வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Cheating News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Cheating News. Show all posts
Showing posts with label Cheating News. Show all posts

Thursday, November 08, 2018

லட்சம் பேரை ஏமாற்றி ரூ.500 கோடி அபேஸ், காய்கறி வியாபாரி Nowhera Shaikh எப்படிச் செய்தார் தெரியுமா.?


Nowhera Shaikh, ஒரு ஏழைத் தாயின் மகள்... அன்றாடப் பிழைப்புக்கு திருப்பதியில் காய்கறிகளை வியாபாரம் செய்தவர். அன்று Nowhera Shaikh-கிடம் காய்கறி வாங்கியவர்களுக்கு, அவள் நாளை 17 நிறுவனங்களுக்கு முதலாளி ஆவார், டேர்ன் ஓவர் மட்டும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் போகும், 2 லட்சம் பேருக்கு மேல் இவருடைய கையெழுத்தில் தான் காசு போகும் என்று.

படிப்பு
 காய்கறி வியாபாரத்துக்கு இடையில் எப்படியோ அடித்துப் பிடித்து ஒரு பட்டப் படைப்பை முடித்தார். பிசினஸ் நிர்வாகத்தில் அவர் விரும்பியது போலவே ஒரு பட்டப் படிப்பு. நான் மட்டும் படித்தால் போதாது... என்னை போன்ற இஸ்லாமிய சிறுமிகளும் படிக்க வேண்டும் "எனவே படித்து முடித்த கையோடு பெண்களுக்காக ஒரு மதர்ஸா பள்ளி". (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
என்ன பிசினஸ்
 பட்டப் படிப்பு முடித்து விட்டும் கொஞ்ச நாள் காய்கறி வியாபரங்களை கவனித்துக் கொண்டு தான் இருந்தார். படித்தாகி விட்டது இனியும் நம்மால் இந்த காய்கறி வியாபாரத்தை செய்து கொண்டிருக்க முடியாது. எதாவது செய்ய வேண்டும், அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் சரியாக வேண்டும். என்ன செய்யலாம். நேர்மையாக ஹோட்டல், மளிகை, பலசரகு என்று பல்வேறு தொழில்களை செய்து பார்த்தார்.


ஓவர் ரிஸ்க் 
எதுவும் நம் Nowhera Shaikh-க்கு ஒத்து வரவில்லை. காரணம் கேட்டால் ரிஸ்க் என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார். "இந்த ஹோட்டல் வியாபாரத்த நம்பி சாப்பாட்ட செஞ்சி வெச்சா சில நேரங்கள்ள ஆளே வர்றது இல்ல. ஆக சமைத்து வெச்சது எல்லாமே வீணா போய்றுது. அது நாள் வரை ஒத்த ஒத்த ரூபாயா சேத்து வெச்சித காலியாயிடுது. பல சரக்குக்கு மார்ஜின் ரொம்ப கம்மியா இருக்கு. மளிகை நாள் முழுக்க வேலை இருக்கு" என்று எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருந்தது.


ஷேர் மார்க்கெட்
 Nowhera Shaikh படித்தது பிபிஏ என்பதால் கொஞ்சம் பங்குச் சந்தைகளில் ஈடுபாடு இருந்தது, ஆனால் திறமை இல்லை. பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைக் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டிருக்கும் போது தான் ஒரு அசாத்திய யோசனை வருகிறது.


கோடீஸ்வரர் ஆகலாம்
 முதலீட்டு நிறுவனத்தை நடத்தலாம். அட ஆமாங்க நம்ம Nowhera Shaikh ஒரு நல்ல நாள் பாத்து அல்லா அருளால் கடை நல்லா வர வேண்டும் என வேண்டி தன்னுடைய முதல் சின்ன நிறுவனத்தைத் தொடங்கினார். கொஞ்ச நாள் நேர்மையாக கடை ஓடியது. கொடுத்த காசுக்கு ஏதோ வருமானத்தை ஆண்டுக்கு வழங்கி வந்தார். ஊரில் பெரிய மதிப்பு இல்லை.


கறுப்புப் பணத் தொடர்பு 
 கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற ஒரு கும்பல் நம் Nowhera Shaikh-ஐ அணுக, வெகு நேரம் பேசி Nowhera Shaikh மனதை மாற்றினார்கள். 20 பைசா கமிஷன். ஒரு ரூபாய் கறுப்புப் பணத்த வங்கிக் கணக்குகள் மூலமா வெள்ளைப் பணமா கொடுத்தா அதுக்கு 20 பைசா (20%) கமிஷன் என்று ஒரு டீல் உறுதியானது.


