வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Thandranpattu murder news
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Thandranpattu murder news. Show all posts
Showing posts with label Thandranpattu murder news. Show all posts

Sunday, December 29, 2019

தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது | Son murdering his father

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அரடாபட்டை சேர்ந்தவர் பெருமாள், 67; இவருக்கு, முருகன், 40, லட்சுமணன், 38, சேகர், 36, என மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.



அனைவருக்கும், திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். சேகரின் மனைவி சத்யா, 35. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். தம்பதி இடையே கருத்து வேறுபாடால், சேகரை பிரிந்த சத்யா, தற்போது, வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.


மனைவி தன்னுடன் வாழாததற்கு, தந்தை பெருமாள் தான் காரணம் என, சேகர் அடிக்கடி கூறி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தந்தை பெருமாளுக்கும், சேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் தூங்க சென்றனர். நள்ளிரவில், தூங்கிக் கொண்டிருந்த பெருமாளை, சேகர் அரிவாளால் தலை மற்றும் கழுத்தில் வெட்டினார்.


இதில், சம்பவ இடத்திலேயே பெருமாள் பலியானார். இது குறித்து அக்கம் பக்கத்தினர், வெறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார், பெருமாளின் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து, சேகரை கைது செய்தனர். தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.