வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Social News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Social News. Show all posts
Showing posts with label Social News. Show all posts

Sunday, March 21, 2021

சோத்துப்பாக்கத்தில் பாதுகாப்பற்ற வேகத்தடையால் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் | Dangerous Speed Breaker in Sothupakkam | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சோத்துப்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளிக்கு அருகில் கடந்த மாதம் வேகத்தடை புதியதாக அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடையானது (Speed Breaker) சாலையின் இருபுறங்களிலும் உள்ள மரங்களின் நிழல் அதிகம் விழும் பகுதியில் உள்ளது.

மேலும், இந்த வேகத்தடையின் மீது “வெள்ளை பட்டை (அதாவது Stud)” ஏதும் போடப்படாமல் அதற்கு பதிலாக வெள்ளை வண்ணப்பூச்சினை  பூசிவைத்துள்ளனர். இந்த பூச்சானது தொடர் வாகன போக்குவரத்தின் காரணமாக அழிந்து கொண்டே வருகிறது.

இதனால் வேகமாக வரும் வாகனங்களுக்கு இந்த பகுதியில் வேகத்தடை இருப்பது சரியாக தெரியாத காரணத்தினால் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடையின்மீது வேகமாக ஏறி இறங்கி தலையில் இடித்துக் கொள்ளும் அபாயங்களும், இருசக்கர வாகனங்களின் வருபவர்கள் கீழே விழும் அவலங்களும் அவ்வப்போது ஏற்படுகிறது. 

குறிப்பாக இருசக்கர வாகனங்களின் பின்புறம் மகளிர் மற்றும் குழந்தைகள் அமர்ந்திருந்தால் அவர்கள் கட்டுப்பாடில்லாமல் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. மேலும் வாகனம் கட்டுப்பாடின்றி சென்று மரத்தின் மீது மோதும் அபாயங்களும் உள்ளது.

எனவே, இதுபோன்ற நிலை தொடர்ந்து ஏற்படாமல் இருக்க, வேகத்தடையின் மீது முறையாக “வெள்ளை பட்டை (அதாவது Stud)” போடப்பட வேண்டும் எனவும், பிரதிபலிப்பான்கள் (Reflectors) அமைக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.


Saturday, March 30, 2019

இராமாபுரம் சாலையில் காவு வாங்கும் வேகத்தடை (Speed Break) - விவரம் உள்ளே | Ramapuram Speed Break




காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி இராமாபுரம். இந்த பகுதியானது மேல்மருவத்தூர் to வந்தவாசி சாலையில் உள்ளது. இப்பகுதியில் 5 வேகத்தடைகள் உள்ளன. அதிக வாகனங்கள் செல்லும் இந்த முக்கிய சாலையில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.


காரணம் என்னவெனில், வேகத்தடையின் மேல் வெள்ளைபூச்சு பூசப்படாமலும்,  பிரதிபளிப்பான்கள் (Reflection) இல்லை. நெடுஞ்சாலை துறையினர் மூலம் தண்ணியான சுண்ணாம்பு நீர் போல உள்ள திரவியத்தை ஸ்பாஞ்ச் மற்றும் பெயின்ட் பிரஷ்களை கொண்டு பூசிவிட்டு கணக்கு காண்பிப்பதற்கு மட்டும் புகைப்படம் எடுத்துச்செல்லப்படும். பின்னர் மறுநாள் காலை பார்த்தால் அந்த திரவியம்கூட மிஞ்சாது. இரவில் பெய்யும் பனியிலேயே கரைந்து ஓடிவிடும். மேற்கண்ட புகைப்படத்தில் பார்த்தாலே தெரியும் இந்த வேகத்தடையின் நிலை.



சாலை ஓரங்களில் இருக்கும் மரங்களின் நிழல் காரணமாக அந்த தற்காலிக வெள்ளைபூச்சுகள் சுத்தமாக தெரியாத காரணத்தினால் வாகனங்கள் அந்த வேகத்தடைகள் மீது (Speed Break) வேகமாக ஏறி இறங்கி இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தவறி விழும் நிலை உள்ளது. நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் உட்புறமாக இடித்துக் கொண்டு காயமடைகின்றனர்.  ஆம்புலன்ஸ் செல்லும் போதும் உள்ளிருக்கும் நோயாளிகளும் உடன் சென்றவர்களும் கீழும் மேலும் விழுந்துகொண்டு செல்கின்றனர்.



எனவே, வாகன ஓட்டிகளின் நலன்கருதி இங்கு நிலையான வெள்ளை பூச்சு மற்றும் பிரதிபளிப்பான் (Refection) அமைக்கப்படுமா....? இந்த சாலையினை போட்ட கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா...? இதனை மேற்பார்வையிட்டு கையெழுத்திட்ட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதே இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் ஆதங்கம்.

Tuesday, February 19, 2019

ஒரத்தி ஊராட்சியில் பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்திற்கு லஞ்சம் - PM Kisan Samman



காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரத்தி ஊராட்சியில் பிரதம மந்திரியின் திட்டத்தின் கீழ் (PM Kisan Samman) விவசாயிகள் நலன் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அப்போது, ஒவ்வொரு ஏழை விவசாயிகளிடமும் பெறப்படும் மனுவிற்கு தலா ரூ.100/- கையூட்டாக பெறப்படுவது இந்த பக்கத்தில் உள்ள வீடியோ மூலம் ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகி உள்ளது.  


ஒரத்தி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் மூலம் பெறப்படும் இந்த மனுவானது, கிராம நிர்வாக உதவியாளர் மற்றும் 4 நபர்களின் மூலம் பெறப்படுகிறது. 




இந்த மனுக்களை பெறும்போது கிராம நிர்வாக உதவியாளர் சிவக்குமார் என்பவரின் துணையோடு அருகில் அமர்ந்திருக்கும் பெண் கையூட்டு பெறுவது மேற்காணும் வீடியோ மூலம் ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது.

அரசு திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் பயன்பெறும் இந்த திட்டத்தில் கூட ரூ.100/- கையூட்டு என்றால், அரசின் ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு கையூட்டு வாங்கப்பட்டுள்ளதோ என்பது அதிகாரிகளுக்குதான் தெரியும். ஒரு மனுவிற்கு ரூ.100/- என்றால் அந்த ஊராட்சியில் குறைந்தபட்சம் 1000 மனுக்கள் பெறப்பட்டால் கூட ரூ.1,00,000/- வசூலாகிவிடும். 

இப்படி யோசிக்கும் பட்சத்தில் எந்தெந்த ஊராட்சியில் எவ்வளவு வசூல் என்று கணக்கிடும்போது அரசின் வருமானம் இதிலிருந்தே புலப்பட்டுவிடும். ஆனால் இந்த வருமானம் அரசிற்கா அல்லது அரசு அதிகாரிகளுக்கா என்பது யாருக்கு தெரியும். அரசின் எந்த திட்டம் வந்தாலும் அதில் முக்கிய “பங்கு” அரசு அதிகாரிகளுடையது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கெல்லாம் எப்போதுதான் முற்றுப்புள்ளி கிடைக்கும் என்பதே பொதுமக்களின் ஆதங்கம்.


Sunday, January 20, 2019

உழுதமங்கலம் கிராமத்தில் இரவு பாடசாலை & நூலகம் அமைக்கும் முயற்சியில் தமிழ்நாடு மக்கள் கட்சி..


காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள உழுதமங்கலம் கிராமத்தில் இரவு பாடசாலை & நூலகம் அமைக்கும் முயற்சியில் தமிழ்நாடு மக்கள் கட்சி..


இன்று (18.01.2019) கிராம மக்களின் ஒப்புதலுடனும்  பங்கேற்புடன் அடிகள் நாட்டு நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது பெரும் மகிழ்ச்சி.


நிகழ்வில் தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் இளையராஜா சே.
செ. பிரகாஷ் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அண்ணன் ஜெகநாதன் கிராம பெண்கள், இளைஞர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.


எங்களின் இந்த பயணம் பல்வேறு கிராமங்களை நோக்கி தொடர்ந்து முன்னேறும்.

நன்றி
சு.க.சுஜி
தமிழ்நாடு மக்கள் கட்சி

தொடர்புக்கு
9944339756


டிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்

டிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களை குறித்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக பாலியல் புரோக்கர் ஒருவர் பகீர் தகவலை வாக்குமூலமாக வெளியிட்டார். டப்ஸ்மாஷ் என்ற ஆப் ஒன்று பிரபலம் ஆனது. அதில் வரும் சினிமா பாடல்களுக்கும், வசனங்களுக்கும் அனைத்து தரப்பினரும் வாயசைத்து தங்கள் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்தனர். 
எனினும் இவை சம்பந்தப்பட்டவரின் செல்போனில் மட்டுமே இருக்கும். அவராக பார்த்து யாருக்காவது வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பார்வார்டு செய்தால் உண்டு. ஆனால் தற்போது அறிமுகமாகியுள்ள டிக் டாக் செயலியில் உலகம் முழுக்க பார்க்கும் படி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

ஆபாச ஆடை 
இதில் பெண்கள், கல்லூரி மாணவிகள் என மிகவும் ஆபாசமாக ஆடை அணிந்து கொண்டு செக்ஸியாக நடனம் ஆடுகின்றனர். இது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால் இதை அனைவரும் பார்க்கின்றனர்.




பரபரப்பு தகவல் 
இது போன்ற பெண்களை குறி வைத்து அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக பாலியல் புரோக்கர் ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சென்னையில் ஐடி நிறுவன ஊழியர்களை குறிவைத்தும், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மசாஜ் சென்டரில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த புரோக்கர் பூங்கா வெங்கடேசன் (43).

குண்டர் சட்டம்
இவர் மீது சென்னை முழுவதும் 60க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலம் தப்ப முயன்ற பூங்கா வெங்கடேசனை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 6ம் தேதி கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.




டிக் டாக் செயலி 
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் பாலியல் தொழிலை விரிவுப்படுத்த நவீன முறையை பயன்படுத்தலாம் என நினைத்த போதுதான் டிக் டாக் செயலி நினைவுக்கு வந்தது. இதில் பல பெண்கள் வீடியோக்களை வெளியிடுகின்றனர்.


சாட்டிங் 
அவர்களுள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அரைகுறை ஆடைகளோடு ஆபாசமாக நடனமாடி பெண்கள் வீடியோக்களை பதிவு செய்கின்றனர். இவர்களுள் யாருக்கு அதிக லைக்ஸ் கிடைக்கிறது என்பதை வைத்து அவர்களிடம் சாட்டிங்கில் நட்பாக பேசுவோம்.


தொழில் நடத்த 
பின்னர் அவர்களிடம் நைஸாக பேசி பாலியல் தொழிலுக்குள் கொண்டு வருவோம். அதோடு இந்த வீடியோக்களுக்கு மயங்கி ஆபாசமாக கமெண்ட் போடும் ஆண்களையும் விடாமல் சாட் செய்து அவர்களை அந்த பெண்களுடன் உறவு கொள்ள வைப்போம். இப்படித்தான் பாலியல் தொழிலை நடத்தி வந்ததாக வெங்கடேசன் வாக்குமூலம் அளித்தார்.

சென்னை - தூத்துக்குடி வரை ரூ13,200 கோடி மதிப்பில் புதிதாக 8 வழிச்சாலை - மத்திய அரசு முடிவு

  • மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் இருந்து இந்த திட்டத்திற்காக முன்வைத்துள்ள விரிவான திட்ட அறிக்கை நகல் தந்தி டி.விக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.


  • அதில் பாரத் மாலா திட்டத்தின் கீழ் 13,200 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சென்னையிலிருந்து விழுப்புரம் வரை 10 வழி சாலை திட்டமாகவும், விழுப்புரத்திலிருந்து தஞ்சாவூர் திருச்சி வரை 8 வழி சாலை திட்டமாகவும், தஞ்சாவூர், திருச்சியிலிருந்து தூத்துக்குடி வரை ஆறு வழி சாலை திட்டமாகவும் இதை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 

  • இதன் மூலம் சென்னை-தூத்துக்குடி இடையிலான பயண தூரம் 100 கிலோமீட்டர் வரை குறையும் என கூறப்படுகிறது.
  • தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், புதிய பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, மத்திய சுற்றுச்சூழல் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
  • 2022ஆம் ஆண்டுக்குள் பசுமை வழிச்சாலை திட்டங்களை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

Thursday, January 03, 2019

[வீடியோ] தூத்துக்குடியில் டீ மாஸ்டர் மீது போலீஸ் டீ ஊற்றி அராஜகம் - Tuticurin Police Harassment Video

29-12-18 காலை சுமார் 4மணி அளவில்  தூத்துக்குடி ரூரல் DSP முத்தமிழ் மற்றும் அவருடைய பாதுகாவலர் பொன்பாண்டி மற்றும் ஒரு காவலர்...


தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரத்தில் உள்ள ஸ்ரீ மகாலெட்சுமி அய்யங்கார் பேக்கரியில் மூன்று லெமன் டீ கேட்டுள்ளார்கள் டீ மாஸ்டர் டீயை போட்டு கொடுத்துள்ளார் அந்த டீ நல்லா இல்லை என்று  சொல்லி DSPஅந்த டீ மாஸ்டரை  கன்னத்தில்  ஓங்கி அடித்துவிட்டு தனது இடது கையிலிருந்த டீயை மார்பு மீது ஊற்றும் காட்சி...


அது மட்டும் இல்லாமல் DSP பாதுகாவலர் பொன்பாண்டி அந்த டீ மாஸ்டரை வண்டியில் ஏற்றி புதுக்கோட்டை சுங்கச்சாவடி வரைக்கும்    நி என்ன சாதி என்று கேட்டு மாறி மாறி கன்னத்தில் அடித்தும் அவதூறாக பேசியுள்ளார் பின்னர் புதுக்கோட்டை சுங்கச்சாவடியில் இறக்கிவிட்டனர். இந்த அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகள் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Sunday, December 30, 2018

செண்டிவாக்கத்தில் கலக்கல் கலெக்‌ஷன் - காவல்துறையினரைக் கண்டு பீதியில் வாகன ஓட்டிகள்



காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுதான் செண்டிவாக்கம் என்னும் கிராமம். இந்த பகுதியானது மேல்மருவத்தூர் - வந்தவாசி செல்லும் சாலையில் உள்ளது. இந்தப் பகுதிகளில் காவல் துறையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதே வாகன ஓட்டிகளின் ஆதங்கம்.


தினமும் காலை 10 மணியளவில் ஆஜராகும் போலீசார் மாலை 6 மணியளவில் தான் திரும்புகின்றனர். பொதுமக்களைப் பொறுத்தவரை மேல்மருவத்தூர் காவல்நிலைய கிளை என்பது செண்டிவாக்கம் தான் என்று தோன்றும் அளவிற்கு அவர்களின் நேர செலவிடல் இங்குதான் உள்ளது. சில சமயங்களில் காலை இருவேறு போலீசாரும் மதிய உணவிற்கு பிறகு இருவேறு போலீசாரும் என சுழற்சி முறையில் கலெக்‌ஷன் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இந்தப் பகுதியில் வேகத்தடை (Speed Breaker) உள்ளதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் போலீசார்.


ரூ.500/-ல் அபராதம் வசூலிக்க ஆரம்பிக்கும் இவர்கள் அந்த நபர் (வாகன ஓட்டிகள்) ரூ.50/- தான் என்னிடம் உள்ளது என்று கூறும் அளவிற்கு வரும் வரை பொறுத்து கைக்கு கிடைத்ததை வாங்கிக் கொள்கின்றனர் என்பதே வாகன ஓட்டிகளின் ஆதங்கம். 


இப்படி ஒரு அவல நிலை இருக்கும் காரணத்தினாலேயே வாகன ஓட்டிகள் வேறு வழியில் செல்லும் எண்ணம் மேலோங்குகிறது. காரணம் என்னவெனில் அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பினும் குறைந்தபட்ச தொகையாவது கொடுத்தால் தான் விடுவிக்கிறார்கள் என்பதே. 


மேலும் பலதரப்பினர் பல்வேறு அவசர காரியங்களுக்கு செல்லும் போதும், பணிக்காக செல்லும் போதும் பொதுமக்களின் நேரத்தை வீணடிக்கின்றனர்.  தற்போது பொதுமக்களின் கேள்வி என்னவென்றால் மேல்மருவத்தூர் காவல் துறையினரின் போலீஸ் பூத் பகுதி இதுதானா..? அல்லது கிளை காவல்நியைம் இதுதானா என்பதே..?  


தற்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் இருமுடி சீசன் என்பதால் கூடுதல் போலீசார் ஆட்டோக்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பொதுமக்களை கட்டுப்படுத்துகிறார்களோ இல்லையோ..! தவறாமல் வாகன ஓட்டிகளிடம் கலக்கல் கலெக்‌ஷனில் ஈடுபடுகின்றனர். மேலும் எவ்வளவோ வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா என தோன்றும் அளவிற்கு இவர்களின் செயல்பாடுகள் உள்ளது. மேலும், இவர்களால் நல்ல காவல் துறை அதிகாரிகளுக்கும் அவப்பேர் தான் ஏற்படும் என்பதில் எவ்வித மறுப்புமில்லை. 


இந்த அவல நிலையால் பல்வேறு சமூக ஆதங்கங்களுடன் காவல் துறையில் புதியதாக பணியில் சேரும் காவலர்களுக்கும் கலெக்‌ஷன் பயிற்சி அளிக்கப்படுவதால் பிற்காலத்தில் இவர்களும் நச்சுவாக மாற வாய்ப்புள்ளது. எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வளர்ந்தபோதும் வாகன ஓட்டிகளின் குறைகளை கண்டறிய காவல் துறையின் இப்படிப்பட்ட சோதனைகள் தேவையற்றதே. எனவே இந்த அவல நிலைக்கு தமிழக அரசு தரப்பில் முற்றுப்புள்ளி வைக்க ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பதே பொதுமக்களின் ஆதங்கம்.


Sunday, December 23, 2018

மதுராந்தகம் தொகுதி MLA திரு.சு புகழேந்தி அவர்கள் மக்கள் நலனுக்காக டெல்லியில் கோரிகை மனு




காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி MLA திரு.சு புகழேந்தி அவர்கள் தமது தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும், அந்த இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க வலியுறுத்தியும் மாநிலங்களவை உறுப்பினர் திரு. சிவா அவர்களுடன் சேர்ந்து மத்திய தரைவழி போக்குவரத்து இணை அமைச்சர் திரு.மான்சுக் மாண்டவியா அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.




மேற்கண்ட விபத்துக்குரிய பகுதிகள் என்னவென்றால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புக்கத்துறை, படாளம், கக்கிலப்பேட்டை, அய்யனார்  கோயில் கூட்ரோடு போன்றவைகளாகும். இந்த பகுதிகளில் தினமும் சாலை விபத்துகளால் பொதுமக்கள் காயமடைவது மட்டுமல்லாமல், சில சமயங்களில் மரண நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

எனவே, குறிப்பிட்ட  பகுதிகளில்  மேம்பாலங்கள் அமைக்க  கோரி தி.மு.க-வை சார்ந்த MLA திரு.சு புகழேந்தி அவர்கள் பொதுமக்களுக்கான பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு புதுதில்லியில் நேரில் கோரிக்கை மனு அளித்தார்.



அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



Friday, November 16, 2018

மேல்மருவத்தூர் அருகே அகிலி ஊராட்சியில் சாலை சீரற்ற நிலையில் உள்ளது



காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது.

இந்த சாலையில் கற்கள் பேர்த்துக்கொண்டு, செம்மன் தெரியும்படி உள்ளது. இந்த சாலையானது அகிலி ஊராட்சிக்குட்பட்ட அகிலி காலனிக்கு செல்லும் சாலையாகும்.




மாநில அரசு 8 வழிச்சாலையில் கவனம் செலுத்துகிறதே தவிர இதுபோன்ற ஊரக சாலையை பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஏனெனில் 4 மற்றும் 8 வழிச் சாலையினால் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஆதாயம் உள்ளது என்பதே இதற்கு சான்று.


தேர்தல் நேரங்களில்தான் ஒரு சில கிராமபுற சாலைகள் சீரமைக்கப்படுகின்றன. மேலும், ஆளுங்கட்சியினை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மட்டும் குறுகிய காலத்திலேயே பளபளப்பாக மாறிவிடும். ஆனால், தேர்தல் முடிந்த பிறகு சாலையில் பழுது ஏற்பட்டால் அதன் அவல நிலை இதுதான்.



மேற்கண்ட ஊராட்சியில் உள்ளது போல ஏகப்பட்ட சாலைகள் இந்த நிலைமையில்தான் உள்ளது. எனவே, கிராமப்புறப் பகுதிகளின் போக்குவரத்தினை மனதில் கொண்டு இது போன்ற சாலையினை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Thursday, November 15, 2018

மேல்மருவத்தூர் அருகே உள்ள இராமாபுரம் கிராமத்தில் குழந்தை திருமணம் தடுப்பு பிரச்சாரம்



காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேலாமூர் ஊராட்சி, இராமாபுரம் கிராமத்தில் குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு [CCRN] மூலமாக  குழந்தை திருமணம் தடுப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

இந்தப் பிரச்சாரத்தில் கிராம பொதுமக்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த பிரச்சாரமானது Rural Star Trust  மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

குழந்தை பாதுகாப்பு உதவிக்கு அழையுங்கள் 1098.







அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts