வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Tamil Nadu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Tamil Nadu News. Show all posts
Showing posts with label Tamil Nadu News. Show all posts

Sunday, May 05, 2019

அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தமிழக காவல் துறை - ஆர்பரிக்கும் பொதுமக்கள் : இனி உங்கள் வீடுகளை 24 மணி நேரமும் நேரடியாகவே கண்காணிக்கும் போலீஸ்..!


திருச்சி மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகள், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் தொடர் இணைப்பின் மூலமாக திருச்சி மாநகரம் முழுவதையும் இணைத்து திருச்சி மாநகர நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் மெகா திரையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி மாநகரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் உள்ள அனைத்து பகுதிகளையும் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனத்தை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் சிசிடிவி கேமராக்களை பொருத்தி விட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் கட்டுப்பாட்டு அறையின் மூலமாக நேரடியாக கண்காணிக்கப்படும்.

Tuesday, October 16, 2018

திருமணமான 21 நாளிலேயே கணவன் வெளிநாட்டிற்குச் சென்றதால் கல்லூரி நண்பனுடன் மனைவி உல்லாசம் !



ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த நாகநந்தினி என்ற பெண்ணுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணமான இருபத்தோராம் நாளிலேயே துபாயில் உள்ள தனியார் மீன்பிடி நிறுவனத்தில் ஆனந்த பிரகாசிக்கும் வேலை கிடைத்தது.

இதனால் அவர் வெளிநாட்டிற்கு பயணம் ஆனார் அவர் செய்த கடும் முயற்சியால் கடந்த ஆண்டு வரை நாகநந்தியை சுற்றுலா விசாவில் துபாய்க்கு அழைத்து சென்று அந்த பிரகாஷ் இரண்டு மாதங்கள் அங்கு இருந்துவிட்டு ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.

பணி நிமித்தமாக ஆறு மாதங்களுக்கு முன்பு துபாய்க்கு சென்ற கணவர் மனைவியை மீண்டும் சுற்றுலா விசாவில் இங்கு வருவதற்கான ஏற்படுகளை செய்துள்ளார் இதற்காக மனைவி நாலு மணிக்கு விமான டிக்கெட்டுடன் அறிந்து வைத்துள்ளார்.


ஆனந்த பிரகாஷ் இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை நான் வீட்டில் இருந்து மாயமானார் பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில் ஏதோ ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து ஏர்வாடி காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் நாகநந்தினி மாயம் அதற்கான காரணம் தெரிய வந்தது திருமணத்துக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் போது சக மாணவரான சின்ன ஏர்வாடியை சேர்ந்த வெண்ணிலவின் என்பவரை காதலித்தார்.

இந்த விவகாரம் நாகநந்தினி குடும்பத்தாருக்கு தெரிய வரவே அவரது பெற்றோர்கள் ஆனந்தப் பரவசம் திருமணம் செய்து வைத்துள்ளனர் தனது காதலன் ஊரான சின்ன ஏர்வாடி அருகே இருக்கக்கூடிய மங்களேஸ்வரி நகர் திருமணமாகி சென்ற தனது காதலரான நட்பைத் துறந்து உள்ளார்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் செல்போனிலும் வாட்ஸ் அப்பிலும் பேசியுள்ளனர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அந்த பிரகாஷ் வெளிநாடு சென்று இருவருக்கும் இடையேயான பழக்கம் உச்சத்தை அடைந்திருக்கிறது.

இந்த சூழலில் நாகநந்தினி நிலவின் ஜோடி வீட்டில் இருந்து வெளியேறி தூத்துக்குடியில் சென்று தங்குமாறு அவர்களைக் கண்டுபிடித்து ஏர்வாடி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு வந்து ஆனந்த பிரகாஷ் நாகநந்தினி உறவினர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


என்ற ஒற்றைக் காரணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு காதலன் வெண்ணிலா உடனே போலீசார் குறியாக இருந்ததால் உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள் இயற்கை நாகநந்தினி உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த கதை இதற்காக இந்த வாரத்தின் மத்தியில் நாக நந்தினி தனது காதலனுடன் தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளார் என்று பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்து போலீசார் கல்லூரி கால காதல் வெண்ணிலா உடனே நாகநந்தினி அனுப்பி வைத்தனர்.

திருமணத்திற்கு முன்பே தனது காதல் விவகாரத்தில் நாகநந்தினி உறுதியாக இருந்திருந்தால் இப்போது திருமணம் முடிந்து ஒரு ஏமாற்றியதாக காவலுக்கு நிற்க வேண்டிய நிலை வந்திருக்காது அல்லவா.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Sunday, October 14, 2018

ரேஷன் கடை ஊழியர்கள் நாளை முதல் வேaலைநிறுத்தம் - Fair Price Shop Strike News

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். பணி வரன்முறை, ஓய்வூதியம், மருத்துவ படியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 30  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்கும் இந்த போராட்டத்தால் 30 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடப்படும் எனவும் கூறினார். நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Friday, October 12, 2018

குட்கா ஊழல் வழக்கில் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை



குட்கா ஊழல் வழக்கில் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.



தமிழக போலீஸ் துறையை உலுக்கியுள்ள ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் குட்கா வியாபாரியும், தொழில் அதிபருமான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

இந்த ஊழல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், மதுரை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு மன்னர் மன்னன் மற்றும் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரின் வீடுகள் உள்பட 35 இடங்களில் சோதனை நடத்தினார்கள். பின்னர் இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது அவர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.


இந்த ஊழல் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், குட்கா விவகாரம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு நிறைய விவரங்கள் தெரியும் என்றும், அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றியபோது மாதவராவின் குட்கா குடோனில் சோதனை நடத்தியது பற்றி தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதற்கு அப்போது பதில் அளித்த ஜெயக்குமார், குட்கா விவகாரத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் விசாரணையை சந்திக்க தயார் என்றும் குறிப்பிட்டிருந்தார். குட்கா குடோனில் முதன்முதலாக சோதனை நடத்திய அதிகாரி என்பதால் ஜெயக்குமாரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜெயக்குமாருக்கு நேற்று முன்தினம் அவர்கள் சம்மன் அனுப்பினர்.


அதன்படி நேற்று அவர் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் காலை 11.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 2-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த விசாரணை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ‘சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை சுமூகமாக நடந்தது. கேட்ட கேள்விகளுக்கு தெளிவாகவும், விளக்கமாகவும் பதில் அளித்துள்ளேன். நாளையும் (இன்று) என்னிடம் விசாரணை நடத்த உள்ளனர்’ என்று தெரிவித்தார்.

போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில், இந்த வழக்கில் மேலும் முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே குட்கா ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை துணை இயக்குனர் ஷியோரனிடமும் நேற்று நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவர் சென்னையில் மத்திய கலால் துறை உதவி இயக்குனராக பணியாற்றிய போது, குட்கா ஊழல் வழக்கில் இவருக்கும் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதன்பேரில் ஷியோரனிடம் விசாரணை நடந்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


திருச்சியில் ஏர் இந்தியா விமானம் டவர் மீது உரசியது - அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு



திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.




திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. 130 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக குறைந்த உயரத்தில் பறந்ததால் விமானத்தின் சக்கரங்கள் 5 அடி உயர சுற்றுச்சுவரில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.(தொடர்ச்சி கீழே...)


இதையும் படிக்கலாமே !!!

மேலும், சுவருடன் சேர்ந்து அருகே இருந்த வான் கட்டுப்பாட்டு கோபுரத்திலும் உரசி சென்று விமானம் விபத்தை ஏற்படுத்தியது. இந்த எதிர்பாரா விபத்து காரணமாக விமானம் மும்பையில் தரையிறக்கப்படவில்லை. நேராக துபாய் சென்றடைந்த விமானம் அங்கு பத்திரமாக தரையிரங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஏர் இந்தியா விமானியின் சாமர்த்தியத்தால் விமானத்தில் பயணித்த 130 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


போளூரில் நகைக்கடைகள் உள்பட 10 இடங்களில் விடிய, விடிய வருமான வரி சோதனை



திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நகைக்கடைகள் உள்பட 10 இடங்களில் வருமானவரித்துறையினரின் சோதனை 2-வதுநாளாக இன்றும் நீடிக்கிறது.


 திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிந்தாதிரிபேட்டை தெருவில் உள்ள நகைக்கடைகள் மீது வரி ஏய்ப்பு புகார் சென்றது. இதையடுத்து, சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரி சுப்பிரமணியன் திருவண்ணாமலைக்கு வந்தார்.
      
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இவருடைய தலைமையில் வருமானவரித்துறை மற்றும் வணிக வரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய 14 பேர் குழுவினர் 6 கார்களில் நேற்று மாலை 3.30 மணியளவில் போளூர் வந்தனர். 2 நகைக்கடைகளில் சோதனை நடத்தினர்.  வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பி விட்டு ஊழியர்களை மட்டும் கடைக்குள் வைத்து கொண்டனர். கடைகளின் முன்பக்க கதவை அடைத்து விட்டு சோதனையை தீவிரப்படுத்தினர்.


நள்ளிரவு வரை நீடித்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 2 நகைக்கடை ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பாமல் விடிய, விடிய விசாரணை நடத்தினர். சோதனை நடத்தப்பட்ட நகைக்கடைக்கு சொந்தமான ஜவுளிக்கடை எதிரிலேயே உள்ளது. அதிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், நகைக்கடை அதிபர்களின் வீடுகள், கார்டன்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.


நேற்று மாலை தொடங்கிய வருமான வரி சோதனை 2-வது நாளாக இன்றுவரை நீடிக்கிறது. கணக்கில் வராத வரவு-செலவு ஆவணங்கள் சிக்கியுள்ளதால், வருமான வரி சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts