வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: எங்க கூட படுப்பானுங்க, எங்க கிட்டயே காச வாங்கிட்டு ஓடிருவாணுங்க...! நாங்க தான் ஏமாந்துட்டோம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 05, 2018

எங்க கூட படுப்பானுங்க, எங்க கிட்டயே காச வாங்கிட்டு ஓடிருவாணுங்க...! நாங்க தான் ஏமாந்துட்டோம்


நம் இந்தியப் பெண்களைக் கட்டம் கட்டி ஏமாற்றும் வெளிநாட்டுக் காரர்களின் கதை. அந்த ஏமாற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதை. அதில் இருந்து மீள முடியாமல் கதறும் ஒரு மனைவியின் கதை. அவள் தன் உடலையும், பொருளையும் தன்னை வாழ் நாள் முழுதும் வைத்துக் காப்பாற்றும் ஒரு ஆணை நம்பிக் கொடுத்து... இழந்த ஒரு அப்பாவி ஜீவனின் கதை.

திருமணம்
 என்னங்க ஊருலேயே பெரிய மண்டபத்துல கல்யாணம் வெச்சி இருக்கீங்க. நம்ம தகுதிக்கு இது கொஞ்சம் ஓவர் இல்ல. கொஞ்சம் பாத்து பண்ணி இருக்கலாமேங்க என்று சுற்றம் சொல்லும் போது மகளைப் பெற்ற இந்திய குடும்பத்தினருக்கு எதுவும் காதில் ஏறவில்லை. லண்டன் மாப்பிள்ளை அல்லவா...? எப்படி கால் தரையில் படும். கல்யாண செலவுகள் மட்டும் 18 லட்சம் ரூபாய். எல்லாம் சிறப்பாக முடிகிறது. அப்புறம் என்ன தாம்பத்தியம் தான். மாப்பிள்ளை மொழியில் செக்ஸ்... (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
உடல் உறவு பெண்:
 ஏங்க இன்னக்கி வேண்டாம், கல்யாணம் ஆகி மூனு வாரத்துல செஞ்சூரி போட்ருவீங்க போல. நேத்திக்கு பண்ணதே ரொம்ப வலிக்கிது... வேண்டாம் ஆண்: அப்ப என் மேல உனக்கு விருப்பம் இல்லயா...? நான் அடுத்த வாரம் லண்டன் போயிடுவேன், அப்புறம் யார் உனக்கு இந்த சுகமான வலியக் கொடுப்பா..? பெண்: சரி..... வாங்க, ஆனா ஆண் உறை போட்டுக்கக் கூடாது. எனக்கு சீக்கிரம் ஒரு குழந்தை வேண்டும். ஆண்: அது இல்ல செல்லம். நாம லண்டன் போனதுக்கு அப்புறம் குழந்தை பெத்துக்கலாம். இல்லன்னா விசா, பாஸ்போர்ட் பிரச்னை வரும். பெண்: ஓகே. (மீண்டும் அந்த மிருகம் இந்தியப் பெண் மீது பாய்கிறது. இந்தியப் பெண்ணும், கணவனின் செல்லக் கெஞ்சல் என எண்ணி கட்டிலில் புதுமை காட்டுகிறாள்)


டாட்டா பைபை
 லண்டன் மாப்பிள்ளை விமானம் ஏறுகிறார். போகும் போது "மாமா எனக்கு உங்க பொண்ண விட எதுவும் பெருசு இல்ல. எனக்கு வரதட்சனை வேண்டாம். நா எங்க அப்பா அம்மா கிட்ட பேசிக்கிறேன்" என்கிறார் லண்டன் வாலா. "என்ன மாப்பிள்ளை. எனக்கு பிறந்தது ரெண்டுமே பெண் குழந்தைங்க. எனக்கு ஒரு பையன் இல்லாத குறைய நீக்க ஆண்டவன் உங்கள லண்டன்ல இருந்து அனுப்பி இருக்கான். இது உங்களுக்கு வேண்டான்னாலும், செய்ய வேண்டியது எங்க கடமை. உங்களுக்கு இந்தப் பணம் தேவை இல்லண்ணாலும் என் பொண்ணோட வாழ்கைச் செலவுக்கு வெச்சிக்குங்க மாப்ளை" என்கிறார் இந்தியப் பெண்ணின் அப்பா.


வர தட்சனை
 கட்டில் உறவு முடிந்து காதலை கண்ணில் காட்டி மாப்பிள்ளை லண்டன் பறக்கிறார். வரதட்சனை பணமாக இந்தியப் பெண் வீட்டார் சிங்கிள் பேமென்டாக 10 லட்சம் ரூபாயை ரொக்கமாக தருகிறார்கள். மாப்பிள்ளையும் கணிவான குரலில் நன்றி சொல்லி, மகளை வெகுவிரைவில் லண்டனுக்கு அழைத்து வருவதாக வாக்கு கொடுக்கிறார்.


தகப்பனின் சந்தோஷம்
 "இவளுக்கு எப்புடி நல்ல மாப்பிள்ளையத் தேடுறதுன்னு நாலு வருஷமா சரியா சாப்பாடு தூக்கம் இல்லாம அலஞ்சேன்... ஆண்டவனா பாத்து நல்ல லண்டன் மாப்பிள்ளையா கொடுத்துட்டாரு. இப்ப சந்தோஷமா இருக்கு. அதோட கடன உடன வாங்கி எப்புடியே மாப்பிள்ளை குடும்பத்துக்கு கொடுக்க வேண்டியதையும் மாப்பிள்ளை கிட்ட கொடுத்தாச்சு... ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று மகளின் தகப்பன் நிம்மதியாக உறங்கச் செல்கிறார்.


காலம் கடக்கிறது 
 இரண்டு மாதம் கடக்கிறது. மாப்பிள்ளை பெண்ணோடு பேசுவது குறைகிறது. சரி வேலைப் பளு என்று இந்தியப் பெண் விட்டுக் கொடுக்கிறார். இப்படியாக ஆறு மாதங்களுக்குப் பின் மாப்பிள்ளை தானாக அழைப்பதை விட்டு இருந்தார். அதே நேரத்தில் பெண் கூப்பிட்டு பேசினாலும் பேசுவதை தவிர்த்தார். பேசுவதை அறவே விட்டிருந்தார் லண்டன் மாப்பிள்ளை.


சந்தேகம்
 ஆனால் நம் இந்தியப் பெண்ணுக்கு ஏதோ சந்தேகம் வருகிறது. இந்தியப் பெண், தனியாக தானே விசாவுக்கு விண்ணப்பித்து, பாஸ்போர்ட் எடுத்து லண்டன் புறப்பட்டு சொன்ன விலாசத்துக்கு சென்று விசாரிக்கிறார். ஸ்டீவன்.... சாரிங்க அப்படி யாரும் இங்க இல்ல என்று பதில் வருகிறது.
 
நான் ஏமாந்துட்டேன்

அட நாம் தான் தவறாக விசாரித்திருப்போம் என்று பலரிடம் காட்டி விலாசத்தை உறுதி செய்கிறாள். முழுமையாக தெருவில் உள்ள பலரையும் விசாரிக்கிறாள். எதுவுமே கிடைக்க வில்லை. மனமுடைந்து லண்டன் மாப்பிள்ளை நம்பருக்கு அழைக்கிறாள். அழைப்பு போகவில்லை. எண் ஸ்விட்ச் ஆஃப் அல்லது நாட் ரீச்சபில் என்றே வருகிறது.

உஷாராக இருந்த ஸ்டீவன்
 கல்யாணத்துக்கு போட்டோ, வீடியோ வேண்டாம், வரதட்சனைகளை ரொக்கமாக பெற்றது, ஆண் உறை உடன் மட்டுமே பெண்ணோடு உறவு கொண்டது, தன்னுடைய எந்த அடையாள அட்டைகளையும் பெண் இடமோ, பெண் வீட்டார்களிடமோ காட்டாமல் உஷாராக இருந்தது. ஸ்டீவன் காட்டிய ஒரே அடையாள அட்டை அவர் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றுவதாகச் சொன்ன அடையாள அட்டை, ஐபிஎம் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்தால் அப்படி ஒருத்தர் இல்லை என்று பதில் வருகிறது.


நான் முழுமையாக ஏமாந்துவிட்டேன்
 தன்னை உடல் ரீதியாக, பொருளாதார ரீதியாகவும் சுரண்டிய ஸ்டீவன் மிருகத்தை நினைத்து தன் மீதே கோபம் கொள்கிறாள். வெடித்துக் கதறி அழுகிறாள். விஷயம் லண்டன் போலீஸாரிடம் செல்கிறது. எந்த ஒரு துப்பும் இல்லாமல் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்தியப் பெண்ணை சமாதானப்படுத்தி இந்தியாவுக்கு விமானம் ஏற்றி அனுப்புகிறார்கள்.


இப்படி எத்தனை பேர் 
இந்தியாவில், மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண் வீட்டார் கொடுக்கும் வர தட்சனை, இந்தியப் பெண்களின் அழகு போன்றவைகள் எல்லாம் கணக்கில் எடுத்து கொண்டு, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் சென்று செட்டில் ஆன இந்திய இளைஞர்கள், வெளிநாட்டு இளைஞர்கள், மேற்கத்திய நாடுகளில் செட்டில் ஆன ஆசிய நாட்டுக் காரர்கள் என்று பல தரப்பினர், எண்ணில் அடங்காத வட இந்தியப் பெண்களை கட்டம் கட்டி ஏமாற்றி இருக்கிறார்கள்.


ஏன் வட இந்தியர்கள் 
இந்தியாவில் தமிழகம், கேரளா, கர்நாடாம், ஆந்திரம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருக்கும் கல்வி அறிவு, விழிப்புணர்வு போன்ற அறிவு சார் விஷயங்களோடு, வர தட்சனையை ஒரு கேவலமான செயலாக பார்க்கும் நிலை அதிகரித்திருக்கிறது. அதோடு பெண் வீட்டாரும் என்னால இவ்வளவு தான் முடியும், வேணும்னா சொல்லுங்க என்கிற ரீதியில் தான் இப்போது பெண் கொடுக்கிறார்கள். ஆனால் வட இந்தியாவில் இன்னும் நிலைமை 1950-களிலேயே இருக்கின்றன. கல்யாண செலவுகள், வர தட்சனை, மெஹந்தி, சங்கீத் என்று எல்லாம் பெண் வீட்டார் தலையில் தான் வந்து விடியும். எதிர்த்துப் பேசினால் மாப்பிள்ளை கிடைக்காது. குறிப்பாக பஞ்சாப் பெண்களை ஏமாற்ற இந்த மிருகங்களுக்கு அவ்வளவு பிடிக்கும்.


சுந்தரி அனிதா 
அமெரிக்காவின் லிங்கன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் இவரிடம் இதைக் குறித்து கேட்ட போது "இந்திய சமூகத்தைப் பொறுத்த வரை ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது என்றாலே அவள் பாதி வீணாகிப் போன பொருட்களுக்குச் சமம், அதுவும் கணவனோடு தாம்பத்தியமும் முடிந்துவிட்டது என்றால் அவள் 100% அழுகிப் போன பொருள் தான். இனி அவளை மறு திருமணம் செய்து கொள்ள எவரும் முன் வர மாட்டார்கள். சரி இப்படி ஏமாற்றப்பட்ட பெண்னின் தங்கைகளுக்குக் கூட இனி மாப்பிள்ளை கிடைப்பது சிரமம் தான். அப்படித் தான் இந்திய சமூகம் பெண்களை கட்டமைக்கிறது" என்கிறார். அதோடு ஒரு இந்தியப் பெண்ணை உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் திருடி விட்டு இந்தியாவில் எளிதில் ஓடி விட முடிகிறது. ஏமாற்றிய ஆண் மீது எந்த ஒரு சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை எனப்து வேதனையான விஷயம் என்று தன் வருத்தத்தை பதிவு செய்கிறார்.


பிரிட்டீஷ் குடியுரிமை ஆலோசகர் 
ஹர்ஜப் சிங் பங்காள், பஞ்சாப் மாநிலத்தில் பிரிட்டனுக்கு குடியேறும் இந்தியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். "இரண்டு நாடுகளுக்கு இடையிலான இந்த பிரச்னையை முறையாக தீர்க்க போதுமான சட்டங்கள் இல்லை. எனவே தான் இப்படி பல ஆண்கள், வட இந்தியப் பெண்களை, குறிப்பாக பஞ்சாப் பெண்களை ஏமாற்றி உடல் உறவு வைத்துக் கொண்டு, வர தட்சனை வாங்கிக் கொண்டு ஓடி விட முடிகிறது" என்று வருத்தப்படுகிறார்.


அந்த பெண்
 என் கணவர் நான் எதிர்பார்த்ததை விட அழகாக இருந்தார், என் தேவைகளை பார்த்துப் பார்த்து அந்த 3 வாரத்தில் பூர்த்தி செய்தார். எனக்கு பிடித்த பீட்ஸா தான் அவருக்கும் பிடித்திருந்தது, எனக்கு பிடித்த வான நீலம் அவருக்கும் பிடித்திருந்தது, என்னோட கால்கள் அவருக்கு ரொம்பப் பிடிக்கும், அவருடைய உதடுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.... இதை எல்லாம் அவருக்குப் புரியாத பஞ்சாபியில் எழுதிக் கொண்டு இருக்கிறேன். ஆனால் அவரைக் காணவில்லையே, அவர் என் மீது காடிய காதலைக் காணவில்லையே... அவரையே காணவில்லையே என்று கதறுகிறார். பிபிசி நிறுவனம் வெளியிட்டு இருக்கும்

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment