வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்தது இதற்குதான்.. தப்பை சரியாக செய்யாததால் சிக்கி கொண்ட 20 வயது இளம்பெண்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, July 20, 2019

வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்தது இதற்குதான்.. தப்பை சரியாக செய்யாததால் சிக்கி கொண்ட 20 வயது இளம்பெண்

வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த 20 வயது இளம்பெண் ஒருவர் போலீசாரிடம் சிக்கி கொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.


இன்றைய சூழலில் கார் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. ஒரு கார் இருந்தால் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் ஒன்றாகவும், சௌகரியமாகவும் சென்று வர முடியும். 
இல்லாவிட்டால் ஆட்டோவிலோ அல்லது பஸ்ஸிலோ கூட்ட நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகி பயணிக்க வேண்டியதிருக்கும்.

அதுவும் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்திற்கு எல்லாம் சென்று வர முடியாது. இதுதவிர கார்கள் என்பவை ஒருவரின் அந்தஸ்தை வெளிக்காட்டும் விஷயமாகவும் பார்க்கப்படுகின்றன.
 இதுபோன்ற காரணங்களால்தான் கார்களுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் இருக்கவே செய்கிறது.


ஆனால் ஒரு சிலரால் மட்டுமே சொந்த கார் கனவை நிறைவேற்ற முடிகிறது. மற்றவர்களுக்கு சொந்த கார் என்பது எட்டாக்கனியாகவே மாறி விடுகிறது. கார்கள் சற்று விலை உயர்ந்தவை என்பதே இதற்கு முக்கியமான காரணம். எனினும் தொடர்ந்து பலர் அந்த கனவை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து கொண்டுதான் உள்ளனர்.


ஆனால் இங்கே ஒரு பெண் கார் வாங்க வேண்டும் என்பதற்காக வினோதமான ஒரு முயற்சியை செய்து சிக்கலில் சிக்கி கொண்டிருக்கிறார். கார் வாங்க பணம் இல்லாததால், அவர் தனது வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளார். அதுவும் கள்ள நோட்டுகளை அச்சடிக்க அவர் மிகவும் சாதாரணமான பிரிண்டர்களை பயன்படுத்தியுள்ளார்.

கள்ள நோட்டு பிரச்னை இன்று அனைத்து இடங்களிலுமே காணப்படுகிறது. கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்தால், பொருளாதார ரீதியிலான சவால்களையும் ஒரு நாடு எதிர்கொள்ள நேரிடும். 
எனவே கள்ள நோட்டுகளை அச்சடிப்பதும், புழக்கத்தில் விடுவதும் சட்ட விரோதமாக பார்க்கப்படுகிறது. இதற்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இருந்தபோதும் இவற்றை எல்லாம் கடந்து கள்ள நோட்டுகள் எப்படியாவது புழக்கத்திற்கு வந்து விடுகின்றன. கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் சட்ட விரோத கும்பல் இதற்காக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர். 

அவர்கள் அச்சடிக்கும் கள்ள நோட்டுக்கள் அச்சு அசலாக நல்ல நோட்டுகளை போலவே இருக்கும். இதற்கான நுணுக்கங்களையும் அவர்கள் கற்று கொள்கின்றனர்.

எனவே எது நல்ல நோட்டு? எது கள்ள நோட்டு? என்ற வித்தியாசத்தையே உங்களால் கண்டறிய முடியாது. ஆனால் இந்த பெண் தனது வீட்டில் சாதாரண பிரிண்டரில் அச்சடித்த கள்ள நோட்டுகளை கார் டீலர்ஷிப்பில் கொடுத்துள்ளார். ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள Kaiserslautern என்ற நகரில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

உள்ளூரில் உள்ள டீலர்ஷிப் ஒன்றுக்கு சென்ற அந்த பெண், கார் வாங்குவது தொடர்பாக அங்கிருந்த ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். காருக்கு அவர் 'கேஷ்' கொடுக்கும் வரை அனைத்தும் நன்றாகதான் சென்று கொண்டிருந்தது. 

அதன்பின்தான் சிக்கலே வந்தது. காருக்காக 15 ஆயிரம் யூரோ மதிப்பிலான கள்ள நோட்டுகளை அந்த பெண், ஊழியர்களிடம் வழங்கியுள்ளார்.


கார் டீலர்ஷிப் ஊழியர்கள் பார்த்த உடனேயே இதனை கள்ள நோட்டு என கண்டுபிடித்து விட்டனர். எனவே அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 இதன் பேரில் விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணை அதிரடியாக கைது செய்தனர். அத்துடன் அவரது வீட்டில் ரெய்டும் நடத்தினர். அங்கு சாதாரண பிரிண்டரும், மேலும் 13 ஆயிரம் யூரோ கள்ள நோட்டுக்களும் இருந்தன.


கள்ள நோட்டு அச்சடிப்பதற்கான உபகரணங்களோ அல்லது அதற்கான அடிப்படை அறிவோ அந்த பெண்ணிடம் இல்லை. இருந்தாலும் கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில், அவர் இதனை செய்து சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. எனினும் அவருக்கு 20 வயது மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.

சந்தையில் புழக்கத்தில் விடும் நோக்கத்துடன் கள்ள நோட்டுகளை அச்சடிப்பது என்பது ஜெர்மனியில் சட்ட விரோதம். 
இந்த குற்றத்திற்கு அங்கு குறைந்தபட்சம் ஒரு வருட சிறை தண்டனையாவது விதிக்கப்படும். கார் வாங்குவதற்கு மாத தவணை முறை உள்பட ஏராளமான எளிமையான வழிமுறைகள் இருக்கவே செய்கின்றன.


விலை சற்று அதிகம் என்பதால், புதிய காரை வாங்க முடியாவிட்டாலும் கூட, செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் மிக குறைவான விலையில், நல்ல தரமான கார்களும் கிடைக்கின்றன.
 அவற்றில் ஒரு நல்ல காரை தேர்வு செய்தால், உங்கள் பர்சுக்கும் பங்கம் ஏற்படாது. எனவே கார் வாங்க இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான வழிகளை எல்லாம் தேர்வு செய்ய வேண்டாம்.


No comments:

Post a Comment