வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காலையில் இதையெல்லாம் செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு தொப்பை போடும்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 03, 2018

காலையில் இதையெல்லாம் செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு தொப்பை போடும்..!



காலை நேரத்தில் எழுந்து கொள்வது மிக கடினமான ஒன்றாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் பல வித விளைவுகள் நிச்சயம் ஏற்பட கூடும். குறிப்பாக நாம் காலையில் செய்கின்ற பல செயல்கள் நமது உடலை குண்டாக மாற்றுகிறது.

அத்துடன் தொப்பையை பானை அளவிற்கு பெரிதாக மாற்றுகிறது. காலை பழக்கத்தை இப்படியே நாம் செய்து கொண்டிருந்தால், கட்டாயம் நமக்கு மோசமான விளைவுகள் ஏற்படும். காலையில் எதையெல்லாம் செய்தால் தொப்பை பெரிதாகும் என்பதை இனி அறிவோம். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
 

எப்படி குறைக்க..?
 உடல் பருமன் என்பது ஒரு கடினமான விஷயமாகவே பலராலும் பார்க்கப்படுகிறது. கொழுப்புகள் நிறைந்த உணவுகள், உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்தில் மணி கணக்கில் உட்கார்ந்திருத்தல் போன்ற பல செயல்கள் நமது தொப்பைக்கு முக்கிய காரணமாக உள்ளது.



காலையில் எழுத்தவுடன் தண்ணீர்..!
 காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்காமல் இருப்பவர்களுக்கு தொப்பை போடும். அதாவது, காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடித்தால் கொழுப்புகள் உடலில் சேர்வதை தடுக்க முடியுமாம். மேலும், குடலில் உள்ள நச்சு பொருட்களை எளிதாக இவை வெளியேற்றி விடுமாம். எனவே, காலையில் எழுந்தவுடன் 1 கிளாஸ் நீர் கட்டாயம் குடியுங்கள். இல்லையேல் தொப்பை போடும்.


சூரியனை தவிர்க்கிறீர்களா..?
 காலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும். காலை வேளையில் சூரிய ஒளியை தவிர்ப்பவர்கள் குண்டாகி தொப்பை போட கூடும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். ஏனெனில், காலை வெயில் நமது உடலில் உள்ள கொழுப்புக்களை சற்று கரைய வழி செய்யுமாம்.



காலை உணவிற்கு நோ நோவா..?
 யாரெல்லாம் காலை உணவை சாப்பிடாமல் இருக்கின்றனரோ அவர்களுக்கெல்லாம் தொப்பை வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். காலை உணவை தவிர்த்தால் க்ளுகோஸ் அளவு சமநிலையில் இருக்காது. எனவே, கொழுப்புகளை இவை குறைப்பதை மெதுவாக்கி விடும். ஆதலால், உங்களுக்கு தொப்பை சீக்கிரம் வந்து விடும்.


குளிர்பானங்களா..?
 சிலருக்கு காலை உணவுடன் ஏதேனும் பழச்சாற்றை குடிப்பது வழக்கமாகும். ஆனால், அதற்காக செயற்கை சர்க்கரை சேர்த்துள்ள பாக்கெட்டில் அல்லது பாட்டிலில் அடைபட்ட குளிர்பானங்களை குடித்தால் உங்களின் உடல் எடை எகிறி கொண்டே தொப்பையை பெற கூடும்.


எவ்வளவு நேரம்..!
 காலை வேளையில் யாரெல்லாம் அதிக நேரம் தூங்குகிறார்களோ அவர்களுக்கு தொப்பை போடுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு பசியின்மை ஏற்பட்டு, பிறகு ஒரே நேரத்தில் சமமற்ற உணவுகளை உண்பார்கள். 


காலையிலே நொறுக்கு தீனியா..? 
இந்த மோசமான பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கத்தான் செய்கிறது. காலையில் எழுந்தவுடன் தேவையற்ற நொறுக்கு தீனிகளை பசிக்காக சாப்பிட்டு விட்டு, பிறகு உடல் எடை கூடிவிட்டதே என அவதிப்படுவர். இந்த நிலைக்கு காரணம் நொறுக்கு தீனிகள் தான். நீங்கள் நொறுக்கு தீனியை காலையில் சாப்பிட்டால் கட்டாயம் உடல் எடை கூடி தொப்பை போட்டு விடும்.



எழுந்தவுடன் இதை செய்யாதீர்கள்..! 
இரவில் தூங்கும் போதும் சரி, காலையில் கண் விழிக்கும் போதும் சரி நம்முடனே நாம் ஒன்றை வைத்து கொண்டே இருப்போம். அது வேறு ஒன்றும் இல்லை. அதுதான் நமது கைபேசி. இந்த ஸ்மார்ட் போன் உலகில் இதை பக்கத்தில் வைத்தில்லாமல் தூங்குபவர் யார் தான் இல்லை. காலையில் எழுந்தவுடன் மணி கணக்கில் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு இதனுடன் நேரம் செலுத்தினால் கட்டாயம் உங்களுக்கு தொப்பை நிச்சயம்.


உடற்பயிற்சி இல்லையா..? 
உடல் எடையை குறைக்க விரும்புவோர் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் உடல் ஒரு பக்கம் கூடி கொண்டே போவதுடன் இதய கோளாறுகளும், உளவியல் ரீதியான பிரச்சினைகளும் வர தொடங்கும். எனவே, காலை உடற்பயிற்சி உடலுக்கு நன்மையே.


கவனம் தேவை..!
 நண்பர்களே நாம் வாழ்கின்ற இந்த குறுகிய காலத்தில் நோய்களுடன் வாழாமல் நிம்மதியாக ஆரோக்கியமான வாழ்வை வாழ முயலுங்கள். அதற்கு உடல் ஆரோக்கியம் கட்டாயம் அவசியமான ஒன்று. உடல் எடையை சரியான அளவில் வைத்து கொண்டாலே ஏராளமான நோய்களை தவிர்த்து விடலாம். இது போன்ற புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் பிறருடனும் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment