தமிழகத்தில் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய முயன்ற போலி மருத்துவ தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் அருகில் காவியன் ஜெனரல் ஸ்டோர் நடத்தி வரும் கவிதா மற்றும் இவரது கணவர் பிரபு ஆகியோர் மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். பி.ஏ. படித்த பிரபுவும், பத்தாம் வகுப்பு படித்த கவிதாவும் இவ்வாறு மருத்துவம் பார்த்ததற்காக பலமுறை கைதாகி உள்ளனர்.
இந்நிலையில், லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்ற கர்ப்பிணிப் பெண்ணின் கருவில் இருக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால் அதனை கலைக்க வேண்டும் என்று கவிதாவிடம் வந்துள்ளனர். இதுகுறித்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடி ஆய்வு நடத்திய பொலிசார் கவிதா மற்றும் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் காவல் கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கருக்கலைப்பு செய்யும் கருவிகள், போலி மருந்துகள் மற்றும் ஆவணங்கள் சிக்கியதை அடுத்து கடைக்கு சீல் வைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த இடத்தில் கல்லூரிப் பெண்கள் உள்ளிட்ட பெண்கள் தினந்தோறும் நாள் ஒன்றுக்கு 3 பேர் வீதம் வந்து செல்வதாகவும், சுமார் 3 முதல் 4 ஆயிரம் கருக்கலைப்புகள் நடந்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த அபாயகரமான கருக்கலைப்புகள் தொடராமல் இருக்க மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்ற கர்ப்பிணிப் பெண்ணின் கருவில் இருக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால் அதனை கலைக்க வேண்டும் என்று கவிதாவிடம் வந்துள்ளனர். இதுகுறித்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடி ஆய்வு நடத்திய பொலிசார் கவிதா மற்றும் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த அபாயகரமான கருக்கலைப்புகள் தொடராமல் இருக்க மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment