வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Job News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Job News. Show all posts
Showing posts with label Job News. Show all posts

Monday, February 02, 2026

என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு 50,000 ரூபாய் சம்பளம்! - BSNL job - Vil Ambu News

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் (BSNL job) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சீனியர் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி டெலிகாம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை பார்க்கலாம்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பிஎஸ்என்எல். நாடு முழுவதும் தகவல் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் மத்திய தொலைத்தொடர்பு துறையின் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

BSNL job - பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை மத்திய அரசு நிறுவனம் என்பதால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை கிடைக்குமா? என்ற ஆர்வம் படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கொடுக்கும். இந்தநிலையில்தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம். பணியிடங்ள் விவரம்: * சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி டெலிகாம்: 95 பணியிடங்கள் * சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி ஃபைனான்ஸ்: 25 பணியிடங்கள் என மொத்தம் 120 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி: சீனியர் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி டெலிகாம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் என்ஜினியரிங் / அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சீனியர் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி (ஃபைனான்ஸ்) பணிக்கு சிஏ மற்றும் காஸ்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 07.03.2026 அன்று தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு? சீனியர் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி: ரூ.24,900 - 50,500/-வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தில் சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்படும். விண்ணப்பிப்பது எப்படி? தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.2,500 செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ரூ.1250/- கட்டணம் ஆகும்.

* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள் - 05.02.2026 ஆகும். * விண்ணப்பிக்க கடைசி நாள் - 07.03.2026 ஆகும். * விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம்: 08.03.2026 முதல் 15.03.2026 ஆகும் * தேர்வு நடைபெறும் நாள் - 29.03.2026 ஆகும். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://bsnl.co.in/


Tuesday, September 10, 2024

ரயில்வே துறையில் பிளஸ் டூ, டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு | Railway Job for 12th Degree Candidates | Vil Ambu News

அரசாங்க வேலை ஒன்றில் பணிபுரிய வேண்டும் என்று அனைவருக்கும் ஆசைகள் இருக்கும். அது மத்திய அரசோ அல்லது மாநில அரசாங்க வேலையோ எதுவாக இருந்தாலும் அரசு வேளையில் பணியாற்றினால் போதும் என்ற எண்ணம் அனைவரும் மத்தியில் பரவலாக இருக்கும்.



அந்த வகையில் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் வேலை வாய்ப்புகளை அவ்வப்போது அறிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும், அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 11,558 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.10.2024க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. 

காலியாக உள்ள பணியிடங்களின் விபவரம்: 

சீப் கமர்ஷியல் - டிக்கெட் மேற்பார்வையாளர்(Chief Commercial – Ticket Supervisor) – 1736

ஸ்டேஷன் மாஸ்டர்(Station Master) – 994

சரக்கு ரயில் மேலாளர்(Goods Train Manager) – 3144

சீனியர் கிளார்க் - டைப்பிஸ்ட்(Junior Account Assistant – Typist )– 1507 

சீனியர் கிளார்க் - டைப்பிஸ்ட்(Senior Clerk – Typist )– 732

கமர்ஷியல் - டிக்கெட் கிளார்க்(Commercial – Ticket Clerk) – 2022

கணக்கு எழுத்தர் - தட்டச்சர் -(Accounts Clerk – Typist )– 361

ஜூனியர் கிளார்க் - தட்டச்சர்(Junior Clerk – Typist )– 990

ரயில்கள் கிளார்க்(Trains Clerk) – 72 

உள்ளிட்ட மொத்தம் ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,558 பணியிடங்களான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி:

ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் : 

வணிக தலைமை - டிக்கெட் சூப்பர் வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்டண்ட் அஸ்சிஸ்டண்ட் டைபிஸ்ட் , சீனியர் கிளர்க் பணியிடங்கள் உள்ளது. 

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சீனியர் கிளர்க், கமர்ஷியல், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க் பணியிடங்கள் உள்ளது. 

வயதுத் தகுதி :

டிகிரி தகுதி பணியிடங்களுக்கு 01.01.2025 அன்று 18 வயது முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.

12 ஆம் வகுப்பு தகுதி பணியிடங்களுக்கு 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

குறிப்பாக OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC மற்றும் ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு என தெரிவிக்கபட்டுள்ளது. 

சம்பளம் விவரங்கள் :

ஏதாவது ஒரு டிகிரி முத்தவர்கள் : 

வணிக தலைமை - டிக்கெட் சூப்பர் வைசர் – 35,400

ஸ்டேஷன் மாஸ்டர் - 35,400

சரக்கு ரயில் மேனேஜர் - 29,200

ஜூனியர் அக்கவுண்டண்ட் அஸ்சிஸ்டண்ட் ,டைபிஸ்ட் - 29,200

சீனியர் கிளர்க் - 29,200

+2 முடித்தவர் சம்பளம் விபரம்: 

கமர்ஷியல் - டிக்கெட் கிளரக் - 21,700

அக்கவுண்ட்ஸ் கிளர்க்- டைபிஸ்ட் - 19,900

ஜூனியர் கிளர்க் - டைபிஸ்ட் - 19,900

ரயில் கிளர்க் - 19,900 

மேலும், பணியிடங்களுக்கு ஏற்ற மாதிரி சம்பளத்தொகை மாறுபடும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு 2 நிலைகளில் தேர்வு நடத்தப்படும். முதல்நிலை கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்கள், இரண்டாம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் நிலை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. 

மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 13 - 10 - 2024 ஆகும். 

விண்ணப்ப கட்டணம் : 

விண்ணப்ப கட்டணம் ரூ. 500 ஆகும்.  இதில் SC, ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250 ரூபாய் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காலை பணியிடங்கள் குறித்து முழு விவரம் தெரிந்து கொள்ள https://www.rrbchennai.gov.in/ https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான விவரங்களை முழுமையாக பெற்றுக்கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வேலைவாய்ப்பு செய்திகள் 


வேலைவாய்ப்பு தலைப்பில் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

10th போதும் | வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு | வில் அம்பு செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




கேன்டீன் உதவியாளர்' பிரிவில் மொத்தம் 25 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு

வயது: 18 - 25 (22.9.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு தேதி: 6.10.2024

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 22.9.2024

விவரங்களுக்கு: tnincometax.gov.in

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வேலைவாய்ப்பு செய்திகள் 


வேலைவாய்ப்பு தலைப்பில் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, January 16, 2022

தமிழகத்தில் மத்திய அரசு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு..!

தென்னிந்திய பன் மாநில விவசாய கூட்டுறவு சங்கம் லிமிடெட் எனப்படும் South India Multi-State agriculture co-operative Society Ltd., (SIMCO) காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர் :
அலுவலக உதவியாளர் – 10

விற்பனையாளர் – 22

மேற்பார்வையாளர்- 8

கணக்காளர் – 4

கிளை மேலாளர் – 4

மொத்தம் 48 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :
அலுவலக உதவியாளர் – 10வது தேர்ச்சி/ ஐடிஐ/ 12வது தேர்ச்சி

விற்பனையாளர் – 12வது தேர்ச்சி/ ஐடிஐ/ எதாவது ஒரு துறையில் டிப்ளமோ தேர்ச்சி

மேற்பார்வையாளர்- டிகிரி தேர்ச்சி

கணக்காளர் – UG/ PG (B.Com/ M.Com)

கிளை மேலாளர் – எதாவது ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :
01.01.2022 அன்றுள்ள படி
General / UR – 21- 30
SC/ ST – 21-35
OBC – 21-33

சம்பளம் :
அலுவலக உதவியாளர் :ரூ.5200 – 20200
விற்பனையாளர் : ரூ.6200 – 26200
மேற்பார்வையாளர்கள் : ரூ.6200 – 28200
கணக்காளர் : ரூ. 7200 – 30200
கிளை மேலாளர் : ரூ.8200 – 32200
தேர்வு செய்யும் முறை : 

எழுத்துத் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு

தனிப்பட்ட நேர்காணல்

பணியிடம் :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்கள் திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம் :

Gen / UR - Rs.500/-
SC / ST - Rs.250/–

விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,

HEAD OFFICE, TOWN HALL CAMPUS,

NEAR OLD BUS STAND,

VELLORE – 632004.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.02.2022

மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட அரசு வலைதளத்தில் காணலாம்..!
http://simcoagri.com/our-career.html

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வேலைவாய்ப்பு செய்திகள் 


முந்தைய வேலைவாய்ப்பு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்