாக்கம் கூமோ பவுண்டேஷன் சார்பாக வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Sendivakkkam Cumo Foundation Giving Corona Relief


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அகிலி, செண்டிவாக்கம், சோத்துப்பாக்கம் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு கூமோ பவுண்டேஷன் டிரஸ்ட் ஆப் இந்தியா சார்பாக கடந்த 06.05.2020 அன்று கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைக்கு செல்ல இயலாமல் வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கும் ஏழை எளிய நலிவடைந்த குடும்பத்தினர்ளுக்கு உதவும் பொருட்டு மொனகா நாட்டில் அமைந்துள்ள கூமோ பவுண்டேஷன் நிறுவனம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
அதன்படி, மதுராந்தகம் வட்டம், அகிலி, செண்டிவாக்கம், சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 250 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களானது அகிலி ஊராட்சி செயலர் தசரதன் முன்னிலையில் செண்டிவாக்கம் ஆர்.சி.பள்ளி மூலமாக அருட்பணி.ரேமண்ட் மற்றும் கூமோ பவுண்டேஷன் திட்ட இந்திய மேலாளர் சார்லஸ் குழந்தை ஆகியோர் தலைமையில் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 13.02.2020 அன்று கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என ஆல்பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு மருத்துவர் புவனேஸ்வரி மற்றும் சுகாதார ஆய்வாளர் கீதா ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது, வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே முன்கூட்டியே நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ப பொதுமக்களின் தேவைகளின் பூர்த்தி செய்து கொண்டிருக்கும் இந்த கல்வி நிறுவனத்தை பொதுமக்கள் பெரிதும் பாராட்டிவருகின்றனர்.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்