Run World Media: வேர்க்கும்போது ரத்தமாக வேர்க்கும் 21 வயது விநோதப்பெண்... என்னதான் ஆகுதுனு பாருங்க...

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, June 26, 2019

வேர்க்கும்போது ரத்தமாக வேர்க்கும் 21 வயது விநோதப்பெண்... என்னதான் ஆகுதுனு பாருங்க...

அவ்வப்போது நமது வாழ்வில் சில அதிசயங்களை சந்தித்து பிரமித்துப் போவோம். குறிப்பாக மருத்துவ உலகில் சில விஷயங்கள் விநோதமாக நடைபெறும். இதனை ஆங்கிலத்தில் "மெடிகல் மிராக்கில்" என்று கூறுவா். அது போல் ஒரு வினோத சம்பவத்தைத் தான் நாம் கானவிருக்கிறோம்.பொதுவாக நாம் நமது பிள்ளைகளைத் திட்டும்போது," நான் என் இரத்தத்தை வியர்வையாக்கி உன்னை படிக்க வைக்கிறேன்.. " என்று கூறுவோம். நாம் அவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்ற பொருளில் இப்படி நாம் கூறுகிறோம். ஆனால் உண்மையில் ஒரு பெண்ணுக்கு வியர்வையாக இரத்தமே வெளியாகிறது என்று கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும். தலை சுற்றுகிறதா? வாருங்கள் தொடர்ந்து இதனைப் பற்றி அறிந்துக் கொள்வோம்.


மருத்துவ உலகில் சில வழக்குகள் 
 எப்படி இது சாத்தியம்?" என்ற கேள்வி எழ வைக்கும். இதுவும் அப்படி ஒரு அரிய செயல் தான். 10 மில்லியன் பேர்களில் ஒருவருக்கு மட்டுமே இத்தகைய சம்பவம் நடைபெறும் சாத்தியம் உண்டு. 

 ஒரு 21 வயது பெண். அவரைப் பற்றிய மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த பெண்ணை ஒரு முற்றிலும் விச்சிதிரமான நிலைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். அதாவது அவருக்கு வியர்க்கும்போது அவருடைய முகம், உள்ளங்கை போன்ற இடங்களில் வியர்வையாக இரத்தம் வெளியேறுகிறது.
குடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்... அப்புறம் என்னாச்சுனு தெரியுமா? 
நம்ப முடிகிறதா? 
 இதனை கேட்பதற்கு நம்பமுடியாமல் இருந்தாலும், இது ஒரு உண்மையான நிலை ஆகும். இப்படி சில வழக்குகள் மிகவும் அரிதாக மருத்துவ வரலாற்றில் காணப்படுகிறது. 

இத்தாலிய மருத்துவர்கள் இந்த பெண்ணை பரிசோதித்து அவருடைய திகிலூட்டும் அறிகுறியை எண்ணி இந்த நிலை பற்றிய குழப்பத்தில் இருந்தனர்.
 மேலும் அந்தப் பெண்ணின் சருமத்தில் இரத்தம் வெளியேறுவதற்கான எந்த ஒப்ரு புண்ணும் அல்லது சிராய்ப்பும் இல்லை என்பது மேலும் அதிர்ச்சியை உண்டாக்கும் செய்தியாக இருந்தது.


ரத்தப்போக்கு
திடீரென்று இப்படி இரத்தப்போக்கு ஏற்படும் நிலை உருவாகக்கூடிய எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் அந்தப் பெண்ணின் உடல் நிலையில் இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.

 மேலும் அந்தப் பெண் உறங்கும்போதும் உடல் செயல்பாடுகளில் கவனம் செலுத்தும்போதும் இரத்தம் வெளியேறுவது அதிகரிப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்.வியர்வை
இப்படி வியர்வையாக இரத்தம் கடுமையாக வெளியேறுவதைக் கண்ட அந்தப் பெண் மிகவும் மனச்சோர்வுடன் காணப்பட்டார். அவருடைய வழக்கு பற்றி கனடா மருத்துவ நிறுவன பத்திரிகையில் செய்திகள் வெளிவந்தன.

 இந்தப் பெண்ணின் நிலை பற்றி மருத்துவர்கள் இன்னும் விரிவாக விளக்கும்போது, இந்த வித அசாதாரண அறிகுறியைக் கொண்டு இந்த பெண் கடந்த மூன்று ஆடுகளாக அவதிப்படுவதாகவும், ஒவ்வொரு முறை இப்படி ஏற்படும்போது இந்த நிலை தொடர்ந்து ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள் நீடிப்பதாகவும் கூறினர்.
 இந்த வகை அரிய பாதிப்பு காரணமாக, உணர்வு ரீதியாக அந்தப் பெண் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எப்போதும் தனித்து இருப்பதாகவும் கூறினர்.ரத்த அணுக்கள் 
 எண்ணிக்கை அந்தப் பெண்ணின் இரத்த அணுக்கள் எண்னிக்கை மற்றும் இரத்த உறைவு செயல்பாடு போன்றவை வழக்கமான நிலையில் இயல்பாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
இறுதியாக இந்தப் பெண்ணுக்கு ஹெமடோஹிட்ரோசிஸ் (hematohidrosis) என்ற பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வகை பாதிப்பு 10 மில்லியன் மக்களில் ஒருவரை மட்டுமே பாதிக்கும் என்பதும் அறியப்படுகிறது.&bsp;

அவரது மருத்துவ சிகிச்சை பற்றி மருத்துவர்கள் விளக்கினர். அந்தப் பெண்ணிற்கு ப்ரோப்ரன்னோலோல்(propranolol) என்னும் பீட்டா ப்ளாக்கர் மருந்து கொடுக்கப்படுவதாக கூறினர்.
 இந்த மருந்து அவருடைய அறிகுறிகளைக் கணிசமாகக் குறைக்கும் என்றும் துரதிர்ஷ்டவசமாக இந்த பாதிப்பில் இருந்து அவர் முற்றிலும் வெளிவர முடியாது என்றும் தெரிவித்தனர். 

இந்த நோய் பாதிப்பிற்கான காரணம் பற்றி முற்றிலும் தெரியவில்லை என்றாலும், மிக அதிக அழுத்தம் மற்றும் பயம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்