வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Sex
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Sex. Show all posts
Showing posts with label Sex. Show all posts

Friday, November 09, 2018

அம்மா, மகளை கடத்திய சாமியார் சதுர்வேதி திடீர் மாயம்.. கெட்டப் சேஞ்சுடன் சுற்றுவதாக தகவல்


தன்னை தானே சாமியார் என்று சொல்லிக் கொண்ட சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அறிவித்துள்ளது. எம்ஏ பட்டதாரியான சதுர்வேதி, வேதம் மற்றும் இந்து தத்துவவியல் பற்றி சொற்பொழிவு ஆற்றி வந்தவர். 
இதனால் இவருக்கு நிறைய பக்தர்கள் வெகுசீக்கிரத்திலேயே உருவானார்கள். இவருக்கு வேற பெயர்களும் உள்ளன. அதாவது வெங்கடாசரவணன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் என்று பல பெயர்களை ஒவ்வொரு இடத்திலும் சொல்லி வந்தார். ஆழ்வார்பேட்டையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையும் நடத்தி வந்தார். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
அம்மா - மகள்
 அதோடு தான் ஒரு மிகச்சிறந்த சாமியார் என்றும் சொல்லிக் கொண்டே இருப்பார். இவரை நிஜமான சாமியார் என்று நம்பி கடந்த 2004-ம் ஆண்டு ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி மற்றும் அவரது மகள் இவரை சந்திக்க வந்திருக்கிறார்கள். அப்போது தாய் - மகள் என இரண்டு பேரையுமே சதுர்வேதி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.


பாலியல் புகார்
 அத்துடன் அந்த 2 பேரையும் கூட்டிக் கொண்டு தலைமறைவாகியும் விட்டார். அத்துடன் சுரேஷிடம் லட்சக்கணக்கில் பணத்தை அறக்கட்டளை என்ற பெயரில் பிடுங்கி கொண்டதாகவும், சுரேஷின் இடத்தையும் ஆக்கிரமித்து கொண்டதாகவும் பலமான புகார் சாமியார் மீது எழுந்தது. அப்போது எஸ்கேப் ஆனவர் தான் இவர், ரொம்ப வருஷத்துக்கு இவரை யாராலும் பிடிக்கவே முடியவில்லை.


விரைவில் தீர்ப்பு 
 ஒருவழியாக கடந்த 2016-ம் ஆண்டு சதுர்வாதி கைது செய்யப்பட்டார். ஆனால் கொஞ்ச நாளிலேயே ஜாமீனில் வந்தவர்தான் திரும்பவும் ஆள் எஸ்கேப். சென்னை மகளிர் கோர்ட்டில் 14 வருடங்களாக நடந்து வரும் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வர போகிறது. அதனால் சாமியாரை தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அறிவித்துள்ளது.


உஷார் நிலை
 இவர் எப்பவும் வடமாநிலங்கள் பக்கம் அடிக்கடி ஆன்மீக டூர் போவாராம். அதிலும் நேபாளத்துக்குதான் அதிகமாக போவார் என்பதால் அங்கு போலீசார் விரைந்திருக்கிறார்கள். மேலும் வேறு எங்கேயும் இவர் தப்பி சென்றுவிடக்கூடாது என்பதால் நாடு முழுவதும் உஷார் நிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்காக சதுர்வேதியின் புகைப்படங்கள் எல்லா விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் முன்னெல்லாம் சாமியார் தாடி, மீசையுடன்தான் இருப்பாராம்.


கெட்-அப் கேஞ்ச் 
 இப்போது போலீசார் சாமியாரின் அறக்கட்டளை ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதில் தாடி, மீசை இல்லாத மழ மழ சதுர்வேதி படங்களை வாங்கி உள்ளனர். இதை வைத்துகொண்டுதான் போலீசார் தீவிரமாக தேட ஆரம்பித்துள்ளனர். இந்த படங்களைதான் நாடு முழுவதும் அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே பல பல பெயர்களில் நடமாடி வரும் சதுர்வேதி, இப்போது கெட்-அப் சேஞ்ச் செய்து எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. தேடும் படலம் தொடர்கிறது!!


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Thursday, November 08, 2018

திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது


திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


சிறுமி கர்ப்பம்

மும்பை கார் தன்டா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நதீம் மன்சூரி (வயது29) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் அவளை கண்டித்தனர். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அதே நேரத்தில் நதீம் மன்சூரி நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி சிறுமியுடனான காதலை தொடர்ந்தார். மேலும் இருவருக்கும் உடல் ரீதியாகவும் நெருக்கம் உண்டானது. இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானாள். அண்மையில் வயிற்று வலியால் துடித்த சிறுமியை, தாய் கூப்பர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காண்பித்தார். அப்போது, அவள் 15 வார கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

வாலிபர் கைது

இதனால் அதிர்ச்சியடைந்த அவளது பெற்றோர், இதுபற்றி கார் போலீசில் நதீம் மன்சூரி மீது புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், நதீம் மன்சூரி ஏற்கனவே திருமணமானவர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Monday, November 05, 2018

என் உடம்பு தான வேணும், வா எடுத்துக்கோ... நடுரோட்டில் உக்கிரமடைந்த பெண்


உலகின் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு சமமாக அளிக்கப்படுவது மானபங்கமும், பாலியல் துன்புறுத்தலும் தான். கருப்போ, சிவப்போ, உயரமோ, குட்டையோ, மேல் வகுப்பு, கீழ் வகுப்பு என எந்த பாகுபாடும் இன்றி ஆணாதிக்க சமூகம் பெண்களுக்கு சம பங்கில் அளித்து வருவது இந்த ஒற்றை கொடுமை தான்.
 
 சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோ காட்சி, எந்த அளவிற்கு ஒரு ஆண் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருந்தால், அவள் தனது உடையை கழற்றி, உனக்கு என் உடல் தானே வேண்டும் என உக்கிரம் அடைந்திருப்பாள்... என்பதை இந்த உலகிற்கு வெளிகாட்டியுள்ளது... (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


காட்சி! 
 அந்த வீடியோவில் வெளியான காட்சி இதுதான்... கடுங்கோபம் அடைந்த அந்த இளம் பெண். தனது மார் சட்டையை அவிழ்த்து, கீழே தள்ளப்பட்ட ஆணை கண்டு ஏதோ பாஷையில் திட்டுகிறாள், மிகுந்த ஆத்திரத்தில். பிறகு தனது மார்பகத்தை கொண்டு, கீழே விழுந்திருந்த ஆணின் முகத்தில் தேய்த்து... உனக்கு என் உடல் தானே வேண்டும்... எடுத்துக் கொள்.. என தொடர்ந்து திட்டுகிறார்.


தென்கிழக்கு பிரேஸில்!
 இந்த காணொளிப்பதிவு தென்கிழக்கு பிரேஸிலின், ரிபேரா ப்ரோட்டோ நகர மையத்தில் பதிவானது என அறியப்படுகிறது. இந்த காணொளிப்பதிவில்தோன்றிய அந்த நீலநிற சட்டை அணிந்திருந்த இளம் பெண் ஒரு சேல்ஸ் பெண் என்றும். அவர் பொது இடத்தில் தனது வியாபாரம் குறித்த ஃப்ளையர்கள் (Ad Flyers) மக்களிடம் விநியோகம் செய்துக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.


பாலியல் வன்கொடுமை! 
தரையில் வீழ்ந்திருந்த ஆண் நெடுநேரமாக அந்த பெண்ணை பொது இடத்தில் வைத்து துளைத்தெடுத்தான் என்றும். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான் என்றும் கூறப்படுகிறது. (பொது மக்களும், யாரும் இதை கண்டு கொள்ளாமல் நகர்ந்துக் கொண்டே இருந்தார்கள்). ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த பெண் உக்கிரமடைந்து. உனக்கு என் உடல் தானே வேணும். வா எடுத்துக் கொள் வா... என அந்த ஆணை தரையில் தள்ளிவிட்டுள்ளார்.


யாரும் எதிர்பார்க்கவில்லை.
 அந்த ஆணை, கீழே தள்ளிய பிறகு தான் கூடியிருந்த மக்கள் கண்விழித்து என்ன நடக்கிறது என காண துவங்கினார்கள். அந்த ஆளை இளம்பெண் சரமாரியாக திட்ட துவங்கினார். நீண்ட நேரமாக என்னை தொல்லை செய்துக் கொண்டே இருக்கிறான் என கூறினார். எனது வேலையை செய்ய விடாமல் சீண்டுகிறான் என கொந்தளித்துள்ளார்.


நான் ஒன்றும் செய்யவில்லை... 
அடி வாங்கிக் கொண்டிருந்த அந்த ஆண், தான் ஒன்றும் செய்யவில்லை. தனது மனைவியுடன் ஷாப்பிங் தான் வந்தேன் என்றும் கூறியுள்ளார். ஆனால், அந்த கடுங்கோபத்தில் இருந்த இளம்பெண், " என்னை ஒரு செக்ஸ் பொம்மை போன்று தானே கண்டாய், எனது மார்பை தீண்ட வேண்டும் என்று தானே என்னை நெருங்கினாய். வா, எடுத்துக் கொள் வா" என தனது மேலாடையை அவிழ்த்து, அந்த ஆணின் முகத்தில் தேய்த்துள்ளார்.


அடி!
 பாலியல் தொந்தரவு கொடுத்த ஆணை கீழே தள்ளி, அடித்து உதைத்து தனது கோபத்தை தீர்த்துக் கொண்டார் அந்த இளம்பெண். பிறகு தனது மேலாடையை எடுத்து அணிந்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இந்த மொத்த நிகழ்வையும் கூடி இருந்த கூட்டம் படம் பிடித்தது., வீடியோ எடுத்ததே தவிர, யாரும் அந்த ஆண் சீண்டும் போதும் தடுக்கவில்லை. இந்த பெண் கோபப்படும் போதும் உதவவில்லை.


ஆதரவு! 
 சுற்றியிருந்த மக்களில் வேடிக்கை பார்த்த பலரும், இந்த பெண்ணின் நடவடிக்கையை ஆதரிக்கிறோம். எத்தனை நாள் தான் பெண்கள் பொருத்து போவார்கள் என கூறியுள்ளனர். மேலும், ஒரு பெண் மட்டும், நீ செய்வது அபத்தமாக இருக்கிறது. நகரின் மத்தியில், சிறு குழந்தைகள் கண்ணெதிரே நீ இதுபோன்று நடந்துக் கொள்ளக் கூடாது. இது பெண்களை அவமானப்படுத்தும் செயலாக இருக்கிறது" என கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.


நாடகம்!
 ஆனால், அந்த ஆண் மற்றும் பெண் என ஒரு மேடை நாடக குழு சேர்ந்த அமைத்த நாடகம் தான் இது. இந்த மொத்த நிகழ்வும் அவர்கள் திட்டமிட்டு செய்த ஒன்று. பாஸ்டோ ரிபேரோ எனும் நபர் தான் இந்த நாடகத்தை உருவாக்கியுள்ளார். உலகம் முழுக்க பொது இடங்களில் வேலை செய்து வரும் பெண்கள், இது போன்ற கொடுமைகள் அனுதினமும் அனுபவித்து வருகிறார்கள். இதை எல்லாம் தடுக்க யார் தான் இருக்கிறார். இந்த தவறுகளை அனைவரும் எதிர்க்க வேண்டும். ஆண்களின் இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த நாடகத்தை ஏற்பாடு செய்தோம் என கூறியுள்ளார்.


பெண் சக்தி!
 பெண் என்பவள் பெரும் சக்தி, சமூகத்தின் அடையாளம் என உலகம் முழுக்க வெறும் வார்த்தைகளில் மட்டுமே கூறிக் கொள்கிறோம். ஆனால், அந்த சக்தி தினம், தினம் எத்தனை தடங்கல்கள் மற்றும் கொடுமைகளை எதிர்த்து இந்த உலகில் வாழ்ந்து வருகிறது என உங்களுக்கு தெரியுமா என பெண்ணியவாதிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


தினமும் இரவு என் தந்தை செய்யும் காரியத்தை கண்டு, முற்றிலும் வெறுக்கிறேன்!


நான் வாழும் வாழ்க்கை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். மூன்று பிள்ளைகளில் நான் தான் இளையவள். நான் ஒரு அப்பர்-மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த பெண். நான் சொல்லாமலேயே, நான் செல்லமாக வளர்ந்தவள், வேண்டுவது எல்லாம் கிடைக்கும் என பலர் எண்ணுகிறார்கள்.
 உண்மையும் அதுதான். ஆனால், நான் வேண்டாத சில விஷயங்களும் எனக்கு கிடைத்துள்ளது. அதை பற்றி நான் வெளியே பேச கூட முடியாத நிலை. எனது குழந்தை பருவ நாட்கள் மிகவும் அழகானவை, அற்புதமானவை. ஆனால், இரவு மிகும் அசௌகரியமானது, சித்திரவதையானது. அந்த நினைவுகள் என்னுள் பல ஆழமான மறையாத வடுக்களை உருவாக்கி சென்றுள்ளது. இன்னும் நான் அதை எப்படி கையாள்வது என அறியாதிருந்தேன்....
(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
தாய், தந்தையுடன்...
 சிறுவயதில் நான் எனது தாய், தந்தையுடன் தான் உறங்குவேன். என் உடன் பிறந்தவர்கள் பக்கத்து அறையில் படுத்து உறங்குவார்கள். அப்போது நான் இரண்டாவது அல்லது மூன்றாவது படித்துக் கொண்டிருந்த காலம். அப்போது தான் எனது பெற்றோர் பற்றி நான் ஒன்று கண்டறிந்தேன். சில சமயங்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை குறைத்து மதிப்பிடுவது உண்டு. அதனால் பாதிக்கப்பட்டவள் நான். நான் படுத்தவுடன் உறங்கிவிடுவேன் என எனது பெற்றோர் கருதினர். ஆனால், நடுராத்திரியில் அந்த சப்தம் கேட்கும் போது என்னால் அந்த நேரத்தில் விழித்துக் கொள்ள முடியாத நிலை தான் இருந்தது.


பரிதாபகரமான நிலை... 
நானும் எனது தந்தையும், எனது தாய் மற்றும் உடன் பிறந்தோர் உறங்க செல்லும் முன்னரே படுக்கையறைக்கு சென்றுவிடுவோம். எனது அம்மா அவரது வீட்டு வேலைகளில் பிஸியாக இருப்பார். உடன் பிறந்தோர் பள்ளி பாட வேலைகள் செய்துக் கொண்டிருப்பார்கள். நான் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற பிறகு அவர் அனுதினமும் எனது தாயை வற்புறுத்துவார். தினமும் இது நடக்கும், இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என தெரியாது. எனது தாய் பரிதாபகரமாக சப்தமிடுவார். அவருக்கு வலிக்கிறது என்று மட்டும் தான் நான் அறிவேன். சில காலம் கழித்து தான் அது எதனால் என நான் அறிந்துக் கொண்டேன்.


அசௌகரியம்! 
 இது தான் காரணம் என அறிந்த பிறகு இரவு மட்டுமல்ல, பகலிலும் நான் எனது தந்தையை வெறுக்க ஆரம்பித்தேன். ஆனால், இதுகுறித்து என்னால் வெளியே பேச இயலவில்லை. நான் நடுராத்திரியில் உடல்நலம் சரியில்லாதது போல நடிக்க துவங்கினேன். அவர்கள் நான் பயந்து போய் இருப்பதாக கூறினார்கள். வேண்டுமென்றே நாடு ராத்திரியில் எழுந்துக் கொள்வேன். என் தாயை அவரிடம் இருந்து காக்க, என்னென்ன செய்ய முடியுமோ, அனைத்தும் செய்தேன். ஆயினும், பல நாட்கள் அவர் விருப்பம் போலவே தொடந்தது.


மூன்று வருடங்கள் இப்படி தொடர்ந்தது... 
 இதில் பெரும் கொடுமையே, இது குறித்து யாரிடம் எப்படி கூறுவது என அறியாதிருந்தது தான். என் உடன் பிறந்தோர் என்னைவிட மிகவும் வயது மூத்தவர்கள். நான் அவர்களுடன் அவ்வளவு நெருக்கமாகவும் இருந்தது இல்லை. நண்பர்கள் அல்லது ஆசிரியர்களிடம் இந்த கேள்வியை எப்படி கேட்பது என்றும் தெரியவில்லை. பணியாள், ஓட்டுனர் என யாரிடமும் இதுகுறித்து நான் ஆலோசிக்க முடியாது. குழந்தைகள் இதுகுறித்து பேச கூடாது என்பது நமது சமூகத்தில் எழுதப்படாத சட்டம். ஆனால், என் வாழ்வில் இது பெரிய பிரச்சனை.


ஏழாம் வகுப்பு!
 நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, நான் நிரந்திரமாக எனது உடன் பிறந்தோருடன் உறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்கள் இரு அறைகளுக்கு மத்தியில் பல சுவர்கள் இருந்தன. ஆனால், எனது எண்ணம் முழுக்க அவர்களது படுக்கையறை பற்றியே இருந்தது.


இயல்பு...?!
 எனது தாயின் பாதுகாப்பு குறித்து நான் மிகவும் ஆலோசித்தேன். நான் கொஞ்சம், கொஞ்சம் வளரும் போது தான் செக்ஸ் என்றால் என்ன, அந்த ஆக்டிவிட்டி என்ன என்பது அறிய துவங்கினேன். திருமணத்திற்கு பிறகு இது மிக இயல்பு என்பதை உணர்ந்தேன். ஆனால், திருமண வாழ்வென்பது இது மட்டும் தான் என்றால், எனக்குக் அப்படி ஒரு பந்தமே தேவையில்லை.


குடி! 
 நான் பிறக்கும் முன்னர் அனைவரும் தாத்தா- பாட்டி வீட்டில் இருந்ததாகவும், அப்போது எனது தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து, எனது தாயை செக்ஸ் வைத்துக் கொள்ள தொல்லை செய்வார் என்றும் எனது உடன் பிறந்தோர் கூறி அறிந்தேன். என் தாய் உதவியின்றி தவித்தார் என்பதை நான் மிகுதியாக கண்டுணர்ந்தவள்.


அச்சம்! 
இன்னும் சில வருடங்களில் என் தந்தை எனது திருமணத்தை பற்றி பேச்சை துவங்குவார், அவரிடம் என்ன பதில் கூறுவது என தெரியவில்லை. ஒருவேளை சிலருக்கு இது பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், என்னை பொறுத்தவரை எனக்கு இது மிகப்பெரிய அச்சம். என் தந்தை எனது தாய்க்கு செய்தது மிகப்பெரிய கொடுமை.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


மெரீனா பீச்சில் நிர்வாணமாக பிணமாக கிடந்தவர் மதுரை லட்சுமி.. கொல்லப்பட்டது ஏன்?


மெரினா பீச்சில் மீட்கப்பட்ட பெண் யார் என போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து விட்டார்கள். மேலும் அந்த பெண் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்ததும் தெரியவந்துள்ளது. பீச்சில் உள்ள நீச்சல் குளம் பின்பக்கம் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதாக வாக்கிங் போனவர்கள் கண்டார்கள். அந்த பெண்ணின் உடல்மீது அரைகுறையாக மண்ணை போடப்பட்டும், மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டும், முகம், உடம்பு என எல்லா இடங்களிலும் பலமான காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.


விவரம் தெரியவில்லை
 மர்ம நபர் ஒருவர் உல்லாசமாக இருக்க அந்த பெண்ணை அழைத்து வந்து, ஒன்றாக தண்ணியும் அடித்துவிட்டு, பிறகு ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணை அடித்தே கொன்றுள்ளதும் தெரியவந்தது. ஆனால் அந்த பெண் யார் என்ன விவரம் உடனடியாக போலீசாருக்கு தெரியவில்லை. எப்பவுமே கூட்டமாக இருக்கும் இந்த கொலை எப்படி நடந்திருக்கும் என போலீசார் உட்பட எல்லோருமே ஷாக் ஆனார்கள். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
செல்போன் ஆய்வு
 சடலத்தின் அருகே இருவரின் செருப்பு, மதுபாட்டில்கள், பெண்ணின் செல்போன் இருந்திருக்கிறது. இந்த செல்போன் ரொம்ப சாதாரண பழைய மாடல் செல்போனாம். அதிலுள்ள நம்பர்களை கொண்டும், யாராவது அந்த பகுதியில் தொலைந்து போய் இருக்கிறார்களா என்பதை கொண்டும் விசாரணையை ஆரம்பித்தனர்.


நாய்கள் சண்டை
 தற்போது இந்த விசாரணையில் ஒருசில விவரங்கள் வெளிவந்திருக்கிறது. நீச்சல் குளம் பின்னாடி மேடு போன்ற பகுதியில் நேத்து விடிகாலை இரண்டு நாய்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பள்ளம் நோண்ட ஆரம்பித்திருக்கின்றன. பள்ளம் நோண்டுவதில் அந்த நாய்கள் சண்டை போட்டு கொண்டே இருந்திருக்கின்றன.


பாதி புதைந்த சடலம்
 இப்படி சத்தமாக குரைத்து கொண்டும், ஒரே இடத்தில் பள்ளம் நோண்ட போட்டி போட்டு சண்டையிடவும்தான் வாக்கிங் போனவர்களுக்கு சந்தேகம் வந்து கிட்ட போய் பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் மண்ணில் பாதி புதைத்தும் புதைக்காமலும் அந்த பெண்ணின் சடலத்தை பார்த்தோம் என போலீசாரிடம் பொதுமக்கள் சொல்லி இருக்கிறார்கள்.


நிர்வாண நிலை
 இதனையடுத்து பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து பார்த்தால் அவர் நிர்வாண நிலையில் இருந்துள்ளார். அங்கு மணலில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடலை தோண்டி எடுத்தனர். கொல்லப்பட்ட பெண்ணுக்கு 35 வயது இருக்கும். உடல் அருகே புடவை மற்றும் தாலி கயிறு, செருப்பு ஆகியவை மணலில் புதைந்து கிடந்தது. அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மதுரை லட்சுமி கொலை 
செய்யப்பட்ட 30 வயதுடைய பெண் மதுரையை சேர்ந்த லட்சுமி என்பதும், கடந்த 2 மாதமாக சென்னையில் தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக, அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள். பீச் மற்றும் நீச்சல் குளம் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் கொலையாளியை பிடித்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts