Pages
கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை சரமாரியாகக் குத்திக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த 15-ஆம் தேதி மம்தா என்ற பெண் தனது கணவனை 3 நாட்களாக காணவில்லை என பாய்சர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அவரது கணவரான அனில் குமார் ராவத்தை தேடி வந்தனர்.
இந்நிலையில் மறுநாள் காவல் துறையினரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர் சிவாஜி நகர் என்ற இடத்தில் புதர்களுக்கு நடுவே ஒரு சடலத்தை கண்டதாக தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாமலும், உடல் முழுவதும் காயங்களுடனும் புதர்களுக்கிடையே கிடந்த உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடற்கூறு பரிசோதனையில் அது அனில் குமாருடையது எனத் தெரியவந்தது. மேலும் அனில் குமார் வலது கண், தோள்கள், வயிறு, முகம், உட்பட உடல் முழுவதும் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டதும் தெரியவந்தது. கொலை தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடர்ந்த போது அனில் குமாரின மனைவி மம்தாவுக்கும் அவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்த தூரத்து உறவினரான ராம்பிரகாஷ் ராவத்துக்கு தவறான தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
அனில் குமார் காணாமல் போன அன்று ராம்பிரகாஷும் மாயமானதும் தெரிய வந்தது. உயிரிழந்த அனில்குமாரின் ரத்த மாதிரிகள் தடயவியல் துறைக்கு அனுப்பப் பட்ட போது கொலையில் ராம்பிரகாஷின் தொடர்பு குறித்த ஆதாரங்கள் அம்பலமாயின. மம்தாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாயின. ராம்பிரகாஷுடனான தவறான தொடர்பைக் கண்டித்து அனில் குமார் தன்னுடன் சண்டையிட்டதாகவும் அப்போது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் மம்தா ஒப்புக்கொண்டார்.
தங்கள் இருவருக்கும் வாக்குவாதம் சூடுபிடித்தபோது குறுக்கே பாய்ந்த ராம்பிரகாஷ் கூர்மையான ஒரு பொருளால் அனில்குமாரை சரமாரியாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகவும், அதனைத் தொடர்ந்து இருவரும் அனில் குமாரின் உடலை எடுத்துச் சென்று புதரில் வீசியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து மம்தா, ராம்பிரகாஷ் ஆகியோர் மீது போலீசார் கொடூரக் கொலை, தடயங்களை மறைத்தல், பொய்த் தகவல்களைக் கொடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கொலையும் செய்வாள் பத்தினி என்பது பழைய கதை. இது காமவெறியில் பத்தினி பாதகியானதால் நேர்ந்த படுகொலை.
No comments:
Post a Comment