வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2021-11-07
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 13, 2021

எலப்பாக்கத்தில் சிறப்பாக நடைபெற்ற குருபெயர்ச்சி விழா | Elapakkam Balamurugan Temple Gurupeyarchi 2021 | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தை அடுத்த எலப்பாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீசின்மயவிநாயகர் ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் குருபெயர்ச்சிவிழா சிறப்பாக நடைபெற்றது.

இத்திருத்தலத்தில் தெற்கு திசைநோக்கி அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீகுருபகவான் சன்னதிக்கும், நவகிரகங்களில் உள்ள குருபகவானுக்கும் மாலை 05.30 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், குருபெயர்ச்சி விழாவையொட்டி 06.00 மணியளவில் பரிகார ஹோமம் செய்யப்பட்டது.


அதன்பின் 06.21 மணியளவில் குருபகவான் மகர ராசியில்இருந்து கும்பம் ராசிக்கு பெயர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து குருபகவானுக்கு மஹா தீப ஆராதனைகளும் பரிகார அர்ச்சனைகளும். பரிகாரபூஜைகளும் 07.00 மணிவரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குருவருள் பெற்றனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வீடியோ













எல்.எண்டத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடியின மக்களுக்கு தன்னார்வலர் வழங்கிய இரவு உணவு | Night Food Provided to L. Endathur Flood Affected Trible People | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எல்.எண்டத்தூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் அரசு கட்டிடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழ்கொடுங்காலூர் ஶ்ரீசாய் ஏஜென்சீஸ் பெட்ரோல் பங்கு உரிமையாளர் டாக்டர்.எல். இராசேந்திரன் இரவு உணவு வழங்கினார்.


மேலும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள இருளர் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை தேவைகளையும் விரைவில் பூர்த்தி செய்து தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.  





Tuesday, November 09, 2021

ஏரியாவில் காணமல் போன ஏரி | வெளியான சேட்டிலைட் மேப்பால் அதிர்ச்சி | Velachery Lake Missing in Sattlite Map | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

சென்னையின் புறநகர் பகுதியான வேளச்சேரி ஒரு காலத்தில் முழுக்க, ஏரியாக இருந்த பகுதி , என்பதற்கான வரைபட தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது.

ஒரு காலத்தில் கிராமமாக இருந்த பகுதிதான் சென்னை. அப்போது இங்கு நிறைய ஏரிகளும், குளங்களும் இருந்தன. ஆனால், சென்னை ஒரு பெரிய நகரமாக மாறிய பிறகு அந்த ஏரிகள் வேகமாக பட்டா போடப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாற்றம் செய்யப்பட்டன.

தற்போது சென்னை அதன் முழு கொள்ளளவை தாண்டி இரண்டு மடங்கு மக்கள் தொகையுடன் விழிபிதுங்கி நிற்கிறது.

வீடுகளுக்குள் தண்ணீர்

இப்போது மழை வரும்போது ஏரிகள் இருந்த பகுதிகளில் வெள்ளநீர் செல்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிட்டது என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் சொல்கிறார்கள் . இதுதான் தொடர்கதையாக நடந்து வருகிறது. சென்னை நகரப் பகுதிக்குள் உள்ள மேற்கு மாம்பலம் பகுதியில் லேக் வியூ சாலை இன்னமும் கூட இருக்கிறது. ஆனால் ஏறி எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.


கொளத்தூர் ஏரி குட்டையானது

இப்படித்தான் கொளத்தூர் பகுதியில் இருந்த ஏரி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குட்டை போல தற்போது, மாறிவிட்டது. இது ஒரு பக்கம் என்றால் வேளச்சேரி ஏரி என்று 1980ஆம் ஆண்டு சென்னை வரைபடத்தில் இருந்த பகுதியில் தற்போது முழுக்க முழுக்க கட்டிடங்களாக காணப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வேளச்சேரி ஏரி முக்கால்வாசிக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஏரியின் ஒரு சில பகுதிகள் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. வேளச்சேரி இப்போது வெள்ளத்தில் மிதக்கும் சந்தர்ப்பத்தில் இந்த புகைப்படம் வைரலாக சுற்றி வருகிறது.

பள்ளிக்கரணை செல்ல வேண்டும்

அந்த காலத்தில், வேளச்சேரி ஏரியில் உள்ள தண்ணீரானது இந்த விளைநிலங்கள் வழியாக பாய்ந்து சென்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு சென்று அங்கிருந்து ஒத்தியம்பேட்டை வழியாக கடலில் கலக்கும். இது தான் இயல்பாக இருந்துள்ளது. ஆனால் தற்போதைய காலத்தில் விளை நிலங்கள் அனைத்தும் குடியிருப்புகளாக மாறிவிட்டதால், மழைகாலத்தில் அங்கு மழைநீர் தேங்கி வெள்ளக் காடாக மாறுகிறது.

வேளச்சேரி மக்கள்

2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது வேளச்சேரி பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் சென்ற மழைநீரால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் அனைத்தும் மூழ்கின. எனவே, அதன்பிறகு, சென்னையில் எப்போது கன மழை பெய்தாலும், வேளச்சேரி பகுதி மக்கள், வேளச்சேரி பாலத்தின் ஓரத்தில் வரிசையாக தங்களுடைய நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இப்போதும் அதைத்தான் செய்துள்ளனர்.

Monday, November 08, 2021

கே.கே.புதூர், இருசமாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நீர்நிலைகளை பார்வையிட்ட ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் துர்கேஷ் | DMK Durgesh Visiting at K K Pudhur, Irusamanallur at Madurantakam Taluk | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட கே.கே.புதூர், இருசமாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை மற்றும் நீர்நிலைகளின் நிலவரம் குறித்து தி.மு.க-வின் மதுராந்தகம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் துர்கேஷ் நேரில் பார்வையிட்டார்.


பின்னர் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர் தங்களது தேவைகளை அதிகாரிகளிடம் ஆலோசித்து விரைந்து நிறைவேற்றுவதாகவும், கனமழை காலத்தில் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்வில் கினார் ஒன்றியக்குழு உறுப்பினர் மனோகரன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

















சினிமாவில் எடுக்கப்படும் விபத்து காட்சி போல் திண்டுக்கல் அருகே நிஜ விபத்து | Dindigul Nilakkottai Car Bike Accident | Electric Poll Dead | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கார் – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதய விபத்தில் தூக்கி வீசப்பட்ட 2 பேர் பலி.

மதுரை மாவட்டம், மதுரை ஏர்போர்ட், பெருங்குடி பகுதியைச் சேர்ந்த காமு என்ற காமராஜ் வயது 21. அஜித் கண்ணன் வயது 21. மற்றும் இவரது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 5ஆம் தேதி சேர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் இரண்டு தினங்கள் சுற்றிவிட்டு மீண்டும் கொடைக்கானலில் இருந்து மதுரை நோக்கி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள சிலுக்குவார்பட்டி சிவன்கோயில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து பண்ணைக்காடு நோக்கி சென்ற ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது படுவேகமாக மோதியது.

இதில் அஜித் கண்ணன் சினிமா பட சம்பவம் போல் மோட்டார் சைக்கிளிலிருந்து சுமார் 10 அடி உயரம் பறந்து சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பியில் தொங்கினார். அதேபோன்று காமு என்ற காமராஜ் அப்பகுதியில் காட்டுப் பகுதியில் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் பரிதாபமாக இறந்து போனார். 

மின்கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த வரை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீசார்கள் விரைந்து சென்று இரண்டுபேர் உடல்களையும் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, November 07, 2021

எலப்பாக்கம் ஸ்ரீசின்மய விநாயகர், ஸ்ரீபாலமுருகன் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நான்காம் நாள் | Elapakkam Balamurugan Temple Kandhasahti Festival | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம் ஸ்ரீசின்மய விநாயகர் மற்றும்  ஸ்ரீபாலமுருகன் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நான்காம் நாளான இன்று சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. 



99% நிரம்பிய மதுராந்தகம் ஏரி | Madurantakam Eri Nearby Full | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்புகிறது. அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் இதுவரை 22.9 எட்டியது.

தற்போது கிளியாறு மற்றும் சுற்றுவட்டார ஏரிகளிலிருந்து வரும் உபரி நீரால் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் மதுராந்தகம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.