ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணிடம் இருந்து ஆண் ஒருவர் பணம் மற்றும் நகைகளை திருடிய சம்பவமானது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தெற்கு மும்பையில் வசித்து வருகிறார். இவருடைய வயது 46. இவருக்கு சமூக வலைத்தளத்தின் மூலமாக முகம் தெரியாத நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடைய பெயர் அலி அசிஸ் மத்னி. தொடக்கத்தில் இனிமையாக பேசிய அவர், பின்னர் அந்தரங்கங்களை பற்றி பேசியுள்ளார்.அந்தப் பெண்ணுக்கு இவர் மீது நம்பிக்கையிருந்ததால், தன் அந்தரங்கள் பற்றியும் கூறியுள்ளார். திடீரென்று பல நாட்கள் கழித்து மத்னி அந்தப் பெண்ணை கடுமையாக மிரட்ட தொடங்கியுள்ளார்.
தனக்கு பணம் மற்றும் நகைகள் வேண்டுமென்று பெண்ணை மிரட்டியுள்ளார். இல்லையெனில் உரையாடல்களை கணவரிடம் தெரிவித்துவிடுவதாக கூறியுள்ளார்.இதனால் பயந்த அப்பெண்மணி பணம் மற்றும் நகைகளை கொடுக்க தொடங்கியுள்ளார். மேலும் மத்னி பலமுறை அப்பெண்ணிடமிருந்து நகை மற்றும் பணத்தை சுருட்டியுள்ளார். 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் 10 லட்ச ரூபாய் ரொக்கத்தையும் அவரிடமிருந்து பறித்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த அப்பெண் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, தான் செய்த தவறை தன் கணவனிடம் வெளிப்படையாக கூறியுள்ளார். கணவன் தன் மனைவியை மன்னித்தார். பின்னர் இருவரும் பாந்திரா பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று மத்னி மீது புகாரளித்தனர். பாதிக்கப்பட்ட பெண் இருமுறை தற்கொலை செய்துகொள்ளவும் முயன்றுள்ளார்.
இதனையெல்லாம் அறிந்த மத்னி, முன்ஜாமீன் பெற நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க அவரிடமிருந்து 64 லட்சம் ரூபாய் பெற்றுள்ளது. பாந்த்ரா பகுதியில் காவல் துறையினர் வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது மும்பை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
சமூக சீரழிவு செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment