Run World Media: 07/13/20

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, July 13, 2020

செத்தா சாகட்டும்..! போலீஸின் அலட்சிய பேச்சு | Police Careless speech | Vil Ambu News

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புதுமனை பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் முகிலன் (27), ஊரடங்கை மீறி நேற்று வெளியில் வந்துள்ளார். 


போலீஸார் அவரது பைக்கைப் பறிமுதல் செய்ததால், ஆத்திரமடைந்த முகிலன் அருகில் உள்ள அக்காள் வீட்டிற்குச் சென்று மண்ணெண்ணெய் கேனை தூக்கிக் கொண்டுவந்துள்ளார்.


`போலீஸ்தான் என் சாவுக்கு காரணம்' என்று கூறி தேசிய நெடுஞ்சாலையில் நின்றபடி தீக்குளித்தார். பலத்த தீக்காயமடைந்த முகிலன் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமே சிகிச்சைக்கான செலவுகளை ஏற்க முன்வந்துள்ளது.


சம்பவம் குறித்து திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமார், ``தீக்குளித்த இளைஞர் வந்துசெல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.

சம்பவ இடத்தில் 5 போலீஸார் இருந்துள்ளனர். போலீஸ் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார். அட்ரஸும் கொடுத்திருக்கிறார். அதன் பின்னரே பக்கத்தில் உள்ள வீட்டுக்குப் போய் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு வந்துதான் தீக்குளித்தார். 

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அந்த இளைஞரே மது போதையில் இருப்பதாகக் கூறினார். சி.எம்.சி மருத்துவர்களும் அவர் மது போதையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்'' என்றார்.

இதனிடையே, சம்பவத்தின்போது அருகில் நின்று வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படும் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தைச் சேர்ந்த 5 போலீஸாரும், ஊர்க்காவல் படையினரும் திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் பொதுமக்களைத் கொந்தளிக்கவும் செய்திருக்கிறது.
``முகிலன் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றும்போது அருகில் இருந்த போலீஸார் தடுக்க முன்வராதது ஏன்? கொளுத்திக் கொண்ட பிறகும் தீயை அணைத்து அவரைக் காப்பாற்றவும் முயற்சி செய்யவில்லை. தீயை அணைக்க வந்த மக்களிடமும் அச்சுறுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள் காக்கிகள். `செத்தா சாகட்டும்' என்ற வார்த்தையை விட்டிருக்கிறார் சந்திரசேகர் என்ற காவலர்.

`மது போதையில் இருந்தார்' என்றால் அதுதொடர்பாக ஏன் வழக்கு பதியவில்லை? சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்பலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. தனியார் ஆம்புலன்ஸ் மூலமாகத்தான் முகிலனை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்துதான் சி.எம்.சி-க்கு மாற்றப்பட்டார். தீக்குளித்த இளைஞர் முகிலனுக்கு போலீஸாரால் வேறு ஏதோ பிரச்னை நடந்திருக்கிறது. 

இந்த விவகாரத்தில் எஸ்.பி-யும் பொய் சொல்கிறார். `தற்செயலாக நடந்த விபத்து' என்று திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இது, மிகவும் கண்டிக்கத்தக்கது'' என்று கொந்தளிக்கிறார்கள், சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள்.

இந்த சம்பவத்தில், புலன் விசாரணை அதிகாரியாக மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி பிரவீன்குமாரை நியமித்திருக்கிறார் எஸ்.பி விஜயகுமார். விசாரணை நகர்வுகளை அறிய டி.எஸ்.பி பிரவீன்குமாரை போனில் தொடர்புகொண்டோம். போனை எடுத்துப் பேசிய அவர், `கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்' என்றுகூறி அழைப்பைத் துண்டித்தார்.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்