வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆரவ் படத்தில் ஓவியா என்ன தான் செய்கிறார்?: லீக்கான ரகசியம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, January 03, 2019

ஆரவ் படத்தில் ஓவியா என்ன தான் செய்கிறார்?: லீக்கான ரகசியம்

ஆரவின் ராஜபீமா படத்தில் ஓவியாவின் கதாபாத்திரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. நரேஷ் சம்பத் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் ஆரவ், ஆஷிமா நடித்து வரும் படம் ராஜபீமா. 

இந்த படத்தில் ஓவியா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இந்நிலையில் படத்தில் ஓவியாவுக்கு டான்ஸை தாண்டியும் வேலை உள்ளதாக ஆரவ் தெரிவித்திருந்தார்.


ஆரவ்

ராஜ பீமா படத்தில் ஓவியா டான்ஸ் மட்டும் ஆடவில்லை, ஒரு சஸ்பென்ஸ் உள்ளது என்றார் ஆரவ். அந்த சஸ்பென்ஸ் என்னவென்பது தெரிய வந்துள்ளது. ஓவியா குத்தாட்டம் போட்டதுடன் சில காட்சிகளிலும் வருகிறாராம். அந்த குத்தாட்ட பாடலை பொள்ளாச்சியில் படமாக்கியுள்ளனர்.


நடிகை  

படத்தில் ஆரவ் ஓவியாவின் தீவிர ரசிகராக நடிக்கிறராம். படத்தில் ஓவியா அவராகவே வருகிறாராம். அதாவது நடிகை ஓவியாவாகவே நடிக்கிறாராம். அவர் ஒரு தியேட்டருக்கு வர ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொள்கிறார்களாம். அப்படித் தான் ரசிகனான ஆரவ், ஓவியாவுடன் குத்தாட்டம் போடும் பாடல் வருமாம்.


ஷட்டப் பண்ணுங்க

ஓவியா, ஆரவ் ஆடும் பாடலில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியா பேசி பிரபலமான வசனங்கள் வருகிறதாம். ஷட்டப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், கொக்கு நெட்ட கொக்கு ஆகிய வார்த்தைகள் அந்த பாடலில் வருமாம். ஓவியா ஆரவுடன் சேர்ந்து வரும் சில காட்சிகளை இந்த மாதம் படமாக்க உள்ளனர்.


ரசிகர்கள் 

ஓவியா குத்தாட்டம் போட்டதற்கு பதிலாக ஆரவ் ஜோடியாக நடித்திருந்தால் அவர்களின் ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். இருக்கட்டும் அதுவும் விரைவில் நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment