வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாணவனை அடித்து நொறுக்கிய சைக்கோ வாத்தியார்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 20, 2018

மாணவனை அடித்து நொறுக்கிய சைக்கோ வாத்தியார்உத்திரபிரதேசம் அலிகாரில் சொந்த நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவர் அமித். இவருடைய 7 வயது  மகனுக்கு டியூசன் சொல்லி தர மாதம் ரூ.2,000 சம்பளத்தில் கமல் ஷர்மா என்ற ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்தார்.


தன்னுடைய நிறுவனத்திலேயே உள்ள ஒரு அறையில் மகனுக்கு டியூசன் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். தினமும் சுமார்  1 மணி நேரம் கமல் ஷர்மா, தொழிலதிபரின் மகனுக்கு டியூஷன் எடுத்துள்ளார். 6 மாதங்கள் கழிந்தது. ஒருநாள் அமித் தனது நிறுவனம் தொடர்பாக ஆய்வு செய்ய சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.


அப்படியே தனது மகனக்கு டியூசன் எடுக்கும் காட்சிகளையும் பார்த்தார். அப்போது தான் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவர் பார்த்த வீடியோவில் அவரது செல்ல மகனை ஆசிரியர் கமல் ஷர்மா, ஒரு சைக்கோவாக மாறி பின்னி பெடலெடுத்து கொண்டிருந்தார்.
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

என்ன காரணத்தினாலோ அடிக்கடி மாணவனை அவர் அடி வெளுத்துள்ளார். வீடியோவில் மாணவனை வலுவாக பிடித்துகொண்டு சரமாரியாக அடிக்கிறார், பிறகு அவனது காதை திருகுகிறார், கைவிரல்களை ரொம்ப கொடூரமாக கொடுமைப்படுத்துகிறார், தலைமுடியை வலிக்கும்படி பிடித்து இழுக்கிறார், பிறகு ஷூவை கழட்டி சரிமாரியாக தாக்குகிறார். பையனை இழுத்து பிடித்து பற்களால் நறநறவென கடிக்கிறார்.


இந்த கோர காட்சிகள் அனைத்து தந்தை அமித்தின் நிறுவனத்தில் வைத்தே நிகழ்ந்துள்ளது. கூப்பிடும் தூரத்தில் அமித் உட்பட நிறுவன ஊழியர்கள் பலர் இருந்தாலும், மிஷின்களின் சத்தத்தால் சைக்கோ வாத்தியாரின் கொடுமைகள் வெளியே தெரியவே இல்லை. 7 வயது பையனும், வாத்தியார் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்றும், வீட்டில் போய் இதை சொன்னால் மறுநாள் வாத்தியார் திரும்பவும் வேலையை பலமாக காட்டுவார் என்று நினைத்தும் பயந்து கொண்டு சொல்லவே இல்லை போலும். காட்சிகளை காவல்துறையினரிடம் அமித் ஒப்படைத்தார். இதனை அடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், ஆசிரியர் கமல் மீது சட்டப்பிரிவு 307 -ன் படி கொலை முயற்சி பதிவு செய்து கைது செய்தனர். 7 வயது சிறுவனை ஆசிரியர் அடிக்கும் மிக கொடூரமான துன்புறுத்தல் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment