வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2021-11-28
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 04, 2021

வண்டிக்கு பெட்ரோல் போடும்போது தீயில் கருகி பாலிெடக்னிக் மேலாளர் பலி | Polytechnic Manager Died when fueling the Vehicle at Jolarpet | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 56). இவர் திருப்பத்தூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சாந்தி என்கின்ற மனைவியும் ராகவன், பிரதீப், ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.

சம்பவத்தன்று இரவு தனது மொபட்டுக்கு சுயமாக பெட்ரோல் போட்டுக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தீப்பொறி பறந்து வந்து விழுந்ததில் திடீரென தீ பற்றி எரிந்ததாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த ராஜவை அந்த பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு உடல்நிலை மோசமான நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு ராஜா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார். அவர் போதையில் இருந்தபோது மொபட்டுக்கு பெட்ரோல் போட்டதில் தீவிபத்து ஏற்பட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இதில் மர்மம் உள்ளதா என்பது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Recent Posts Widget

தாய்மாமன் மடியில் அமரச்செய்து காது குத்துவது ஏன்? | Why ear piercing for child is sitting in Mother related Uncle? | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


காதணி விழா என்பது இந்து தமிழர்களிடையே காணப்படும் ஒரு முக்கிய சடங்காகும். இந்த சடங்கில் குழந்தைகளுக்கு காதில் துளையிட்டு தங்கக் காதணி அணிவிக்கப்படுகிறது. இச்சடங்கின் முறைகள் சாதி சமயத்திற்கு தக்கவாறு மாறுபடுகிறது.

குழந்தைகளை குலதெய்வ கோவிலுக்கு அழைத்து சென்று மொட்டை போடுகின்றனர். பின் அவர்களை குளிப்பாட்டி, தாய்மாமன் சீராக வருகின்ற புத்தாடைகளை அணிவிக்கின்றனர். குழந்தையை தாய் மாமன் மடியில் அமரவைத்து ஆசாரியால் காது குத்தப்படுகிறது. பின்பு தாய் மாமன் தந்த தங்கக் காதணிகளைப் போடுகின்றர். தாய் வழிமாமன் இல்லையேல் அதற்கு நிகரான ஒரு உறவின் மடியிலும் வைத்து காதுகுத்தல் நிகழும்.

தாயை ‛அம்மா’ என்றும், தாய்மாமனை ‘அம்மான்’ என்றும் சொல்வர். தாயும், தாய்மாமனும் ஒன்றே. சகோதர உறவைப் பலப்படுத்தவே பெரியவர்கள் இதை உருவாக்கியுள்ளனர்.

Recent Posts Widget

வண்டலூர் மேம்பாலம் அருகே மயங்கிய நிலையில் இருந்த முதியவருக்கு உதவிய காவலர் | Vandalur Police News | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் மேம்பாலம் அருகே முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்துகொண்டு இருந்தார். அவ்வழியாக சென்ற காவலர் சந்தோஷ் என்பவர் அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து விசாரித்த போது, அவர் திருச்சியை அடுத்த கீரனுர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், தனது மகளுடன் படப்பையில் தங்கி வந்துள்ளார் என்றும், தனது மகளுடன் ஏற்ப்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்தாகவும் தெரிந்தது. பேருந்தில் செல்ல பணம் இல்லாமல் நடந்து சென்றதாகவும் அந்த முதியவர் கூறியுள்ளார்.


இதையடுத்து காவலர் சந்தோஷ்  அவ்வழியாக வந்த வாகனஓட்டிகளான சரத்குமார் மற்றும் திவாகர் ஆகியோரின் Googlepay-விற்கு ரூ.200/-னை அனுப்பி அதனை பணமாக பெற்று அந்த முதியவரிடம் கொடுத்து வண்டலூர் பேருந்து நிலையம் அழைத்துச்சென்றார்.

இந்த நிகழ்வினை பொதுமக்கள் பலர் முகநூலில் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர். இவர் ஆவடி காவல் தலைமை அலுவலகத்தில் 2-ம் நிலை  பெட்டாலியன் காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் இந்து கல்லூரி இரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளார். காவலர் சந்தோஷ்  மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





Recent Posts Widget

சசியால் டென்க்ஷன் ஆன செல்லூர் ராஜூ | நள்ளிரவு 1 மணிக்கு பேச்சு.!!! | Sellur Raju Tension about Sasikala | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அ.தி.மு.க. தலைவர்களை விமர்சனம் செய்வது போன்றும், சசிகலாவை ஆதரித்து பேசுவது போன்றும் சமூக வலை தளங்களில் ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை நல்ல முறையில் நடத்தி வருகின்றனர்.அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சில வி‌ஷமிகள் சதி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.


சமூக வலைத்தளங்களில் நான் பேசுவது போன்று ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது. இதில் உண்மை இல்லை. நான் சமீப காலமாக இரவு 10 மணிக்கு மேல் செல்போனை பயன்படுத்துவதே கிடையாது.ஆனால் நள்ளிரவு 1 மணிக்கு நான் பேசுவது போல மிமிக்கிரி செய்து வி‌ஷமிகள் தேவையற்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

என் மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து குழப்பம் விளைவிக்க பார்க்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக போலியான லெட்டர் பேடில் தகவல் வெளியானது. இது போன்று தான், நான் பேசாத கருத்துக்களை என் பெயரில் வெளியிட்டுள்ளனர்.

அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும். இப்போது ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை வலிமையோடு நடத்தி வருகிறார்கள்.

எனவே தற்போதைய நிலையில் கட்சி தலைமைக்கு புதிதாக ஒருவரை கொண்டு வரத்தேவை இல்லை. அந்த சூழ்நிலையும் எழவில்லை. என் குரலில் மிமிக்கிரி செய்து அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தும் வி‌ஷமிகள் மீது கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Recent Posts Widget

ஊரப்பாக்கம் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட ஆய்வாளர் குழுவுக்கு டிஜிபி வெகுமதி அளித்த பாராட்டு | DGP Giving Award to Urapakkam Double Murder Case Investigation Police Team | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து பிடித்த ஓட்டேரி சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் அசோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் நெடுமாறன் மற்றும் அவர்களின் குழுவை  தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெகுமதி அளித்து பாராட்டினார்.

Recent Posts Widget

காவல் நிலைய வாசலில் இரண்டு மணிநேரம் நடனமாடிய பெண்..!! | Lady Dacing in front of Police Station 2 hours at Salem Jalagandapuram | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தின் பிரதான சாலையில் எடப்பாடி காவல்நிலையம் அமைந்துள்ளது.

அங்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகாரளிக்க வந்துள்ளார்.

ஆனால் அதே இடத்தில் புகாரளிக்க வந்த மற்றவர்களிடம் புகார்கள் பெறப்பட்டன. போலீசார் விசாரித்தனர். குறிப்பிட்ட இந்த பெண்ணிடம் மட்டும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்த பெண் பொறுமை இழந்தார்.

அதன் தொடர்ச்சியாக காவல் நிலையம் வாசல் முன்பு யாரும் எதிர்பாராத விதத்தில் குத்தாட்டம் போட்டு நடனம் ஆடினார். இதை பார்த்து அருகிலிருந்தவர்கள் பெண்ணை எச்சரித்தனர். ஆனால் அவர்களை அவர் திட்டி அனுப்பிவிட்டார்.

ஆனால் போலீசார் அப்பெண்ணை கண்டுகொள்ளவில்லை. சுமார் 2 மணிநேரம் ஆடிவிட்டு களைப்படைந்தவுடன் அவர் சென்றுவிட்டார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் சிலர் பேசினர்.

கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்பெண் அடிக்கடி பிரச்சனை என்று காவல் நிலையத்தை அணுகுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். அதனால் அவரை போலீசார் யாரும் கண்டுகொள்ளாவில்லை என்று கூறினார். மேலும் அவர் பொய் புகார் கூறி வந்ததாகவும் போலீசாரிடையே தகவல் தெரிவித்தனர்.

Recent Posts Widget

மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது | TN Women Self Help Group Loan Disposal | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


கூட்டுறவு சங்கங்களின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை இரண்டாயிரத்து 756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் எனவும், இதற்காக 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில், கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுவதாகவும், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரையில் நிலுவையில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற இரண்டாயிரத்து 756 கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டில் முதல்கட்டமாக 600 கோடி ரூபாய் விடுவிக்கப்படுவதாகவும், மீதமுள்ள தொகை ஏழு சதவீத வட்டியுடன் அடுத்த நான்கு ஆண்டுகளில் நிபந்தனையுடன் விடுவிக்கவும் அனுமதிக்கப்படுகிறது என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent Posts Widget

ஆசிரியைக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த ஆசிரியர்! | Porn message on WhatsApp | Sexual harassment of a school teacher at Paramakudi | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


ஆசிரியைக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பி பாலியல் உறவுக்கு அடிக்கடி அழைத்து சீண்டலில் ஈடுபட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தபள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வரலாறு பாடங்கள் நடத்திவருபவர் ஆசிரியை மலர்விழி. 

இவருக்கு அதே பள்ளியில் பணியாற்றும் நாகாட்சி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் சந்திரன்( வயது 52) என்பவர் செல்போன் மூலம் வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பி பாலியல் உறவுக்கு அடிக்கடி அழைத்து சீண்டலில் ஈடுபட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியை போலீஸில் கொடுத்த புகாரையடுத்து பாலியல் தொந்தரவு உள்பட 3 வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Recent Posts Widget

பத்திரிகையாளர் நல வாரியம் நடைமுறைக்கு வந்தது - தமிழக அரசு அரசாணை வெளியீடு | Journalist Welfare Board in TN | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட பத்திரிகையாளர் நல வாரியத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


பத்திரிகையாளர், மற்றும் பத்திரிகையாளர் அமைப்புகளின் நீண்ட கால கோரிக்கை தங்களுக்கான வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

அதிமுக ஆட்சியில் அப்போதைய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ்நாட்டு மக்கள் தொகையை விட அதிகளவில் இருக்கும் பத்திரிகையாளர் அமைப்புகளை சந்தித்தார். பத்திரிகையாளர் வாரியம் அமைக்கப்படும் என்று சட்டசபையிலேயே அறிவித்தார். ஆனால் ஆட்சி முடியும் கடைசி சட்டசபையில் கூட அறிவிக்கவே இல்லை.

இந்த நிலையில் கடந்த 2021-2022 - ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில் செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில்


"தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் "பத்திரிகையாளர் நல வாரியம்" அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதமாக பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் உருவாக்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அந்த ஆணையில், பத்திரிகையாளர் நல வாரிய உதவித் திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்த செய்தித்துறை அமைச்சர் தலைவராகவும், அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 7 நபர்களையும், அலுவல் சாரா உறுப்பினர்களாக 6 நபர்களையும் கொண்ட குழு அமைக்கப்படும். 

பத்திரிகையாளர் நல வாரியத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையாக , பத்திரிகைகளில் அரசு விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகை நிறுவனங்கள் அரசால் வழங்கப்படும் விளம்பரக் கட்டணத்தில் சதவீதம் தொகையை EMAI ஊதியத்திற்கென வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.


பத்திரிகையாளர் நல வாரியத்திற்கென புதிதாக ஒரு நிர்வாக அலுவலர் பணியிடமும், ஒரு இளநிலை உதவியாளர் பணியிடமும் தோற்றுவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன், பத்திரிகையாளர் நல வாரிய புதிய நல உதவிக் திட்டங்களுக்கு அமைக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு புதிய பரிசீலனைக் குழு அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts Widget

கனமழை காரணமாக இன்று சபரிமலை யாத்திரைக்கு தடை! | Sabarimala Yathra Banned Today | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


தொடர் மழை மற்றும் பம்பா உள்ளிட்ட முக்கிய நதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு சனிக்கிழமை யாத்திரை செல்ல தடை விதித்து கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பம்பா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து, காக்கி-ஆனத்தோடு நீர்த்தேக்கம் (கதவுகள் திறக்கப்பட்டது) மற்றும் பம்பா அணை ஆகிய இரண்டிலும் ரெட் அலர்ட் நிலை காரணமாக, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இதன் மூலம், இன்று பம்பா மற்றும் சபரிமலை யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ் ஐயர் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

விர்ச்சுவல் வரிசை முறை மூலம் ஸ்லாட்டை முன்பதிவு செய்துள்ள யாத்ரீகர்களுக்கு வானிலை சாதகமானதாக மாறியதும், அருகில் உள்ள இடத்தில் "தரிசனம்" செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த நேரத்தில் யாத்ரீகர்கள் பயணத்தை மேற்கொள்ளாமல் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Recent Posts Widget

விபத்தில் சிக்கிய மாணவனின் உயிரைக் காப்பாற்றிய செவிலியர்! குவியும் பாராட்டு..! | Nurse Emergency Treatment to Student at Road Accident | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


மன்னார்குடியில் நேர்ந்த சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவருக்கு CPR எனும் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய செவிலியர் வனஜாவை பொதுமக்கள் பாராட்டினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர்தோட்டத்தை சேர்ந்த செவிலியர் வனஜா. மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நேற்று அவர் மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தனது குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். 

செவிலியர் வனஜா வந்த கார் மன்னார்குடி அருகே 6-நம்பர் வாய்க்கால் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது இவரது காருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த இளைஞர் சென்ற இருசக்கர வாகனத்தின் குறுக்கே ஆடு ஒன்று வந்ததால் ஆட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்ததில் இளைஞர் பலத்த காயமடைந்தார்.

இதை பார்த்த செவிலியர் வனஜா உடனடியாக காரை நிறுத்தி அருகில் சென்று இளைஞரை பரிசோதனை செய்தார். அப்போது அவர் நாடித் துடிப்பு நின்று ஆபத்தான நிலையில் இருந்தது தெரிந்தது. உடனடியாக செவிலியர் வனஜா சி.பி.ஆர் என சொல்லப்படக்கூடிய இதயத்துடிப்பை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரும் மார்பின் மீது அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார். இதனால் மீண்டும் அந்த இளைஞரின் இதயத்துடிப்பு பழைய நிலைமைக்கு திரும்பி நாடித்துடிப்பும் சீரானது.

இளைஞருக்கும் சுயநினைவு திரும்பியது. இதற்கிடையில் வனஜாவின் கணவர் ஆனந்தன் 108 ஆம்புலன்ஸக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்சும் வந்து சேர்ந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அந்த இளைஞர மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இளைஞர் குறித்து விசாரனை செய்ததில் அவர் மன்னார்குடி அடுத்த கருவாகுறிச்சியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் வசந்த் என்பதும் அவர் மல்லிப்பட்டிணம அடுத்த மனோராவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. பின்னர் கல்லூரி மாணவர் வசந்த் மேல் சிசிக்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். வசந்த் ஆபத்து நிலையிலிருந்து மீண்டது குறித்து அறிந்த பின்னரே செவிலியர் வனஜா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்க்கு கிளம்பி சென்றுள்ளார். 

விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்த இளைஞருக்கு சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செவிலியர் வனஜாவின் செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

Recent Posts Widget

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்!! | Ex Governor Konijeti Rosaiah Died | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரோசய்யா இன்று காலமானார் . அவருக்கு வயது 88.

2011-2016 வரை இவர் தமிழக ஆளுநராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




Friday, December 03, 2021

காஞ்சிபுரத்தில் இராஜகுபேரருக்கு நடைபெற்ற 108 மகா கலச அபிஷேகம் | 108 Maha Kalasa Abishegam for Kancheepuram Raja Guberar | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


காஞ்சிபுரம் வெள்ள கேட் குபேரபட்டினம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓம் ஸ்ரீ ராஜ குபேர சித்தர் பீடத்தில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் குபேரருக்கு விசேஷ அரியவகை மூலிகைகளை கொண்டு  கலசாபிஷேகம் நடைபெற்றது.

காலை விஷேச பூஜையுடன் பால் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் சந்தன அபிஷேகம் செய்து பூ அலங்காரத்துடன் கூடிய தங்கக் கவசம் செலுத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

குபேரரை தரிசிக்க சென்னை காஞ்சிபுரம் அரக்கோணம் திருப்பதி போன்ற ஊர்களில் இருந்து பக்தர்கள் காணிக்கையாக நவதானியகள் கொண்டு வந்து வழிபட்டனர்.

சிங்கப்பூர் மலேசியா போன்ற ஊர்களில் உள்ள பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களின் குடும்பத்தினருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

குபேரரை தரிசனம் செய்வதற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அறுசுவையுடன் கூடிய அன்னதானமும் கொல்லிமலையிலிருந்து எடுக்கப்பட்ட விசேஷ பூஜை பொருள்களும் கோயிலின் சார்பில் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலயத்தில் சித்தர்  ராஜ குபேரர் செய்திருந்தார்.

டீச்சர் கண்ணத்தில் பளார் என வைத்து தள்ளிவிட்ட அரசு பள்ளி மாணவர் | ஓசூர் அருகே பரபரப்பு | Student Beating Teacher in Govt School near Hosur | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


ஓசூர் அருகே அரசுப் பள்ளியின் மாணவர் ஒருவர், ஆசிரியை தாக்கி கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மாசிநாயகனப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர், ஒழுங்கீனமாக இருந்த மாணவர் ஒருவரை அழைத்து கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவர் ஆசிரியை கன்னத்தில் அறைந்து அவரை கீழே தள்ளி விட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்பு சம்பந்தப்பட்ட மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆகியவை வலியுறுத்தி உள்ளன.

பல்லாவரம் அருகே நாகல்கேணியில் இளைஞருக்கு கத்திகுத்து: மூவர் கைது | Nagalkeni Arrest 3 Person Issue | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் ரசாக்(30), இவர் கடந்த 29ம் தேதி காலை 10. 30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் ஷேக் உமர், யாகூப் மற்றும் ரசாக் ஆகிய மூவரும் யாகூப்பை பல்லாவரத்தில் இறக்கிவிட சென்றுள்ளனர். அப்போது நாகல்கேணி, பெரியார் நகர் சந்திப்பில் அவர்களை இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு மூன்று பேர் வழிமறித்து ஷேக் யார் என்று கேட்டு வண்டியை விட்டு கீழே இறங்கும்படி கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

உடனே மோகன் என்பவர் ஷேக்கை கத்தியால் வெட்ட முயன்றுள்ளார். அப்போது ரசாக் தடுக்க முற்பட்ட போது கையில் வெட்டு விழுந்தது. இதில் இடது கை மணிக்கட்டில் இரு இடத்திலும், இடதுபக்க கழுத்திலும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ரசாக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 15 தையல் போடப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சங்கர்நகர் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடிய நிலையில் அனகாபுத்தூர் அருகே தலைமறைவாக இருந்த பம்மலை சேர்ந்த மதன்(எ) குள்ளமதன்(20), மோகன்ராஜ்(23), விஜய்(25), ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில் இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, அடிதடி வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கைதானவர்கள் பலரை பணம் கேட்டு மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் என்பதும் பணம் தராதவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதும் தெரியவந்தது.
கைது செய்யும் சென்ற போது போலீசாரை கண்டு தப்பியோடி கீழே விழுந்ததில் மதனுக்கு வலது கையும், மோகனிற்கு இடது கால் எலும்பும் முறிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

விமானப்படையில் அதிகாரி பணி - சம்பளம்: ரூ.56,100–1,77,500 | Requirement in Air Force | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


விமானப்படையின் பறக்கும் மற்றும் தரைப் பணி (தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத) கிளைகளில் ஆணையிடப்பட்ட அதிகாரி பதவியில் 317 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த முதற்கட்ட தகவல், மத்திய அரசு வெளியீடான எம்ப்ளாய்மென்ட் நியூஸ், நவம்பர் 27-டிசம்பர் 3 இதழில் வெளியாகியுள்ளது.

சேர்க்கை AFCAT நுழைவு (AFCAT-01/2022) / NCC சிறப்பு நுழைவு. பெண்களுக்கும் வாய்ப்பு. 25 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும். டிசம்பர் 1 முதல் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். (காலியிட பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது).

வயது (01.01.2023): பறக்கும் பிரிவு: 20–24 (ஜனவரி 2, 1999 மற்றும் ஜனவரி 1, 2003 இடையே பிறந்தவர்கள் உட்பட - இரண்டு தேதிகளும்). கிரவுண்ட் டியூட்டி (தொழில்நுட்பம்/தொழில்நுட்பம் அல்லாத கிளை): 20–26 (ஜனவரி 2, 1997 மற்றும் ஜனவரி 1, 2003க்கு இடையில் பிறந்தவர்கள் உட்பட - இரண்டு தேதிகளும்).

பயிற்சி: ஹைதராபாத்தில் 2023 ஜனவரியில் பயிற்சி தொடங்கும். ஃப்ளையிங் மற்றும் கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல் கிளைக்கு 74 வாரங்களும், கிரவுண்ட் டியூட்டி அல்லாத தொழில்நுட்பக் கிளைக்கு 52 வாரங்களும் பயிற்சிக் காலம்.

சம்பளம் (பறக்கும் அதிகாரி): 56,100–1,77,500. பயிற்சியின் போது விமான கேடட்களுக்கு ரூ.56,100 உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வுக் கட்டணம்: ரூ. 250 (என்சிசி சிறப்பு நுழைவுக் கட்டணம் இல்லை)

கூடுதல்விவரங்களுக்கு:

https://careerindianairforce.cdac.in
https://afcat.cdac.in


மது பிரியர்களுக்கு கசப்பான செய்தி.. அரசின் திடீர் நடவடிக்கை! | TASMAC time Changed | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த கடந்த ஆண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மாற்றப்படுவதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நீட்டிய இடத்தில் கையெழுத்து போடக்கூடியவர் ஓபிஎஸ் - கே.சி பழனிச்சாமி | KC Palanisamy talk about OPS | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


அன்வர் ராஜாவை ஓபிஎஸ் கைவிட்டு விட்டாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.சி பழனிச்சாமி, ஓபிஎஸ் என்பவர் எப்போதுமே நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்டுவிடக்கூடியவர். ஊடகங்கள் கூட அவரை ஆஹா ஓஹோ வென மிக தவறான தகவல்களை சொல்லிக்கொண்டிருந்தது. 

ஓபிஎஸ் இபிஎஸ்சை எதிர்க்கிறார் என்றனர்.  தற்போது உள்ள சூழ்நிலையில் எடப்பாடி எங்கு கையெழுத்து போட சொல்லுகிறாரோ அந்த இடத்தில்  ஓபிஎஸ் கையெழுத்து போடுவார் அவரது நிலைமை அந்த அளவிற்கு உள்ளது என அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட கே.சி பழனிச்சாமி கூறியுள்ளார். 

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுக இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகின்றனர். இதற்கிடையில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்துள்ள சசிகலா அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என சபதம் எடுத்துள்ளார். 

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பறி கொடுத்து கவுரவமான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது அதிமுக. ஆனால் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும்  அதிர்ச்சியையும், கட்சித் தலைமையின் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் சசிகலா அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் எனக்கூறி பலரையும் கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் ஓபிஎஸ்& இபிஎஸ் தலைமை ஈடுபட்டுவருகிறது. இது ஒருபுறம் கட்சித் தொண்டர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் கட்சி விதிகளை மீறியதாகவும், கண்காட்சியின் மாண்புக்கு கலங்கம் ஏற்படுத்தியதாகவும், கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயற்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 


ஜெயலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா ஆதரவாக அன்வர்ராஜா இருந்து வந்தார். பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்தார். பின்னர் ஓபிஎஸ்&இபிஎஸ் ஒன்றாக இணைந்த பின்னர் கட்சி ஒற்றைத் தலைமையின் கீழ் இயங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 


அதிமுக கூட்டணியில் இருந்து வரும் பாஜகவை மிக கடுமையாக விமர்சித்து வந்தார். அதிமுக தோல்விக்கு பாஜக கூட்டணிதான் காரணம் என பகிரங்கமாக கூறினார். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கருத்து தெரிவித்தும் வந்தார். ஒருகட்டத்தில் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும், அப்போதுதான் கட்சியை காப்பாற்ற முடியும் என பேசத்தொடங்கினார். இந்நிலையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


ஒருவகையில் அவர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் அன்வர்ராஜா நீக்கம் குறித்து பலர் பலவகைகளில் கருத்து கூறி வருகின்றனர்.  இந்த வரிசையில் அதிமுக முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர்  கே. சி பழனிச்சாமி யூடியூப் சேனல் ஓன்றுக்கு அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். 

அதில் அவர் கூறியுள்ளதாவது, சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், அன்வர் ராஜாவை அடிக்க பாய்ந்தார்.  அதுதான் முக்கிய பிரச்சனையாக இருந்தது. அந்த கூட்டத்தின் இறுதியில் சிவி சண்முகம் மற்றும் அன்வர்ராஜா இருவரையும் அழைத்து பேசிய ஓபிஎஸ் இபிஎஸ் சி.வி சண்முகத்திடம் ஒரு மூத்த தலைவரை இப்படி பேசுவது கூடாது என எச்சரித்ததுடன், ஊடகங்களில் இனி பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என அன்வர் ராஜாவுக்கும் அட்வைஸ் செய்தனர். ஆனால் அதையும் மீறி அவர் தொலைக்காட்சிகளில் கூட்டத்தில் நடந்ததை பேசிவந்தார். விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்ற முடிவுக்கு அவர் வந்திருந்த நிலையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 


அன்வர்ராஜா நீக்கப்பட்டதில் ஓபிஎஸ் பங்கும் இருக்கிறதா.?  அன்வர் ராஜாவை ஓபிஎஸ் கைவிட்டு விட்டாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.சி பழனிச்சாமி, 


ஓபிஎஸ் என்பவர் எப்போதுமே நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்டுவிடக்கூடியவர். ஊடகங்கள் கூட அவரை ஆஹா ஓஹோ வென மிக தவறான தகவல்களை சொல்லிக்கொண்டிருந்தது. ஓபிஎஸ் இபிஎஸ்சை  எதிர்க்கிறார் என்றனர். ஓபிஎஸ் எடப்பாடிக்கு எதிராக குரலை உயர்த்துவார் என்றும் சசிகலாவை ஆதரிப்பார் என்றெல்லாம் கூறின. ஆனால் நான் மட்டும் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக ஓபிஎஸ்சின் நடவடிக்கைகளை அறுதியிட்டுக் கூறிக் கொண்டிருக்கிறேன். 


எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறாரோ அதைத்தான் ஓபிஎஸ் செய்வார். அவர் சொல்லும் இடத்தில் ஓபிஎஸ் கையெழுத்து போடுவார். கடைசியில் எந்த பிரச்சினையும் இல்லாமல் அவர் செட்டிலாகி விடுவார். விட்டுக் கொடுப்பதில், புரிந்து கொள்வதில் அவர்கள்  இருவரும் ஒன்றுபட்டு விடுவார்கள். ஓபிஎஸ் எப்போதும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பெரிய அளவில் எந்த முடிவையும் எடுக்க மாட்டார் என அவர் கூறியுள்ளார். அதாவது ஓபிஎஸ் தன்னை நம்பி வந்தவர்களையும் கூட கைவிட்டு தப்பிக்க கூடியவர் என்ற தொனியில் அவருடைய கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.