வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வெறும் 50 ரூபாய் செலவுல 6 மாசத்துக்கான டிடர்ஜெண்ட் தயாரிக்கலாம்... எப்படின்னு தெரியுமா...?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, September 27, 2018

வெறும் 50 ரூபாய் செலவுல 6 மாசத்துக்கான டிடர்ஜெண்ட் தயாரிக்கலாம்... எப்படின்னு தெரியுமா...?


வெறும் 50 ரூபாய் செலவுல 6 மாசத்துக்கான டிடர்ஜெண்ட் தயாரிக்கலாம்... எப்படின்னு தெரியுமா?...



நீங்கள் துணியை என்ன தான் அடித்து துவைத்துக் கசக்கி பிழந்தாலும் அழுக்கு மட்டும் போகவே போகாது. ஆனால் உங்கள் கைகளில் மட்டும் தோல் உரிதல், ஒவ்வாமை போன்ற சரும பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதற்கு காரணம் என்ன? ஆமாங்க நாம் தினந்தோறும் பயன்படுத்தும் கெமிக்கல் நிறைந்த டிடர்ஜெண்ட் தான்.



இந்த கெமிக்கல்கள் நிறைந்த டிடர்ஜெண்ட் நம் இல்லத்தரசிகளின் கைகளை மட்டும் பாழாக்குவதில்லை அவர்களின் பட்ஜெட்டையும் சேர்த்து தான் கடிக்கிறது.


டிடர்ஜெண்ட் செயற்கை நறுமணம், சல்பேட், பினோல், பெட்ரோலியம் டிஸ்டிலேட் போன்ற கெமிக்கல்கள் உடன் விலை உயர்ந்தது வேறு. அதனால் தான் உங்கள் கைகளுக்கும் இயற்கை சூழலுக்கும் நண்பனாக செயல்படும் விலை மலிவான டிடர்ஜெண்ட்டை இனி வீட்டிலேயே உங்களால் தயாரிக்க இயலும். நாங்கள் கூறும் இந்த விரைவான டிடர்ஜெண்ட் கலவை கண்டிப்பாக உங்கள் துணியை மினுமினுக்க வைப்பதோடு உங்கள் பட்ஜெட்டிலும் மிச்சத்தை ஏற்படுத்தி விடும்.

போரக்ஸ் டிடர்ஜெண்ட் தேவையான பொருட்கள் பார் சோப்பு போரக்ஸ் வாஷிங் சோடா பயன்படுத்தும் முறை தூளாக்கிய பார் சோப்புடன் 2/4 பங்கு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். தண்ணீரை நன்றாக சோப்பு கரையும் வரை சூடுபடுத்தவும். 5 லிட்டர் வாளியில் 4.5 லிட்டர் சூடான நீரை எடுத்து கொள்ளுங்கள். 1 கப் வாஷிங் சோடா மற்றும் போரஸ்யை சேர்க்கவும். இப்பொழுது கரைந்த சோப்பு கவலையையும் இதனுடன் சேர்த்து நன்றாக கலக்குங்கள். இதை அப்படியே இரவு முழுவதும் விட்டு விடுங்கள். இதை ஒரு பாட்டில் அல்லது டப்பாக்களில் அடைத்து வைத்து ஒரு சலவைக்கு 1/2-1 கப் என்ற அளவில் இந்த டிடர்ஜெண்ட் கலவையை பயன்படுத்தவும். இதை நீண்ட நாள் ஸ்டோர் செய்து வைத்து பயன்படுத்தலாம்.


கேஸ்டில் /நாப்தா /ஐவரி பார் சோப்பு டிடர்ஜெண்ட் இந்த பார் சோப்பை சீஸ் கட்டர் கொண்டு தூளாக்கி ஒரு பெரிய பானையில் பாதியளவு தண்ணீரில் சேர்க்கவும். பிறகு இதை நன்றாக கொதிக்க விடவும். சோப்பின் தன்மை மென்மையாக மாறியதும் வாஷிங் பவுடர் சேர்க்கவும். இவை சில கெமிக்கல் வினைகள் வினைபுரிந்து நுரைகள் ஏற்படும். ஒரு மர கரண்டியை அதனுள் போட்டு விட்டால் போதும் நுரைகள் எழும்புவது நின்று விடும். இப்பொழுது போரஸ் பவுடர் சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து நன்றாக கிளறவும். சோப்பு மென்மையான பதம் அடைந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். ஒரு 5 கலன் வாளியில் பாதியளவு சூடான நீர் நிரப்பி 30-35 சொட்டுகள் தயாரித்த டிடர்ஜெண்ட் லிக்யூடை ஊற்றி நன்றாக கலக்கவும். ஒரு மூடியை கொண்டு மூடி 24 மணி நேரம் அப்படியே வைத்து இருக்க வேண்டும். கலவை மென்மையாக மாறியதும் அதை ஒரு பாட்டிலில் அடைத்து ஒரு சலவைக்கு 1-2 கப் என அவ்வப்போது பயன்படுத்தி கொள்ளலாம்.


டிடர்ஜெண்ட் மற்றும் பேக்கிங் சோடா தேவையான பொருட்கள் 12 கப் போரஸ் பவுடர் 8 கப் பேக்கிங் சோடா 8 கப் வாஷிங் பவுடர் தூளாக்கிய பார் சோப்பு பயன்படுத்தும் முறை மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து ஒரு டப்பில் மூடி வைத்து விடுங்கள். இதனுடன் 1/2 பக்கெட் அளவு சூடான நீர் சேர்த்து நன்றாக கலக்கவும். 24 மணி நேரம் அப்படியே வைத்து ஜெல் வடிவத்திற்கு அதன் தன்மை மாற வேண்டும். ஒரு சலவைக்கு 1/8 கப் என்ற அளவில் டிடர்ஜெண்ட்டை பயன்படுத்தி கொள்ளுங்கள்.



டிடர்ஜெண்ட் மற்றும் வினிகர் 1 கப் வினிகர், பேக்கிங் சோடா மற்றும் வாஷிங் சோடா, 1/4 கப் லிக்யூட் கேஸ்டில் சோப்பு இவற்றை ஒன்றாக கலந்து காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து கொள்ளுங்கள். 1/2 பக்கெட் சூடான நீரை இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். 24 மணி நேரம் அப்படியே வைத்து ஜெல் தன்மை வந்த பிறகு ஒரு சலவைக்கு ஒரு கப் என பயன்படுத்தி வாருங்கள். உங்கள் துணியில் நறுமணம் கமழ விரும்பினால் எஸன்ஷியல் ஆயில் (லாவண்டர், ரோஸ் மேரி ஆயில்,டீ ட்ரி ஆயில்) போன்றவற்றை டிடர்ஜெண்ட் அறைவெப்பநிலைக்கு வந்த பிறகு சேர்க்கவும்.


வ்பெல்ஸ் நாப்தா சோப்பு டிடர்ஜெண்ட்
இது ஒரு விலைமலிவான டிடர்ஜெண்ட் ஆகும். அது மட்டுமல்லாமல் இதை தயாரிப்பதும் எளிது. வ்பெல்ஸ் நாப்தா சோப்பை தூளாக்கி 4 கப் தண்ணீருடன் சேர்த்து 10 நிமிடங்கள் சூடுபடுத்தவும். 5 கலன் பக்கெட்டில் பாதியளவு சூடான நீரை நிரப்பி கரைந்த சோப்பு கலவையையும் சேர்க்கவும். பிறகு 1 கப் வாஷிங் சோடா, போரஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். நறுமணத்திற்கு எஸன்ஷியல் ஆயில் வேண்டுமென்றால் சேர்த்து மீதமுள்ள பக்கெட்டில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி 24 மணி நேரம் மூடி போட்டு வைத்து விடுங்கள். ஒரு சலவைக்கு 1/2-1கப் வரை பயன்படுத்தலாம்.
போரஸ் இல்லாத டிடர்ஜெண்ட் தேவையான பொருட்கள்
1 ஸ்பூன் ஆக்ஸிக்ளீன்
5 சொட்டுகள் லெமன் எஸன்ஷியல் ஆயில்
1/2 கப் வினிகர்
5-6 கப் தூளாக்கிய க்ரவுண்ட் சோப்பு பவுடர் (ஆர்கானிக் சோப்பு)


பயன்படுத்தும் முறை
எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து இதனுடன் சூடான நீர் சேர்த்து 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஜெல் தன்மை அடைந்ததும் ஒரு சலவைக்கு 1/8 பங்கு அளவில் பயன்படுத்தி பலன் பெறலாம்.
 
கடல் உப்பு டிடர்ஜெண்ட்
தேவையான பொருட்கள்
4 கப் மிகவும் சூடான நீர்
1 கப் பேக்கிங் சோடா
1/3 கப் உப்பு
1 கப் லிக்யூட் கேஸ்டில் சோப்பு
1 கலன் அளவு பாத்திரம் கொஞ்சம் தண்ணீர்


பயன்படுத்தும் முறை
ஒரு பெரிய பானையில் சூடான நீர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கரைய விடவும். இதனுடன் உப்பு, லிக்யூட் கேஸ்டில் சோப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். கலவை திண்ம பதம் வராமல் கெட்டியான பதம் வந்ததும் தீயை அணைத்து விட்டு நன்றாக கிளறவும். பிறகு இதை ஒரு ஜாரில் ஊற்றி மீதமுள்ள பகுதியை தண்ணீரால் நிரப்ப வேண்டும். ஒரு சலவைக்கு 1/3-1/2 என்ற அளவில் பயன்படுத்தலாம்




வேலைக்குச் செல்பவர்கள் இப்படி இவ்வளவு ஈஸியா விதவிதமாக வீட்டிலேயே டிடர்ஜெண்ட் தயாரிக்க முடியுங்கிறபோது எதுக்குங்க காசு கொடுத்து கடையில கெமிக்கல் டிடர்ஜெண்ட் வாங்கணும். வீட்டில் இருப்பவர்களுக்கு நேரம் கிடைக்கும். செய்ய முடியும். வேலைக்குப் போகிறவர்கள் என்ன செய்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. வேலைக்குப் போகிறவர்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அதில் பத்து நிமிடம் ஒதுக்கி, இந்த டிடர்ஜெண்டை மொத்தமாக செய்து வைத்துக் கொள்ளலாம். கெட்டுப்போகாது. 3 முதல் 6 மாதங்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment