வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-11-18
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 26, 2018

இறந்த உடலை ஏன் இரவில் (Postmortem) போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லை HL Postmortemஇறந்த உடலை ஏன் இரவில் (Postmortem) போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்பிற செய்திகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்


இறந்த உடலை ஏன் இரவில் (Postmortem) போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லைPostmortem என்பது தமிழில் உடற்கூறு ஆய்வு என்று சொல்லக்கூடிய ஒரு உடல் பரிசோதனை அறுவை சிகிக்சை ஆகும். இறந்துபோன ஒருவரின் உடல் பரிசோதனை என்பது அவர் உண்மையிலே எதனால் இறந்தார் எப்படி இறந்தார் என்பதை கண்டுபிடிக்கவே இந்த உடற்கூறு (Postmortem) ஆய்வு செய்யப்படுகிறது. Postmortem இறந்த 6 முதல் 10 மணி நேரத்துக்குள் பண்ணப்படுகிறது.


உடல்பரிசோதனைக்கு முன்பு உறவினரிடம் இறந்த உடல் பற்றிய பரிசோதனை தெரிவித்துவிடுவார்கள். நீங்கள் பல இடங்களில் பார்த்து இருக்கலாம் மருத்துவர்கள் இரவில் postmortem செய்வதில்லை அது ஏன் என்பது பற்றி கீழே பார்க்கலாம்.


இரவு நேரத்தில் செய்யப்படும் உடற்கூறு ஆவின் போது அங்கு உள்ள விளக்குகள் உடலில் உள்ள காயத்தினை வேறுவிதமாக கலரில் காமிப்பதால் பாரென்சிக் ஆயில் சரியான ஒரு அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க முடியாது என்பதாலும்.
பாரன்சிக் பற்றிய உண்மையான கற்றல் மாணவர்களுக்கு சரியான ஒரு விளக்கமாக இல்லாமல் இருப்பதாலும். இரவில் உடற்கூறு ஆவினை செய்வதை தவிர்க்கின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Sunday, November 25, 2018

அஜித் குமார் (நடிகர்) பற்றி என்ன தெரியும் உங்களுக்கு.? - Thala Ajith

 

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள்.


தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார்.


மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும்’, இரண்டு முறை ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும்’, மூன்று முறை ‘விஜய் விருதுகளையும்’, இரண்டு முறை ‘தமிழ்நாடு மாநில அரசு விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரு கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார். இத்தகைய சிறப்புமிக்க ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜீத் குமார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்த் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

பிறப்பு: மே 11971
பிறப்பிடம்: ஹைதராபாத்,ஆந்திர பிரதேசம், இந்தியா
பணி: நடிகர், கார் பந்தய வீரர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
அஜீத் குமார் அவர்கள், இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது அண்ணனான அனூப் குமார் நியூயார்க்கில் பங்குத்தரகராகவும், அவரது தம்பியான அணில் குமார் சியாட்டலில் பணிபுரிகிறார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
என்னதான் பாலக்காடு வழி தந்தைக்கும், சிந்தி தாய்க்கும் மகனாக, ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும், அஜீத் குமார் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் வளர்ந்தார். சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் இருக்கும் ஆசான் மெமோரியல் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர், படிப்பின் மீது பற்றற்றவராகவே காணப்பட்டார். இதனால், 1986ல் தனது உயர்நிலைக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே, பெற்றோர்களின் விருப்பத்தையும் எதிர்த்துத் தனது பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்.

ஆரம்பகாலப் பணிகள்
தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே கைவிட்ட அவர், ஒரு இரு சக்கர பைக் மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார். பைக், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டிய அவர், தானாகவே அவற்றை ஓட்ட கற்றுக்கொண்டு, அதற்கான உரிமத்தையும் பெற்றார். பைக் பந்தயம் தான் தனது தொழில் பாதை என்று தேர்ந்தெடுத்த அவர், அதில் கலந்து கொள்ளப் பணம் வேண்டுமென்பதால், அவ்வப்போது, சிறு சிறு பத்திரிக்கை விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். பைக் பந்தயத்தின் போது ஏற்பட்ட காயத்தினால், அவரைப் பல வணிக முகவர்கள் அச்சு ஊடகங்களின் விளம்பரங்களில் நடிக்க வைக்க அவரைத் தூண்டினர். இதனால், அவருக்குப் பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது. ‘பந்தயமா? சினிமாவா?’ என்று வந்த போது, அவர் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தினால், சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

திரையுலக வாழ்க்கை
1991ல், தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான அஜீத் குமார் அவர்கள், அப்படத்தின் இயக்குனர் மரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின்னர், ஓர் ஆண்டுகள் கழித்து, 1992ல் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும், அப்படம் அவருக்கு ‘சிறந்த புதுமுகத்திற்கான விருதைப்’ பெற்றுத்தந்தது. அதே ஆண்டில், செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவே, தமிழ்த் திரையுலகில் அவரது முதல் படமாகும். இதைத் தொடர்ந்து, அவர், ‘பாசமலர்கள்’ (1994), ‘பவித்ரா’ (1994), ‘ராஜாவின் பார்வையிலே’ (1995), ‘ஆசை’ (1995) போன்ற படங்களில் நடித்தார். இதில், 1995ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்த் திரையுலகில், ‘வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத் தந்தது.

தனது இயல்பான மற்றும் இயற்கையான நடிப்பில் ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற அஜீத் குமார் அவர்கள், தொடர்ந்து ‘வான்மதி’ (1996), ‘கல்லூரி வாசல்’ (1996), ‘மைனர் மாப்பிள்ளை’ (1996), ‘காதல் கோட்டை’ (1996), ‘நேசம்’ (1997), ‘ராசி’ (1997), ‘உல்லாசம்’ (1997), ‘பகைவன்’ (1997), ‘ரெட்டை ஜடை வயசு’ (1997), ‘காதல் மன்னன்’ (1998), ‘அவள் வருவாளா’ (1998), ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ (கௌரவ வேடம்) (1998), ‘உயிரோடு உயிராக’ (1998), ‘தொடரும்’ (1999), ‘உன்னை தேடி’ (1999), ‘வாலி’ (1999), ‘ஆனந்த பூங்காற்றே’ (1999), ‘நீ வருவாய் என’ (கௌரவ வேடம்) (1999), ‘அமர்க்களம்’ (1999), ‘முகவரி’ (2000), ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ (2000), ‘உன்னை கொடு என்னை தருவேன்’ (2000), ‘தீனா’ (2001), ‘சிட்டிசன்’ (2001), ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001), ‘அசோகா’ (கௌரவ வேடம்) (2001), ‘ரெட்’ (2002), ‘ராஜா’ (2002), ‘வில்லன்’ (2002), ‘என்னை தாலாட்ட வருவாளா’ (கௌரவ வேடம்) (2003), ‘ஆஞ்சநேயா’ (2003), ‘ஜனா’ (2004), ‘அட்டகாசம்’ (2004), ‘ஜீ’ (2005), ‘பரமசிவன்’ (2006), ‘திருப்பதி’ (2006), ‘வரலாறு’ (2006), ‘ஆழ்வார்’ (2007), ‘கிரீடம்’ (2007), ‘பில்லா 2007’ (2007), ‘ஏகன்’ (2008), ‘அசல்’ (2010), ‘மங்காத்தா’ (2011), ‘பில்லா 2’ (2012), ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ (2012) போன்ற படங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தைத் தமிழ்த் திரையுலகில் தக்கவைத்துக் கொண்டார்.

பந்தய வாழ்க்கை
தனது இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த அவர், மும்பை, சென்னை, தில்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களுள் ஒருவர் என்றும், ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகரென்ற பெருமையைப் பெற்றார். ஜெர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர், 2003 ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இல்லற வாழ்க்கை
1999 ஆம் ஆண்டில், சரணின் ‘அமர்க்களம்’ என்ற படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார். ஷாலினியும் இதற்கு ஒப்புக்கொண்டதால், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2௦௦௦ ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்களது திருமணத்திற்குப் பின்னர், தனது திரையுலக வாழ்வில் இருந்து ஓய்வுபெற்றார் ஷாலினி. அவர்களுக்கு, ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஸ்கா என்ற மகள் பிறந்தாள்.

விருதுகள்
  • 2௦௦1 – தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை ‘பூவெல்லாம் உன் வாசம்’ என்ற படத்திற்காக வென்றார்.
  • 2006 – தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, ‘வரலாறு’ படத்திற்காக வென்றார்.
  • விஜய் விருதுகளை 2௦௦6ல் ‘வரலாறு’, 2011ல் மங்காத்தா படத்திற்காக இரண்டு முறையும் பெற்றார்.
  • சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதை’, 1999ல் ‘வாலி’ படத்திற்காகவும், 2௦௦1ல் ‘சிட்டிசன்’ படத்திற்காகவும் வென்றார்.
  • சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சென்னை டைம்ஸ் விருதை’, ‘மங்காத்தா’ படத்திற்காக 2011 ஆம் ஆண்டில் பெற்றார்.
  • ஃபிலிம்ஃபேர் விருதுகள் 1999ல் ‘வாலி’ படத்திற்காகவும், 2002ல் ‘வில்லன்’ படத்திற்காகவும், 2006ல் ‘வரலாறு’ படத்திற்காகவும், 2௦௦7ல் ‘பில்லா’ படத்திற்காகவும் அவருக்கு வழங்கப்பட்டது.

காலவரிசை
1971: ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், சுப்ரமணியம் என்பவருக்கும், மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார்.
1986: உயர்நிலைக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே, தனது பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்.
1991: தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமானார்.
1992: ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.
1992: செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ என்ற படம் மூலமாகத் தமிழ் திரையுலகில் கால்பதித்தார்.
1999: ‘அமர்க்களம்’ படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார்.
2௦௦௦: இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2௦௦௦ ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர்.
2௦௦1: தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை ‘பூவெல்லாம் உன் வாசம்’ என்ற படத்திற்காக வென்றார்.
2003: ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார்.
2006: தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, ‘வரலாறு’ படத்திற்காக வென்றார்.
2008: ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஸ்கா என்ற மகள் பிறந்தாள்.
2010: ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்டார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


[நாளை விடுமுறை] எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை..? HL 26.118 Leave news


[நாளை விடுமுறை] எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை..?செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்


பிற செய்திகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்[நாளை விடுமுறை] எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை..?கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களில்  சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால்  நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


நாகை, வேதாரண்யம், திருக்குவளை,  கீழ்வேளூர்  தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


ரோஹித், தவண் காட்டடிக்குப் பிறகு ‘கிங் கோலி’, தினேஷ் கார்த்திக் அபார பினிஷிங்: இந்தியா வெற்றி; ஆஸி.க்கு எதிரான டி20 தொடர் சமன் HL Rohit Davan 

ரோஹித், தவண் காட்டடிக்குப் பிறகு ‘கிங் கோலி’, தினேஷ் கார்த்திக் அபார பினிஷிங்: இந்தியா வெற்றி; ஆஸி.க்கு எதிரான டி20 தொடர் சமன் செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்பிற செய்திகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்


ரோஹித், தவண் காட்டடிக்குப் பிறகு ‘கிங் கோலி’, தினேஷ் கார்த்திக் அபார பினிஷிங்: இந்தியா வெற்றி; ஆஸி.க்கு எதிரான டி20 தொடர் சமன்சிட்னியில் நடைபெற்ற 3வதும், கடைசியுமான டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 1-1 என்று சமன் செய்தது,  36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸி.யை மட்டுப்படுத்திய குருணால் பாண்டியா விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

கிங் கோலி மீண்டும் ஒரு முறை முக்கியமான கட்டத்திலிருந்து இலக்கை விரட்டி 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 41 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 22 நாட் அவுட் என்று திகழ்ந்தார், இருவரும் சேர்ந்து 6.3 ஒவர்களில் 60 ரன்களைச் சேர்த்து கிரேட் பினிஷிங் செய்தனர். ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுக்க இந்திய அணி 19.4 ஓவர்களில் 168/4 என்று அபார வெற்றி பெற்றது.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

விராட் கொலி டி20 சர்வதேச போட்டிகளில் 14 முறை இலக்கைத் துரத்திய போது நாட் அவுட்டாகத் திகழ்ந்துள்ளார், ஒவ்வொரு முறையும் இந்தியா வென்றுள்ளது.
20வது ஓவரை ஆண்ட்ரூ டை வீச 3-வது பந்தை நேராக ஒரு அரக்க பவுண்டரி அடித்து ஸ்கோரைச் சமன் செய்து கொண்டாடினார், பிறகு மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்து வின்னிங் ஷாட்டை அடித்தார். ஆஸ்திரேலியா ஒரு சிக்சரை கூட அடிக்க முடியாத நிலையில், ரோஹித் சர்மாவும் தவணும் தொடக்கத்தில் சிக்சர்களாக வெளுத்துக் கட்டினர்.


ரோஹித் சர்மா, தவண் அதிரடித் தொடக்கம்:
மிட்செல் ஸ்டார்க்கை மரியாதையுடன் ஆடி முதல் ஓவரில் 3 ரன்களையே எடுத்தனர். ஒரு பந்து யார்க்கராகி ரோஹித் சர்மாவின் மட்டை உள்விளிம்பில் அதிர்ஷ்டவசமாகப் பட்டது, இல்லையெனில் அவர் எல்.பி.ஆகியிருக்க அதிக வாய்ப்பிருந்தது. கூல்ட்டர் நைல், இவர்தான் ரோஹித் சர்மாவை பெரிய மைதானங்களில் காலி செய்வோம் என்றார், ஆனால் சாத்துமுறை நடந்தது. முதலில் லெக் திசையில் வீச ரோஹித் சர்மா அனாயசமாக லெக் பவுண்டரிக்கு அனுப்பினார். ஷிகர் தவண் அதே ஓவரில் ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து கொண்டு ஸ்கொயர் லெக்கில் தூக்கி விட்டு ஒரு பவுண்டரி அடித்தார், 2வது ஓவரில் 9 ரன்கள். அடுத்த மிட்செல் ஸ்டார்க் ஒவரில் தவண் கடைசி பந்தை மிகப்பிரமாதமாக லாங் ஆஃபில் பவுண்டரி விளாசினார். கூல்ட்டர் நைல் 4வது ஓவர் விளாசித் தள்ளப்பட்டது.


இடுப்புயர ஷார்ட் பிட்சை வீச ரோஹித் சர்மா பைன் லெக்கிற்கு தூக்கி சிக்சர் காட்டினார். இதே ஒவரில் ஷிகர் தவண் வேகம் குறைந்த பந்தை ஆன் திசையில் ஸ்லாக் ஸ்வீப் மாதிரி ஆடி சிக்சருக்குத் தூக்கினார். அடுத்து ஒரு கவர் பவுண்டரி. 20 ரன்கள் வந்தது. 5வது ஓவரை ஸ்டாய்னிஸ் மோசமாக வீசினார், அவர் வேகத்துக்கெல்லாம் இந்தப் பிட்சில் ஷார்ட் பிட்ச் பந்துகள் வீசியிருக்கக் கூடாது, இதனால் முதலில் முன் காலிலேயெ ஒரு ஆன் திசை சிக்சரை ரோஹித் விளாச, ஷிகர் தவண் ஒரு சிக்ஸ் 2 பவுண்டரிகளை விளாசினார். ஷார்ட் அண்ட் வைடு பந்துகள் பவுண்டரிக்குப் பறக்க இந்த ஓவரில் 22 ரன்கள் வர 5 ஓவர்கள் முடிவில் 62/0 என்று அதிரடி கண்டது இந்திய அணி. 6வது ஒவரில் ஷிகர் தவண் மிட்செல் ஸ்டார்க்கை ஒரு கிளாசிக் கவர் பவுண்டரி அடித்து அடுத்த வேக யார்க்கரில் எல்.பி.ஆனார். ரிவியூவில் ஆஸ்திரேலியா அவுட் வாங்கியது.  ஷிகர் தவண் 22 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 41 ரன்கள்.


இதற்கு அடுத்த ஓவரில் ஆடம் ஸாம்ப்பா ஒரு அபாரமான பந்தை வீச ரோஹித் சர்மா மட்டையில் பட்டு பவுல்டு ஆனார். 16 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் அவர் 23-ல் வெளியேறினார். 7 ஓவர்களி இந்தியா 67/2 என்று ஆனது.  மீண்டும் கூல்டர் நைலை வீச அழைக்க ராகுல் ஒரு சிக்ஸ் அடித்தார். 11 ரன்கள் வர 8 ஓவர்களில் 78/2 என்ற ரன் எண்ணிக்கையில் கூல்ட்டர் நைல் மட்டும் 3 ஒவர்களில் 40 ரன்கள் விளாசப்பட்டிருந்தார்.
ஆடம் ஸாம்பா விக்கெட் மெய்டனுடன் மிக டைட்டாக வீசினார், ராகுல் 14 ரன்களில் சொதப்பி மேக்ஸ்வெல் பந்தை நேராக லாங் ஆஃபிற்கு அடித்து வெளியேறினார். ரிஷப் பந்த், ஆண்ட்ரூ டை வீசிய வேகம் குறைந்த பவுன்சரை மிக மோசமாக ஆடி விக்கெட் கீப்பர் கேரியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்தியா 14 ஒவர்கள் முடிவில் 109/4, 6 ஓவர்களில் 56 தேவை என்ற நிலையில் விராட் கோலி 25 ரன்களுடனும் கார்த்தி 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஸாம்பாவின் 4வது ஒவரில் 4 ரன்களே வந்த நிலையில் கடைசி 5 ஒவர்களில் 52 ரன்கள் தேவைப்பட்டது. ஸாம்பா மிகப்பிரமாதமாக வீசி 4 ஒவர்கள் 1 மெய்டன் 22ரன்கள் 1 விக்கெட்.


கோலி, கார்த்திக் பினிஷிங்:
16வது ஒவரை ஆண்ட்ரூ டை வீச பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த விராட் கோலி பாயிண்டின் மேல் ஒரு பவுண்டரி அடித்தார், அடுத்த பந்து மேலேறி வந்து லாங் ஆஃபில் ஒரு மிகப்பிரமாதமான சிக்சரை விளாசினார். அந்த ஓவரில் 12 ரன்கள் வந்தன. 17 வது ஒவரில் மேக்ஸ்வெலை மீண்டும் இறங்கி வந்து டீப் மிட்விக்கெடில் கிங் கோலி இன்னொரு அபார சிக்சரை அடித்தார். அந்த ஓவரில் 13 ரன்கள் வர 138/4 என்று இந்தியாவுக்கு 3 ஓவர்களில் 27 என்று இலக்கானது. 18வது ஒவரை ஆண்ட்ரூ டை டைட்டாக வீசினார், ஆனால் ஒரு பந்தை ஷார்ட் பிட்ச் ஆக வீச தினேஷ் கார்த்திக் அடித்த ஆன் திசை சிக்ஸ் பார்வையாளர்கள் பகுதியில் 2வது அடுக்கில் போய் விழுந்தது, மிக முக்கியக் கட்டத்தில் மிக முக்கியமான கார்த்திக் சிக்ஸ் ஆகும் இது.
2 ஒவர்கள் 16 தேவை என்ற நிலையில் 19வது ஒவரை ஸ்டார்க் வீசினார்.


கோலி மிகப்பிரமாதமாக டீப் மிட்விக்கெட்டில் காலி இடத்தில் தட்டி விட்டு 2 ரன்களை ஓடினார், பிறகு கார்த்திக், ஸ்டார்க்கின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான யார்க்கர் முயற்சியை மிக சாமர்த்தியமாக, புத்திகூர்மையுடன் நின்ற இடத்திலிருந்து மட்டையை லேசாக ஆஃப் திசையில் திருப்பி பந்தை தள்ளி விட்டார், பாயிண்டில் ஆள் இல்லை மிகப்பிரமாதமான பிளேஸ்மெண்ட், பவுண்டரி ஆனது. கோலி 34 பந்துகளில் ஏற்கெனவே அரைசதம் எடுத்திருந்தார். கடைசி ஓவரை வீச டை வந்தார், முதல் பந்தில் கோலி பீட்டன், 2வது பந்தில் நோ-ரன், கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டது, ஆனால் 3வது பந்தையும் 4வது பந்தையும் பவுண்டரிக்கு விரட்டிய விராட் கோலி வெற்றி நாயகன் ஆனார். தொடர் நாயகனாக ஷிகர் தவண் தேர்வு செய்யப்பட்டார். 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இந்தியாவினால் தொடரை வெல்ல முடியாமல் போனது. டெஸ்ட்டுக்கு முன்பாக இந்த வெற்றி நிச்சயம் இந்திய வீரர்களுக்கு ஒரு டானிக்காக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Postsகுழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை - HL Child Abuse News

Murder Loan for Bank

குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை

செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்பிற செய்திகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்


குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறைகுழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் படம்-, வீடியோ வைத்திருந்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


நாட்டில், குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்களை, வணிக ரீதியாக சேமிப்பதும், வினியோகிப்பதும் மிகப்பெரிய குற்றம்.இந்த விவகாரத்தில், பிரதமர் அலுவலகம் மிகவும் கவலை அடைந்துள்ளது. இதை ஒழித்துக் கட்ட, கடும் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து, பிரதமர் அலுவலகம் ஆலோசித்து வருகிறது.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!


இந்நிலையில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோவை வைத்திருக்கும் அல்லது சேமித்து வைக்கும் நபர்களுக்கு, 'போக்சோ' சட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கக் கூடிய வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மேலும், இந்த விவகாரத்தில் கைது செய்யப்படும் நபர்களுக்கு, ஜாமின் வழங்கப்பட மாட்டாது. இரண்டாவது முறை இதே குற்றத்தை செய்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்'பில், குழந்தைகள் ஆபாச படங்கள், வீடியோக்கள் வைத்திருந்தால், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.


திருத்தம் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்த மசோதா, மத்திய சட்ட அமைச்சகம், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஒப்பதலுக்காக காத்திருக்கிறது.'இது குறித்து, அடுத்த வாரத்தில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்' என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts