வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: (இவளும் ஒரு பெண்தானே)தான் பெற்ற மகளை கள்ளக் காதலனின் படுக்கைக்கு அனுப்பிய கொடூர தாய்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 15, 2018

(இவளும் ஒரு பெண்தானே)தான் பெற்ற மகளை கள்ளக் காதலனின் படுக்கைக்கு அனுப்பிய கொடூர தாய்



பெற்ற மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கள்ளக்காதலன் பற்றிய ரகசியத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என தாய் மிரட்டி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாவட்டம் மங்களூரு அருகே ரமேஷ்க்கும் பாவஞ்ஜே கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும், கடந்த 2016ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். அந்த பெண் தனது மகள், மகனுடன் பாவஞ்ஜே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ரமேஷ் தனது கள்ளக்காதலியின் வீட்டுக்கு செல்லும்போது, அந்த பெண்ணின் மகளுக்கும் தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். ஒரு நாள் யாரும் இல்லாத நேரத்தை அந்த சிறுமியை பாலியல் வக்கிரம் செய்துள்ளார். இதனால் மனம் உடைந்துப் போன மகள் தனது தாயிடம் கூறிஇருக்கிறார்.

(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!



ஆனால் அவர்கள் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மகளை மிரட்டியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக ரமேஷிடமும் அவர்கள் எதுவும் விசாரிக்கவும் இல்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தாயின் கள்ளக்காதலன் தொடர்ந்து சிறுமியிடம் அத்துமீறியுள்ளான். இதனை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் மனதில் குமுறிக்கொண்டிருந்தார் அந்த சிறுமி. தனக்கு நடக்கும் கொடுமைகளை தன்னுடைய ஆசிரியரிடம் கூறி கதறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்தார்.
 

அதன்பேரில் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். பின்னர், அவர் மீது மங்களூருவில் உள்ள பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி, போலீசார் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த விசாரணையின் போது, குற்றவாளிக்கு ஆதரவாக சிறுமியின் தாயும், சகோதரனும் சாட்சி அளித்தனர்.
 

இந்த வழக்கு மங்களூரு கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி ரமேஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையில் ரூ.20 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment