வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2021-03-28
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, April 06, 2021

கடத்தப்பட்ட ஓட்டுப்பெட்டி | அதிமுகவினர் சிக்கினார்கள் | இருசக்கர வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட இ.வி.எம் மிஷன் | VVPAT Machine fruded poll at Velacherry | Vil Ambu News

வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியிலிருந்து அதிமுக-வைச் சார்ந்த நபர்கள் இருசக்கர வாகனம் மூலமாக விவிபேட் இயந்திரத்தினை எடுத்துச் சென்றுள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பிடிபட்ட நபர்களிடம் முழு விசாரணை நடத்தியபின்னரே இவர்களிடம் இந்த இயந்திரம் எப்படி வந்தது என்பதும், இதன்பின் யாரெல்லாம் இருக்கிறார்கள் எனவும் தெரியவரும் என போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதனை பொதுமக்கள் ஏற்காமல் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மறு வாக்குப்பதிவு வேளச்சேரி தொகுதியில் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் மேலோங்கியுள்ளது.

உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரம் | குடிபோதையில் வந்தவர் செய்த வேலையால் வாக்கு பதிவு நிறுத்தம் | Pudukottai Voting Machine Damaged | Vil Ambu News

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வாக்குச்சாவடியில் குடிபோதையில் வந்த நபர் வி.வி.பேட் இயந்திரத்தினை உடைத்துள்ளார். ஆனால் இ.வி.எம் எனப்படும் வாக்களிப்பு இயந்திரத்தினை உடைக்காததால் வாக்களிக்கப்பட்ட ஓட்டுகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் கடைசி நேரத்தில் ஏற்பட்ட இந்த பரபரப்பினால் அந்த வாக்குச்சவாடிக்கு செல்லும் வாக்காளர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் சற்று நேரத்தில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.


ஓட்டு மிஷனோட இங்க ஏன் தூங்கிட்டு இருக்க…? அரசியல்வாதி வீட்டில் தேர்தல் அதிகாரி உறக்கம்…! அதிகாரி சஸ்பெண்ட் | Election Illegal Works at West Bengal | Vil Ambu News

மேற்கு வங்கத்தில், தேர்தல் அதிகாரி ஒருவர் தனது உறவினரான திரினமூல் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் வீட்டில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இரவில் உறங்கினார்.

எனவே அந்த அலுவலரை அதிரடியாக தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

அந்த வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் அதனுடன் இணைந்த விவிபாட் இயந்திரம் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படமாட்டாது என தேர்தல் ஆணையத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

உலுபேரியா உத்தர் என்ற சட்டப்பேரவை தொகுதி தேர்தல் அலுவலரான தபன் சர்க்கார் என்ற அந்த நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தல் பார்வையாளரின் கஸ்டடியில் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.


Monday, April 05, 2021

துட்டு கொடுத்தா தான் ஓட்டு போடுவோம்... ஒழுங்கா கொடுங்க... அதிமுகவுக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்! நடுங்கிப்போன அதிகாரிகள் | Namakkal Election News | Vil Ambu News

தமிழக அரசியலில் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஒரு சம்பவம். அதிமுக சரியாக ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி சாலை மறியல் செய்து பரபரப்பை கிளப்பி உள்ளனர் பொதுமக்கள். 

தமிழகத்தில் இதுவரை 420 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து முறைகேடுகளை தடுப்பதற்கு முயற்சி செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் ஒருபக்கம் கூறிவரும் நிலையில், இங்கு பொதுமக்களே பணம் கேட்டு சாலை மறியல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் என்ற பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிமுக சார்பில் ஓட்டுக்கு அங்கு பணம் கொடுக்கப்படுகிறதாம். ஆனால் ஒரு சிலருக்கு கொடுக்கப்பட்டு ஒரு சிலருக்கு அது

வந்துச்சி பாருங்க கோபம் 
இதனால் "கடும் கோபமடைந்து " கொதித்துப் போயினர் ஊர்மக்கள். டூவீலரை எடுத்துக்கொண்டு நேராக ரோட்டுக்கு குறுக்கே நிப்பாட்டி ஒழுங்காக பணத்தை தருகிறீர்களா இல்லையா என்று கோஷம் போட ஆரம்பித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பணத்தை கொடுங்க 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை கலைந்து போக சொல்லி அறிவுறுத்தினர். ஆனால், பணம் கிடைக்கும் என்று உறுதிமொழி தந்தால்தான் கலைந்து போகும் என்று ஊர்மக்கள் விடாப்பிடியாக சொல்ல.. போலீஸார் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

குற்றச் செயல் 
இதையடுத்து பொது போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்ததற்காக மூன்றுபேரை காவல் நிலையம் அழைத்து சென்றனர் போலீசார். இதன் பிறகு ஓரளவு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்று தெரிந்திருந்தும் பொது வெளியில் வந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி பணம் கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வாழ்வியல் நடைமுறை 
தேர்தலில் பணம் பெற்றுக் கொண்டு ஓட்டு போடுவது என்பது ஒரு வாழ்வியல் நடைமுறையாக மக்களின் மனதில் மாறிப் போய் விட்டது இந்த அதிர்ச்சி சம்பவம் உறுதி செய்கிறது. இப்படியான சூழ்நிலை நிலவினால், சுயேச்சைகளும், புதிதாக வந்த கட்சிகளும் எப்படி மக்களின் வாக்குகளை பெற முடியும். இது எப்படி சரியான போட்டியாக இருக்க முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன.

Sunday, April 04, 2021

"புதிய துறை".. முதல்நாள் முதல் கையெழுத்து.. பெரிய திட்டத்தை கையில் எடுக்கும் ஸ்டாலின்.. செம குறி! | DMK First Signature after winning Election | Vil Ambu News

தமிழக சட்டசபை தேர்தலில் வென்று திமுக ஆட்சிக்கு வந்தால் முதல்நாள் முதல் கையெழுத்து என்ன என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் டாப் தலைவர்கள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை தமிழக சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக வெல்ல போகிறோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். 

தேர்தல் கணிப்புகள் எல்லாம் திமுகவிற்கு மாபெரும் வெற்றி என்று ஒரு பக்கம் கூறி வருகிறது. இன்னொரு பக்கம் திமுக தலைமைக்கு சென்று பல்வேறு இன்டர்னல் சர்வே தொடங்கி ரிப்போர்ட்டுகள் வரை எல்லாமே திமுக கண்டிப்பாக பெரிய வெற்றியை இந்த முறை பெறும், 150+ தொகுதிகளை கண்டிப்பாக வெல்லும் என்றே கூறுகின்றன.

வெற்றி 
திமுக தலைவர் ஸ்டாலினோ எப்படியாவது 200+ தொகுதிகளில் வென்று 1996ல் வென்றது போல புதிய புரட்சியை செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறார். திமுகவின் வெற்றியை கட்சியின் டாப் தலைவர்கள் நம்புவதால்தான் இப்போதே அமைச்சரவை ஒதுக்கீடு குறித்த திட்டங்களை வகுக்க தொடங்கி விட்டனர். தேர்தலுக்கு பின் யாருக்கு அமைச்சரவை பொறுப்புகளை கொடுக்கலாம் என்று ஆலோசிக்க தொடங்கி விட்டனராம்.

ஆலோசனை 
கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த அமைச்சரவை பொறுப்புகளை கொடுக்கலாம், கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு அமைச்சரவையில் என்ன இடங்களை கொடுக்கலாம் என்று இப்போதே திமுக தலைமை லிஸ்ட் ஒன்றை ரெடி செய்து வருவதாக கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு கட்சியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத பல நிர்வாகிகளுக்கும் சிறப்பு பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாம்.

பொறுப்புகள் 
அதிருப்தியை சமாளிக்கும் வகையில் எல்லோருக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக ஸ்டாலின் லிஸ்ட் ஒன்றை ரெடி செய்து கொண்டு இருக்கிறாராம் . இந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் முக்கியமான சில திட்டங்களை அனுமதித்து ஸ்டாலின் முதல் கையெழுத்தை போடுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தினத்தந்தி செய்தி நிறுவனத்திடம் ஸ்டாலினே வெளிப்படையாக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் பேச்சு 
அதன்படி "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற சுற்றுப்பயணத்தில் ஸ்டாலின் வாங்கிய மனுக்கள் குறித்து தீர்வு காண்பதற்காக தனியாக ஒரு துறையை உருவாக்குவதே தன்னுடைய முதல் கையெழுத்தாக இருக்கும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுக்களில் இருக்கும் புகார்கள் அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில் தனி துறையை உருவாக்கி... 100 நாட்களில் அதை தீர்ப்பதே தன்னுடைடைய முதல் கையெழுத்து என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

வேறு சில திட்டம் 
அதோடு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 கொடுப்பது, கொரோனா நிதி வழங்குவது உள்ளிட்ட அறிவிப்புகளையும் முதல் நாள் கையெழுத்தில் ஸ்டாலின் வெளியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. சில பெரிய அறிவிப்புகள் வரும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கையெழுத்து 
இது தொடர்பாக கட்சி வட்டாரத்தில் விசாரித்த போது அவர்களும் முதல் நாள் கையெழுத்தில் பல முக்கிய அறிவிப்புகளுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்படும்.. முதல் சட்டசபை கூட்டத்தில் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கையாக கூறுகிறார்கள்!

Wednesday, March 31, 2021

[மகிழ்ச்சி செய்தி] | பான் ஆதார் இணைப்பு கடைசி தேதி மாற்றம் | விவரம் உள்ளே..! | PAN Aadhar Card Last Date Extend | Vil Ambu News

பான் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணினை இணைக்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசும் வருமான வரித்துறையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், கடந்த 2 ஆண்டுகளாக பான் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணினை இணைக்க வேண்டிதன் கடைசி தேதிகளை அவ்வப்போது அறிவித்துவந்த நிலையில் மார்ச்,31,2021 தான் கடைசி தேதி இறுதியான கடைசி தேதி எனவும், இந்த தேதிக்குள் இணைக்காவிடில் ரூ.10,000/- அபராதம் செலுத்த வேண்டும் எனவும், கடந்த இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட அறிவிப்பன்படி ரூ.1,000/- அபராதம் எனவும், அதுமட்டுமல்லாமல் பான் கார்டு செயலிழக்கச் செய்யப்படும் எனவும் அறிவிப்பு வெளியானது.

இதனால் பொதுமக்கள் அனைவரும் இணையம் வழியாக பான் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணினை இணைக்கும் பணியினை மேற்கொண்டனர். இதில் உள்ள சிக்கல் என்னவெனில் ஆதார் அட்டையில் உள்ள விவரப்படி பான் கார்டிலும் பெயர் மற்றும் பிறந்த தேதி கட்டாயம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் பலரது பான் கார்டுகளின் தவறான விவரம் உள்ளதால் அதனை உடனே சரிசெய்ய இயலாது. 

மேலும், கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட இன்று(31.03.2021) அனைத்து தரப்பு மக்களும் பான் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணினை இணைக்க அதிகாரப்பூர்வ வலைதளத்தினை நாடியதால் சர்வர் முடங்கியது.

வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பான் ஆதார் இணைப்பு லிங்க் காணமால் போனதால் பொதுமக்கள் அதிர்ச்சியுற்ற நிலையில் தற்போது அதே வலைதளத்தில் ஜீன் 30,2021 (30.06.2021) வரை பான் ஆதார் இணைப்பினை மேற்கொள்ளலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய அரசு மற்றும் வருமான வரித்துறையினரின் மேல் கடும் விரக்தியில் இருந்த பாமரமக்களில் பலர் ஒன்றும் புரியாமல் தத்தளித்த நேரத்தில் இந்த செய்தி அவர்களின் மனதில் பெரு மகிழ்ச்சியை உண்டாக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும், அரசின் இதுபோன்ற அதிர்ச்சி தகவல்களை மாற்றிக் கொண்டு கிராமப்புற மக்களும், வயதானவர்களும் எளிதில் பயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் எளிதில் செயல்படுத்தப்படும் வகையில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.