வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஓட்டுக்கேட்டு போன இடத்தில் விரட்டியடிப்பு: 5 நிமிடத்திலேயே ஓடிய தம்பிதுரை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, March 31, 2019

ஓட்டுக்கேட்டு போன இடத்தில் விரட்டியடிப்பு: 5 நிமிடத்திலேயே ஓடிய தம்பிதுரை



கரூர் அருகே ஓட்டுகேட்க போன அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை பொதுமக்கள் முற்றுகையிட்டு சரமாாி கேள்வி கேட்டதால் அங்கிருந்து 5 நிமிடத்தில் அவர் எஸ்கேப்பானார்.


கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, கரூர் மாவட்டம் ஏமூர்புதூர் காலனியில் இன்று காலை 8.30 மணியளவில் வாக்கு சேகரிக்க சென்றார். அவருடன் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏ கீதாவும் உடன் சென்றார்.


பிரசார ஜீப்பில் இருந்து இருவரும் ஏமூர்புதூர் காலனியில் வந்து இறங்கியவுடன் அப்பகுதியினர் அவர்களை சூழ்ந்து கொண்டனர். பெண்கள் தம்பிதுரையை பார்த்து, இப்பகுதியில் போர் போட்டு 2 வருடம் ஆகியும் இன்னும் தண்ணீர் வரவில்லை. இதனால் நாங்கள் தண்ணீருக்கு மிகவும் கஷ்டப்படுகிறோம் என்று ஆவேசமாக கூறினர்.


மேலும், அந்த கூட்டத்தில் இருந்த ஒரு முதியவர், இப்பகுதிக்கு பஸ் வசதி செய்யப்படவில்லை. ஒரு மினி பஸ் வந்தது. அதுவும் இப்போது வருவதில்லை. இதனால் நாங்கள் எங்கு செல்லவேண்டுமானாலும் நடந்து சென்று சிரமப்படுகிறோம் என்று ஆவேசப்பட்டார். இதனால் கோபமான தம்பிதுரை, ஓட்டு போட்டா போடுங்க.... போடாட்டி போங்க.


யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போட்டுக்கங்க. அதுக்காக உங்ககிட்டே நான் கெஞ்ச முடியாது. நான் 4 வருடமாக இந்த ஊருக்கு வருகிறேன்.
இந்தியாவில் எந்த எம்.பியும் இதுமாதிரி கிராமம் கிராமமாக போனது கிடையாது. போர் போட்டா தண்ணீர் பிரச்னை தீர்ந்து விடுமா? காவிாி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தினால்தான் நிரந்தர தீர்வு கிடைக்கும்.


அதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்று கோபமாக பேசிவிட்டு 5 நிமிடத்தில் ஜீப்பில் ஏறி அங்கிருந்து கிளம்பினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், ஓட்டு கேட்க வந்துட்டு இப்படி கோபப்படுகிறாரே என்று முனுமுனுத்தப்படி அங்கிருந்து கிளம்பினர்.

No comments:

Post a Comment