Run World Media: 08/12/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, August 12, 2018

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் முருங்கை ஊராட்சியில் உள்ள ஏரிக்கரையில் இன்று ஆயிரத்துக்கும் ஏற்பட்ட பனை விதைகள் விதைக்கப்பட்டன

மக்கள் சக்தி இயக்கம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் ஊராட்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக 12.8.2018 ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் முருங்கை ஊராட்சியில் உள்ள ஏரிக்கரையில் இன்று ஆயிரத்துக்கும்  ஏற்பட்ட பனை விதைகள்  விதைக்கப்பட்டன.  முருங்கை ஊராட்சியை சேர்ந்த   சிவபிரகாஷ், திவ்யா, ராஜேஸ்வரி, சந்தியா, பவித்ரா, கோமதி, சங்கீதா, நித்தியா,  ஆஷா,  மலர், தீபிகா, உதயா, கோகுல், பிரகாஷ், கீர்த்திகா, நிவேதிதா குழந்தைகளுடன் இணைந்து வடக்கு மண்டல பொதுச் செயலாளர் தேவநாதன், ஒன்றிய இணைச்செயலாளர்  தேவராஜன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் சரத்பாபு,   ஆனந்தன், ராமன், விஜயபாஸ்கர், கிளை செயலாளர்கள் தொழுப்பேடு கோம்பையன், களத்தூர் மாரி, சிறு பேர் பாண்டி பாரதி சேகர் ஆகியோருடன் கிராம பெரியவர் இராமானுஜம் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில்  சிறிய பிள்ளைகள்  கலந்து கொண்டது மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது. மேலும் அதில் வந்த சில சிறுமிகள் வேப்ப மரத்தின் விதைகளை சேகரித்து அதையும் விதைத்தது சிறப்பு எனக் கூறலாம். கலந்து கொண்ட குழந்தைகள் அனைவரும்  உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. கிராமத்தில் உள்ள இளைஞர்களே இயற்கை வளங்களை பாதுகாக்க அவரவர் கிராமங்களில் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் விரும்புகிறது. இந்த நிகழ்ச்சியை முருங்கை திரு ஆனந்தன் அவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் அவருக்கு பாராட்டுக்கள்.

எலப்பாக்கம் கிராமம், மாதா கோவில் தெருவில் முறையில் சாலை வசதி இல்லை Road damage issue in Elapakkam

எலப்பாக்கம் கிராமம், மாதா கோவில் தெருவில் சரியான முறையில் சாலை வசதி இல்லாததால் ,இங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது .இதனால் தொற்று நோய் ஏற்படும் நிலை மற்றும் மக்கள் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர் . இதை கண்டுகொள்ளாத கிராம நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும் வரை  பகிருங்கள் நண்பா்களே...

மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் - Oppo flagship smartphone with three camera

மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 


ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Oppo #smartphone  

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் PBEM00, PBET00 மாடல் நம்பர்களுடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட மாடல்களும், சற்று விலை குறைந்த வெர்ஷன் PAGM00, PAGT00 மாடல் நம்பர்களுடன் பின்புற கைரேகை சென்சார் கொண்ட மாடல்கள் உருவாகின்றன.


அந்த வகையில் ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போனின் முதல் போஸ்டர் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஆர்17 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா மாட்யூல்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கின்றன. கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 10 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.
 
ஒப்போ ஆர்17 மாடலின் மற்றொரு படத்தில் F9/F9 ப்ரோ போன்ற நாட்ச், பின்புறம் டூயல் கேமரா செட்டப் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கிறது. இதிலும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டுள்ளது. ஒப்போ ஆர்17 மாடலில் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஒப்போ மாடல்களில் 6.3 இன்ச், 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போன்கள் TENAA மூலம் சான்று பெறும் போது இவற்றின் முழு விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Periyapalayam Endhan | Amman Songs | Krishnaraj | Devotional | Tamil | H...

Run World Media One of the Successful Media

Run World Media One of the Successful Media

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்