வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 100 உடல்கள் சிதறின; சற்றுமுன் இந்தியாவை உலுக்கிய அகோர விபத்து [வீடியோ கீழ்]
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

100 உடல்கள் சிதறின; சற்றுமுன் இந்தியாவை உலுக்கிய அகோர விபத்து [வீடியோ கீழ்]பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள சௌரா பஜாக் என்னும் இடத்தில் தசரா பண்டிகை இன்று மாலை கொண்டாடப்பட்டது.

அப்போது ராவணனை வாதம் செய்யும் நிகழ்வு நடைபெற்று கொண்டிருந்தது.
பயங்கர வாணவேடிக்கையுடன் விழா நடைபெற்றதால் மக்கள் அதிகப்படியான கூட்டத்திலும் மக்கள் மகிழ்ச்சியை கொண்டாடி கொண்டிருந்தார்கள்.


மக்கள் நெரிசல் அதிகமாக இருப்பதால் ரயில் பாதையில் நின்று தசரா கொண்டாட்டங்களை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு வேகமாக வந்த ரயில் மோதியது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலி ஆகியுள்ளனர். பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ராவண உருவபொம்மை வதத்தின் போது பட்டாசுகள் வெடித்து அசம்பாவிதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விழாவில் பங்கேற்றவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடும் போது அந்த வழியாக வந்த ரயில் மோதியது. ரயில்வே கேட் மூடியிருந்ததால் அந்த வழியாக வந்த ரயிலும் நிற்காமல் மக்கள் மீது மோதிவிட்டு சென்றது.


இது குறித்து ரயில்வே தரப்பில் இருந்து வெளியான தகவல்களின் படி,விழாவில் பங்கேற்றவர்கள் அலறியடித்து மூடியிருந்த ரயில்வே கேட்டை நோக்கி சென்றதால் விபத்து ஏற்பட்டது' என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 27வது ரயில்வே கேட் வழியாக புறநகர் ரயில் எண் 74943 சென்றபோது இந்த விபத்து நேர்ந்தது எனவும், ரயில்வே கேட் மூடியிருந்ததாக ரயில்வே நிர்வாகம் கூறும் நிலையில் கேட் திறந்திருந்தாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாறுபட்ட கருத்து நிலவி வரும் வேளையில் அடுத்தகட்ட விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment