வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு 50,000 ரூபாய் சம்பளம்! - BSNL job - Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, February 02, 2026

என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு 50,000 ரூபாய் சம்பளம்! - BSNL job - Vil Ambu News

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் (BSNL job) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சீனியர் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி டெலிகாம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை பார்க்கலாம்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பிஎஸ்என்எல். நாடு முழுவதும் தகவல் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் மத்திய தொலைத்தொடர்பு துறையின் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

BSNL job - பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை மத்திய அரசு நிறுவனம் என்பதால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை கிடைக்குமா? என்ற ஆர்வம் படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கொடுக்கும். இந்தநிலையில்தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம். பணியிடங்ள் விவரம்: * சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி டெலிகாம்: 95 பணியிடங்கள் * சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி ஃபைனான்ஸ்: 25 பணியிடங்கள் என மொத்தம் 120 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி: சீனியர் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி டெலிகாம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் என்ஜினியரிங் / அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சீனியர் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி (ஃபைனான்ஸ்) பணிக்கு சிஏ மற்றும் காஸ்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 07.03.2026 அன்று தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு? சீனியர் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி: ரூ.24,900 - 50,500/-வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தில் சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்படும். விண்ணப்பிப்பது எப்படி? தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.2,500 செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ரூ.1250/- கட்டணம் ஆகும்.

* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள் - 05.02.2026 ஆகும். * விண்ணப்பிக்க கடைசி நாள் - 07.03.2026 ஆகும். * விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம்: 08.03.2026 முதல் 15.03.2026 ஆகும் * தேர்வு நடைபெறும் நாள் - 29.03.2026 ஆகும். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://bsnl.co.in/


No comments:

Post a Comment