செம பிசினஸ்
 தொடக்கத்தில் தன்னுடைய சொந்த பணத்தை மட்டும் கறுப்பு வெள்ளை விளையாட்டில் விளையாடிய Nowhera Shaikh, நாளடைவில் தன்னை நம்பி வரும் நபர்களின் பணத்தையும் இதில் முதலீடு செய்யத் தொடங்கினார். கூரையைப் பிய்த்துக் கொண்டு கமிஷன் வரத் தொடங்கியது. வால்யூம் அதிகமாக அதிகமாக ஒரு ரூபாய்க்கு 20 பைசா என்று இருந்த கமிஷன் ஒரு கட்டத்தில் 40 பைசாவாக அதிகரித்த்தாம்.


ஸ்பாட் பேமெண்ட் 
 ஒரு நபர் 1 கோடி ரூபாய் கறுப்புப் பணத்துடன் (கள்ள நோட்டுக்களுடன் கூட) வந்தால் உடனடியாக 60 லட்சம் வெள்ளைப் பணத்தை கொடுத்துவிடுவார். இந்த உடனடி காசு என்பதால் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் நம்பகமான நல்ல பெயரை சம்பாதித்துக் கொண்டார் Nowhera Shaikh.


36 % வட்டி தர்றேன்
 சரி இப்போது தன்னிடம் கறுப்புப் பணம் இருக்கிறது, இன்னும் கொடுக்கவும் நிறைய கஸ்டமர் இருக்கிறார்கள். ஆனால் இதை புழக்கத்தில் விட்டு ஒரு தொழில் போல சம்பாதிக்க அதே முதலீட்டு கம்பெனிகளை பயன்படுத்தினார். கிடைத்த கறுப்புப் பணத்தை அப்படியே தன்னிடம் முதலீடு செய்தவர்களுக்கு 36 - 42 சதவிகிதம் வட்டியாகக் கொடுத்தார். மீதப் பணத்தை ஹவாலா முறையில் சுழற்சிக்கு விட்டார். எல்லா பக்கமும் லாபம் கொட்டே கொட்டு எனக் கொட்டியது. எல்லாவற்றுக்கும் காரணம் ஹவாலா.


திட்ட பலி ஆடுகள் 
ஆந்திரம், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தான் நம் Nowhera Shaikh-ன் டார்கெட். பொதுவாக இஸ்லாத்தில் வட்டிக்கு கடன் கொடுப்பது தவறு என ஒரு கொள்கை உண்டு. எனவே மற்ற இஸ்லாமிய சகோதரர்கள் கொடுக்கும் பணத்தை வட்டிக்கு கொடுக்காமல் வருமானம் ஈட்டித் தருவதாகச் சொல்லி சுமார் 2 லட்சம் பேருக்கு மேல் தன் முதலீட்டுக் கம்பெனிகளுக்கு சீட்டு கட்ட வைத்து இருக்கிறார்.


தங்க வியாபாரம் 
 இந்த முதலீட்டுக் தொழில் போக பொற் கொள்ளர்கள் இடமிருந்து நேரடியாக நகைகளை வாங்கி விற்றுத் தரும் தொழிலையும் கமிஷனுக்காக செய்திருக்கிறாராம். ஆனால் இது கறுப்புப் பணத்தை தங்கமாக மாற்றிக் கொடுக்கவே செய்யப்பட்டது என விசாரணை நடத்தி வரும் போலீசார் சந்தேகப் படுகிறார்களாம். 2008-ல் ஹீரா கோல்ட் என்கிற பெயரில் தொடங்கபட்ட அந்த கம்பெனி 2012-ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக பதிவு செய்து கொண்டார்களாம். இது தான் Nowhera Shaikh தொடங்கிய முதல் அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்.


வர்த்தக சாம்ராஜ்ஜியம்
 Nowhera Shaikh-ன் தங்கை முபாரக் ஜகான் மற்றும் அவரின் தம்பி இஸ்மாயிலும் கை கோர்க்க ஹீரா என்கிற பெயரில் மேலும் 16 நிறுவனங்களைத் தொடங்கினார். உணவு, சில்லறை வணிகம், கட்டுமானம், டூர்ஸ் & டிராவல்ஸ், நகைக் கடை என்று பல்வெறு தளங்களில் வியாபாரம் தொடங்கி லாபத்தில் திளைத்தார். இந்த நிறுவனங்களுக்கு ஆந்திரம், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரத்தில் அலுவலகங்கள் இருக்கின்றன. வெளிநாடுகளில் பஹரைன், கத்தார், சவுதி, ஓமன், குவைத் போன்ற நாட்டு அலுவலகங்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் Nowhera Shaikh-ன் ஹீரா குழும நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்களாம்.


வருமான வரி 
 இந்த ஹீரா குழும நிறுவனங்களில் 14-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு வருமான வரி தாக்கல் கூட செய்யவில்லையாம். மீதமிருக்கும் 3 நிறுவனங்களுக்கு கடந்த 2017 - 18-க்கு 55 கோடி ரூபாய் வரி செலுத்தி இருக்கிறார்களாம். இதுவரை 50-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இந்த 16 நிறுவனங்களோடு தொடர்பு உடையதாக இருக்கிறதாம்.


கிழிந்த திரை
 பல்வேறு தரப்பில் இருந்து Nowhera Shaikh பற்றி புகார் வந்தாலும் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியவில்லையாம். கடந்த 2014-ல் ஹீரா குழும ஊழியர்களில் சிலர் ஹவாலா பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டதை ஹைதராபாத் போலீஸ் கண்டு பிடித்து 84.7 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கை பற்றிய பிறகு தான் Nowhera Shaikh மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்களாம்.


அரசியல் கட்சி 
இதெல்லாம் ஒரு பக்கம் போக AIMEP - All India Mahila Empowerment Party என்கிற பெயரில் ஒரு அரசியல் கட்சி தொடங்கினார். மே 2018 கர்நாடக சட்ட சபைத் தேர்தலில் 224 சீட்டுகளுக்கும் நின்று தோற்றார். தேர்தலில் நின்ற வேட்பாளர்களில் ஏழு பேர் Nowhera Shaikh மீது முதலீட்டாளர்களை ஏமாற்றுகிறார் என புகார் அளித்தார்கள். இதன் பின் தான் முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டிய வருமானப் பணத்தைக் கொடுக்க முடியாமல் போனது. காரணம் ஹவாலா காரர்கள் மற்றும் கறுப்புப் பண முதலைகள் Nowhera Shaikh போலிஸ் பிடியில் இருப்பது தெரிந்து, அவரோடு ஒட்டு உறவு இல்லாமல் இருந்தது தான். ஆக முதலீட்டாளர்களுக்குக் கொடுக்க காசு இல்லை. பிரச்னை பெரிதாகத் தொடங்கியது.


கைது
 ஒரு வழியாக Nowhera Shaikh செய்யும் தவறுகள் மீது ஒரு தெளிவான பார்வை கிடைத்தது. முதலீட்டாளர்களிடம் பொய் சொல்லி பணம் வாங்குவது, ஹவாலா பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டது, வருமான வரி தாக்கல் செய்யாதது, பணச் சலவை செய்தது, சரியான உரிமங்கள் மற்றும் அனுமதிகள் இல்லாமல் தங்க வியாபாரத்தில் ஈடுபட்டது, நகைக் கடை தங்கம் வாங்கிய கணக்குகளில் திள்ளு முள்ளு என்று பல்வேறு குற்றச்சாட்டுகளோடு மே 2018-ல் Nowhera Shaikh மீது காவல் நிலையத்துக்கு வந்த புகார் போன்றவைகளின் அடிப்படையில் மும்பை பொருளாதார குற்றப் பிரிவு கைது செய்திருக்கிறது.


ஏமாந்த மக்கள்
 "என் பொண்ணோட கல்யாணத்துக்கு நகை வாங்க தாங்க அதிக வட்டிக்கு ஆச பட்டு ஹீரா கம்பெனில காசு போட்டேன்... நான் பண்ணது தாப்பு தான். புத்திக்கு தெரியுது, ஆனா இந்த பணம் இல்லாம என் பொண்ணோட கல்யாணம் நடக்காதுங்க ஐயா... எப்புடியாது என் அசல் பணத்த மட்டுமாவது மீட்டுக் கொடுத்திருங்க ஐயா என ஒரு முதலீட்டாளர் காவலர்களை கெஞ்சிக் கொண்டு இருந்த போதே மயங்கி விழுந்திருக்கிறார்" ரசூல் எனும் முதலீட்டாளர். இவரைத் தொடர்ந்து பல்வேறு முதலீட்டாளர்கள் Nowhera Shaikh மீது ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரப் பகுதிகளில் வந்து கொண்டே இருக்கிறதாம்.


காவலர்கள்
 "ரசூலைப் போன்று சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களுக்கு மேல் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். இப்போதைய கணக்குப் படி 500 கோடி ரூபாய் முதலீட்டாளர்கள் பணம் மட்டும் பாக்கி தர வேண்டி இருக்கிறது. ஆனால் பணத்தை எங்கு வைத்திருக்கிறார்கள், யாரிடம் கொடுத்திருக்கிறார்கள் என்கிற விவரங்களை விசாரித்து வருகிறோம் அதோடு Nowhera Shaikh -ன் வாக்குமூலங்கள் முரணாகவே சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவரை தீர விசாரித்தால் தான் உறுதியாக என்ன நடந்தது என விளக்க முடியும்" என காவல் துறை தெரிவித்திருக்கிறது.. காய்கறி வியாபாரம் பார்த்தவர் இன்று சுய தொழில் செய்கிறார் என்று பார்த்தால், அவரைப் போன்ற நிலையில் இருக்கும் 1 லட்சம் அப்பாவிகளை ஏமாற்றி இருக்கிறார். எத்தனை ரசூல்களின் வலிகள் இன்னும் கண்ணீராகவும், குடும்பத்தின் வலியாகவும் வெளி வந்து கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



Monday, November 05, 2018

எங்க கூட படுப்பானுங்க, எங்க கிட்டயே காச வாங்கிட்டு ஓடிருவாணுங்க...! நாங்க தான் ஏமாந்துட்டோம்


நம் இந்தியப் பெண்களைக் கட்டம் கட்டி ஏமாற்றும் வெளிநாட்டுக் காரர்களின் கதை. அந்த ஏமாற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதை. அதில் இருந்து மீள முடியாமல் கதறும் ஒரு மனைவியின் கதை. அவள் தன் உடலையும், பொருளையும் தன்னை வாழ் நாள் முழுதும் வைத்துக் காப்பாற்றும் ஒரு ஆணை நம்பிக் கொடுத்து... இழந்த ஒரு அப்பாவி ஜீவனின் கதை.

திருமணம்
 என்னங்க ஊருலேயே பெரிய மண்டபத்துல கல்யாணம் வெச்சி இருக்கீங்க. நம்ம தகுதிக்கு இது கொஞ்சம் ஓவர் இல்ல. கொஞ்சம் பாத்து பண்ணி இருக்கலாமேங்க என்று சுற்றம் சொல்லும் போது மகளைப் பெற்ற இந்திய குடும்பத்தினருக்கு எதுவும் காதில் ஏறவில்லை. லண்டன் மாப்பிள்ளை அல்லவா...? எப்படி கால் தரையில் படும். கல்யாண செலவுகள் மட்டும் 18 லட்சம் ரூபாய். எல்லாம் சிறப்பாக முடிகிறது. அப்புறம் என்ன தாம்பத்தியம் தான். மாப்பிள்ளை மொழியில் செக்ஸ்... (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
உடல் உறவு பெண்:
 ஏங்க இன்னக்கி வேண்டாம், கல்யாணம் ஆகி மூனு வாரத்துல செஞ்சூரி போட்ருவீங்க போல. நேத்திக்கு பண்ணதே ரொம்ப வலிக்கிது... வேண்டாம் ஆண்: அப்ப என் மேல உனக்கு விருப்பம் இல்லயா...? நான் அடுத்த வாரம் லண்டன் போயிடுவேன், அப்புறம் யார் உனக்கு இந்த சுகமான வலியக் கொடுப்பா..? பெண்: சரி..... வாங்க, ஆனா ஆண் உறை போட்டுக்கக் கூடாது. எனக்கு சீக்கிரம் ஒரு குழந்தை வேண்டும். ஆண்: அது இல்ல செல்லம். நாம லண்டன் போனதுக்கு அப்புறம் குழந்தை பெத்துக்கலாம். இல்லன்னா விசா, பாஸ்போர்ட் பிரச்னை வரும். பெண்: ஓகே. (மீண்டும் அந்த மிருகம் இந்தியப் பெண் மீது பாய்கிறது. இந்தியப் பெண்ணும், கணவனின் செல்லக் கெஞ்சல் என எண்ணி கட்டிலில் புதுமை காட்டுகிறாள்)


டாட்டா பைபை
 லண்டன் மாப்பிள்ளை விமானம் ஏறுகிறார். போகும் போது "மாமா எனக்கு உங்க பொண்ண விட எதுவும் பெருசு இல்ல. எனக்கு வரதட்சனை வேண்டாம். நா எங்க அப்பா அம்மா கிட்ட பேசிக்கிறேன்" என்கிறார் லண்டன் வாலா. "என்ன மாப்பிள்ளை. எனக்கு பிறந்தது ரெண்டுமே பெண் குழந்தைங்க. எனக்கு ஒரு பையன் இல்லாத குறைய நீக்க ஆண்டவன் உங்கள லண்டன்ல இருந்து அனுப்பி இருக்கான். இது உங்களுக்கு வேண்டான்னாலும், செய்ய வேண்டியது எங்க கடமை. உங்களுக்கு இந்தப் பணம் தேவை இல்லண்ணாலும் என் பொண்ணோட வாழ்கைச் செலவுக்கு வெச்சிக்குங்க மாப்ளை" என்கிறார் இந்தியப் பெண்ணின் அப்பா.


வர தட்சனை
 கட்டில் உறவு முடிந்து காதலை கண்ணில் காட்டி மாப்பிள்ளை லண்டன் பறக்கிறார். வரதட்சனை பணமாக இந்தியப் பெண் வீட்டார் சிங்கிள் பேமென்டாக 10 லட்சம் ரூபாயை ரொக்கமாக தருகிறார்கள். மாப்பிள்ளையும் கணிவான குரலில் நன்றி சொல்லி, மகளை வெகுவிரைவில் லண்டனுக்கு அழைத்து வருவதாக வாக்கு கொடுக்கிறார்.


தகப்பனின் சந்தோஷம்
 "இவளுக்கு எப்புடி நல்ல மாப்பிள்ளையத் தேடுறதுன்னு நாலு வருஷமா சரியா சாப்பாடு தூக்கம் இல்லாம அலஞ்சேன்... ஆண்டவனா பாத்து நல்ல லண்டன் மாப்பிள்ளையா கொடுத்துட்டாரு. இப்ப சந்தோஷமா இருக்கு. அதோட கடன உடன வாங்கி எப்புடியே மாப்பிள்ளை குடும்பத்துக்கு கொடுக்க வேண்டியதையும் மாப்பிள்ளை கிட்ட கொடுத்தாச்சு... ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று மகளின் தகப்பன் நிம்மதியாக உறங்கச் செல்கிறார்.


காலம் கடக்கிறது 
 இரண்டு மாதம் கடக்கிறது. மாப்பிள்ளை பெண்ணோடு பேசுவது குறைகிறது. சரி வேலைப் பளு என்று இந்தியப் பெண் விட்டுக் கொடுக்கிறார். இப்படியாக ஆறு மாதங்களுக்குப் பின் மாப்பிள்ளை தானாக அழைப்பதை விட்டு இருந்தார். அதே நேரத்தில் பெண் கூப்பிட்டு பேசினாலும் பேசுவதை தவிர்த்தார். பேசுவதை அறவே விட்டிருந்தார் லண்டன் மாப்பிள்ளை.


சந்தேகம்
 ஆனால் நம் இந்தியப் பெண்ணுக்கு ஏதோ சந்தேகம் வருகிறது. இந்தியப் பெண், தனியாக தானே விசாவுக்கு விண்ணப்பித்து, பாஸ்போர்ட் எடுத்து லண்டன் புறப்பட்டு சொன்ன விலாசத்துக்கு சென்று விசாரிக்கிறார். ஸ்டீவன்.... சாரிங்க அப்படி யாரும் இங்க இல்ல என்று பதில் வருகிறது.
 
நான் ஏமாந்துட்டேன்

அட நாம் தான் தவறாக விசாரித்திருப்போம் என்று பலரிடம் காட்டி விலாசத்தை உறுதி செய்கிறாள். முழுமையாக தெருவில் உள்ள பலரையும் விசாரிக்கிறாள். எதுவுமே கிடைக்க வில்லை. மனமுடைந்து லண்டன் மாப்பிள்ளை நம்பருக்கு அழைக்கிறாள். அழைப்பு போகவில்லை. எண் ஸ்விட்ச் ஆஃப் அல்லது நாட் ரீச்சபில் என்றே வருகிறது.

உஷாராக இருந்த ஸ்டீவன்
 கல்யாணத்துக்கு போட்டோ, வீடியோ வேண்டாம், வரதட்சனைகளை ரொக்கமாக பெற்றது, ஆண் உறை உடன் மட்டுமே பெண்ணோடு உறவு கொண்டது, தன்னுடைய எந்த அடையாள அட்டைகளையும் பெண் இடமோ, பெண் வீட்டார்களிடமோ காட்டாமல் உஷாராக இருந்தது. ஸ்டீவன் காட்டிய ஒரே அடையாள அட்டை அவர் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றுவதாகச் சொன்ன அடையாள அட்டை, ஐபிஎம் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்தால் அப்படி ஒருத்தர் இல்லை என்று பதில் வருகிறது.


நான் முழுமையாக ஏமாந்துவிட்டேன்
 தன்னை உடல் ரீதியாக, பொருளாதார ரீதியாகவும் சுரண்டிய ஸ்டீவன் மிருகத்தை நினைத்து தன் மீதே கோபம் கொள்கிறாள். வெடித்துக் கதறி அழுகிறாள். விஷயம் லண்டன் போலீஸாரிடம் செல்கிறது. எந்த ஒரு துப்பும் இல்லாமல் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்தியப் பெண்ணை சமாதானப்படுத்தி இந்தியாவுக்கு விமானம் ஏற்றி அனுப்புகிறார்கள்.


இப்படி எத்தனை பேர் 
இந்தியாவில், மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண் வீட்டார் கொடுக்கும் வர தட்சனை, இந்தியப் பெண்களின் அழகு போன்றவைகள் எல்லாம் கணக்கில் எடுத்து கொண்டு, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் சென்று செட்டில் ஆன இந்திய இளைஞர்கள், வெளிநாட்டு இளைஞர்கள், மேற்கத்திய நாடுகளில் செட்டில் ஆன ஆசிய நாட்டுக் காரர்கள் என்று பல தரப்பினர், எண்ணில் அடங்காத வட இந்தியப் பெண்களை கட்டம் கட்டி ஏமாற்றி இருக்கிறார்கள்.


ஏன் வட இந்தியர்கள் 
இந்தியாவில் தமிழகம், கேரளா, கர்நாடாம், ஆந்திரம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருக்கும் கல்வி அறிவு, விழிப்புணர்வு போன்ற அறிவு சார் விஷயங்களோடு, வர தட்சனையை ஒரு கேவலமான செயலாக பார்க்கும் நிலை அதிகரித்திருக்கிறது. அதோடு பெண் வீட்டாரும் என்னால இவ்வளவு தான் முடியும், வேணும்னா சொல்லுங்க என்கிற ரீதியில் தான் இப்போது பெண் கொடுக்கிறார்கள். ஆனால் வட இந்தியாவில் இன்னும் நிலைமை 1950-களிலேயே இருக்கின்றன. கல்யாண செலவுகள், வர தட்சனை, மெஹந்தி, சங்கீத் என்று எல்லாம் பெண் வீட்டார் தலையில் தான் வந்து விடியும். எதிர்த்துப் பேசினால் மாப்பிள்ளை கிடைக்காது. குறிப்பாக பஞ்சாப் பெண்களை ஏமாற்ற இந்த மிருகங்களுக்கு அவ்வளவு பிடிக்கும்.


சுந்தரி அனிதா 
அமெரிக்காவின் லிங்கன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் இவரிடம் இதைக் குறித்து கேட்ட போது "இந்திய சமூகத்தைப் பொறுத்த வரை ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது என்றாலே அவள் பாதி வீணாகிப் போன பொருட்களுக்குச் சமம், அதுவும் கணவனோடு தாம்பத்தியமும் முடிந்துவிட்டது என்றால் அவள் 100% அழுகிப் போன பொருள் தான். இனி அவளை மறு திருமணம் செய்து கொள்ள எவரும் முன் வர மாட்டார்கள். சரி இப்படி ஏமாற்றப்பட்ட பெண்னின் தங்கைகளுக்குக் கூட இனி மாப்பிள்ளை கிடைப்பது சிரமம் தான். அப்படித் தான் இந்திய சமூகம் பெண்களை கட்டமைக்கிறது" என்கிறார். அதோடு ஒரு இந்தியப் பெண்ணை உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் திருடி விட்டு இந்தியாவில் எளிதில் ஓடி விட முடிகிறது. ஏமாற்றிய ஆண் மீது எந்த ஒரு சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை எனப்து வேதனையான விஷயம் என்று தன் வருத்தத்தை பதிவு செய்கிறார்.


பிரிட்டீஷ் குடியுரிமை ஆலோசகர் 
ஹர்ஜப் சிங் பங்காள், பஞ்சாப் மாநிலத்தில் பிரிட்டனுக்கு குடியேறும் இந்தியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். "இரண்டு நாடுகளுக்கு இடையிலான இந்த பிரச்னையை முறையாக தீர்க்க போதுமான சட்டங்கள் இல்லை. எனவே தான் இப்படி பல ஆண்கள், வட இந்தியப் பெண்களை, குறிப்பாக பஞ்சாப் பெண்களை ஏமாற்றி உடல் உறவு வைத்துக் கொண்டு, வர தட்சனை வாங்கிக் கொண்டு ஓடி விட முடிகிறது" என்று வருத்தப்படுகிறார்.


அந்த பெண்
 என் கணவர் நான் எதிர்பார்த்ததை விட அழகாக இருந்தார், என் தேவைகளை பார்த்துப் பார்த்து அந்த 3 வாரத்தில் பூர்த்தி செய்தார். எனக்கு பிடித்த பீட்ஸா தான் அவருக்கும் பிடித்திருந்தது, எனக்கு பிடித்த வான நீலம் அவருக்கும் பிடித்திருந்தது, என்னோட கால்கள் அவருக்கு ரொம்பப் பிடிக்கும், அவருடைய உதடுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.... இதை எல்லாம் அவருக்குப் புரியாத பஞ்சாபியில் எழுதிக் கொண்டு இருக்கிறேன். ஆனால் அவரைக் காணவில்லையே, அவர் என் மீது காடிய காதலைக் காணவில்லையே... அவரையே காணவில்லையே என்று கதறுகிறார். பிபிசி நிறுவனம் வெளியிட்டு இருக்கும்

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Friday, November 02, 2018

நான் கால் பாய், ஒரு நைட்டுக்கு ரூ. 8,000/-, வம்படியாக வந்து சிக்கிய ஆண் விபச்சாரி!



இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஜிக்லோ (Giglo) எனப்படும் ஆண் விபச்சார தொழில் ஏற்கனவே செக்கைப் போடு, போட்டுக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் இந்த ஆண் விபச்சாரத்தில் படித்த இளைஞர்கள் தான் வேலை செய்கிறார்கள் என்றும்.

 இதில், இவர்கள் நிறைய பணம் பார்த்து வருவதாகும் செய்திகள் கடந்த ஓரிரு ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


ஒருபுறம் இதில் பெரிய இடத்து பெண்கள் இருக்கிறார்கள் என்றும் .மறுபுறம் ஆசைக்காட்டி ஆண்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற தகவல்களும் கிடைத்து வருகிறது. லிங்கிடு இன் போன்ற வேலை தேடும் சமூக தளங்களில் இவ்வகையிலான கிகாலோக்கள் உலாவி வருகிறதாகவும் அறியப்படுகிறது. இன்று (31/10/2018), ஃபேஸ்புக்கில் சென்னையை சேர்ந்த சிநேகா மோகன்தாஸ் என்ற இளம்பெண், தான் எதிர்கொண்ட ஜிக்லோவின் முகத்திரையை கிழித்து போலீஸில் தைரியமாக பிடித்துக் கொடுத்திருக்கிறார். 
 
 மேலும், இப்படியான ஆண்கள் குறித்து பெண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த ஆண் விபச்சாரி தன்னிடம் பேசிய சாட் ஹிஸ்டரியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்தும் பகிர்ந்திருக்கிறார்....


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Thursday, October 25, 2018

குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுக்களை கொண்டு தங்கம் வாங்கிய ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு!



பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தங்க கடைக்கு சென்ற ஜோடி ஒன்று போலியான ரூபாய் நோடுக்களை கொண்டு ரூ. 2 லட்சத்திற்கு தங்கம் வாங்கி ஏமாற்றியுள்ளது. “ எண்டர்டைன்மெண்ட் பாங்க் ஆப் இந்தியா” என்று அச்சிடப்பட்ட சிறார்கள் விளையாடும் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து தங்கம் வாங்கியுள்ளது. 
 
 இதுதொடார்பாக தங்க கடைகாரர் வர்மா பேசுகையில் “கடைக்கு வந்த ஜோடி தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் 59 கிராம் தங்கம் வாங்கினார்கள். அவசர அவசரமாக பணத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


 பணத்தை நான் சோதனை செய்த போது ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா என அச்சிடப்படும் இடத்தில், “ எண்டர்டைன்மெண்ட் பாங்க் ஆப் இந்தியா” என அச்சிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து பின்னால் சென்றேன், காரில் வந்தவர்கள் விரைந்து சென்றுவிட்டார்கள், என கூறியுள்ளார். 

 
 இதுதொடர்பாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சோதனையை மேற்கொண்டனர். அப்போது அதில் மோசடி செய்த ஜோடி சென்ற காரில் பதிவு எண் இல்லை என்பது தெரியவந்தது. போலீஸ் குற்றவாளிகளை வலை வீசி தேடிவருகிறது. இதுபோன்று பிற கொள்ளை சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Monday, October 22, 2018

மிரட்டி மிரட்டியே.. படு பாதக கள்ளக்காதலன்.. 16 வயதிலேயே பாழான பிஞ்சு



16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
         

கள்ளக்காதலியின் 16 வயது மகளை கர்ப்பமாக்கி அவளது வாழ்க்கையையே நாசமாக்கி விட்டிருக்கிறார் அந்த கொடூர காம மனிதன்!! நாளுக்கு நாள் கள்ளக்காதல் அவலங்கள் பெருகி வருகின்றன. அதன் முடிவுகளோ பயங்கரமான விளைவுகளை தந்து கொண்டிருக்கின்றன. விவரம் தெரிந்து பெரியவர்கள் செய்யும் கள்ளக்காதலால் பிஞ்சுகளும், உலகம் அறியா குழந்தைகளும்தான் சிக்கி சீரழிகிறார்கள்.


கள்ளக்காதல் 
தண்டையார்பேட்டையில் கணவரை பிரிந்த ஒரு பெண் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவரை பிரிந்த பெண்ணுக்கு, அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக உருவாகி நின்றது. இப்படித்தான் 2 வருடங்கள் இந்த கள்ள உளவு போய் கொண்டிருந்தது.(தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

மிரட்டி பலாத்காரம் 
 ஒருநாள் மகளுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அதனால் மகளை கூட்டிக் கொண்டு மருத்துவமனை சென்றார் தாய். ஆனால் அங்கே போனபிறகுதான் விஷயம் தெரிந்தது, மகள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று. இதை கேட்டு ஷாக் ஆன அம்மா, என்ன விவரம், யார் காரணம் என்றெல்லாம் விசாரித்தார். அதற்கு மகள், ஆட்டோ ஓட்டுனர் தண்ணி அடித்துவிட்டு தன்னை பலாத்காரம் செய்ததாகவும், அதை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிவித்தார்.


பாட்டி வீட்டில் சிறுமி 
 மேலும் இப்படி மிரட்டி மிரட்டியே பலமுறை நாசம் செய்ததாக கூறி அழுதாள் அந்த சிறுமி. இதைக் கேட்ட தாய், மேலும் ஷாக் ஆனார். அதன்பிறகு அந்த ஆட்டோ டிரைவரை உண்டு இல்லை என்று ஒருவழி பண்ணிவிடுவார் என்று பார்த்தால், சிறுமியை அழைத்து கொண்டு போய் தனது அம்மா வீட்டில் விட்டுவிட்டார்.


கணவர் எங்கே?  
அதாவது மகள் கர்ப்பம் என்றால் இவருக்கு மானம் போய்விடுமாம். பாட்டி வீட்டுக்கு சிறுமிக்கோ சிறிது நாளில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக ராயபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், சிறுமியிடம், "கணவர் எங்கே?" என்று கேட்க... அதற்கு சிறுமி திருதிருவென விழிக்க... பிறகுதான் நிலைமையை உணர்ந்து டாக்டர்கள் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.

2 குழந்தைகள்  
பின்னர் போலீசார் விசாரணையில்தான் மேற்கண்ட விவரங்கள் எல்லாம் தெரியவந்தது. சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்ததுமே ஆட்டோ ஓட்டுனர் எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனாலும் போலீசார் வலைவீசி தேடி நேற்றுமுன்தினம் அவரை போக்சோவில் கைது செய்தனர். கைதான ஆட்டோ டிரைவர் இரு குழந்தைகளின் தகப்பனாம்!!

அனைத்து செய்திகளையும் படிக்க (முகப்பு)-HOME PAGE

 அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts