வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2021-11-14
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 20, 2021

எய்ப்பாக்கத்தில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் | வந்தவாசி ஒன்றியம் | Eipakkam Water Block Issues | Vil Ambu News

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், எய்ப்பாக்கம் கிராமத்தில் கால்வாய்கள் தூர்வாராத காரணத்திணாலும், தனிநபர்கள் தேவையற்று கால்வாய் மற்றும் வாராபதிகள் அருகே மண் கொட்டியுள்ள காரணத்தினாலும் மழைநீர் தேங்கி அப்படியே தேங்கி நிற்கிறது. 

மேலும், இதனால் கொசு உற்பத்தி அதிகமாவதால் டெங்கு பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஏதும் முயற்சி மேற்கொள்ளததால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கிராம மக்களின் நலன் காக்க வேண்டுமெனவும், அதிகாரிகள் தங்களின் மெத்தனப் போக்கை கைவிட வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Download News Shutter App on Play store : https://play.google.com/store/apps/details?id=com.app.newsshutter&hl=en_IN&gl=US 




Tuesday, November 16, 2021

சூர்யாவை பா.மா.க-வினர் விமர்சிக்க கூடாது - அவர் சாதி சார்பற்றவர் | அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கடிதம் | Southern Cinima Industry Writing Letter to Anbumani Ramadass about Jaibhim Movie and Actor Surya Issues | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

நடிகர்
சூர்யா ஜாதி, மத சார்பற்றவர், அவரை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பாமக எம்பி அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கடிதம் எழுதி உள்ளது. ஜெய் பீம் படம் தொடர்பான சர்ச்சைகள் காரணமாக நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். படத்தில் குறிப்பிட்ட ஜாதியை குறிப்பது போல காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி பாமகவினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறையில் நடிகர் சூர்யாவின் வேல் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம் செய்தனர். அதோடு மயிலாடுதுறைக்கு சூர்யா வரும்போது அவரை தாக்கும் நபர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பாமக மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

வழக்கு

இன்னொரு பக்கம் ஜெய் பீம் பட விவகாரத்தில் வன்னியர்களை அவமதிக்கும் காட்சிகளை நீக்கி 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வன்னியர் சங்கம் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் மன்னிப்பு கேட்காவிட்டால், ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகாவுக்கு வன்னியர் சங்கம் சார்ப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

ஆதரவு

இந்த நிலையில் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை களமிறங்கி உள்ளது. அதன்படி ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் இருக்கும் ஒரு காட்சியை அகற்றும்படி நீங்கள் கோரிக்கை வைத்து இருந்தீர்கள். தங்கள் கட்சியின் முத்திரை அது என்று கூறி நீக்கும்படி கோரிக்கை வைத்தீர்கள். இதன் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஜெய் பீம்

உங்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் உறுப்பினராக இருக்கும் சூர்யா அந்த காட்சியை நீக்கினார். ஆனால் இந்த காட்சி வைக்கப்பட்டதற்கும், அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டதற்கு எந்த விதத்திலும் நடிகர் சூர்யாவிற்கு தொடர்பு இல்லை. அதேபோல் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. 

உணர்வு

ஆனால் பாமக கட்சியினர் தொடர்ந்த இதை முன்னிட்டு சூர்யாவை விமர்சனம் செய்து வருகிறார்கள். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சூர்யா அரசியல், ஜாதி, இனம், மதம் போன்ற எந்த சார்பும் இன்று செயல்படுபவர். எந்த சார்பும் இன்றி ஏழை மக்களுக்கு உதவ கூடியவர். 

மாணவர்கள்

பல விளிம்புநிலை மாணவர்களுக்கு கலங்கரை விளக்கமாக சூர்யா செயல்பட்டு வருகிறார். அவர்களின் வாழ்க்கையில் கல்வி ஒளி ஏற்றி வருகிறார். சமூக பணியாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்று மிகவும் வருத்தத்துடன் கேட்டுக்கொள்கிறோம், என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.


Monday, November 15, 2021

பொம்பல போலீசா இல்ல லம்பாடி பொம்பலயா இவ..? | ஒரு பெண்ணை காவல் நிலையத்திலேயே துயிலுரித்து அட்டூழியம் | Islamabad Police Station Lady Issue | வில் அம்பு

போலீஸ் ஸ்டேஷனுக்கு, விசாரணைக்காக அழைத்து வந்த பெண் ஒருவரை, மிரட்டி அவரின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அங்கிருந்தவர்கள் முன்னிலையில் நிர்வாணமாக டான்ஸ் ஆட வைத்துள்ளனர்.. இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.. இந்த கொடுமையை செய்ய வைத்ததே, ஒரு பெண் போலீஸ் என்பது மற்றொரு அதிர்ச்சி தகவலாகும்.

பாகிஸ்தானில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து காணப்படுகின்றன.. இந்த அட்டூழியங்களை எதிர்க்கட்சிகள் விமர்சித்தும், கண்டித்தும் எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இப்போது இன்னொரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.. பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் குவெட்டா நகரில், ஒரு குழந்தையை கொன்றுவிட்டார்கள்..

கொலை

அங்கிருக்கும் ஒரு அபார்ட்மென்ட்டில் புகுந்து, மர்மநபர்கள் குழந்தையை கொடூரமாக கொன்றுள்ளனர். இந்த கொலை குறித்த விசாரணையை ஜின்னா டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. இது தொடர்பாக பெண் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத் தலைமையிலான பெண் போலீசார் அந்த பெண்ணை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்... அவரிடம் விசாரணையும் ஆரம்பமானது.

நடனம்

அப்போதுதான் திடீரென அந்த பெண்ணின் ஆடையை களைய சொன்னார் பெண் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத்.. இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவும், மிரட்டியே ஆடைகளை களைய வைத்து நிர்வாணமாக்கினர்.. ஒரு பாட்டை ஒலிக்க செய்து, அங்கிருந்தவர்கள் முன்னிலையில் அவரை டான்ஸ் ஆட சொல்லி உள்ளனர்.. நிர்வாணமாக டான்ஸ் ஆடிய நிலையில், அதையும் வீடியோவாக பெண் போலீசார் எடுத்துள்ளனர்.

 

விசாரணை

இந்த சம்பவம்தான் அங்கு வெடித்து கிளம்பி உள்ளது.. போலீஸ் துணை ஐஜி முகமது அசாருக்கு இது தொடர்பான புகாரும் பறந்தது.. அதிர்ச்சி அடைந்த அவர், நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தார்.. அதன்படியே, விசாரணையில், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத், பெண்ணை நிர்வாணமாக்கி டான்ஸ் ஆட வைத்தது உறுதி செய்யப்பட்டது... இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத்தை உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வைத்ததுடன், அவரை பணியில் இருந்தும் நிரந்தரமாக கட்டாய ஓய்வு பெற வைக்கப்பட்டுள்ளது.

 

அதிர்ச்சி

ஷபானா இர்ஷத்துக்கு உடந்தையாக இருந்த புஷ்ரா அப்சல், ஹூமா பைசல், உஸ்மா நஸ்ரின், பாரா கலீல், சமீனா மன்சூர் ஆகிய 5 பெண் போலீசார் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இப்போது, பாதிக்கப்பட்ட பெண் விசாரணை கைதி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்... பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய பெண் போலீசாரே, இப்படி ஒரு அருவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டது காவல்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 


Sunday, November 14, 2021

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கரூர் மருத்துவர் | Karur Doctor Child Abuse sexually | 17 Age Girl Abused in Karur by Doctor | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

கரூரில் தனது மகளை பிரபல மருந்துவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனியார் மருத்துவமனை காசாளர் புகார் செய்துள்ளார். இதையடுத்து மருத்துவர் மற்றும் தனியார் மருத்துவமனை மேலாளர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர், கரூரில் உள்ள ஒரு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.


இந்நிலையில் நேற்று கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அப்புகாரில் தான் வேலை பார்க்கும் மருத்துவமனையின் மருத்துவர் ரஜினிகாந்த் நேற்று மாலை தனது மகளை தனது அறைக்கு வரச்சொல்லி பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிவித்துள்ளார். இதுபற்றி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) செந்தூர்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

பொன்னரசியின் மகளை மருத்துவமனை மேலாளர் மூலம் அழைத்துச் சென்று மருத்துவர் ரஜினிகாந்த் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்த், மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலாளரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.