வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Entertainment
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Entertainment. Show all posts
Showing posts with label Entertainment. Show all posts

Thursday, October 11, 2018

வந்துட்டார்ல எங்க சிங்கம்.. குஷியில் சரவணன் அருள் ரசிகர்கள்.. ரஜினி பாணியில் கலக்கல் டான்ஸ்!



வெள்ளையும் ஜொல்லையுமா வந்த சரவணா ஸ்டார் அண்ணாச்சி
  சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் விளம்பரங்களில் கால் வைத்துள்ளார், சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள். முன்னணி நிறுவனங்கள், விளம்பர மாடல்களை கொண்டோ, நடிகர், நடிகைகளை கொண்டோதான், தங்களது விளம்பரங்களை நடிக்க வைப்பார்கள். வசந்த் அன்டு கோ உள்ளிட்ட சில நிறுவனங்களில் உரிமையாளர்களே விளம்பர படங்களில் தோன்றுவார்கள். சரவணா ஸ்டோர்ஸ்சை பொருத்தளவில் முதலில், விளம்பர மாடல்கள், சினிமா ஸ்டார்கள்தான் நடித்து வந்தனர். ஆனால், பின்னர்தான், 'தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்' உரிமையாளர் சரவணன் அருள், விளம்பர உலகில் கால் பதித்தார்.

நடிகைகளுடன் நடித்தார் 
 அதுவரை, 'தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்' உரிமையாளர் எப்படி இருப்பார் என அறியாதவர்கள் எல்லோருமே, விளம்பர படத்தை பார்த்துதான், சரவணன் அருள் யார் என்பதை அறிந்து கொண்டனர். தமன்னா, ஹன்சிகா ஆகிய நடிகைகளுடன் சரவணன் அருள் நடித்த விளம்பர படங்கள் பட்டிதொட்டியெங்கும் சென்று சேர்ந்தன.


வயிற்றெரிச்சல்
 புகழை பார்த்தால் சிலருக்கு உள்ளுக்குள் புழுங்கும் இல்லையா.. அதுபோலத்தான், சரவணன் அருள் புகழ் பரவியதும், அவரை கிண்டல் செய்வது போன்ற மீம்களை சில வயிற்றெரிச்சல் பார்ட்டிகள் வெளியிட்டு, அதில் சந்தோஷப்பட்டனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
ஆனால், இவையெல்லாம், சரவணன் புகழை குறைக்கவில்லை. அவர் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றபடிதான் இருந்தார்.

மகள் திருமணம்

இந்த விளம்பர படங்களில் நடித்த நிலையில்தான், சரவணன் அருள் மகளுக்கு திருமணமானது. அப்போது, அடேங்கப்பா, மகளுக்கே திருமணம் செய்து வைக்கும் வயதா இவருக்கு என தமிழகமே ஆச்சரியத்தில் மூக்கில் விரல் வைத்தது. இப்படியாக, தன்னம்பிக்கைக்கு உதாரணமாக விளங்கினார் சரவணன் அருள். தனது மகள் திருமணத்திற்கு, நிறுவனத்தில் பணியாற்றுவோர் குடும்பத்திற்கு பரிசுப்பொருட்கள் வழங்கி அவர்களையும் திருமண விழாவில் தங்கள் குடும்பத்தாரை போலவே கவனித்ததாக பூரிக்கிறார்கள் அங்கு பணியாற்றுவோர்.


ஆடி மாத விளம்பரம் 
ஆனால், கடந்த ஆடி மாத தள்ளுபடி நேரத்தில் வெளியான, 'தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்' விளம்பரத்தில், சரவணன் நடிக்கவில்லை. விளம்பர படங்களை உன்னிப்பாக கவனிப்போர் இதை கவனிக்க தயங்கவில்லை. உடம்பு சரியில்லையா என்று சிலர் நகைச்சுவையாக மீம்கள் வெளியிட்டு கேள்வி எழுப்பினர். ஆனால், இதோ மீண்டும் வந்துவிட்டார் சரவணன் அருள். தீபாவளிக்கு என்ட்ரி தீபாவளியையொட்டி, வெளியாகியுள்ள தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில், சரவணன் அருள் நடித்துள்ளார். அஸார், ராமர், வடிவேல் பாலாஜி உள்பட பல டிவி சேனல் பிரபலங்களும் அதில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த்தின் அருணாச்சலம், படையப்பா திரைப்பட நடன பாணியில் உள்ளது சரவணனின் ஆக்ஷன்கள். விளம்பரங்களில் மீண்டும் சரவணன் அருளை கண்டதால் அவரது ரசிகர்கள் படு உற்சாகமாகிவிட்டனர்.
தீபாவளிக்கு என்ட்ரி
தீபாவளியையொட்டி, வெளியாகியுள்ள தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில், சரவணன் அருள் நடித்துள்ளார். அஸார், ராமர், வடிவேல் பாலாஜி உள்பட பல டிவி சேனல் பிரபலங்களும் அதில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த்தின் அருணாச்சலம், படையப்பா திரைப்பட நடன பாணியில் உள்ளது சரவணனின் ஆக்ஷன்கள். விளம்பரங்களில் மீண்டும் சரவணன் அருளை கண்டதால் அவரது ரசிகர்கள் படு உற்சாகமாகிவிட்டனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Wednesday, October 10, 2018

முட்டாள் சிரிப்புகள் - கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில்

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் : காஞ்சி. கலெக்டர் தகவல் - Last Date - 01/11/2018 # தகாத உறவுக்கு தடையாக இருந்த தந்தை… ரவுடிகளை வைத்து போட்டு தள்ளிய மகள் # நாம் அனைவருக்கும் புற்றுநோய் உள்ளதா..? இதை கவனமாக படியுங்கள்..!


கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினார் நடுத்தர வயது இளைஞர் ஒருவர். 
 
அவர் : மேடம் .. .. இந்த கல்யாண கலாட்டாவுல என் பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன் கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டிருக்க முடியுமா ? என்று கேட்டார்.
அழகிக்கு கோபம் வந்துவிட்டது.
அழகி : ஏய் மிஸ்டர் என்னை என்னன்னு நெனைச்சுட்டீங்க ? நான் எதுக்கு உங்ககூட பேசணும் ? என்றாள் சீற்றத்தோடு.
அவர் : ஸாரி, மேடம் .. .. .. தப்பா நெனைச்சுக்காதீங்க. அழகான ஒரு பொண்ணோட நான் பேசிட்டு இருக்கறப்பல்லாம் எங்கிருந்தாலும் உடனே ஒடிவந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காகச் சொன்னேன் - பணிவாகச் சொன்னார் இவர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Monday, October 08, 2018

கருப்பு ஆடுகளால் பாலியல் தொல்லை : சமந்தா



மொபைல் கடை திறப்பு விழாவிற்காக மதுரை வந்திருந்தார் நடிகை சமந்தா. கடையை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் சமந்தா பேசியதாவது : தமிழகத்தில் ரசிகர் இல்லாமல் நான் இல்லை, எனது வெற்றிக்கு ரசிகர்களே முக்கிய காரணம். நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். 


சினிமா எனக்கு கடவுளுக்கு சமமானது, அதில் எந்த குறையும் இல்லை. 10 ஆண்டுகளாக இருக்கிறேன். பாலியல் ரீதியான தொல்லைகளை சந்தித்தது இல்லை. எல்லா துறையிலும் இருப்பது போன்று சினிமா துறையிலும் ஒரு சில கருப்பு ஆடுகளால் பாலியல் ரீதியான தொல்லைகள் ஏற்பட்டு சினிமாவின் பெயர் கெடும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு சமந்தா கூறினார்.

Popular Posts


Sunday, October 07, 2018

நான் சுமக்கும் வலியை விஜய் சேதுபதியும் சுமக்க வேண்டாம்: விஷால்



தான் சுமக்கும் வலியை விஜய் சேதுபதியும் சுமக்க வேண்டாம் என விஷால் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று (அக்டோபர் 4) ரிலீஸாகியிருக்கும் படம் ‘96’. த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தை, ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். தேவதர்ஷினி, ஜனகராஜ், ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்தப் படத்தை, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ளார். விஷால் நடித்த ‘கத்தி சண்டை’ படத்தைத் தயாரித்த இவர், ‘துப்பறிவாளன்’ படத்தை வாங்கி வெளியிட்டார். அந்த நட்பு அடிப்படையில், ஒன்றரை கோடி ரூபாயை பைனான்ஸுக்கு வாங்கி நந்தகோபாலுக்குக் கொடுத்துள்ளார் விஷால்.


அந்தத் தொகையை, ‘96’ படத்தின் ரிலீஸின்போது தருவதாக நந்தகோபால் கூறியதால், தற்போது அந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார் விஷால். அது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று காலை வரை நீண்டுகொண்டு போகவே, படத்தின் ஹீரோவான விஜய் சேதுபதி தலையிட்டு, அந்தப் பணத்துக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்மூலம் பிரச்சினை முடிவுக்கு வர, நேற்று ‘96’ படம் ரிலீஸானது. இந்நிலையில் தான் சுமக்கும் வலியை விஜய் சேதுபதியும் சுமக்க வேண்டாம் என விஷால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஷால் தரப்பிடம் விசாரித்த போது, ''விஷால் தொடர்ந்து பைனான்ஸ் ரீதியாக பல வலிகளைச் சந்தித்து வருகிறார். அந்தமாதிரி ஒரு வலியை  விஜய் சேதுபதிக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நேற்று இரவு முழுக்க அவர் உறங்கவும் இல்லை. ஆகவே, விஜய் சேதுபதி கொடுப்பதாகக் கூறியுள்ள ரூ.1.50 கோடி தொகையைத் தர வேண்டாம். அதற்கான பொறுப்பை மீண்டும் விஷாலே ஏற்றுக்கொள்கிறார்.

நந்தகோபாலுக்கு பைனான்ஸ் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ.1.50 கோடி தொகையை விஷால், நந்தகோபால் அவரிடமே பெற்றுக்கொள்கிறார். அதுவரைக்கும் அந்தத் தொகைக்கு விஷால் வட்டியும் கட்டுவார். ஆகவே,  பைனான்ஸ் விஷயத்தில் தான் சுமக்கும் வலியை விஜய் சேதுபதி சுமக்க வேண்டாம் என்று விஷால் நினைக்கிறார். மேலும், இந்தப் பிரச்சினையிலிருந்து விஜய் சேதுபதி எந்த வலியும் இல்லாமல் வெளியே  வர வேண்டும். பொருளாதார ரீதியாக அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தற்போது வெளியாகியுள்ள அவரது படம் வெற்றியடைய வாழ்த்துகளையும் விஷால் தெரிவித்தார்'' என்றனர்.


Popular Posts


Saturday, October 06, 2018

H2O தெரியாமல் பேந்த பேந்த முழித்த மாடல் அழகி


அழகிப் போட்டிகளில் கட்டாயம் கடைசி ரவுண்டில் ஏதாவது கேள்வி கேட்பார்கள். அந்த பதில் கூட அவர்களுக்குப் பட்டத்தைப் பெற்றுத் தரலாம்.நான் இறந்த பின்னரும் இந்த உலகை பார்க்க விரும்புகிறேன். அதனால் கண் தானம் செய்வேன் என்று கூறிய ஐஸ்வர்யா ராய் ஆகட்டும்.

நான் விரும்பும் உன்னதமான வேலை தாயாக இருப்பதே எனக் கூறிய மனுஷி சிலாராக இருக்கட்டும் அற்புதமான பதில்களால் பரிசை வென்றவர்களாவர். அண்மையில் நடந்த மிஸ் வங்கதேசம் அழகிப் போட்டியில் ஒரு போட்டியாளரிடம் H2O என்றால் என்னவென்று கேட்கப்பட்டது. 3-ம் வகுப்பு குழந்தைகூட இது தண்ணீர் எனக் கூறிவிடும். ஆனால், அந்த அழகியோ பேந்த பேந்த முழித்தார். அதில், அதி பயங்கரமான கேள்வியைக் கேட்டதுபோல் இன்னொரு முறை கேள்வியை சொல்லுங்கள் என்று கேட்டார்.

Popular Posts