Run World Media: ”எனது இதயம் திருடு போய் விட்டது” போலீசிடம் விசித்திர புகார் அளிக்க வந்த இளைஞர் !

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 9, 2019

”எனது இதயம் திருடு போய் விட்டது” போலீசிடம் விசித்திர புகார் அளிக்க வந்த இளைஞர் !

‘‘திருடிய இதயத்தை கண்டுபிடித்து தாருங்கள்’’ என வாலிபர் போலீசில் புகார் அளிக்க வந்த ருசிகர சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது.





மராட்டிய மாநிலம் நாக்பூரில் இளைஞர் ஒருவர் தனது இதயத்தை பெண் ஒருவர் திருடிவிட்டார் எனக்கூறி, காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த விவகாரம் போலீசாரை செய்வதறியாது திணற வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 82 லட்சம் மதிப்புள்ள பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாக்பூர் காவல் ஆணையர் பூஷன் குமார் உபத்யாய், இந்த விசித்தர சம்பவம் பற்றி கூறினார். 

இது குறித்து  அவர் கூறியதாவது:- 

திருடப்பட்ட பொருட்களை நாங்கள் கண்டுபிடித்து  உரிமையாளர்களிடம்  திருப்பி ஒப்படைத்து விடுகிறோம். ஆனால், எங்களால் தீர்வே காண முடியாத சில புகார்களையும் நாங்கள் பெற வேண்டியுள்ளது. அண்மையில், நாக்பூரைச்சேர்ந்த ஒரு இளைஞர் தனது இதயத்தை பெண் ஒருவர் திருடிவிட்டதாக கூறி உள்ளூர் காவல் நிலையம் ஒன்றில் புகார் கொடுக்க வந்துள்ளார். 

அவரது புகாரைக்கேட்டு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்த போலீசார், உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். இதையடுத்து, புகார் அளிக்க வந்த இளைஞரிடம் இந்த புகாரை பதிவு செய்வதற்கு இந்திய சட்டத்தில் எந்த உட்பிரிவும் இல்லை எனக்கூறிவிட்டு, இந்த பிரச்சினைக்கு எங்களிடம் தீர்வு இல்லை. திரும்பிச்செல்லுங்கள் என அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்” என்றார். 

No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்