வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2021-11-28
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 05, 2021

பூஜை அறையில் "கல்உப்பு" வைத்தால் இவ்வளவு பிரச்சனைகள் தீருமா.? Benefits of keeping the Crystal Salt in Pooja Room | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

நம் வாழ்க்கையில் இருக்கும் பணப் பிரச்சனைகளுக்கும், தீராத உடல் ஆரோக்கியம் சம்மந்தமான பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடிய அற்புத பரிகாரம் தான் இந்த உப்பு பரிகாரம்.


அதை எப்படி முறையாக செய்ய வேண்டும்? அதனால் கிடைக்கும் பயன்கள் என்ன எனும் சூட்சமத்தை அறிந்து கொள்ளுங்கள்.

கல் உப்பு என்பது பாற்கடலில் இருந்து எடுக்கப்படுவதால் மகாலட்சுமிக்கு இணையாக ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது. 

பாற்கடலில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் பாதம்பட்ட இந்த கல் உப்பு வீட்டில் இருந்தாலே அந்த வீடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம். அதனால் தான் நம் முன்னோர்கள் எல்லாம் சாதாரண உப்பை விட கல் உப்புக்கு அதிக மகத்துவம் கொடுத்து பயன்படுத்தி வந்தார்கள். நாமும் கல் உப்பினை பயன்படுத்தி ஆரோக்கியத்தையும், இறை சக்தியையும் வீட்டில் காத்துக்கொள்வது அவசியம்.

ஆன்மிகம் மட்டுமல்ல, அறிவியல் ரீதியாகவும் தூள் உப்பை தவிர்த்து விட்டு கல் உப்பை இன்றே பயன்படுத்த துவங்குங்கள்.

கல் உப்பை வெள்ளிக் கிழமைகளில் வாங்குவது சகல, சவுபாக்கியங்களையும் பெருக செய்யும் என்பது நம்பிக்கை. இந்த கல் உப்பை எப்போதும் பீங்கான் ஜாடியில் தான் போட்டு வைக்க வேண்டும். அதில் ஐந்து ரூபாய் நாணயங்களை சேர்த்து போட்டு வைப்பது அவசியம். இது மென்மேலும் நம்மிடம் இருக்கும் பணம் பெருகுவதற்கு வழிவகுக்கும்.

அதே போல உங்களுடைய பூஜை அறையில் கொஞ்சமாக ஒரு பித்தளை அல்லது செம்பு கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பிக் கொள்ளுங்கள். அதில் நான்கைந்து மிளகுகளைப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். கல் உப்பு, மிளகுடன் சேரும் பொழுது நம் பிரச்சனைகளும் விரைவாக தீரும் என்பது நம்பிக்கை. இதன் மூலம் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் கண்டிப்பாக தீரும். வெள்ளிக்கிழமையில் இதை செய்து வைத்தால் அடுத்த வெள்ளிக்கிழமையில் கொண்டு போய் தண்ணீரில் கரைத்து ஊற்றி விட வேண்டும். அதுவரை உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் இதனை வைத்திருப்பது அவசியம்.

இதனால் தன்னம்பிக்கை அதிகரித்து, எதையும் நம்மால் சாதிக்கும் வல்லமை பிறக்கும். இறை சக்தி என்பது மந்திரங்களின் மூலம் நமக்கு எளிதாக கிடைக்கும். இந்த கல் உப்பு பரிகாரத்தை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வர நம்மிடம் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் நம்மை விட்டு விலகி ஓடிவிடும்.

வெள்ளிக்கிழமையில் ஆரம்பித்து மறு வெள்ளிக்கிழமையில் அதனை முடித்து வைக்க வேண்டும். இதே போல தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வர வேண்டும். மிக மிக எளிமையாக இருக்கும் இந்த பரிகாரத்தை அனைவரும் முயற்சி செய்து பார்த்து பயன் பெறுங்கள்.

சமீபத்திய செய்திகள் 

இன்று நீதிமன்ற வாயில்கள் மூடல் | வருடத்திற்கு ஒருமுறை இப்படியா..? 24 மணி நேரமும் திறக்கப்படாத நீதிமன்ற வாயில்கள்..? ஏன்.? | Why Yearly once High Court Gate Closed.? | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 107 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கட்டிடம், நிலம் உள்ளிட்டவை உயர்நீதிமன்றத்திற்கு மட்டுமே சொந்தமானது. 

இந்த சொத்தை யாரும் சொந்தம் கொண்டாடக்கூடாது என்பதற்காக, ஆண்டுக்கு ஒருமுறை டிசம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்றம் முழுவதும் 24 மணி நேரம் இழுத்து மூடப்படும். அனைத்து நுழைவுவாயில்களும் பூட்டப்பட்டு, உள்ளே யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்.
அதன்படி நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை, உயர்நீதிமன்றத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் மூடப்பட்டு இருக்கும். இதற்கான அறிவிப்பை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டார்.

 
சமீபத்திய செய்திகள் 

காஞ்சிபுரம் அருகே குண்டாசில் ஒருவர் கைது | Men arrested belongs Goondas Act near Kancheepuram | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


காஞ்சிபுரம் மாவட்டம், தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் சரவணன்(24).

இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி மற்றும் அடிதடி ஆகிய வழக்குகள் பல  நிலுவையில் உள்ளன. இத்தருணத்தில் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளியான இவரை, குண்டர் தடுப்பு காவலில் வைக்க, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகள் 

நகராட்சி தேர்தலையொட்டி விசிக கூட்டம் | VCK Party Meeting about TN Munsipality Election | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவேரா ஆகியோரிடம் தென்சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் கதிர். ராவணன் தனது மனைவி வசந்தபாரதி சார்பில் 135 வது வார்டில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார். 

இதில் தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வீ. கோ. ஆதவன், தமிழ்வளவன், சாதிக், தமிழ்முதல்வன், தமிழ்முகிலன், கண்ணன், முருகன், தமிழ்ஒளி, எழில்இமயன், விடுதலை ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா வடலூர் 16வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட ராஜ்குமார் என்பவர் கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவேரா ஆகியோரிடம் விருப்பமனுவை கொடுத்தார். இதில் கடலூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார், அறங்க. தமிழ் ஒளி, இளந்தமிழன், விஜய், அகஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.

சமீபத்திய செய்திகள் 

இந்த மந்திரத்தை சொன்னாலே போதும்... எல்லா நன்மைகளும் கிடைக்கும் | Slogan to get all Benefits in Life | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல், உள்ளம் உருகி வழிபடும் இறைவழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு முழுமையான நம்பிக்கை தேவை.

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட

மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட

கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட


குண்டலமிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை

முருகேசனாட ஞான சம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனியட்ட

பாலகருமாட நரை தும்பையறுகாட நந்திவாகனமாட நாட்டியப்

பெண்களாட வினையோட உனைப்பாட யெனைநாடி இது வேளை

விருதோடு ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே

எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

நடராஜப் பத்து.


பொதுப் பொருள்:

மான், மழு, நிலவு, கங்கை, சிவகாமியம்மை, திருமால், நான்மறைகள், நான்முகன், தேவர்கள், விநாயகப் பெருமான், இரு செவி குண்டலங்கள், தண்டை, புலித்தோல் ஆடை, குமரன், ஞானசம்பந்தர், இந்திராதி அஷ்டதிக்பாலகர்கள், நந்தியம் பெருமான், நாட்டிய மகளிரோடு எம் வினையோடி உனைப்பாட எம்மை நாடி இதுவே வேளை என்று ஆடி வருவாய் சிவபெருமானே! சிவகாமி நேசனே! எம்மைப் பெற்ற தில்லைவாழ் நடராஜனே! Recent Posts Widget

Saturday, December 04, 2021

வண்டிக்கு பெட்ரோல் போடும்போது தீயில் கருகி பாலிெடக்னிக் மேலாளர் பலி | Polytechnic Manager Died when fueling the Vehicle at Jolarpet | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 56). இவர் திருப்பத்தூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சாந்தி என்கின்ற மனைவியும் ராகவன், பிரதீப், ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.

சம்பவத்தன்று இரவு தனது மொபட்டுக்கு சுயமாக பெட்ரோல் போட்டுக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தீப்பொறி பறந்து வந்து விழுந்ததில் திடீரென தீ பற்றி எரிந்ததாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த ராஜவை அந்த பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு உடல்நிலை மோசமான நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு ராஜா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார். அவர் போதையில் இருந்தபோது மொபட்டுக்கு பெட்ரோல் போட்டதில் தீவிபத்து ஏற்பட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இதில் மர்மம் உள்ளதா என்பது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Recent Posts Widget

தாய்மாமன் மடியில் அமரச்செய்து காது குத்துவது ஏன்? | Why ear piercing for child is sitting in Mother related Uncle? | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


காதணி விழா என்பது இந்து தமிழர்களிடையே காணப்படும் ஒரு முக்கிய சடங்காகும். இந்த சடங்கில் குழந்தைகளுக்கு காதில் துளையிட்டு தங்கக் காதணி அணிவிக்கப்படுகிறது. இச்சடங்கின் முறைகள் சாதி சமயத்திற்கு தக்கவாறு மாறுபடுகிறது.

குழந்தைகளை குலதெய்வ கோவிலுக்கு அழைத்து சென்று மொட்டை போடுகின்றனர். பின் அவர்களை குளிப்பாட்டி, தாய்மாமன் சீராக வருகின்ற புத்தாடைகளை அணிவிக்கின்றனர். குழந்தையை தாய் மாமன் மடியில் அமரவைத்து ஆசாரியால் காது குத்தப்படுகிறது. பின்பு தாய் மாமன் தந்த தங்கக் காதணிகளைப் போடுகின்றர். தாய் வழிமாமன் இல்லையேல் அதற்கு நிகரான ஒரு உறவின் மடியிலும் வைத்து காதுகுத்தல் நிகழும்.

தாயை ‛அம்மா’ என்றும், தாய்மாமனை ‘அம்மான்’ என்றும் சொல்வர். தாயும், தாய்மாமனும் ஒன்றே. சகோதர உறவைப் பலப்படுத்தவே பெரியவர்கள் இதை உருவாக்கியுள்ளனர்.

Recent Posts Widget

வண்டலூர் மேம்பாலம் அருகே மயங்கிய நிலையில் இருந்த முதியவருக்கு உதவிய காவலர் | Vandalur Police News | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் மேம்பாலம் அருகே முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்துகொண்டு இருந்தார். அவ்வழியாக சென்ற காவலர் சந்தோஷ் என்பவர் அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து விசாரித்த போது, அவர் திருச்சியை அடுத்த கீரனுர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், தனது மகளுடன் படப்பையில் தங்கி வந்துள்ளார் என்றும், தனது மகளுடன் ஏற்ப்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்தாகவும் தெரிந்தது. பேருந்தில் செல்ல பணம் இல்லாமல் நடந்து சென்றதாகவும் அந்த முதியவர் கூறியுள்ளார்.


இதையடுத்து காவலர் சந்தோஷ்  அவ்வழியாக வந்த வாகனஓட்டிகளான சரத்குமார் மற்றும் திவாகர் ஆகியோரின் Googlepay-விற்கு ரூ.200/-னை அனுப்பி அதனை பணமாக பெற்று அந்த முதியவரிடம் கொடுத்து வண்டலூர் பேருந்து நிலையம் அழைத்துச்சென்றார்.

இந்த நிகழ்வினை பொதுமக்கள் பலர் முகநூலில் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர். இவர் ஆவடி காவல் தலைமை அலுவலகத்தில் 2-ம் நிலை  பெட்டாலியன் காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் இந்து கல்லூரி இரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளார். காவலர் சந்தோஷ்  மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





Recent Posts Widget

சசியால் டென்க்ஷன் ஆன செல்லூர் ராஜூ | நள்ளிரவு 1 மணிக்கு பேச்சு.!!! | Sellur Raju Tension about Sasikala | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அ.தி.மு.க. தலைவர்களை விமர்சனம் செய்வது போன்றும், சசிகலாவை ஆதரித்து பேசுவது போன்றும் சமூக வலை தளங்களில் ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை நல்ல முறையில் நடத்தி வருகின்றனர்.அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சில வி‌ஷமிகள் சதி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.


சமூக வலைத்தளங்களில் நான் பேசுவது போன்று ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது. இதில் உண்மை இல்லை. நான் சமீப காலமாக இரவு 10 மணிக்கு மேல் செல்போனை பயன்படுத்துவதே கிடையாது.ஆனால் நள்ளிரவு 1 மணிக்கு நான் பேசுவது போல மிமிக்கிரி செய்து வி‌ஷமிகள் தேவையற்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

என் மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து குழப்பம் விளைவிக்க பார்க்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக போலியான லெட்டர் பேடில் தகவல் வெளியானது. இது போன்று தான், நான் பேசாத கருத்துக்களை என் பெயரில் வெளியிட்டுள்ளனர்.

அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும். இப்போது ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை வலிமையோடு நடத்தி வருகிறார்கள்.

எனவே தற்போதைய நிலையில் கட்சி தலைமைக்கு புதிதாக ஒருவரை கொண்டு வரத்தேவை இல்லை. அந்த சூழ்நிலையும் எழவில்லை. என் குரலில் மிமிக்கிரி செய்து அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தும் வி‌ஷமிகள் மீது கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Recent Posts Widget

ஊரப்பாக்கம் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட ஆய்வாளர் குழுவுக்கு டிஜிபி வெகுமதி அளித்த பாராட்டு | DGP Giving Award to Urapakkam Double Murder Case Investigation Police Team | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து பிடித்த ஓட்டேரி சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் அசோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் நெடுமாறன் மற்றும் அவர்களின் குழுவை  தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெகுமதி அளித்து பாராட்டினார்.

Recent Posts Widget

காவல் நிலைய வாசலில் இரண்டு மணிநேரம் நடனமாடிய பெண்..!! | Lady Dacing in front of Police Station 2 hours at Salem Jalagandapuram | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தின் பிரதான சாலையில் எடப்பாடி காவல்நிலையம் அமைந்துள்ளது.

அங்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகாரளிக்க வந்துள்ளார்.

ஆனால் அதே இடத்தில் புகாரளிக்க வந்த மற்றவர்களிடம் புகார்கள் பெறப்பட்டன. போலீசார் விசாரித்தனர். குறிப்பிட்ட இந்த பெண்ணிடம் மட்டும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்த பெண் பொறுமை இழந்தார்.

அதன் தொடர்ச்சியாக காவல் நிலையம் வாசல் முன்பு யாரும் எதிர்பாராத விதத்தில் குத்தாட்டம் போட்டு நடனம் ஆடினார். இதை பார்த்து அருகிலிருந்தவர்கள் பெண்ணை எச்சரித்தனர். ஆனால் அவர்களை அவர் திட்டி அனுப்பிவிட்டார்.

ஆனால் போலீசார் அப்பெண்ணை கண்டுகொள்ளவில்லை. சுமார் 2 மணிநேரம் ஆடிவிட்டு களைப்படைந்தவுடன் அவர் சென்றுவிட்டார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் சிலர் பேசினர்.

கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்பெண் அடிக்கடி பிரச்சனை என்று காவல் நிலையத்தை அணுகுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். அதனால் அவரை போலீசார் யாரும் கண்டுகொள்ளாவில்லை என்று கூறினார். மேலும் அவர் பொய் புகார் கூறி வந்ததாகவும் போலீசாரிடையே தகவல் தெரிவித்தனர்.

Recent Posts Widget

மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது | TN Women Self Help Group Loan Disposal | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


கூட்டுறவு சங்கங்களின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை இரண்டாயிரத்து 756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் எனவும், இதற்காக 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில், கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுவதாகவும், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரையில் நிலுவையில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற இரண்டாயிரத்து 756 கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டில் முதல்கட்டமாக 600 கோடி ரூபாய் விடுவிக்கப்படுவதாகவும், மீதமுள்ள தொகை ஏழு சதவீத வட்டியுடன் அடுத்த நான்கு ஆண்டுகளில் நிபந்தனையுடன் விடுவிக்கவும் அனுமதிக்கப்படுகிறது என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent Posts Widget

ஆசிரியைக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த ஆசிரியர்! | Porn message on WhatsApp | Sexual harassment of a school teacher at Paramakudi | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


ஆசிரியைக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பி பாலியல் உறவுக்கு அடிக்கடி அழைத்து சீண்டலில் ஈடுபட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தபள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வரலாறு பாடங்கள் நடத்திவருபவர் ஆசிரியை மலர்விழி. 

இவருக்கு அதே பள்ளியில் பணியாற்றும் நாகாட்சி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் சந்திரன்( வயது 52) என்பவர் செல்போன் மூலம் வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பி பாலியல் உறவுக்கு அடிக்கடி அழைத்து சீண்டலில் ஈடுபட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியை போலீஸில் கொடுத்த புகாரையடுத்து பாலியல் தொந்தரவு உள்பட 3 வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Recent Posts Widget

பத்திரிகையாளர் நல வாரியம் நடைமுறைக்கு வந்தது - தமிழக அரசு அரசாணை வெளியீடு | Journalist Welfare Board in TN | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட பத்திரிகையாளர் நல வாரியத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


பத்திரிகையாளர், மற்றும் பத்திரிகையாளர் அமைப்புகளின் நீண்ட கால கோரிக்கை தங்களுக்கான வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

அதிமுக ஆட்சியில் அப்போதைய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ்நாட்டு மக்கள் தொகையை விட அதிகளவில் இருக்கும் பத்திரிகையாளர் அமைப்புகளை சந்தித்தார். பத்திரிகையாளர் வாரியம் அமைக்கப்படும் என்று சட்டசபையிலேயே அறிவித்தார். ஆனால் ஆட்சி முடியும் கடைசி சட்டசபையில் கூட அறிவிக்கவே இல்லை.

இந்த நிலையில் கடந்த 2021-2022 - ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில் செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில்


"தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் "பத்திரிகையாளர் நல வாரியம்" அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதமாக பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் உருவாக்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அந்த ஆணையில், பத்திரிகையாளர் நல வாரிய உதவித் திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்த செய்தித்துறை அமைச்சர் தலைவராகவும், அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 7 நபர்களையும், அலுவல் சாரா உறுப்பினர்களாக 6 நபர்களையும் கொண்ட குழு அமைக்கப்படும். 

பத்திரிகையாளர் நல வாரியத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையாக , பத்திரிகைகளில் அரசு விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகை நிறுவனங்கள் அரசால் வழங்கப்படும் விளம்பரக் கட்டணத்தில் சதவீதம் தொகையை EMAI ஊதியத்திற்கென வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.


பத்திரிகையாளர் நல வாரியத்திற்கென புதிதாக ஒரு நிர்வாக அலுவலர் பணியிடமும், ஒரு இளநிலை உதவியாளர் பணியிடமும் தோற்றுவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன், பத்திரிகையாளர் நல வாரிய புதிய நல உதவிக் திட்டங்களுக்கு அமைக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு புதிய பரிசீலனைக் குழு அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts Widget

கனமழை காரணமாக இன்று சபரிமலை யாத்திரைக்கு தடை! | Sabarimala Yathra Banned Today | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


தொடர் மழை மற்றும் பம்பா உள்ளிட்ட முக்கிய நதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு சனிக்கிழமை யாத்திரை செல்ல தடை விதித்து கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பம்பா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து, காக்கி-ஆனத்தோடு நீர்த்தேக்கம் (கதவுகள் திறக்கப்பட்டது) மற்றும் பம்பா அணை ஆகிய இரண்டிலும் ரெட் அலர்ட் நிலை காரணமாக, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இதன் மூலம், இன்று பம்பா மற்றும் சபரிமலை யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ் ஐயர் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

விர்ச்சுவல் வரிசை முறை மூலம் ஸ்லாட்டை முன்பதிவு செய்துள்ள யாத்ரீகர்களுக்கு வானிலை சாதகமானதாக மாறியதும், அருகில் உள்ள இடத்தில் "தரிசனம்" செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த நேரத்தில் யாத்ரீகர்கள் பயணத்தை மேற்கொள்ளாமல் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Recent Posts Widget

விபத்தில் சிக்கிய மாணவனின் உயிரைக் காப்பாற்றிய செவிலியர்! குவியும் பாராட்டு..! | Nurse Emergency Treatment to Student at Road Accident | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


மன்னார்குடியில் நேர்ந்த சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவருக்கு CPR எனும் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய செவிலியர் வனஜாவை பொதுமக்கள் பாராட்டினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர்தோட்டத்தை சேர்ந்த செவிலியர் வனஜா. மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நேற்று அவர் மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தனது குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். 

செவிலியர் வனஜா வந்த கார் மன்னார்குடி அருகே 6-நம்பர் வாய்க்கால் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது இவரது காருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த இளைஞர் சென்ற இருசக்கர வாகனத்தின் குறுக்கே ஆடு ஒன்று வந்ததால் ஆட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்ததில் இளைஞர் பலத்த காயமடைந்தார்.

இதை பார்த்த செவிலியர் வனஜா உடனடியாக காரை நிறுத்தி அருகில் சென்று இளைஞரை பரிசோதனை செய்தார். அப்போது அவர் நாடித் துடிப்பு நின்று ஆபத்தான நிலையில் இருந்தது தெரிந்தது. உடனடியாக செவிலியர் வனஜா சி.பி.ஆர் என சொல்லப்படக்கூடிய இதயத்துடிப்பை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரும் மார்பின் மீது அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார். இதனால் மீண்டும் அந்த இளைஞரின் இதயத்துடிப்பு பழைய நிலைமைக்கு திரும்பி நாடித்துடிப்பும் சீரானது.

இளைஞருக்கும் சுயநினைவு திரும்பியது. இதற்கிடையில் வனஜாவின் கணவர் ஆனந்தன் 108 ஆம்புலன்ஸக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்சும் வந்து சேர்ந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அந்த இளைஞர மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இளைஞர் குறித்து விசாரனை செய்ததில் அவர் மன்னார்குடி அடுத்த கருவாகுறிச்சியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் வசந்த் என்பதும் அவர் மல்லிப்பட்டிணம அடுத்த மனோராவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. பின்னர் கல்லூரி மாணவர் வசந்த் மேல் சிசிக்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். வசந்த் ஆபத்து நிலையிலிருந்து மீண்டது குறித்து அறிந்த பின்னரே செவிலியர் வனஜா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்க்கு கிளம்பி சென்றுள்ளார். 

விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்த இளைஞருக்கு சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செவிலியர் வனஜாவின் செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

Recent Posts Widget