வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, September 09, 2018

விந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு?


இறுக்கமற்ற உள்ளாடை (ஜட்டி) அணிவது ஆண்களின் விந்தணு எண்ணிக்கையையும், விந்தணுவை கட்டுப்படுத்துகின்ற ஹார்மோன்களையும் அதிகரிக்க செய்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.
விந்தணுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
அமெரிக்காவின் ஹார்வர்டு டிஹெச் சான் பொது சுகாதார கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் 656 ஆண்களிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
இறுக்கமான உள்ளாடை (ஜட்டி) அணிவோரைவிட இறுக்கமற்ற உள்ளாடை அணிந்தோர் 25 சதவீத அதிக விந்தணு எண்ணிக்கை கொண்டவராக இருந்ததாக இந்த ஆய்வில் அவர்கள் கூறியுள்ளனர்.
விதைப்பைகளை சுற்றியிருக்கும் குளிரான வெப்பநிலை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
வாழ்க்கையில் கடைபிடிக்கப்படும் இந்த எளிமையான மாற்றம் ஆண்களின் ஆண்மைத்தன்மையை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
'மூளை விந்தணு உற்பத்தியை தூண்டுகிறது'
விந்தணு
விந்தணு உற்பத்தி 34 டிகிரி செல்சியஸை விட அதிகமான வெப்பநிலையில் பாதிக்கப்படுமென அறியப்படுகிறது. அதனால்தான் உடலுக்குள் இல்லாமல் விதைப்பை தனியாக தொங்கி கொண்டிருக்கிறது,
உள்ளாடைகள் (ஜட்டி) சில, விதைப்பையை உடலுக்கு மிகவும் நெருக்கமாக இருக்க செய்யும். இதனால் விரைகளை சுற்றிய வெப்பநிலை அதிகரிக்கிறது.
ஆனால், பாக்சர் போன்ற வேறு சில உள்ளாடைகள் விதைப்பையை தளர்வான இருக்க செய்து, குளிரான வெப்பநிலையை பாதுகாக்கின்றன.

சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கருவள சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்வோரில் இறுக்கமற்ற, தளர்வான பாக்சர் உள்ளாடை (ஜட்டி) பயன்படுத்தியோருக்கு அதிக விந்தணு எண்ணிக்கை இருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இறுக்கமான உள்ளாடை அணிந்தோர் கொண்டிருந்த நீந்திச்செல்லும் சக்தியுடைய 33 சதவீத விந்தணுக்களைவிட 17 சதவீதம் அதிக விந்தணுக்களை இறுக்கமற்ற உள்ளாடை அணிந்திருந்தோர் பெற்றிருந்தனர்.
ஆனால், விந்தணுவின் வடிவமோ, டிஎன்ஏயின் தரமோ யாருக்கும் பாதிக்கப்படவில்லை.
இறுக்கமற்ற உள்ளாடை 'விந்து எண்ணிக்கையை அதிகரிக்கிறது'
உள்ளாடைக்குள் நிலவும் அதிக வெப்பம் இந்தப் பிரச்சனையின் மூலக்காரணம் என்ற அனுமானத்தோடு, இந்த ஆண்களின் வயது, உடல் எடை குறியீடு மற்றும் புகை பிடித்தல், சுடுநீரில் குளிப்பது போன்ற பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட விந்தணுவை பாதிக்கக்கூடிய பிற அம்சங்களையும் ஆய்வாளர்கள் கவனத்தில் கொண்டு இதனை ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
விந்தணுவை உற்பத்தி செய்ய விதைப்பைகளுக்கு ஆணையிடும் மூளையின் ஒரு ஹார்மோன்தான் நுண்ணுயிர் ஊக்குவிக்கும் ஹார்மோன் (ஃஎப்எஸ்ஹெச்). இந்த வகையான ஹார்மோன் இறுக்கமற்ற உள்ளாடை அணிந்தோரிடம் 14 சதவீதம் குறைவாக இருந்தது 'ஹூமன் ரிபுராடக்ஷன்' பத்திரிகையில் வெளியான இந்த ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

விதைப்பையின் வெப்பநிலை அதிகரிப்பை ஈடுசெய்வதற்கு அதிக ஹார்மோனை சுரக்க செய்வதும், இறுக்கமான உள்ளாடை அணிகின்றபோது விந்தணுக்களை குறைப்பதையும் இந்த நுண்ணுயிர் ஊக்குவிக்கும் ஹார்மோன் (ஃஎப்எஸ்ஹெச்) கட்டுப்படுத்துவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் ஈடுபட்ட ஷிஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் ஆண்குறி நோயியல் பேராசிரியர் ஆலன் பேஸி இது பற்றி கருத்து தெரிவிக்கையில், இறுக்கமான உள்ளாடை அணிவது விதைப்பைகளில் சேதமடைய செய்வதை, வேறுபட்ட உள்ளாடை வகைகளை அணிந்த ஆண்களிடன் காணப்படும் நுண்ணுயிர் ஊக்குவிக்கும் ஹார்மோன் மாறுபடுகின்ற நிலை (ஃஎப்எஸ்ஹெச்) காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
இனப்பெருக்கம் ஆண், பெண் இருபாலாரின் செயல்பாடு

விந்தணுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்த ஆய்வு விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பற்றியது. ஆண்மைத்தன்மை பற்றியதல்ல.
எந்த வகையான உள்ளாடைகளை அணிந்தாலும், விந்தணு எண்ணிக்கை இயல்பாகவே இருக்கிறது.
ஆனால், குறைவான விந்தணு உற்பத்தி நிலையிலுள்ள சில ஆண்களுக்கு, இறுக்கமான உள்ளாடை அணிவதை மாற்றிக்கொண்டு தளர்வான உள்ளாடைகளை அணிவது உதவலாம் என்று பேராசிரியர் ஆலன் பேஸி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
"இறுக்கமான உள்ளாடையால் பாதிப்பு இருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. ஆண்கள் தங்களுடைய நிலைமையை மேம்படுத்தி கொள்வதற்கு மலிவான, எளிய முயற்சி இருப்பதையும் இது காட்டுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

"விந்தணு அதிகரிப்பதற்கு சுமார் 3 மாதங்கள் ஆகின்றன. எனவே முன்னதாகவே திட்டமிட்டு கொள்ளுங்கள்" என்று இந்த ஆய்வின் ஆசிரியர் டாக்டர் ஜோர்ஜ் சாவெரோ பிபிசியிடம் கூறியுள்ளார்.
"மலட்டுத்தன்மை என்பது வெறுமனே பெண்களை சார்ந்த பிரச்சனையல்ல. இனப்பெருக்கம் என்பது ஆண், பெண் இருபாலாரின் செயல்பாடு. எனவே, கருவளத்திற்கு ஆண்களின் பங்களிப்பு பற்றி நாம் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணுகிறேன்" என்று டாக்டர் ஜோர்ஜ் தெரிவித்திருக்கிறார்.

Saturday, September 08, 2018

வாட்ஸ்ஆப்: ஒரே நேரத்தில் 4 பேருடன் வீடியோ, ஆடியோ கால் செய்யலாம்!


ஒரே நேரத்தில் நான்கு பேருடன் வீடியோ/ ஆடியோ கால் செய்யும் வசதியை பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ்ஆப்படத்தின் காப்புரிமைWHATSAPP
உலகளவில் குறுஞ்செய்தி செயலிகளில் முதன்மையான இடத்தை பெற்ற வாட்ஸ்ஆப்பை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதைத்தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளை அந்நிறுவனம் F8 என்னும் வருடாந்திர தொழில்நுட்ப மாநாட்டில் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கடந்த மே மாதம் நடந்த ஃ பேஸ்புக் நிறுவனத்தின் F8 மாநாட்டில் குரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதிகள் உருவாக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, உலகம் முழுவதுமுள்ள ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதள வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் அதிகபட்சம் நான்கு பேருடன் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அதுகுறித்த சில முக்கிய விடயங்களை அறிவோம்.
  • நீங்கள் எப்போதும்போல ஒருவருக்கு வீடியோ/ ஆடியோ கால் செய்யவும்.
  • பிறகு, வலதுபுறம் உள்ள "add participant" என்பதை தெரிவு செய்து, உங்களது கைபேசியில் ஏற்கனவே பதியப்பட்டுள்ள எண்களை அழைப்பில் இணைத்து கொள்ளலாம்.
  • வீடியோ/ஆடியோ அழைப்புகளை அதிகபட்சம் நான்கு பேருடன் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
  • க்ரூப் ஆடியோ கால் செய்யும் போது அதனை வீடியோ காலாக மாற்ற முடியாது.

வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தி சேவையை போன்றே இந்த வீடியோ/ ஆடியோ சேவையும் முழுவதும் என்க்ரிப்ட் (ஒரு குறிப்பிட்ட இரு நபர்களுக்கிடையே பரிமாறப்படும் தகவல்களை அந்த இணையதளம்/ செயலியை நடத்துபவர்கள் உள்ளிட்ட எவரும் காண முடியாது) செய்யப்பட்டது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Friday, September 07, 2018

விரித்து, சுருட்டி வைத்துக்கொள்ளும் வகையிலான மொபைல் தயாரிப்பு






விரித்து, சுருட்டி வைத்துக்கொள்ளும் வகையிலான மொபைல் தயாரிப்புபடத்தின் காப்புரிமைMAGICSCROLL

உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர்.
விரித்து, சுருட்டி வைத்துக்கொள்ளும் வகையிலான மொபைல் தயாரிப்பு
உருளை வடிவ சிறு குழாய் போன்ற வித்தியாசமான வடிவத்தில் இருக்கும் அலைபேசி, கண்ணிமைக்கும் நேரத்தில் 7.5 அங்குல திரையுள்ள டேப்லெட்டாக மாறினால் எப்படி இருக்கும்? இதுவரைக்கும் கனவாக, எதிர்கால தொழில்நுட்ப வருகையாக பார்க்கப்பட்ட இதுபோன்ற தொழில்நுட்ப கருவியை உருவாக்கியுள்ளனர் கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள குயின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

காலங்காலமாக மக்களின் தகவல் மூலமாக இருந்துவரும் செய்தித்தாளை படித்து முடித்துவிட்டு, சுருட்டி வைத்துக்கொண்டு நகர முடியும். ஆனால், ஏன் அதுபோன்ற தொழில்நுட்ப கருவியை உருவாக்க கூடாது என்று எழுந்த கேள்வியின் பதிலாகத்தான், மடித்து, சுருட்டி வைத்துக்கொள்ளக்கூடிய மேஜிக்ஸ்க்ரோல் என்னும் இந்த கருவியை உருவாக்கியுள்ளதாக கூறுகிறார் இந்த ஆராய்ச்சியின் தலைமை விஞ்ஞானியான வெர்டேகால்.



விரித்து, சுருட்டி வைத்துக்கொள்ளும் வகையிலான மொபைல் தயாரிப்புபடத்தின் காப்புரிமைMAGICSCROLL

7.5 அங்குல திரையும், 2K ரெசல்யூஷனும் கொண்ட இந்த உருளை வடிவ கருவியை மடித்து வைத்துக்கொண்டே அதன் இருமுனைகளிலுள்ள சக்கரம் போன்ற அமைப்பை திருகுவதன் மூலமும், திரையை தொடுவதன் மூலமும் வழக்கம்போல் போன் செய்யலாம், செயலிகளை பயன்படுத்தலாம்.


அதேசமயத்தில், பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு வேண்டும்போது, அந்த திரையை வெளியே இழுத்து, கையடக்க கணினி (டேப்லெட்) போன்று பயன்படுத்தி கொள்ளும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செயற்பாட்டுக்கு தேவையான அனைத்து அமைப்புகளும் உருளையின் உட்புறத்தில் வைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சாம்சங், ஆப்பிள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் மடித்து, விரிக்கும் வகையிலான அலைபேசி உருவாக்கும் முயற்சியில் பல்வேறு ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வரும் சூழ்நிலையில் அவர்களுக்கு முன்னதாகவே உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி இதுசார்ந்த ஆராய்ச்சிகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் என்று கருதப்படுகிறது.
ஒரு பயனர் தனது யூடியூப் செயலியில் (அப்ளிகேஷன்) அன்றைய நாளில், கடந்த ஏழு தினங்களில் மற்றும் ஒருநாளைக்கு சராசரியாக செலவிட்டுள்ள நேரத்தை அறிந்துகொள்ளும் வசதியை யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ளது.



யூடியூப்பில் பயன்பாட்டு நேரத்தை கண்காணிக்கும் புதிய வசதி அறிமுகம்படத்தின் காப்புரிமைGOOGLE

நிஜ வாழ்வில் செலவிடும் நேரத்தை விட அலைபேசி, கணினி, மடிகணினி உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகளில் நேரத்தை பயன்பாட்டாளர்கள் செலவிடும் நிலை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் வாழ்க்கையில் எந்தளவிற்கு மேம்பாட்டுக்கு உதவுகிறதோ, அது ஒரு குறிப்பிட்ட அளவை விஞ்சும்போது அதைவிட அதிகமான அளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்நிலையில், டிஜிட்டல் பிட்னஸ் என்ற கருத்தாக்கம் உலகளவில் முக்கிய இடத்தை பிடித்து வரும் சூழ்நிலையில், பேஸ்புக்கை தற்போது யூடியூப் நிறுவனமும் ஒரு பயன்பாட்டாளர் தனது செயலில் செலவிடும் நேரத்தை அறிந்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


யூடியூப் செயலில் தான் செலவிட்டுள்ள நேரத்தையும், ஒரு வாரகால சராசரியை பயன்பாட்டாளர் அறிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், ஒருவர் தான் யூடியூப் செயலியில் செலவிடும் நேரத்தை கட்டுப்படுத்துவதும் வகையில், ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடக்கும்போது தகவல் தெரிவிக்கும் வசதியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.
நீங்கள் உங்களது கூகுள் கணக்கில் உள்நுழைந்து பார்க்கும் அனைத்து காணொளிகள் தரவுகளையும் கொண்டு இது கணக்கிடப்படுகிறது. ஆனால், நீங்கள் யூடியூப் மியூசிக், டிவி, இன்காக்நிட்டோ போன்றவற்றை பயன்படுத்தி பார்க்கும் காணொளிகள் இந்த கணக்கில் சேர்க்கப்படாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Thursday, September 06, 2018

பால் மற்றும் பால் பொருட்கள் தரமானது அல்ல: 87% இந்தியர்களுக்கு புற்றுநோய் அபாயம்! உலக சுகாதார நிறுவனம்


இந்தியாவில் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்கள் தரமானது அல்ல என்று விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது. மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ள தரத்தின்படி நமது நாட்டில் பால் அல்லது பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது இல்லை. 

அன்றாடம் நாடு முழுவதும் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படமே காணப்படுகிறது. பாலில் சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, குளுகோஸ், வெள்ளை நிற பெயிண்ட், ரீபைண்டு எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பால் அடர்த்தியாக இருக்கவும், நீண்ட நாள் பயன்பாட்டுக்காகவும் அதில் திட்டமிட்டே யூரியா, ஸ்டார்ச், பார்மலின் போன்றவற்றையும் கலக்கின்றனர். இதுபோன்ற கலப்படம் உடல் உறுப்புகளுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும். பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்காவிட்டால் இந்தியாவில் 2025-ம் ஆண்டில் 87 சதவீத மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட மோசமான பல்வேறு நோய்கள் வர நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளின் நிலைமையை கருத்தில் கொண்டு பால் உற்பத்தியில் தாய்மை உணர்வுடன் நடந்து கொள்ளுமா ஆளும் அரசுகள்?
இது குறித்து உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள். 

மனைவியுடன் தகராறு; தனக்குதானே அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கட்டட தொழிலாளி



ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே தனக்கு தானே அஞ்சலி நோட்டீஸ் அடித்து ஒட்டிவிட்டு கட்டடதொழிலாளி ஒருவர் தற்கொலை செய்யப் போவதாக நாடகமாடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.




மனைவியுடன் தகராறு; தனக்குதானே அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கட்டட தொழிலாளி


புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 37). கட்டட தொழிலாளி.
இவர் கடந்த வியாழக்கிழமையன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி அம்சவேணியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அன்பரசன் புஞ்சை புளியம்பட்டிக்கு சென்றார்.
தான் இறந்துவிட்டதாக தனது புகைப்படத்தை கொடுத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து வந்து ஊர் முழுக்க ஒட்டியுள்ளார். இதை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் அன்பரசன் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது அன்பரசன் அங்கு கட்டிலில் படுத்திருந்தார். அவரிடம் உறவினர்கள் கேட்டனர். தான் எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயற்சித்ததாக அன்பரசன் கூறியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அதன் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அன்பரசனை அவரது உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அன்பரசன் வீட்டிற்கு செல்வதாக கூறி மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டார். அப்போதுதான் அவர் எலி மருந்து சாப்பிட்டதாக கூறி நாடகமாடியது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் பகிர்ந்ததாவது, ''அன்பரசன் மதுபோதையில் அவ்வப்போது சண்டை போடுவது வழக்கம். அதே போலத்தான் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டி விட்டு தற்கொலைக்கு முயற்சித்ததுபோல் நாடகமாடியுள்ளார்'' என்றும் தனது புகைப்படத்தை கொடுத்து தானே அஞ்சலி போஸ்டர் அடித்துள்ளார் என்றும், அஞ்சலி போஸ்டர் அடிக்க கடைக்கு சென்றபோது, அங்கிருந்தவர்கள் படத்தில் இருப்பதும் அன்பரசனும் ஒன்றுபோல் இருந்ததால் சந்தேகம் அடைந்து கேள்வி எழுப்பியதற்க்கு, அந்த படத்தில் இருப்பது தனது அண்ணன் என்று கூறி உள்ளார். எனவேதான் கடைக்காரர்கள் போஸ்டர் அச்சடித்து கொடுத்துள்ளனர் என்று கூறினர்.
அன்பரசன் தற்போது தலைமறைவாகி விட்டார். தற்கொலை முயற்சிக்காக காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்ற பயத்தில் தலைமறைவாகி விட்டார் என உறவினர்கள் தெரிவித்தனர்.

Tuesday, September 04, 2018

கல்விக்கான செலவு எந்த நாட்டில் மிகவும் அதிகம்? - ஓர் பார்வை



வசந்த காலம் என்றால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் புது கல்வியாண்டின் தொடக்கமாக இருக்கும். ஆனால் யாரவது அமெரிக்கா, ரஷ்யா, ஐஸ்லாந்து அல்லது சிலி போன்ற நாடுகளில் வசிப்பவராக இருந்தால் சில விஷயங்கள் முற்றிலும் மாறானதாக இருக்கும்.


பள்ளி மாணவர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

முதலில் சில கேள்விகள்.
எந்த நாட்டில் குழந்தைகள் மற்ற நாட்டினரை ஒப்பிடும்போது பள்ளிக்கு குறைவான காலத்தையே செலவிடுகிறார்கள்?
எந்த நாட்டின் குடும்பத்தினர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களுக்கு அதிகம் செலவு செய்கின்றனர்?
எந்த நாட்டில் ஒருவர் கல்விக்காக தனது வாழ்க்கையில் சராசரியாக 23 வருடங்கள் செலவிடுகிறார் ?
உலகம் முழுவதும் கல்வி முறையில் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள் குறித்த விவரங்கள் இதோ.
27.5 பில்லியன் டாலருக்கு உங்களால் எவ்வளவு பேப்பர் மற்றும் பசை வாங்க முடியும்?
அமெரிக்காவில் சராசரியாக ஒரு குடும்பமானது, குழந்தையின் மழலை கல்வி முதல் மேல்நிலை கல்விப்படிப்பு வரைக்கும் பள்ளிக்கு கொண்டு செல்ல வேண்டிய உபகரணுங்களுக்காக சராசரியாக 685 டாலர்கள் செலவிடுகிறது. 2005-ல் சுமார் 250 டாலராக இருந்த செலவுத்தொகை இப்போது அதிகரித்துள்ளது. 2018 கல்வியாண்டுக்கு மட்டும் அமெரிக்காவில் சுமார் 27.5 பில்லியன் டாலர் இப்பொருட்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.


பல்கலைகழக படிப்புக்கு ஆகும் செலவுகளையும் கருத்தில் கொண்டால் அமெரிக்காவில் இந்த ஆண்டுக்கான செலவு 83பில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் 5.88லட்சம் கோடி ரூபாய். அதிகம் செலவாவது கணினிக்குதான். சராசரியாக ஒவ்வொரு வீடும் சுமார் 299 டாலர் இதற்கு செலவிடுகிறது.
இதற்கு அடுத்தபடியாக துணி மணி செலவுகள் (286 டாலர்), வரைபட்டிகை மற்றும் கால்குலேட்டர் போன்றவற்றுக்கு 271 டாலர்கள் செலவிடப்படுகிறது. புத்தகம், பைண்டிங் செலவு உள்பட மற்ற செலவுகளுக்கு சராசரியாக 112 டாலர்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த செலவு மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
ரஷ்யாவில் பள்ளி நேரம் எவ்வளவு?
33 வளர்ந்த நாடுகளில், ரஷ்யாவில் தான் ஆரம்ப பள்ளி மாணவர்கள் ஒரு வருடத்துக்கு மிகக்குறைவான நேரமே பள்ளியில் செலவிடுகின்றனர்.

சர்வதேச அளவில் ஒரு பள்ளி மாணவர் வருடத்திற்கு 800 மணி நேரம் செலவிடும் நிலையில், ரஷ்யாவில் ஆரம்ப பள்ளி மாணவ மாணவிகள் 500 மணி நேரம் மட்டுமே செலவிடுகின்றனர்.
அதாவது எட்டு மாத கால கல்வியாண்டில் ஒவ்வொரு வகுப்புக்கும் இடையேயான இடைவேளையோடு சேர்த்து ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் மட்டுமே பள்ளியில் செலவிடுகின்றனர். ஆனால் ரஷ்யாவில் கல்வியறிவு விகிதம் கிட்டத்தட்ட 100% என்பதை நினைவில் வையுங்கள்.


பள்ளி மாணவர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

டென்மார்க்குக்கு வருவோம். இங்கே ஆரம்பபள்ளி மாணவர்கள் ஒரு வருடத்திற்கு 1000 மணி நேரம் செலவிடுகின்றனர். ரஷ்யாவை விட இரண்டு மாதம் அதிகம் செலவிடுகின்றனர். மேலும் ஒவ்வொரு நாளிலும் அதிக நேரம் பள்ளி வகுப்பில் இருக்கின்றனர். கல்வியில் டென்மார்க் தொடர்ந்து முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது. நீண்ட கல்வியாண்டின் மூலம் சில பலன்கள் இருப்பதை டென்மார்க் உணர்த்துகிறது.



மலிவான விலையில் கல்வி கற்க வேண்டுமா? ஹாங்காங் பக்கம் போறீங்களா?
வீட்டில் இருந்து பள்ளி எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை பொருத்து மொத்த செலவுகளில் சராசரியாக ஒரு லட்சம் டாலர் அளவுக்கு வித்தியாசம் இருக்கிறது. பள்ளி வகுப்பு கட்டணம், புத்தக செலவு, போக்குவரத்து செலவு, ஆரம்ப கல்வி முதல் இளங்கலை கல்வி வரையிலான தங்குமிட செலவு உள்ளிட்டவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் உலகிலேயே அதிகம் செலவாவது ஹாங்காங் பள்ளிகளில்தான். அரசின் உதவி, கல்வி கடன், உதவித்தொகை இவற்றுக்கெல்லாம் அப்பால் தங்களது குழந்தைகளின் பள்ளி செலவுக்கு தங்கள் கையில் இருந்து சராசரியாக 1.31 லட்சம் டாலர் வரை (92 லட்சம் ரூபாய்) ஹாங்காங்கில் உள்ள பெற்றோர்கள் செலவு செய்கின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இங்கே 99,000 டாலர் செலவு செய்கிறார்கள். அதற்கடுத்தபடியாக சிங்கப்பூரில் 71 ஆயிரம் டாலர் மற்றும் அமெரிக்காவில் 58 ஆயிரம் டாலர் செலவு செய்கிறார்கள். ஆனால் பிரான்சில் பெற்றோர்கள் 16 ஆயிரம் டாலர்கள் மட்டுமே குழந்தை கல்விக்கு செலவு செய்கிறார்கள்.
பெற்றோர்கள் மட்டும்தான் செலவு செய்கிறார்களா?


இது தோற்ற மெய்ம்மை(விர்ச்சுவல் ரியாலிட்டி), 3டி ப்ரின்ட்டிங், ட்ரான்கள் அதிகம் பயன்படுத்தப்படும் காலம். எனினும், உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் பென்சில் பயன்பாடு இன்னும் குறைந்தபாடில்லை.
பென்சில் கண்டுபிடிக்கப்பட்டு 400 வருடங்களான போதிலும் ஒவ்வொரு வருடமும் 15 -20 பில்லியன் பென்சில் உற்பத்தி செய்யப்படுகிறது.


பென்சில்

வடமேற்கு பசிபிக்கில் உள்ள சீடர் மரங்கள்தான் பேப்பர் தயாரிக்க பெரும்பாலும் மூல பொருளாக அமைகிறது. சீனா மற்றும் இலங்கையில் கிராஃபைட் அதிகம் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பென்சிலுக்காக 60,000 முதல் 80,000 மரங்கள் வெட்டப்படுகின்றன.

வாழ்வில் நான்கில் ஒரு பங்கை பள்ளியில் செலவழிக்கும் ஆஸ்திரேலிய மாணவர்கள்


पढ़ाई पर कितना खर्च

ஒரு குறிப்பிட்ட புள்ளியில், பள்ளி வாழ்க்கை முடியவேண்டும். ஆனால் நியூசிலாந்து மற்றும் ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு பள்ளி வாழ்க்கை நீடிக்கிறது.
வெவ்வேறு காலகட்டத்தில் ஆரம்ப கல்வி முதல் இளநிலை பட்டபடிப்புக்கான காலம்வரையிலான கட்டத்தில் சராசரியாக மாணவ மாணவிகள் வகுப்புக்குச் செல்லும் காலகட்டத்தை 'பள்ளி வாழ்நாள்' என குறிப்பிடலாம்
ஆரம்ப பள்ளி முதல் பல்கலைகழக படிப்பு வரைக்கும் சுமார் 22.9 ஆண்டுகளை செலவிடுகின்றனர் ஆஸ்திரேலிய மாணவர்கள். அதாவது ஆறு வயதில் இருந்து 28 வயது வரை கல்வி கற்கிறார்கள்.
குறைவான பள்ளி வாழ்நாள் இருப்பது நைஜீரியாவில்தான். அங்கே ஏழு வயதில்தான் ஆரம்ப கல்வி செல்கிறார்கள். நைஜீரிய மாணவர்கள் சராசரியாக 5.3 வருடங்கள் மட்டுமே பள்ளியில் செலவிடுகின்றனர். முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நைஜீரியாவுக்கும் இடையிலான வித்தியாசம் 17 ஆண்டுகள்.
சரி இந்தியாவில் கல்விக்கு பெற்றோர்கள் எவ்வளவு செலவழிக்கிறார்கள்? இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கு பகிரும்பட்சத்தில் உங்களது கருத்தையும் சேர்த்து பகிருங்கள்.

பாசிச பாஜக ஒழிக' என கோஷம் எழுப்பிய பெண் கைது


சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் முன்பாக பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரசியல் கட்சிகள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.


நேற்று காலையில் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்தார். விமானத்தில் அவருக்கு சில இருக்கைகள் தள்ளி தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண்ணும் பயணம் செய்தார். அவருடன் அவருடைய பெற்றோரும் பயணம் செய்தனர்.

விமானம் பயணம் நெடுகசோஃபியா தன் தாயிடம் பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவந்துள்ளார். பிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது 'பாசிச - பா.ஜ.க. அரசு ஒழிக' என்று கோஷமிட்டுள்ளார்.

இதற்கு தமிழிசை சவுந்தரராஜனும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தன்னுடைய கருத்துரிமை என சோஃபியா கூறினார். ஆனால், சோஃபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார் என்றும் சோஃபியா அதற்கு மறுத்திவிட்டார் என்றும் அவரது வழக்கறிஞர் அதிசயகுமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதனால், தமிழிசை காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சோஃபியா புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அப்போது தமிழிசை சவுந்தரராஜனும் அவருடன் வந்தவர்களும் தன்னை அவதூறாகப் பேசியதாக சோஃபியாவும் புகார் அளித்தார்.
இதற்குப் பிறகு, சோஃபியா மீது இந்திய குற்றவியல் சட்டம் 270, தமிழக குற்றவியல் சட்டம் 75 -1-C, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் மீது பதிவுசெய்யப்பட்ட 505 என்ற பிரிவை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இதன் பிறகு மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட சோஃபியா, வயிற்று வலி என்று கூறியதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரை நாளை பிணையில் எடுப்போம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதற்கிடையில் விமான நிலையத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், சோஃபியாவுக்குப் பின்னால் ஏதேனும் அமைப்புகள் இருக்கிறதோ என சந்தேகிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
சோஃபியா கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சோஃபியாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கூறியுள்ளார். "அப்படிச் சொல்பவர்களையெல்லாம் சிறையில் அடைப்பீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கிறேன், பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


22 வயதாகும் சோஃபியா, கனடாவின் மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆய்வு மாணவியாக இருந்துவருகிறார். இந்தியாவின் இணைய தளங்கள் சிலவற்றிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தமிழிசை செளந்தரராஜன் அந்த பெண் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன.