Pages
மாணவியை திருநாவுக்கரசு, சபரிராஜன் கும்பல் வீடியோ எடுத்தது உள்ளிட்ட பிரச்சினைகள் மாணவியின் சகோதரர் தரப்பில் பேசப்பட்டன. பதிலுக்கு, திருநாவுக்கரசு உள்ளிட்ட நான்கு பேரைத் தூக்கிச் சென்று உதைத்ததும், அவர்களின் செல்போன்களைப் பிடுங்கிக்கொண்டதும் எதிர்த் தரப்பினரின் பேசுபொருளானது.
இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுத்தாலும் அது சிக்கலாகும் என்பது தெளிவாகத் தெரிந்தது. இதனாலேயே, இதை அப்படியே கோவை மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்க முடிவு செய்தார் பொள்ளாச்சி ஜெயராமன். “ரெண்டு பேருமே வேண்டிய ஆளுங்க, யாருக்கும் பாதகம் வராம முடிச்சுடணும்” என்று அவரது சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இரு தரப்பினரும் எஸ்பி பாண்டியராஜனை அணுகினர். அவர் மூலமாக, டிஎஸ்பி ஜெயராமனிடம் பேசினர். இதன் பிறகு, மாணவியின் சகோதரரிடமிருந்து செல்போன்களை வாங்கினர் போலீசார். “இதில் இருக்கும் வீடியோக்கள் வேறு யாருக்கும் அனுப்பப்படவில்லையே, அப்படியிருந்தால் அதைத் தெரிவித்துவிடுங்கள்.
பெண்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், சிறு தவறுகூட விபரீதத்தை விளைவிக்கும்” என்று அவருடன் வந்தவர்களை எச்சரித்துள்ளனர் போலீஸ் அதிகாரிகள். வீடியோ எதுவும் காப்பி செய்யப்படவில்லை என்று அவர்கள் உறுதியளித்த பிறகு, திருநாவுக்கரசு கொடுத்த கடனுக்கும் கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்றதற்கும் சரியாப் போச்சு என்று கணக்கைச் சமன் செய்துள்ளார் டிஎஸ்பி.
இரு தரப்பிலும் அதிருப்தியும் கோபமும் மிச்சமிருந்தாலும், வேறு எந்த சிக்கலும் நேரக் கூடாது என்று அப்படியே விட்டுவிட்டனர். ஆனால், திடீரென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
No comments:
Post a Comment