Run World Media: August 2021

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, August 8, 2021

நகைக் கடன் தள்ளுபடிக்கு பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் - தமிழக அரசு | Gold Loan Cancellation in Tamilnadu | Vil Ambu News

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடனை தள்ளுபடி செய்வது தொடர்பாக கூட்டுறவுத்துறை மூலம் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

2021 தமிழக சட்டப் பேரவை தேர்தலின்போது, திமுக ஆட்சி அமைந்தால் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்டுள்ள நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த நிலையில் கரோனா 2-ம் அலை தீவிரமடைந்ததால் அதை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய பொறுப்பு அரசின் முன் நின்றது. அரசு செயல்பாடுகளால் தொற்று பரவல் ஓரளவு கட்டுப்பட்டபோது, தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசியல் கட்சிகளிடம் மட்டுமன்றி வாக்காளர்களிடம் இருந்தும் கிளம்பத் தொடங்கின.

அவற்றில் ஒன்று கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி தொடர்பானது.

இதற்கிடையில் அரசின் நிதிநிலைமை மிக நெருக்கடியான சூழலில் இருந்ததால் நகைக் கடன் தள்ளுபடியை செயல்படுத்த முடியுமா என்ற குழப்பம் அரசு தரப்பில் காணப்பட்டது. ஆனாலும், எதிர்க்கட்சிகளின் நெருக்கடி, வாக்காளர்கள் சமூக ஊடகங்களில் இடும் பதிவுகள் ஆகியவை ஆளும் அரசு மீது எதிர்மறை எண்ணம் உருவாகும் சூழலை ஏற்படுத்தியது. 

எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி நகைக்கடனை தள்ளுபடி செய்வது என்ற உறுதியான முடிவை தற்போது தமிழக அரசு எடுத்துள்ளது. அதேநேரம், நகைக் கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை சில விதிகளின் அடிப்படையில் கணிசமாக குறைப்பது எனவும் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியது:

பல்வேறு சூழல்களுக்கு இடையில் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகம் முழுக்க கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றில் நகைக் கடன் பெற்றவர்களின் பட்டியலை விரைந்து சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இப்பணிகள் கடந்த 4-ம் தேதி முதல் தமிழகம் முழுக்க தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5 பவுன் வரை நகைக் கடன் பெற்றவர்கள் தள்ளுபடி பெறுவர். கடன் அடமானமாக வைக்கப்பட்ட நகை 5 பவுனுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருந்தாலும், 5 பவுன் எடைக்கான கடன் தொகை மட்டுமே பெற்றிருந்தால் அவர்களும் தள்ளுபடி பெறுவர். 5 பவுனுக்கும் அதிகமான நகையின் பேரில் பெற்ற கடன் தள்ளுபடி தொடர்பாக அரசே இறுதி முடிவெடுக்கும்.

மேலும், நகைக் கடன் பெற்றவரோ, அவரது வாழ்க்கைத் துணையோ அல்லது தாய், தந்தையோ அல்லது மகன், மருமகளோ அரசுப் பணிகளில் இருந்தால் அவர்கள் பெற்ற நகைக் கடனை தள்ளுபடி பட்டியலுக்குள் கொண்டு வரும் திட்டம் அரசுக்கு இல்லை. மேலும், தள்ளுபடி என்பதை இலக்காக வைத்து முறைகேடாக யாரேனும் நகைக் கடன் பெற்றிருந்தாலும் அவர்களும் தள்ளுபடி பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறான இனங்களின் கீழ் நகைக் கடன் பெற்றவர்களின் பட்டியல்களை விரைந்து தயார் செய்து அரசுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இப்பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்திலோ அல்லது அதற்கு முன்பாகவோ அரசு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.

இவ்வாறு கூறினர்.

புளூடூத் இயர்போன் வெடித்து இளைஞர் உயிரிழப்பு | Young men died due to Bluetooth headset | Vil Ambu News

ராஜஸ்தான் மாநிலத்தில் புளூடூத் இயர்போனை சார்ஜிங் செய்து கொண்டே பேசிய நபர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


28 வயதான ராகேஷ் நகர், இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் உதய்புரியா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தன்னுடைய நண்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது ப்ளூடூத் இயர்போன் சாதனத்தைப் பயன்படுத்தி உள்ளார். 

இந்த புளூடூத் இயர்போனை அவர் சார்ஜிங் செய்து கொண்டே தன்னுடைய நண்பனிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அவர் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென அந்த புளூடூத் சாதனம் வெடித்து சிதறி இருக்கிறது.

இந்நிலையில் அந்த புளூடூத் இயர் போன் வெடித்துச் சிதறியதில் அவர், எந்த ஒரு சுய நினைவுமின்றி உடனடியாக மயங்கி கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவத்தால் அவருக்கு இரண்டு காதுகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சோமு நகரின் உதய்புரியா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ராகேஷ் குமார் நகர் அவரது இல்லத்தில் போட்டித் தேர்வுக்குத் தயாரானபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து சித்திநாயக் மருத்துவமனையின் மருத்துவர் எல்.எம்.சுந்த்லா கூறுகையில் "புளூடூத் இயர் போன் சாதனம் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்து அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து இருக்கிறார்.. கீழே விழுந்த அவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம்.. 

பிறகு அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். என்னுடைய பணி அனுபவத்தில் இது, போன்ற சம்பவம் இதுவே முதல் முறையாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். காவல்துறையினரின் கூற்றுப்படி, ராகேஷ் இந்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் செய்து கொண்டார் மற்றும் உடன்பிறந்தவர்களில் இவர் தான் மூத்தவர் என்று கூறினர்.

வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப காலத்தில் அனைவருக்கும் அனைத்தும் எளிதாக மாறிவிடுகிறது.. அந்த வகையில் தற்பொழுது வாகனம் ஓட்டுபவர்கள் முதல் வீட்டில் அமர்ந்து கொண்டு செல்போன் மூலம் பாடல்கள் கேட்கும் நபர்கள் வரை, அனைவரும் இந்த புளூடூத் இயர்போன் சாதனத்தை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த புளூடூத் இயர் போன் வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Tuesday, August 3, 2021

81 கோடி கோயில் சொத்து மீட்பு | அமைச்சர் சேகர் பாபு அதிரடி | Thiruporur Murugan Temple land recover | Vil Ambu News

திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான 81 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் சொத்துகளை கண்டறிந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. 

மேலும், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் ஆய்வு செய்கின்றனர். இதையொட்டி கடந்த 29ம் தேதி திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஆய்வு செய்தனர். 

அப்போது துறை சார்பில் நடக்கும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த ஆய்வில் மொத்தமுள்ள 647 ஏக்கரில் சுமார் 50 ஏக்கர் நிலம் தனியார் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதற்கு கோயில் பெயரில் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அந்த நிலத்தை மீட்டு கோயில் பெயரில் சுவாதீனம் செய்ய அமைச்சர், ஆணையர் ஆகியோர் கந்தசாமி கோயில் செயல் அலுவலருக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து நேற்று கோயில் நிலங்கள் கண்டறியும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக புல எண்கள் 6, 10, 21, 40, 131, 183 ஆகிய புல எண்களில் அடங்கிய 16 ஏக்கர் 23 சென்ட் நிலங்களில் தனியார் விவசாயம் செய்வது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நிலங்களை செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் கல் நடப்பட்டு கோயில் சொத்து என பெயர் பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 81.15 கோடி என கூறப்படுகிறது.

Sunday, August 1, 2021

பாலைவனப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடியது என கூறப்பட்டு வந்த பேரீட்சையை நமது மண்ணிலும் விளைவிக்க முடியும். விவசாயிகள் ஆர்வம்.. | Dates crop in our state | Vil Ambu News

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் விவசாய தோட்டத்தில் பேரீட்சை சாகுபடியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ரகங்கள் இருந்தாலும் அதில் தரமான கண்டறியபட்ட பர்ரீ, அஜ்ஜூவா, கனீஜி, அலூவி, மெட்சூல், இலைட் போன்ற ரகங்களை தேர்வு செய்து ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தென்னை மரங்களுக்கு இடை இடையே பேரிட்சையை நடவு செய்துள்ளனர் அப்பகுதி விவசாயிகள். 

நடவு  செய்த மூன்று வருடத்திலேயே தற்போது முதல் அறுவடையாக பேரீட்சை பழங்கள் அறுவடைக்கு வரத்தொடங்கியுள்ளன. ஜனவரியில் பேரீட்சை மரங்களில் பூக்கள் பிடித்து ஜீன், ஜீலை மாதங்களில் பழம் அறுவடைக்கு வந்துவிடுவதாகவும், வருடத்திறகு ஒரு முறை பலன் தரக்கூடிய இந்த பேரீட்சையை மற்ற விவசாயாகளும் நம்பிக்கையோடு பயிர் செய்து வருமானம் ஈட்டலாம் என்கிறார்.

அரியக்குளம் கிராமத்தில் பல வருடமாக பேரீட்சை சாகுபடியில் ஈடுபட்டு வரும் அனுபவம் பெற்ற விவசாயியான நிஜாமுதின், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களின் பேரிலும், அவரிடமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யபட்ட பேரீட்சை மரக்கன்றுகளை விலைக்கு வாங்கி நடவு செய்து வருகின்றனர்.

ஆண்டுக்காண்டு பருவ மழை குறைந்து விவசாயிகள் விவசாயத்தை விட்டு மாற்றுத்தொழிலை நாடி செல்லும் நிலையில், இருக்கின்ற தண்ணீரையே சிக்கனமாக பயன்படுத்தி பேரீட்சை சாகுபடி செய்து மற்ற விவசாயிகளும் வருமானம் ஈட்ட முடியும் விவசாயிகள் தெரிவித்தனர்.

[சற்றுமுன்] அச்சிறுபாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி | Acharapakkam Bike Accident | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை நடுபழனி ஆர்ச் எதிரே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியதில் பெருக்கரணையைச் சேர்ந்த  விஜயரங்கன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அச்சிறுபாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்