எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label National Tamil News. Show all posts
Showing posts with label National Tamil News. Show all posts
மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை 40% வரை குறைக்கவும், தமிழ்நாட்டில் 9 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 60 % வரை குறைக்கவும் முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேசம் மாநிலம் ஜியோ பூர் மாவட்டத்தில் சென் ஹாஸ்டல் பகுதியில் வசித்து வருபவர் சென். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடந்தது. மதுபோதைக்கு அடிமையான சென் தினம் தினம் குடித்துவிட்டு மனைவியை சித்ரவதை செய்துள்ளார்.
ஒரு அளவுக்கு பொறுமையாக இருந்த அவரது மனைவி ஒரு கட்டத்தில் அவரை எதிர்த்து பேச ஆரம்பித்தார். தன்னை எதிர்த்து மனைவி பேசுவதா? என்று ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கடுமையாக அடித்து உதைத்திருக்கிறார்.
மேலும் மனைவியை நிர்வாணமாக்கி கை, கால்களை இறுக்கி கட்டிப்போட்டு வீட்டில் இருந்த பெவிக்குவிக்கை எடுத்து வந்து அவரின் அந்தரங்கப் பகுதியில் ஊற்றி கொடூரமாக நடந்துள்ளார். இதில் வலி தாங்கமால் அவரது மனைவி அலறி துடித்துள்ளார். அந்த அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரது கணவரை தேடி வருகின்றனர்.
கொய்யாப்பழம் பறிக்க வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது நபருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
கோழிக்கோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1.75 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இரிங்கலைச் சேர்ந்த கொட்டகுன்னும்மாள் அப்துல் நசாரி (51) என்பவருக்கு சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி டி.பி. அனில் தண்டனை வழங்கினார். போக்சோ மற்றும் பட்டியலின சாதிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான சம்பவம் 2019ல் நடந்தது. கொய்யாப்பழம் பறிக்க வந்த 11 வயது சிறுமியை குற்றவாளி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி அறிந்த குழந்தையின் தாய், போலீசில் புகார் அளித்தார். பையோலி போலீஸ் ஸ்டேஷனில் பதிவான வழக்கில், வடகரை டி.எஸ்.பி. இளவரசர் ஆபிரகாம் தலைமையிலான குழு விசாரணை நடத்தினர்.
உத்திரப்பிரதேசம் மாநிலம், லக்னோவை சேர்ந்தவர் கபூர்(80). கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, சோற்றில் உப்பு கொஞ்சம் அதிகமாக உள்ளதாக தனது மருமகளிடம் சண்டையிட்டுள்ளார்.
அப்போது மருமகளும் எதிர்த்து பேச, கோபம் தலைக்கேறிய அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மருமகளை சுட்டுகொன்றார். ஆனால் போலீசார் விசாரணையில், தனது வீட்டில் திருடர்கள் புகுந்ததால், நான் அவர்களை சுட முயன்று மருமகள் மீது குண்டு பாய்ந்ததாக கண்ணீருடன் கூறினார்.
இருப்பினும் அவரை நம்பாத காவல்துறையினர் தீவிரமாக விசாரித்தனர். இதையடுத்து அவர் மீது எழுந்த சந்தேகத்தால் தீவிரமாக விசாரித்ததில், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.