வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-11-04
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 11, 2018

தர்மபுரி பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் - நடந்தது என்ன ?தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 

அங்குள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.
இந்த மாணவி கடந்த 5-ந்தேதி தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தார். அன்று இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே உள்ள புதர்கள் அடர்ந்த 

பகுதிக்கு மாணவி சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற அதே ஊரை சேர்ந்த ரமேஷ் (வயது 20), சதீஷ் (22) ஆகிய 2 வாலிபர்கள் மாணவியை
வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அப்போது மாணவி சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து அழுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன்பின்
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

தடுமாறியபடி எழுந்து வீட்டிற்கு வந்த மாணவி தனக்கு நடந்த கொடுமை தொடர்பாக தாயாரிடம் கூறி கதறி அழுதார். இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீஸ்
நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து அந்த மாணவிக்கு அரூர் மற்றும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த மாணவி தர்மபுரி பகுதியில் உள்ள
ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும்
சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில்,  தர்மபுரியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு காயமடைந்த மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள 

திமுக தலைவர் ஸ்டாலின், 

தர்மபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம்
அடைந்து வருவது பெரும்வேதனை!  இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்! பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்
என்பது இதுதானோ? என பதிவிட்டுள்ளார்.
தர்மபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து வருவது பெரும்வேதனை!
இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்!


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

7 வயது சிறுமியை நாசப்படுத்திய அதிமுக பிரமுகர் - இபிஎஸ், ஓபிஎஸ் செஞ்ச வேலய பாருங்க...7 வயது சிறுமியை நாசப்படுத்திய அதிமுக பிரமுகரை கட்சியை விட்டு நீக்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் உத்தரவிட்டுள்ளனர். திருச்சி ஆழ்வார்தோப்பு காயிதே மில்லத் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் தாளாளராக இருப்பவர் மீரான் மைதீன். இவருக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் பள்ளியின் செயலாளர் சலீமை தாளாளர் பொறுப்பில் அமர வைத்திருந்தார். 50 வயதாகும் சலீம், 49 ஏ வட்ட அதிமுக செயலாளராகவும் உள்ளார்.


இவர் சமீபத்தில் 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவியை மடியில் உட்கார வைத்து அசிங்கமாக நடந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து விரைந்து வந்த பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் சலீமை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சலீமை கைது செய்தார். 
 
இந்த சம்பவம் ஆழ்வார்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியை விட்டு நீக்கம் இந்த நிலையில், தற்போது சலீமை கட்சியை விட்டு நீக்கியுள்ளது அதிமுக. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும்.
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருச்சி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தில்லைநகர் பகுதி 49-ஏ வட்ட செயலாளர் முகமதுசலீம் (எ) செக்கடி சலீம், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பயமுறுத்தும் கஜா.. மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அரசு அறிவுறுத்தல்!கஜா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது. 

கஜா புயல் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

வரும் 14ம் தேதி மாலையில் இருந்து 16ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுக்க கடுமையான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புயல் உள்ளது. 110 கிலோமீட்டர் வேகத்தில் இந்த புயல் சென்னையை கடக்க வாய்ப்புள்ளது. 
 
இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கனமழையை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான மீட்பு சாதனங்கள், பொருட்கள், மருந்து பொருட்களை தயார் நிலையில் வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு படையும் தயார் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


நான் சில பெண்களுடன் டேட்டிங் சென்றிருக்கிறேன் அதுவெலாம் மீடூ இல்லை- நடிகர் விஷால்!
பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் பெண்கள் பாலியல் ரீதியாக வேட்டையாடப்படுவதாக சமீப காலங்களில் புகார்கள் அதிகரித்துள்ளன.

மீடூ இயக்கத்தின் மூலம், பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இது குறித்து பேசியுள்ள விஷால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எந்த துறையாக இருந்தாலும், நடிகைகளுக்கு ஏதுவானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். பயத்தினால் வேலை வாய்ப்பை இழப்பது நிறுத்தப்பட வேண்டும். அதேபோல் வாய்ப்புக்காக பெண்களை பணிய வைப்பது தடுக்கப்பட வேண்டும். இதை தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைத்துறையும் உறுதிசெய்ய வேண்டும் என்றார்.
 
பேட்ட நடிகர் மீது பாலியல் புகார்... நடிகருக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய இந்தி நடிகை! பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டுமென நினைக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு நிச்சயமாக செய்ய வேண்டும். என்னுடைய சண்டக்கோழி 2 திரைப்படத்தில் இருந்த இரண்டு கதாநாயகிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யபட்டது. என்னுடைய முதல் படத்திலும் நான் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தேன் என்றார். மேலும், குற்றவாலிகளை அடையாளம் காட்டுவதற்காக தொடங்கப்பட்ட மீடூ இயக்கம் சிலரின் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. காலம் தாழ்த்துதல், வாய்ப்பு தருவதாக உறுதியளித்துவிட்டு அது நடக்காமல் போனால் பழிவாங்குவதற்காக மீடூவை ஆயுதமாக எடுக்கும் நிலையும் உள்ளது. அது நிறுத்தப்பட வேண்டும். மனம் ஒத்து பழகுவதற்கும் ஒருவரை தவறாக உபயோகிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நானும் சில பெண்களுடன் டேட்டிங் சென்றிருக்கிறேன், அதனால் அவர்களை தவறாக பயன்படுத்தினேன் என்று அர்த்தமில்லை என்றார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


கலிபோர்னியா காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வுஅமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்து உள்ளது.


அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் வட பகுதியில் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கே கடந்த 8ந்தேதி முதல் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. 50 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் சில மணி நேரத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்துவிட்டது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இந்த தீயில் சிக்கி 6 ஆயிரத்து 700க்கும் மேலான வீடுகள், வணிக நிறுவனங்கள் எரிந்து உருக்குலைந்து போய்விட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு போய் விட்டனர்.

இந்த காட்டுத்தீயில் மாட்டிக்கொண்ட 9 பேர் பலியாகினர் என முதற்கட்ட தகவல் வெளியானது. அவர்களில் 5 பேர் தங்கள் கார்களின் அருகிலும், 3 பேர் வீடுகளுக்கு வெளியேயும், ஒருவர் வீட்டுக்குள்ளும் எரிந்து கரிக்கட்டைகள் போல கிடந்ததாக பட்டி கவுண்டிஷெரீப் கோரி ஹோனியா கூறினார்.

இந்நிலையில், இந்த பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.  இது உயர கூடும்.  காணாமல் போன 35 பேரை தேடும் பணியும் நடந்து வருகிறது.  கலிபோர்னியா வரலாற்றில் மிக பெரிய அழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ இது என ஹோனியா கூறியுள்ளார்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts