Pages
இளம்பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று அடித்து மிரட்டி அவரை பலாத்காரம் செய்துதோடு, அதை வீடியோ எடுத்து மிரட்டி பலரையும் கற்பழிக்க வைத்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதன் அதிர்ச்சி அடங்குவதற்குள் நாகை மாவட்டத்திலும் இதேபோல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளிப்பாளையம் பேட்டையை சேர்ந்த கார் ஓட்டுனர் சுந்தர் (23). இவர் மீது சமீபத்தில் ஒரு இளம்பெண் புகார் அளித்தார்.
செல்போன் கடையில் பணிபுரியும் அப்பெண்ணை காதலிப்பதாக நடித்துள்ளார்.
அதன்பின், காரைக்கால் பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறி விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். அதன்பின் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அதை வீடியோவும் எடுத்துள்ளார்.
அதன் பின் வீடியோவை வைத்து மிரட்டி வந்துள்ளார். இதனால், அப்பெண் இவரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். எனவே, சுந்தர் அப்பெண்ணுடன் இருந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். எனவே, அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சுந்தரின் செல்போனை ஆய்வு செய்ததில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். எனவே, பல பெண்களை ஏமாற்றி மிரட்டி வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். பொள்ளாச்சி சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் அதுபோல் ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment