வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Weather News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Weather News. Show all posts
Showing posts with label Weather News. Show all posts

Tuesday, January 11, 2022

இன்று மழைக்கு வாய்ப்பு ; வானிலை மையம் அறிவிப்பு.!

டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வானிலை செய்திகள் 


முந்தைய வானிலை செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Friday, December 17, 2021

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! எங்கெல்லாம் மழை பெய்யும்?

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.19ம் தேதி வரை தென்மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ள வானிலை மையம், அங்கு அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 20ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 18,19 ஆகிய தேதிகளில் தென் மாவடங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 20ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Thursday, December 16, 2021

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி : தமிழகத்திற்கு மீண்டும் மழை.!

நாளை முதல்19-ம் தேதி வரை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், புதுக்கோட்டையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

இன்று முதல் 19-ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

குமரிக்கடல் மற்றும் இலங்கையின் தெற்கு பகுதிகளுக்கு4 நாட்களுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

இதனால் நாளை முதல்19-ம் தேதி வரை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Monday, December 06, 2021

தென் மாவட்டங்களுக்கு அலெர்ட் : வானிலை மையம் தகவல் | Rain Alert for Southern Districts in TN | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 7-ம் தேதி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 7-ம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ; எதுவுமில்லை.!

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Friday, April 26, 2019

28, 29 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை !




இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.



இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும், இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வரும் 30 ஆம் தேதி தமிழக பகுதியில் இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், புயல் கரையை கடக்கும் போது கடல் காற்று மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனால் மீனவர்கள் யாரும் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இன்றும், நாளையும் வட மாநிலங்களிலும், நாளை மறுதினம் கேரளாவிலும் சூழல் காற்று வீசக்கூடும் எனவும் அறிவித்துள்ளது. 



வரும், 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Saturday, December 29, 2018

பிலிப்பைன்ஸ்சில் நிலநடுக்கம்.. இந்தோனேஷியாவிற்கு சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸ் தீவில், 6.9 ரிக்டர் அளவுகோலில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மின்டானோ என்ற பகுதியை மையமாக கொண்டு, பூகம்பம் தாக்கியுள்ளது. இதனால், இந்தோனேஷியா, 
 (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

பாலோ உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை பிறப்பித்துள்ளது, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம்.
இதுவரை, பூகம்பத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. 

இந்த பூகம்பம் 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவியுள்ளது. இதன் தாக்கம் 300 கி.மீ சுற்றளவு வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுனாமி காரணமாக 0.3 மீட்டர் வரையில், அலை எழக்கூடிய வாய்ப்பு உள்ளது. பூகம்பம் தாக்கியதும், அது 7.2 ரிக்டர் அளவுக்கு இருந்ததாக கூறப்பட்டது. பின்னர், அது 6.9 ரிக்டர் என அறிவிக்கப்பட்டது. இது சிறு அளவிலான சுனாமி எச்சரிக்கைதான் என்பதால், மக்கள் பீதியடையத் தேவையில்லை.

Sunday, December 16, 2018

அதிவேகம்.. வலுப்பெற்ற பேய்ட்டி.. சென்னையில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா?



வங்க கடலில் உருவாகி உள்ள பேய்ட்டி புயல் காரணமாக சென்னையில் நாளை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. 


ஆந்திராவில் பேய்ட்டி புயல் கரையை கடக்க உள்ளது. நாளை பிற்பகல் கரையை கடக்கும். ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டனம் - காக்கிநாடா இடையே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இதனால் ஆந்திராவில் குண்டூர், கோதாவரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னைக்கு எவ்வளவு அருகில் புயல் கரையை கடக்கிறதோ அந்த அளவிற்கு புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படும்.


மிக அருகில் 
இந்த புயல் இப்போது ஆந்திராவை விட சென்னைக்குத்தான் அருகில் இருக்கிறது. சென்னைக்கு இந்த புயலால் பெரிய பாதிப்பு கிடையாது. ஆனால் சென்னைக்கு மிக அருகில் வந்துவிட்டு பின் இந்த புயல் ஆந்திராவை நோக்கி நகரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை  
 இதனால் சென்னையில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இன்றும் நாளையும் இந்த புயலால் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. சென்னையை போலவே வடதமிழ்கத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


எங்கு உள்ளது  
இந்த புயல் தற்போது சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இது சென்னையில் இருந்து 130 கிமீ தூரம் வரை நெருக்கமாக வரும் என்று கூறியுள்ளனர். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக சென்னையில் இருந்து விலகி ஆந்திரா நோக்கி செல்லும்.

காற்று வீசும்  
இந்த புயல் சென்னையை நெருங்கும் போது சென்னையில் பெரிய அளவில் காற்று வீச வாய்ப்புள்ளது. ஆனால் கஜா புயல் அளவிற்கு காற்று வீசாது. இந்த புயலால் சென்னை பெரிய அளவில் பாதிக்காது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

Saturday, December 15, 2018

வங்கக் கடலில் புயல்.. கடலோர மாவட்ட துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்



வங்க கடலில் உருவாகி இருக்கும் புயல் காரணமாக, இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.


புரட்டி போட்ட கஜாவுக்கு பிறகு அடுத்தடுத்த புயல்கள் தமிழகத்துக்கு வர இருக்கின்றன என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் கஜா அளவு தீவிரமான புயல் இருக்காது என்றும் இந்த புயல்கள் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. அதன்படி, தற்போது, தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

தாழ்வு மண்டலம் 
இதை பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் சொன்னதாவது: "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத தாழ்வு மண்டலம் வலுவடைந்தது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.


புயலாக வலுப்பெறும் 
இது நேற்று சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 930 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 1,090 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்கிறது. இன்று அது புயலாக வலுப்பெறும்.

கரையை கடக்கும்  
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இந்தப் புயல் வருகிற 17-ம் தேதி பிற்பகல்தான் கரையை கடக்கும். ஆந்திர கடற்கரை பகுதியான ஓங்கோலுக்கும் காக்கி நாடாவுக்கும் இடையே இந்த புயல் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னை, காஞ்சிபுரம்  
இதன் காரணமாக, வடதமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

கடல் கொந்தளிப்பு  
தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். அதனால் இந்த பகுதிகளுக்கு சனி, ஞாயிறு இரு தினங்களில் மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தி இருந்தார்.


கடலுக்கு செல்லவில்லை 
கடல் சீற்றத்துடன் காணப்படும் என்ற எச்சரிக்கையை அடுத்து, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் இன்று 2-வது நாளாகவும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

புயல் எச்சரிக்கை கூண்டு 
மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கும் விதமாக எண்ணூர், சென்னை, கடலூர், நாகை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல, தூத்துக்குடி மற்றும் பாம்பன் துறைமுகத்திலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts